வெள்ளி, 27 மே, 2016

ஃப்ரூட் சாலட் – 164 – [DH]தில்பாக்[G] – திருமண நாள் பரிசு – நான் எங்கே இருந்தேன்?

நல்லதே நினைப்போம்:

The Logical Indian தளத்தில் நேற்று படித்த ஒரு செய்தி:  சையது மன்சர் இமாம் என்பவர் குருகிராமத்திலிருந்து [பழைய குர்காவ்ன்] நோய்டா செல்லும்போது வழியில் ராஜீவ் சௌக் நிலையத்தில் மெட்ரோ மாற வேண்டும் – அதற்கு எந்த நடைமேடைக்குச் செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வழிகாட்டி வரைபடத்திற்கு அருகே சென்றிருக்கிறார்.



அங்கே நின்று கொண்டிருந்த முதியவர் எங்கே செல்ல வேண்டும் என்பதைக் கேட்டு, எந்த நடைமேடைக்குச் செல்ல வேண்டும் என்பதைச் சொன்னாராம்.  நன்றி சொல்லி விடை பெற்ற பிறகு திரும்பிப் பார்த்தால் வழிகாட்டி வரைபடம் அருகே வரும் அனைத்து நபர்களுக்கும் வழி சொல்லிக் கொண்டிருக்க, அவரிடம் மீண்டும் சென்று வியப்புடன் எல்லோருக்கும் வழி சொல்லவே இங்கே நின்று கொண்டிருக்கிறீர்களா என வினவ, அந்த முதியவர் தன் கதையைச் சொல்லி இருக்கிறார்.

அவருடைய பெயர் [DH]தில்பாக்[G]. அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர். மூன்று வருடங்களுக்கு முன்னரே அவர் விரைவில் இறந்து விடக்கூடும் என நாள் குறிக்கப்பட்டவர். இறைவன் இது வரை எனக்கு வாழ்வு கொடுத்திருக்கிறார் – அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செய்வதற்காகத் தான் அந்த வாழ்வு என்று இப்படி தன்னால் முடிந்த உதவியைச் செய்து வருகிறார். தோளில் ஒரு பை – அதில் Biscuit, Chips, போன்ற குழந்தைகளுக்கான உணவுகள் இருக்க, அதை விற்பனை செய்கிறாரோ என சையது கேட்க, அவர் சிரித்த படி சொன்னது – “இல்லை, இங்கே துப்புரவு பணியாளர்கள் பணி முடிந்து வீடு திரும்புகையில் அவர்களுக்குக் கொடுப்பேன் – அவர்களின் குழந்தைகளுக்காக!என்று சிரித்தபடியே சொன்னாராம். 

இருக்கும் வரை நல்லது செய்வோம் – என்று வாழ்ந்து கொண்டிருக்கும் முதியவர் [DH]தில்பாக்[G] அவர்களுக்கு இந்த வார பூங்கொத்து....

பிரச்சனைகள்:

Problems are like Washing Machines. They twist us, spin us and knock us around. But in the end we come out cleaner, brighter and better than before.

தப்பை ஒத்துக் கொள்வோம்:

When you’ve done something wrong, admit it and be sorry.  No one in history has ever choked to death from swallowing their pride.

படமும் கவிதையும் – படம்-1, கவிதை-4

படமும் கவிதையும் தலைப்பில் பதிவுகள் வந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.  அந்த வரிசையில் முதல் படத்திற்கு வந்த இன்னுமொரு கவிதை இங்கே....  கவிதை எழுதியவர் முகிலின் பக்கங்கள் வலைப்பூவில் எழுதும் தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்.  அவர் எழுதிய கவிதை இதோ...


சோர்விலா உள்ளங்கள்

முதுகுச் சுமையேற்றி
முன்னோக்கி நகர்கிறேன் ...
சுணங்கி நிற்க நேரமில்லை
சுருண்டு படுக்கும் எண்ணமுமில்லை !

தயங்கி நிற்கும் பொழுதுகளில்
தயவு கிடைக்கும் சமயங்களில் !
ஆத்திரம் அதுவும் அதிகமானால்
உடலும் துவண்டிடும்  சாட்டையடியில் !

சுமைகளை வகைப்படுத்துவதில்லை -
முதுகிலேறும் அனைத்தும் - சுமையென
ஆகிப் போக - சுமைக்குப் பின்னே
சுகம் கிட்டுமென நாளெலாம் நகர்த்துகிறேன் !

நாளை வந்து எனை பார்த்தீர்களானால்
சுகமாய் இருப்பேனோ இல்லையோ
சுமையேற்றிச் செல்வேனொழிய
ஒருவருக்கும் சுமையாய் சுனங்கிட மாட்டேன் !

உடலது பாரம் சுமந்தாலும் -
உள்ளமதில் பாரமேற அனுமதித்ததில்லை !
அதனால் ஒவ்வொரு நாளும் புலர்கிறது
புது நாளாய் - புத்துணர்வோடு !

     பி. தமிழ்முகில்

திருமண நாள்:

இந்த வாரம் – எனது திருமண நாள் [24 May]. அதற்கு என் மகள் வரைந்து தந்த நினைவுப் பரிசு.....


ராஜா காது கழுதை காது..... 

திருவரங்கம் செல்லும் 1 நம்பர் பேருந்து – அப்பாவும் மகனும் [நான்கு அல்லது ஐந்து வயதிருக்கலாம்] பேசியபடியே வந்து கொண்டிருந்தார்கள்.  மகனின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியபடியே வந்து கொண்டிருந்தார் அந்த அப்பா....  திருவரங்கத்தின் பங்கஜம் நர்சிங் ஹோம் அருகே வந்ததும் அப்பா சொன்னார் – “நீ இங்கே தான் பிறந்தடா செல்லம்.....”  அதற்கு மகனின் கேள்வி – “எங்கேயிருந்து பிறந்தேன், அதுக்கு முன்னாடி எங்கே இருந்தேன்என வரிசையாக நான்கைந்து கேள்விகள்.....  அப்பாவிடம் பதில் இல்லை.  பேருந்து அதற்குள் திரும்ப, “ஸ்டாண்ட் வந்துடுச்சு. இறங்கி பாட்டி வீட்டுக்குப் போகலாம்! வா  

படித்ததில் பிடித்தது:

மன்னிக்கும் குணம் என்னிக்கும் நலம்!

ஒரு ஊரில் ஒரு கழுதை இருந்தது..அந்த கழுதையைப் பார்த்தால் எல்லாருக்கும் இளப்பம்.ஒரு நாள் அந்த கழுதை ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டது..அதைப் பார்த்த சிலர் பள்ளத்தில் விழுந்த கழுதை மேல் குப்பைகளைக் கொட்டினர்..சிலர் கற்களை வீசினார்கள்..அந்த கழுதை தன் மேல விழுந்த குப்பைகளையும் கற்களையும் உதறிக் கொண்டு அவற்றின் மீதே ஏறி பள்ளத்தில் இருந்து வெளியே வந்தது..

இதை எதுக்கு சொல்றேன்னா பொறாமைக் காரர்களின் நம்மைப் பற்றிய மட்டமான பேச்சுக்களையும் வசவுகளையும் இப்படித்தான் உதறித் தள்ளி அந்த வார்த்தைகளாலே நம்மை வலிமையுடவராக்கிக் கொண்டு உயரக் கற்றுக் கொள்ள வேண்டும்..

அதற்கு மன்னிக்கும் குணம் வேண்டும்..

அடுத்தவர் நமக்கு இழைத்த தீங்குகளை நாம் நினைத்துக் கொண்டே இருந்தால் எத்தனை வருடங்கள் ஆனாலும் கடந்த காலத்தின் கைதியாகவே இருப்போம் ..

#கொசுறு அடுத்தவர்களை மன்னிப்பது என்பது நாம் அவர்களுக்கு தரும் பரிசோ சலுகையோ அல்ல ..அது நமக்கு நாமே தரும் பரிசு. நம்மை அந்த இறுக்கமான மனநிலையில் இருந்து விடுவித்துக் கொள்ளும் வித்தை – மன்னிப்பு.

செல்லி ஸ்ரீனிவாசன்

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து.....

26 கருத்துகள்:


  1. இந்த வார பழக்கலவையில் அனைத்தும் அருமை.விரைவில் இறந்து விடக்கூடும் என நாள் குறிக்கப்பட்ட திரு [DH]தில்பாக்[G]. அவர்களுக்கு முதற்கண் வாழ்த்துகள்.

    அடுத்து தங்களின் புகைப்படத்திற்கு அழகிய கவிதை இயற்றிய திரு பி.தமிழ் முகில் அவர்களுக்கும், தங்களது திருமண நாளன்று வாழ்த்து மடல் வரைந்த தங்கள் மகளுக்கும் வாழ்த்துகள்!

    24 ஆம் நாளன்று திருமண ஆண்டு விழா கொண்டாடிய உங்கள் இருவருக்கும் ஆசிகளும் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  2. நோயின் கடுமை மனதைப் பாதிக்க விடாமல் என்ன ஒரு புன்னகை... கற்றுக் கொள்ளவேண்டும்.

    அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அனைத்தும் அருமை. திருமண நாளுக்கு வாழ்த்துகள். ஓவியம் வரைந்து வாழ்த்து கூறிய பரிசுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. நல்ல கதம்பம்! அந்தப் பெரியவர் மனதை நெகிழச் செய்து விட்டார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

      நீக்கு
  5. உதவும் குணம் கொண்ட [DH]தில்பாக்[G]. அவர்களுக்கு வணக்கங்கள். வெகு நாட்கள் அவரை இறைவன் வைத்து இருக்கட்டும் நலமுடன்.

    மகள் வரைந்த படம் அழகு, பாராட்டுக்கள் ரோஷ்ணிக்கு.
    கவிதை, கதை, மற்ற செய்திகள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

      நீக்கு
  6. எசகு பிசகாக குழந்தைகள்கேட்பதுண்டு என் பேரன் என்னிடம் கேட்ட கேள்விகள் சிலவஏற்றைப் பகிர்ந்திருக்கிறேன் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல சமயங்களில் இப்படி எசகு பிசகான கேள்விகள் கேட்கிறார்கள். பதில் சொல்வது சிரமம் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  7. முதியவர் [DH]தில்பாக் அவர்களைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. சுவைமிகு ப்ரூட் சாலட் . கவிதை அருமை தில்பாக் போன்ற மனிதர்களிடமிருந்து நாம் ஏதாவது கற்றுக் கொள்ளவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  9. திருமண நாள் வாழ்த்துகள். உங்கள் மகளுக்கும் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி முரளிதரன்.

      நீக்கு
  10. அனைத்தும் அருமை சார் .. பிலேடட் அனிவர்சரி ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

      நீக்கு
  11. மனிதப் பற்றுடன் சேவை செய்யும் தில்பாக் அவர்கள்,புற்று நோயை வென்று நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  12. உங்களுக்கும் ஆதிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வெங்கட்! குழந்தை தந்த பரிசை விடவும் வேறெதுவும் சிறந்ததாக இருக்க முடியாது! மகளின் ஓவியம் மிக அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  13. இன்றைய ஃப்ரூட் சாலடில் எனது கவிதைக்கும் இடமளித்தமைக்கு நன்றிகள் சகோதரரே.
    தங்களது திருமண நாளுக்கு இனிய நல்வாழ்த்துகள்.ரோஷ்ணியின் ஓவியம் அருமை. செய்திகள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் முகில் பிரகாசம் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....