எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, November 1, 2015

கல்யாணம்.... ஆஹாஹா கல்யாணம்....தில்லியில் நடக்கும் திருமணங்கள், குறிப்பாக வட இந்திய திருமணங்கள் இரவில் தான் நடக்கும். [B]பராத் என அழைக்கப்படும் மாப்பிள்ளை அழைப்பு போன்ற நிகழ்வு நடப்பதே இரவு எட்டு ஒன்பது மணிக்கு மேல் தான். அதுவும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் முடிந்து கல்யாணப் பந்தலுக்கு சில [B]பராத் வந்து சேர்வதற்கே நள்ளிரவு கூட ஆகிவிடும். [B]பராத்தி [ஊர்வலக் காரர்கள் – அதாவது மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள்] வந்து சேர்ந்த பிறகு தான் உணவு பகிர ஆரம்பிக்க வேண்டும் என்று சிலர் அடம் பிடிப்பார்கள்.  இரவு பன்னிரெண்டு மணிக்குப் பிறகு சாப்பிட்டு எப்போது வீடு திரும்புவது?

ஷகுன்.... ஒரு ரூபாய் வைத்த கவர்

இதற்காகவே பல வட இந்திய திருமணங்களைத் தவிர்த்து விடுவது எனது வழக்கம்.  அப்படியே சென்றாலும், சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு, உணவு ஸ்டால்கள் திறந்திருந்தால் கொஞ்சமாக சாப்பிட்டு கொடுக்க வேண்டிய ஷகுன் [மொய்!]-ஐ அதற்கான அழகிய கவர்களில் போட்டு கொடுத்துவிட்டு வந்து விடுவேன்.  பொதுவாகவே மொய் என்றால் 101, 201, 501, 1001 என்று தான் இங்கெல்லாம் கொடுப்பார்கள். ஒரு ரூபாய் தேடி அவதிப்படாமல் ஷகுன் envelope-லியே ஒரு ரூபாய் வைத்திருக்கும் கவர்கள் இங்கே கிடைக்கின்றன.

பூக்கள் அலங்காரம்...

ஆனால் நம்ம ஊர் கல்யாணம் என்றால் இரண்டு நாட்கள் கல்யாணம் – நல்ல சாப்பாடு என களை கட்டும்.  அப்படி நடக்கும் கல்யாணங்களில் பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட்டு, சில பல புகைப்படங்களை எடுத்து, மகிழ்ச்சியோடு இருப்பது பிடித்தமான விஷயம். அதுவும் நம்ம ஊரில் கல்யாணம் என்றால் இன்னும் வசதி. தமிழகம் வரும் சமயங்களில் இப்படி வருகின்ற கல்யாண அழைப்புகள் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று. 

வரவேற்கும் பிள்ளையார்.....

நண்பர் ஒருவரின் மகன் கல்யாணத்திற்கு [அது நடந்து ஆச்சு பத்து மாசம்!] சென்னை வந்திருந்த போது இரண்டு நாட்கள் அங்கே தங்கி விதம் விதமான உணவுகளை ருசித்ததோடு நீண்ட கால நண்பர்கள் சிலரையும் அங்கே சந்தித்து மகிழ்ந்தேன்.  இப்படி நடக்கும் திருமணங்கள் எங்களைப் போன்று வெளி ஊரில் இருப்பவர்களுக்கு, சுற்றங்களையும், நட்புகளையும் சந்திக்க ஒரு வாய்ப்பல்லவா....

கல்யாணம் நடந்த மண்டபத்தில் குடும்பம் பற்றிய சில குறள்களையும் அருமையான விளக்கங்களையும் எழுதி வைத்திருந்தது சிறப்பாக இருந்தது.  அவற்றில் எனக்குப் பிடித்தவற்றையும் இங்கே கொடுத்திருக்கிறேன்.... அவை தவிர நான் எடுத்த சில புகைப்படங்களும் இந்த ஞாயிறில் ஒரு தொகுப்பாக!


என்ன நண்பர்களே, இன்றைய புகைப்படங்களையும், பதிவினையும் ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

54 comments:


 1. படங்கள் அருமை அதில் பிள்ளையார் மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 2. நம்மூரிலும் ஒரு ரூபாய் வைத்த மொய்க்கவர்கள் கிடைக்கின்றதே...

  நீங்கள் ரசித்தவற்றை நானும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. சென்னையில் கிடைக்கிறது போலும். மற்ற இடங்களில் பார்த்ததில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. குறளும் குழந்தைகள் படமும் அருமை ஐயா
  நன்றி
  தம+1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. படங்களும் அதன் விளக்கங்களும் அருமை!
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 5. பதிவுக்கு அழகு சேர்க்கும் குழந்தைகள் அழகோ அழகு :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 6. குறளும், அதனுடன் நீங்கள் எழுதியிருந்த கருத்துக்களும் , துணை நிற்கும் குழந்தையின் படமும் அருமை.
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. குறளும் கருத்துகளும் திருமண மண்டபத்தில் பார்த்தது. வடிவம் மட்டும் என்னுடையது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் அம்மா...

   Delete
 7. கவர் யோசனை மனதை 'கவர்'கிறதே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அன்பே சிவம் ஜி!

   Delete
 8. இவ்வளவு தெளிவான படங்களுடன் ஒரு பதிவை இதற்கு முன் பார்த்ததில்லை.
  தகவல்களும் மிக நேர்த்தியாக உள்ளன.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகை.... மிக்க மகிழ்ச்சி ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
  2. ஐயா இதற்கு முன்னும் வந்திருக்கிறேனே...

   சொல்லாக்கம் பற்றிய போட்டியொன்றிற்கு?...!!!

   தங்களது பதிவுகளைத் தொடர்கிறேன்.

   நன்றி

   Delete
  3. எழுதி வெளியிட்ட பிறகு தான் நினைவுக்கு வந்தது..... நினைவுபடுத்தியதற்கு நன்றி ஜி.....

   Delete
 9. மொய் கவருக்குள் ஒரு ரூபாயா? ஆச்சர்யம். குழந்தைகளின் புகைப்படங்கள் மிகவும் அழகாக இருந்தன. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 10. வாய்ப்பு கிடைக்கும்போது விக்ரமம் என்னும் இடத்தில் நாங்கள் பார்த்த புத்தர் சிலையைப் பற்றிய அனுபவப்பகிர்வைக் காண வருக. http://ponnibuddha.blogspot.com/2015/11/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. விடுபட்ட பதிவுகளை ஒவ்வொன்றாய் இப்போது தான் படித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் பதிவினையும் படிக்கிறேன் டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி.

   Delete
 11. பிள்ளையார் ரொம்பவே அழகு அண்ணா. குழந்தைகள் கண்ணை கவர்கிறார்கள். அழகாக எடுத்திருக்கிறீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முதல் வருகையோ அபிநயா.... மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
  2. கருத்திற்கு தான் முதல் வருகை அண்ணா.
   பதிவு ரொம்ப முன்பிருந்தே படிப்பேன்... இடையில் விட்டாச்சு... இனி தொடர்கிறேன்...

   Delete
  3. ஓ நீங்கள் எனது பதிவினை முன்பிருந்தே படிக்கும் Silent Reader.... மிக்க மகிழ்ச்சி அபிநயா.

   Delete
 12. ஒரு குறள் ஒரு புகைப்படம் மாற்றி மாற்றி மகிழவைத்தது திருச்சியில் நாங்கள் இருந்த போது கல்யாணத்துக்கு மொய் எழுத அவர்கள் அனுப்பிய கவர்களையே பயன் படுத்துவது கண்டிருக்கிறேன் யாருக்குப் பத்திரிக்கை கொடுத்தோமோ அவர்களது மொய் என்பதை அறிய ஒரு வழி.

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் அனுப்பும் கவர்களையே பயன்படுத்துவது இன்னும் கூட தொடர்கிறது.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 13. மழலைகள் படம் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 14. குறள்கள் உடன் அனைத்தும் அருமை...

  http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/World-Tamil-Bloggers-Guide-Book.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   விடுபட்ட பதிவுகளை இப்போது தான் படித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் பதிவும் படிக்கிறேன். தகவலுக்கு நன்றி.

   Delete
 15. தமிழகத்திலும் ஒரு ரூபாய் வைத்த மொய்க் கவர்கள் உண்டு. அழகான குழந்தைகள் சிறப்பான குறள்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 16. பிள்ளையார் அருமை வெங்கட்ஜி. திருக்குறள்கள் விளக்கம் கல்யாணத்தில் புதுமை. பலரும் தெரிந்து கொள்ளவும் உதவும். நல்ல முயற்சி. குழந்தைகள் படம் எல்லாம் அழகு...

  கேரளத்தில் மொய் வைக்கும் பழக்கம் இல்லை.

  கீதா: இங்கு இப்போது ஒரு ரூபாயுடன் வரும் மொய் கவர்கள் கிடைக்கின்றன ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி.

   தமிழகத்திலும் ஒரு ரூபாயுடன் கவர் கிடைப்பது எனக்கு புதிய தகவல். நன்றி கீதா ஜி!

   Delete
 17. உண்மைதான் ஜி நான் இந்தியா வரும் பொழுது எப்படியும் 5 திருமணத்திலாவது கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்து விடும் அதுவும் சொந்தக்காரர்கள் வீட்டு திருமணம் என்றால் அதில் வேலைகள் செய்வது எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விடயம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 18. ஒரு ரூபாய் வைத்த கவர் – எனக்கு புதிய செய்தி. பூக்கள் அலங்காரம் சுவையான லட்டுக்கள் போன்று இருக்கின்றன. திருமண மண்டபத்தில் திருக்குறள் – மற்றவர்களும் கடை பிடிக்கலாம்.

  கள்ளம் கபடமற்ற அந்த குழந்தைகளின் முகங்கள். கடைசிவரை இப்படியே அவர்கள் இருந்திட்டால் மனித குலத்தில் பூசல் இல்லை. தெளிவான படபிடிப்பு.

  ReplyDelete
  Replies
  1. கடைசி வரை இப்படியே இருந்துவிட்டால்..... உண்மை தான் பூசல் இல்லாது நன்றாக இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 19. படங்களும் தகவல்களுமாக பகிர்வு அருமை. கொள்ளை அழகான குழந்தைகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 20. வெங்கட்கை வண்ணம் வியக்கும் பதிவென்பேன்!
  பொங்குதே பார்த்துமனம் பூத்து!

  சகோதரரே! பதிவின் சுவாரஸ்யத்துடன் பகிர்ந்த
  பட்டுரோஜாக்களின் படங்கள் அதுவும் உங்கள் கைவண்ணத்தில்...!!!

  என்னை அந்த மழலைகளுடன் அப்படியே உறைந்திட வைத்துவிட்டது!
  அந்தக் குட்டீஸ்களுக்கு கண்ணூறு வராமல் காக்கவேண்டும்!

  மிக மிக அருமை சகோதரரே! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி ஜி!

   Delete
 21. திருமண வீட்டில் பார்த்த திருக்குறள் பகிர்வும் குழந்தைகள் படமும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 22. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 23. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சின்னையன் சின்னா ஜி.

   Delete
 24. படங்களும் குறள்களும் அருமை அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 25. அருமையான குறள்கள். பதிவை இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....