வெள்ளி, 13 நவம்பர், 2015

ஃப்ரூட் சாலட் – 152 – நடுத்தெரு மின்சாரம் – எலியும் பூனையும் – மௌனம் சம்மதம்


நடுத்தெரு மின்சாரம்



வெர்டிகல் ஆக்சிஸ் விண்ட டர்பைன் (V A W T ). காரைக்குடி நகரைச் சேர்ந்த திரு பூபதிராஜ் அவர்கள் அமைத்த இந்தியாவின் முதல் நடுத்தெரு மின்சாரம். ஆம் நான்கு வழி சாலைகளில் நடுவில் மேடைகளில் (CENTER MEDIAN) வரிசையாக அமைத்து ஓடும் வாகனங்கள் காற்றுக்கு தரும் அழுத்தத்தின் மூலம் தொடர்ச்சியாக மின்சாரம் பெறலாம் அல்லது சாதரணமாக கிடைக்கும் காற்றின் மூலமும் மின்சாரம் தயாரிக்கலாம் உயரம் தேவை இல்லை. அவர் அமைத்து உள்ள இந்த மின்னாக்கி சுமார் ஏழு அடி உயரம். முதன் முதலாக காரைக்குடி குன்றக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள நான்கு வழி சாலையில்(தமிழ்நாடு கெமிக்கல் அருகில்) அமைத்து இதன் வெள்ளோட்டம் நடைபெற்றது 500 WATTS மின்சாரம் தயாரித்திருக்கிறார்கள். இதன் மூலம் தண்ணீரையும் இறைத்து கொள்ளமுடியும் இதன் மீது சூரிய ஒளி தகடு அமைத்து தடையில்லாமல் 24 மணி நேரமும் மின்சாரம் பெறமுடியும் எல்லாமே அவர் சொந்தமா செய்தது.  அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்தால் இப்படி நிறைய விஷயங்களைச் செய்து கொண்டிருக்கிறார் – சூரிய ஒளியினைச் சேமித்து இயக்கும் வாகனம் ஒன்றும் உண்டு! அவர் பக்கத்தில் பாருங்களேன்.....

தொடர்ந்து இப்படி பல விஷயங்களைச் செய்து வரும் திரு பூபதிராஜ் அவர்களுக்கு இந்த வார பூங்கொத்து!

எலியும் பூனையும்:

எத்தனை எத்தனை கணவன் – மனைவி ஜோக்ஸ் படித்திருப்போம்.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். நேற்றைக்கு ஃபேஸ்புக்-கில் கணவன் – மனைவி உறவு பற்றிய ஒரு கருத்தினைப் படித்தேன். அது கீழே....  பல சமயங்களில் எலியும் பூனையும் தான்! ஆனால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருப்பது போல தெரிந்தாலும் ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை! நம்ம பூரிக்கட்டை நாயகர் மதுரைத் தமிழனும் இதை உண்மை என்று ஒத்துக் கொள்வார்!


Art of Living:

இந்த வார குறுஞ்செய்தியும் கணவன் மனைவி பற்றியதாகவே அமைந்து விட்டது – திட்டமிட்ட சதி அல்ல! தானாகவே அமைந்தது. நமது கஷ்டங்களையும் துக்கங்களையும் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குருஜி சொன்னதை சிரமேற்கொண்டு செய்த கணவனைப்  பாருங்களேன்!




பூச்சை:

மேலே சொன்ன எலியும் பூனையும்-ல வந்த பூனை இதுவல்ல! தீபாவளிக்கு முதல் நாள் வீட்டின் அருகே இருக்கும் TTD Balaji Mandir-ல் ரங்கோலி போட்டுக் கொண்டிருந்தார்கள்.  அப்போது அங்கே வந்த பூனையார் குறுகுறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தார் – “என்னடா நடக்குது இங்கே!”  அவர் தான் இவர்!



சிரிப்பு போட்டி!:

தோழி ஒருவர் பகிர்ந்து கொண்ட காணொளி – யார் சிரிக்கிறது நல்லா இருக்குன்னு ஒரு போட்டி நடக்குது பாருங்க! செம க்யூட்....


So cute!
Posted by Breaking WorldWide News Video on Monday, November 9, 2015



மௌனம் சம்மதம்:

மௌனம் சம்மதம் படத்திலிருந்து ஏசுதாஸ் அவர்களின் குரலில் கல்யாணத் தேன் நிலா காய்ச்சாதபாடல் இளையராஜா அவர்களின் இசையில்.....  எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. இந்த வாரத்தில் ரசித்த பாடலாக உங்களுடன்......




படித்ததில் பிடித்தது:

உன் சிரிப்பு நிஜம்

நிலவுப்பெண்ணே
உன் மெளன மொழியிலும்
உன்னை
குலுங்கி குலுங்கி
சிரிக்கவைத்துப்
பார்க்க ஆசை.
அதனால்
ஒரு பெளர்ணமி இரவில்
அசையாமல் இருக்கின்ற
அந்த தடாகத்தில்
ஒரு பூவை எறிந்தேன்.
அந்த நிழலுக்குள்
குலுங்க குலுங்க
உன் சிரிப்பு நிஜம்.

-ருத்ரா

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

42 கருத்துகள்:

  1. சுவையான சாலட்.....உங்களுக்கு ஒரு பூங்கொத்து....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி “நான் ஒன்று சொல்வேன்”.

      நீக்கு
  2. பூச்சை செம க்யூட்! :) நல்ல பகிர்வுங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.

      நீக்கு
  3. காணொளி இரண்டும் கண்ணுக்கு குளுமை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  4. விடயங்கள் அனைத்தும் நன்று குழந்தைகள் காணொளி ஸூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. சகோதரர் பூபதிராஜ்க்கு எங சார்பா இன்னொரு பூங்கொத்து கொடுத்துடுங்க சகோ. அவரோட முகநூல் பக்கத்தை இணைத்திருக்கலாம்.

    இரட்டையர்களின் போட்டி சிரிப்பு நல்லா இருக்கு.

    அமெரிக்க அண்ணன் சம்பந்தப்பட்ட தத்துவமும் உண்மைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைப்பு கொடுத்திருக்கிறேனே..... இரண்டாவது வரியில் இருக்கும் அவர் பெயரை க்ளிக் செய்தால் அங்கே போகலாம். இப்போது highlight செய்து விட்டேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  6. Very tasty and yummy fruit salad as usual. Relished and enjoyed. poem top.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதர்சனா தேவி ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  8. திரு பூபதிராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    இனிமையான பாடல் உட்பட அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. காரைக்குடி திரு பூபதிராஜ் பற்றிய தகவல்களுடன் இன்றைய பதிவு - அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. திரு திரு பூபதிராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நாட்டியப்பேரொளி பத்மினியும், வைஜயந்தி மாலாவும் பூட்டி போட்டுக்கொண்டு நடனமாடியதுபோல் இந்த பிஞ்சுக் குழந்தைகள் சிரிப்பது இருந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  12. ‘பூட்டி’ என்பதை போட்டி என படிக்கவும். தட்டச்சு நேர்ந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் இப்படித்தான் நேர்ந்து விடுகிறது. பரவாயில்லை.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  13. வணக்கம்
    சொல்லிய கருத்தும் கவிதையும் வீடியோவும் மிக அற்புதம் பகிர்வுக்கு நன்றி. த.ம7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  14. பூபதிராஜ் பாராட்டுக்குரியவர், குறுஞ்செய்தியும் பேஸ்புக் பகிர்வு சிறப்பு! பூனைக்குட்டி அழகு! சுவையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  15. நிறைவான பதிவு
    குறிப்பாக பழமொழிகளில் இருந்த நகைச்சுவை உணர்வையும்
    காணொளிப் பாடலையும் மிகவும் ...
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  16. பதில்கள்
    1. இணைப்பு கொடுத்திருக்கிறேனே..... இரண்டாவது வரியில் இருக்கும் அவர் பெயரை க்ளிக் செய்தால் அங்கே போகலாம். இப்போது highlight செய்து விட்டேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  19. பூபதி ராஜ் அவர்களுக்கு பொக்கேயும் வாழ்த்துகளும். குறுஞ்செய்தி சூப்பர்.

    குருஜியின் வார்த்தைகள் ...."பூரிக்கட்டை" அடி வாங்கும் மதுரைத் தமிழன் எப்போதும் புன்னகையுடன் இருப்பதன் அர்த்தம் புரிகின்றது..!!!! ஹஹஹ்

    பாடல் மிகவும் ரசிக்கும்பாடல். டாப் குழந்தைகள் சிரிப்பு....ரொம்ப அழகு...

    படித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது....அனைத்தும் அருமை ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  20. அனைத்தும் முகநூலில் பார்த்தவை! என்றாலும் மீண்டும் சுவைக்க ருசி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  21. என்ன ஒரு திறமை! பூபதிராஜ் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து போதாது ஒரு டஜன் கொடுக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....