எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, January 23, 2016

திருவரங்கம் தைத் தேர் – 2016


அன்பின் நண்பர்களுக்கு,

இன்றைக்கு திருவரங்கத்தில் உத்திர வீதியில் தேரோட்டம்.  தைத் தேர் என்று அழைக்கப்படும் இந்த தேரில் திருவரங்கன் வீதி உலா.....  தற்சமயம் திருவரங்கத்தில் இருப்பதால், காலை 06.30 மணிக்கு தேரோட்டம் என்று தெரிந்ததால், அங்கே சென்று சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வந்தேன்.  அத்தனை கூட்டம் இல்லை என்று தான் தோன்றியது. பொதுவாகவே தேரோட்டம் என்றால் மக்கள் நிறையவே வருவார்கள். ஆனால் இன்றைக்கு அத்தனை கூட்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

திருவரங்கத்தில் தேரோட்டம் என்றாலே கோவில் யானை ஆண்டாள் தான் முன்னால் வருவாள்....  ஆனால் இன்று ஆண்டாள் மிஸ்ஸிங்.....  புத்துணர்வு முகாமிற்குச் சென்றிருப்பதாக அறிகிறேன்.  பாவம் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்......

இன்றைய நாளில் எடுத்த புகைப்படங்கள் இங்கே ஒரு தொகுப்பாக....

ஒரே நாளில் இரண்டு பதிவா என்று உங்களுக்குத் தோன்றினாலும், இன்றைய நிகழ்வினை இன்றே பகிர்ந்து விடலாம் என்று தோன்றியதால் இன்றைக்கே பகிர்ந்து கொண்டேன்.

இதோ திருவரங்கம் தைத்தேர் – 2016 தேரோட்டம் உங்களுக்காக.....


தெற்கு உத்திர வீதி திரும்பும் முன்னர்.....


குதிரையும் பெரியத் திருவடி கருடனும் தேர் முகப்பில்....


தேர்வடம் பிடிக்கும் பக்தர்கள்....


தேர் முகப்பில் அமர்ந்திருக்கும் பெரிய திருவடி கருடன்.....மேற்கு உத்திர வீதியில் தேரோட்டம்....


ஆஞ்சனேயர் வேடமிட்டு வலம் வந்த பெரியவர்.....


தேரோட்டம்.....தேரோட்டம்....


மேற்குப் பக்க கோபுரம் ஒன்று.....


 கோபுரச் சிற்பம் ஒன்று.....

தேரோட்டம் கண்டு களித்தீர்களா நண்பர்களே....

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து.....32 comments:

 1. படங்கள் மிகவும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. புகைப்படங்கள் அழகு.

  தேர்த்திருவிழா, கும்பாபிஷேகம் போன்ற கூட்டங்களில் சென்று மாட்டிக் கொள்வதில்லை!

  :))))

  ReplyDelete
  Replies
  1. பொதுவாகவே அதிகமான மக்கள் இருக்கும் நெருக்கடிகளில் மாட்டிக் கொள்வதில்லை. புகைப்படம் எடுப்பதற்காக மட்டுமே இங்கே சென்றிருந்தேன். இன்றைக்கு அத்தனை கூட்டமுமில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. நோ சான்ஸ்! வெங்கட் ஜி! புகைப்படங்கள் அருமை!!!! கண்டு களித்தோம். கூட்டமே இல்லையா...

  ம்ம் பாவம் ஆண்டாள்! தினமும்...ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை...அந்தக் கோதையின் சொல்லை...தூயதமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர், நன் மக்களைப் பெற்று மகிழ்வரே என்று இளம் பெண்களின் திருமணத்திற்காகப் பாடி வேண்டப்பட்ட வேண்டுதல்களை நிறைவேற்றி ஸ்பாடா என்று ஆகியிருக்கும்!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 4. ஆஹா இன்று காலையில் தங்களது முதல் பதிவு அற்புதானதாக கண்டேன் நன்றி ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 5. படங்கள் அருமை. கருடனை அவ்வளவு கிட்டக்க எப்படி எடுத்தீங்க? நாங்க தேர் கிளம்பும் முன்னரே கொஞ்சம் இருட்டாக இருக்கிறச்சேயே போயிட்டோம். அப்புறமாத் தேர் கிளம்பிச் சிறிது தூரம் போகும் வரை இருந்துட்டுத் திரும்பிட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. கருடன் மட்டும் கொஞ்சம் க்ளோஸ்-அப் எடுத்தேன். நான் ஆறரைக்கு வந்து விட்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 6. ஸ்ரீரங்கம் தேரோட்டம் தங்களால் சுடச்சுட கண்டு களிக்க முடிந்தது. பகிர்வுக்கு நன்றிகள், ஜி. படங்கள் அத்தனையும் அழகோ அழகாக உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 7. தை தேரோட்ட காட்சிகள் ரசித்தேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 8. அன்புள்ள அய்யா,

  அழகிய படங்களுடன் திருவரங்கத் தைத் தேரோட்டம் கண்டு களித்தேன்...!

  நன்றி.

  த.ம.4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மணவை ஜேம்ஸ் ஐயா.

   Delete
 9. தேரோட்டம் ரசித்தேன். தேரோட்டத்தின் அழகு அபரிமிதமானது. அதிக பணி, சுற்றுப்பயண நிலையிலும் இவ்வாறான பகிர்வினைத் தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 10. தேர்த்திருவிழா....
  அழகான படங்களுடன் அற்புதம் அண்ணா...
  பகிர்வுக்கு நன்றி.

  தொடர்ந்து வாசிக்கிறேன்...
  கருத்து இட முடியவில்லை... காரணம் வேலைப்பளுவே....
  மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. புரிகிறது. பல சமயங்களில் என் நிலையும் அது தானே.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 11. அருமையான படங்களைக் கண்டு களித்தேன் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 12. வணக்கம்
  ஐயா
  படித்த போதும் படங்களை இரசித்த போதும் நிகழ்வை பார்த்தது போல ஒரு உணர்வு.த.ம 6

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 13. நாங்களே நேரில் பார்த்த உணர்வு.நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 14. உங்கள் கடமை உணர்வை மெச்சினோம்!விடுமுறையிலும் பதிவுகள் இடும் பக்திக்கு முன் மற்றதெல்லாம்!!!!!!

  அருமையான அழகான படங்களை பகிர்ந்தமைக்கும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா... கடமை முக்கியம் அல்லவா! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 15. தங்களின் படங்கள் மூலம் தேரோட்டத்தை கண்டு களித்தேன். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 16. புகைப்படங்கள் அழகு....தை தேர் ...நேரில் தரிசித்த மகிழ்வு ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....