எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, March 4, 2016

ஃப்ரூட் சாலட் – 160 – ஆண்ட்ராய்டு ஃபோன் – சிங்கம் – நிழல் நடனம்கணவன் – மனைவி - பூதம்

ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, “உனக்கு என்ன வேண்டுமோ... அதை கேள்?” என்றது.

”என் கணவர் முழிச்சுக்கிட்டிருக்கும் போதேல்லாம் என் மேலே கண்ணா இருக்கணும்.”

அப்புறம்..?”

அவர் வாழ்க்கையில் என்னைத் தவிர வேற எதுவுமே முக்கியமா இருக்கக்கூடாது.”

அப்புறம்?”

அவர் தூங்கும்போது நான் பக்கத்துல இல்லாமல் தூங்கவே கூடாது.”

அப்புறம்..?”

அவர் காலையில் எழுந்திருக்கும்போது என் முகத்துலதான் முழிக்கணும்.”

அப்புறம்..?”

அவர் நான் இல்லாம எங்கயும் போகக் கூடாது.”

அப்புறம்..?”

எம்மேல ஒரு கீறல் பட்டாலும் கூட அவர் வாடி வருத்தத்துல உறைஞ்சு போயிடணும்.”

அப்புறம்..?”

அவ்வளவுதான்.”

உடனே பூதம் அந்தப் பெண்ணை ஒரு ஆண்ட்ராய்டு போனாகஆக மாற்றியது!

-          முகப்புத்தகத்தில் படித்தது!


சிங்கமும் மனிதனும்!:


தவறைச் சுட்டிக் காட்டுங்கள்!

நான் செய்யும் தவறுகளை என்னிடம் எடுத்துச் சொல்லுங்கள் – அடுத்தவர்களிடம் அல்ல!  ஏன் என்றால் அத்தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டியது நான் தானே தவிர – அடுத்தவர்கள் அல்ல!

நிழல்நடனம்: காணொளி

மனித நிழல்களைக் கொண்டே காட்சிகளை உருவாக்கும் சில காணொளிகளைப் பார்த்திருக்கிறேன் – ஃப்ரூட் சாலட் பகுதி ஒன்றிலும் பகிர்ந்திருக்கிறேன்.  இந்த காணொளி இது வரை பார்க்காதது – இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தினை மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறார்கள் – இந்த நிழல் நடனத்தில் – உங்களாலும் நிச்சயம் ரசிக்க முடியும்! பாருங்களேன்…..


অনেক ভিডিও দেখেছি কিন্তুু এতো সুন্দর ভিডিও কখনো দেখিনি - যা মানুষের জীবন্ত ফুটিয়া তোলে।সত্যিই - অসাধারন।।।
Posted by Bangladesh Fun.com on Wednesday, January 6, 2016

கூந்தலழகு: காணொளி

இப்போதெல்லாம் பெண்கள் தங்கள் கூந்தலைப் பராமரிப்பதற்கு நிறையவே செலவு செய்கிறார்கள்.  சுருட்டை முடியை நேராக்கவும், நேராக இருக்கும் முடியை சுருட்டையாகவும் செய்து கொள்கிறார்கள்.  சிலர் Beauty Parlour செல்லாமலே வீட்டில் அழகாக முயற்சிக்கிறார்கள் – தாங்கள் விரும்பும் வடிவம் பெறாமல்!  பாருங்களேன்!

Styling your hair
Posted by Bright Side on Tuesday, March 1, 2016
ரசித்த கார்ட்டூன்!


தம்பி எதைச் செஞ்சாலும் சரியா செய்வாப்புல! பாருங்களேன்!சேறும் சோறும்!

விவசாயிகள் சேற்றில் கால் வைக்காவிட்டால், நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பதை பலமுறை கேட்டும், படித்தும் இருப்போம். இது எனக்குப் புதியது… உங்களுக்கு!

 "சேறு" என்ற வார்த்தையை உருவாக்கி அதில் கால் வைத்தால் "சோறு" ஆகும் என நுட்பமாக உணர்த்தும் மொழி ‪# ‎தமிழ்‬‬

மீண்டும் அடுத்த வாரம் வேறு சில தகவல்களோடு உங்களைச் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி


28 comments:

 1. இந்த ஆண்ட்ராய்ட் ஜோக் இந்த விகடனில் கூட போட்டு விட்டார்கள். எண்ணிப்பார்த்து எழுதியவர் யாரோ...

  அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. சுவாரசியங்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. அனைத்து அருமை அதிலும் இறுதியில் உள்ள கார்டூன் மிக அருமை...ரசித்து மகிழ்ந்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 5. சிறப்பான தொகுப்பு ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 6. சுவையான ப்ரூட் சாலட். கணவன் மனைவி பூதம் ரசிக்க வைத்தது.

  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 7. ஹாஹாஹா பூதக்கதை நன்று ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 8. காணொலி சூப்பர் தமிழ் மொழிக்கு ஈடுஇணையே கிடையாதுதான். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆல் இஸ் வெல்.

   Delete
 9. என் நாடக நாட்களில் சில காட்சிகளை நிழல் படத்தில் காண்பிப்போம் உ-ம் தூக்குப் போட்டுக் கொள்வது அனைத்தும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 10. நிழல் நடனம் பற்பல விஷயங்களைச் சொல்லிற்று..
  மற்றவை அனைத்தும் அருமை..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 11. நான் செய்யும் தவறுகளை என்னிடம் எடுத்துச் சொல்லுங்கள் – அடுத்தவர்களிடம் அல்ல! ஏன் என்றால் அத்தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டியது நான் தானே தவிர – அடுத்தவர்கள் அல்ல!//

  இதுதான் மனிதர்க்கு அழகு, மிகவும் ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 12. இந்த வார பழக் கலவையில் ‘கணவன் மனைவி பூதம்’ துணுக்கையும் ‘நிழல் நடனத்தையும்’ இரசித்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 13. எல்லாமே படிக்க, பார்க்க சுவாரசியமாய் இருந்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 14. எல்லாமே ரசித்தவை என்றாலும் மீண்டும் ரசித்தேன். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....