எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, February 11, 2016

ஆதார் கார்டிலும் அழகாய் இருக்கேன்!


முகப்புத்தகத்தில் நான் - 1

வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வந்தாலும், முகப்புத்தகத்தில் அவ்வளவாக எழுதுவதில்லை. என்னுடைய பதிவின் சுட்டியை மட்டும் பகிர்ந்து கொண்டு, கூடவே மற்ற நண்பர்களின் இற்றைகளுக்கு LIKE போட்டு நகர்வதோடு சரி. பிறந்த நாள் பற்றிய அறிவிப்பு இருந்தால் வாழ்த்துச் சொல்லி நகர்ந்து விடுவது வழக்கம். சில நாட்களாக அன்றைய பொழுதில் பார்த்த சில விஷயங்களை, கிடைத்த அனுபவங்களை முகப் புத்தகத்திலும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.  

முகப்புத்தகத்தில் ஒரு பிரச்சனை – நாம் பகிர்ந்து கொண்ட விஷயங்களை திருப்பிப் பார்க்க நினைத்தால் அதில் தேடுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. அதனால் அங்கே பகிர்ந்து கொள்ளும் விஷயங்களை, தொகுத்து வைக்க இங்கேயும் பகிர்ந்து கொள்ள உத்தேசம்.  சென்ற சில நாட்களில் எழுதிய விஷயங்கள் இதோ பதிவாக!

7 February 2016 - தென்னங்கீற்று.........

இன்று மதியம் சாலை வழி நடந்துகொண்டிருந்தேன். சாலையோர வீடு ஒன்று - கூரை வேய்ந்த வீடு என்றாலும் இன்னும் வாசல் திண்ணை இருக்கும் ஒரு வீடு. திண்ணையில் வீட்டு மனிதர் ஒருவர் நல்ல உறக்கத்தில் இருக்கிறார். ஆஹா சுகமானதோர் தூக்கம்...... இயற்கை அன்னையின் அருளால் கொள்ளிடக் கரைப்பக்கத்து தோப்புகளிலிருந்து காற்று வீசிக்கொண்டிருக்க நல்ல தூக்கம்......

ஒரு சில மனிதர்களுக்கு அடுத்தவர்கள் சுகமாக இருந்தால் பிடிப்பதில்லை. அது எப்படி அடுத்தவன் சொகமா தூங்கலாம்என்று ஒரு தீய எண்ணம்.......

அந்த வீட்டு வாசலில் ஒருவர் வந்து நிற்கிறார். கூரை வீட்டிலிருந்து ஒரு சிறு கீற்றினை உருவி கையில் எடுத்துக் கொள்கிறார்.... தென்னங்கீற்று கையில் வைத்தபடி தூங்குபவரின் அருகில் செல்கிறார். என்ன செய்யப் போகிறார் என்று எனக்குள் சற்றே பதற்றம்......

கூரிய தென்னங்கீற்று கொண்டு தூங்கிக் கொண்டிருந்தவரின் கையில் குத்துகிறார். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு..... ஐந்தாவது குத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர் விழித்தெழுகிறார்.....

மலங்க மலங்க விழித்தவரிடம், குச்சியால் குத்தியவர் கேட்ட கேள்வி -

தூங்கிட்டு இருக்கீங்களா?”

ங்கொய்யாலே.... என்ன ஒரு கேள்வி!

6 February 2016 - எட்டரை கட்டை.......

சமீபத்தில் ஒரு நாள் பயணமாக கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே பார்த்த ஒரு நபர், பாட்டு பாடினார். அவரிடம் பாட்டு நல்லா பாடறீங்க என்று மற்றொருவர் சொல்ல, ஆரம்பித்தது தொல்லை.....

தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தார் - எட்டரை கட்டையில். நல்லா பாடறீங்க என்று சொன்ன நபருக்கும் கூட இருந்த மற்றவர்களுக்கும் பூனையிடம் மாட்டிய எலி போன்ற நிலை. நடுநடுவே அபஸ்வரம் வேறு!

நடுவே அலைபேசியில் அழைப்பு வர அதிலும் பாட்டு தொடர்ந்தது - சொல்லடி அபிராமி!என்று அலற, பாவம் அப்பக்கத்தில் இருந்த அபிராமி - காது சவ்வு கிழிந்திருக்கக் கூடும்!

பாடுவதற்கு நடுநடுவே தற்பெருமை தக்காளியாக தனது பெருமைகளைச் சொல்லியபடியே இருந்தார். கூடவே தன்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்கள், தான் மட்டுமே எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்என்ற அலப்பறைகள் வேறு!

பொறுமை கடலினும் பெரிது என்று பொறுமை காக்க வேண்டிய சூழல்.... ஒன்றும் சொல்ல முடியாத ஒரு மணி நேரம் - அவர் நகர்ந்த பிறகு அனைவரின் முகத்திலும் அப்படி ஒரு நிம்மதி!

4 February 2016 - வீட்டுக்குள் வந்தவர்.....

காலை 05.45 - மணியோசை கேட்டு எழுந்தேன். கதவைத் திறந்தால் கையில் பால் பாக்கெட்டோடு ஒரு உருவம் வாசலில்.... பொதுவாக பால் பாக்கெட் போடுவது ஒரு இளைஞர். அதுவும் கதவில் இருக்கும் பையில் போட்டுச் சென்றுவிடுவார். அந்த இளைஞரின் அம்மாவோ என்று பால் பாக்கெட் வாங்க கை நீட்டினால், அவர் பால் பாக்கெட் என்னிடம் தராமல் என்னைத் தாண்டி வீட்டுக்குள் வர முயற்சிக்க, தூக்கக் கலக்கத்தில் யார் நீங்க, எங்கே வரீங்க என்று கேட்டேன்.

பதில் சொல்லாது உள்ளே வர முயற்சிக்க, அதற்குள் படிகளிலிருந்து ஒரு குரல் - அம்மா 203 இல்ல, 303! ஓ... தப்பா வந்துட்டேனா என்று சொல்லியபடியே பால் பாக்கெட்டுடன் நகர்ந்தார். படி வரை சென்ற பிறகு திரும்ப வந்து பால் பாக்கெட்டை என்னிடம் தந்து சென்றார்.

மேல் வீட்டுக்கு சமைக்க வரும் பெண்மணி போலும்! அதிகாலை இருட்டில் இப்படி பயமுறுத்திச் சென்றவர் ஒரு Sorry கூட சொல்லாது நகர நான் ஙேஎன்று முழித்தபடியே நின்றிருந்தேன்.

அதற்குள் அம்மணியின் குரல் - காலையிலேயே யார்கூட அங்க பேசிட்டு இருக்கீங்க! கஷ்டம் டா சாமி!

****

4 February 2016 - ஆதார் கார்டும் அழகு புகைப்படமும்!என்னுடைய ஆதார் கார்டு நகல் எடுப்பதற்கு சமீபத்தில் திருவரங்கத்திலுள்ள ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். ஒரு இளம்பெண் தான் கடையில் இருந்தார். நகல் எடுத்தபிறகு அசலை கொஞ்சம் நேரம் பார்த்துக் கொண்டே இருந்தார். பிறகு என்னைப் பார்த்துக் கேட்ட கேள்வி –

அண்ணே ஆதார் கார்டு எங்கண்ணே வாங்குனீங்க! ஆதார் கார்டுலயும் அழகா இருக்கீங்களே! இங்கே எடுத்தா பூதம் மாதிரி எடுத்துடறாங்க!

என்ன நண்பர்களே….. தொகுத்த விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

32 comments:

 1. அதார் கார்டிலேயும் அழகா
  வாழ்த்துக்கள் ஐயா
  தம1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. இங்கேயும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. //ஆதார் கார்டுலயும் அழகா இருக்கீங்களே! ///

  ஹலோ திருமதி.வெங்கட்.......வீட்டுகாரரை தனியே இனிமே எங்கேயும் அனுப்ப வேண்டாம்.ஜாக்கிரதை

  ReplyDelete
  Replies
  1. ஆஹா போட்டுக் குடுக்கவே வந்துட்டீங்களா! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 4. நல்ல அனுபவங்கள் அண்ணா.. முக நூலில் படித்திருந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 5. சூப்பர். அனைத்து தொகுப்புரைகளும் நன்றாக இருந்தது. ரசித்துப் படித்தேன்.
  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா ஜி!

   Delete
 6. நல்ல தொகுப்பு....ஆதார் கார்டு புகைப்பட அழகு பொறாமைப்பட வைக்கிறது...ஹா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வகுமார்...

   Delete
 7. டெல்லியில் ஆதார் கார்டிலும் கிராபிக்ஸ் ஏதும் செய்தி தருகிறார்களா :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 8. அனைத்தையும் ரசித்தேன். ஆதார் கார்டிலும் அழகா? ஆச்சர்யம்தான். முன்பு என் கணவரை வாக்காளர் அட்டையில் பார்த்துவிட்டு அடுத்தவீட்டுப் பெண் சொன்னது..என்ன உங்களவர் இதில் தீவிரவாதி மாதிரி இருக்கார் என்று. அவ்வளவு கொடுமை. முகநூல் பதிவுகளை வலையில் சேகரித்துவைப்பது நல்ல ஐடியா.. தொடரட்டும் சுவையான பகிர்வுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 9. தொகுப்பு அனைத்தும் அருமை.

  //ஆதார் கார்டுலயும் அழகா இருக்கீங்களே! //

  :)))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 10. ஏற்கெனவே படிச்சாலும் இங்கேயும் படிச்சேன். என்னையும் ஆதார் கார்ட், பாஸ்போர்ட் எல்லாத்திலேயும் பூதத்தை விட குண்டாக(ஹிஹிஹி, நான் எம்புட்டு ஒல்லி) எடுத்திருக்காங்க! என்னத்தைச் சொல்றது! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 11. நம்ம நாட்டுல உள்ள ஜனத்தின் அளவுக்கு ஆதார் கார்டு கொடுப்பதே உலக அதிசயம். நல்ல வொர்க் ஆகிற மிஷனா இருக்கணும். அதை இயக்கத் தெரிந்திருக்கணும். ஜனங்களை ஹேண்டில் பண்ணும் பொறுமை இருக்கணும். எடுத்த படங்களை, முறையாகப் பாதுகாத்து, சரியான நபருக்கு உள்ள விவரங்களோடு இணைக்கத் தெரிந்திருக்கணும். இவ்வளவும் முறையா நடந்தாத்தான் ஆதார் கார்டு வரும்.

  உங்கள் பிட்ஸ் நன்றாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 12. ஹஹஹ் செம வெங்கட்ஜி!! ஆதார்கார்டிலயும் அழகா இருக்கீங்களே!!!! அட!!!! ஜி பொறாமையா இருக்கு...ஹிஹிஹி..பின்ன அந்தப் பெண் சொன்னது போல பூதமாத்தான் இருக்கும்...

  அந்த 8 கட்டைக்காரர்...நடிகர் நீலுவை நினைவு படுத்தினார் அவர் சோவில் நாடகம் ஒன்றில் அப்படித்தான் கரகரப்ரியாவாகப் பாடுவார்....

  இப்படித்தான் தூங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பிவிட்டு "தூங்கிக்கிட்டுருந்தீங்களா என்று கேட்பது பலருக்கும் வாடிக்கை...கலாய்ப்பதும்...
  ரசித்தோம் ஜி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. வணக்கம் சகோ,

  இங்க ஆதார்காட் மட்டுமா ஓட்டு அடையாள அட்டை,,
  என் பிள்ளைகள் பயமா இருக்குமா என்று அவரோடு சேர்ந்து சிரிப்பார்கள்,,,
  ஆமா வேலையா இருப்பவர்களை கூப்பிட்டு வேலை செய்கிறீர்களா? என்போம்,, தூங்கறவங்கள எழுப்பி தூக்கமா என்போம்,,
  அனைத்தும் அருமை சகோ,,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 14. அத்தனையும் அருமை. ஆதார் கார்டிலும் அழகா..! நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். வெங்கட் ஜி!
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 15. எல்லாமே முகநூலில் வாசித்து ரசித்தவை என்றாலும் மீண்டும் ரசித்தேன் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 16. நன்று. ஸிறப்பு ஸிறப்பு. மகிழ்ச்சி.

  http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/

  ReplyDelete
 17. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி iK Way.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....