எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, June 18, 2016

தந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்மூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான்.  அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா?”  என்று கேட்க, நான் கொஞ்சம் முழித்தேன். பெரும்பாலும் பிறந்த தினம், திருமண தினம் போன்றவற்றை மறந்து விட்டு, அல்லது தப்பாக நினைவு கூர்ந்து திண்டாடும் சராசரி ஆண் நான்! ஏற்கனவே இந்த வருடம் அவரின் திருமண நாள் அன்று, அதுவும் அப்பா-அம்மாவின் ஐம்பதாவது திருமண தினம் அன்று வாழ்த்துச் சொல்ல மறந்து போய் – அடுத்த நாள் அம்மா அழைத்து அவராகவே சொன்னபோது தான் நினைவுக்கு வந்தது. இப்படி இருக்கும் என்னிடம் இன்றைக்கு என்ன தினம் தெரியுமா?என்று அப்பா கேட்டவுடன், மீண்டும் ஏதோ முக்கியமான தினத்தினை மறந்து விட்டேன் போலும் என மண்டையைச் சொரிந்து கொண்டேன்......

மண்டையைக் குடைந்த படியே, அவரிடமே சரணடைந்தேன் – “என்ன தினம் பா, தெரியலையேஎன்று சொல்லவும், அவர் “இன்னிக்கு தந்தையர் தினம்....  உனக்குத் தெரியாதா? இங்கே பேப்பர்ல இது பத்தி நிறைய விளம்பரமும் செய்திகளும் போட்டு இருக்கான்!என்று சொன்னார்.  அதன் பிறகு தான் எனக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது – நல்ல வேளை பிறந்த நாள், திருமண நாள் போன்ற எதையோ மறக்க வில்லை என்று!  அவருக்கு வாழ்த்துச் சொல்லியதோடு, “இருக்கும் வேலைகளில் அன்றைய கிழமையே சில சமயங்களில் மறந்து விடுகிறதுஎன்பதையும் சொன்னேன்.  வேறு சில விஷயங்கள் பேசிய பின்னர் இணைப்பைத் துண்டித்தேன். 

சரி இன்றைக்கு தான் தந்தையர் தினம்....  அடுத்த வருடமாவது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அப்போதைக்கு நினைவில் வைத்துக் கொண்டேன் – எப்படியும் மறந்து விடுவேன் என்ற நம்பிக்கையோடு – என்னைப் பற்றி எனக்குத் தெரியாதா?

நேற்றைக்கு காலை மீண்டும் ஒரு அலைபேசி அழைப்பு – பொதுவாக காலை நேரங்களில் நான் யாரையும் அழைப்பதில்லை – என்னை யாராவது அழைத்தாலும் – அலுவலகத்திற்குப் புறப்படத் தயாராகும் அவசரத்தில் அழைக்கிறார்களே என்று புலம்பியபடியே அலைபேசியை எடுப்பது வழக்கம். எடுத்துப் பார்த்தால் அழைப்பு மகளிடமிருந்து....    

காலையில் பள்ளிக்குப் புறப்படும் சமயத்தில் அவளிடமிருந்து அழைப்பு என்றதும், கொஞ்சம் திகில்! “என்னடா, காலையில கூப்பிடற?என்று கேட்க, அங்கேயிருந்து “Happy Father’s Day” அப்பா என்று அவர் சொல்லி, அன்றைய நாள்காட்டியில் “தந்தையர் தினம்என்று எழுதி இருந்ததைப் பார்த்ததாகவும் அதனால் வாழ்த்துச் சொல்ல அழைத்ததாகவும் சொன்னார். என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை?என்று நினைத்தபடியே, “ஓ....  Thanks daa chellam” சொல்லி வைத்தேன். 

ஆனால் மனதுக்குள் குழப்பம் – அப்பா இரண்டு நாளுக்கு முன்னாடியே சொன்னாரே, மகளோ இன்னிக்கு தான் தந்தையர் தினம்னு சொல்ல, என்னிக்கு தான் தந்தையர் தினம் என்ற குழப்பம். 


சரி குழப்பதைத் தீர்க்க கூகிளாண்டவரிடம் சரணடைந்து விடுவது தான் சரி என அவரைக் கேட்க, அவரோ, இந்த இரண்டுமே இல்லை – என்று மூன்றாவதாக ஒரு நாளைச் சொல்லி விட்டார் – அது ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை – அதாவது நாளை – 19 ஜூன் 2016! எப்போது தொடங்கியது என்பதற்கு ஒரு கதையும் சொல்கிறார் கூகிளாண்டவர்!

அமெரிக்க ராணுவ வீரராக இருந்தவர் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட். அவரது மனைவி எல்லன் விக்டோரியா சீக் ஸ்மார்ட்டுடன். அவர்களுக்கு 6 குழந்தைகள். முதல் குழந்தை மகள் சொனாரா ஸ்மார்ட் டோட். எல்லன் 6வது முறையாக கர்ப்பமடைந்து ஆண் குழந்தையை பிரசவித்து இறந்து போனார். தனது 6 வாரிசுகளையும் தனி ஆளாக போராடி காப்பாற்றுவதை தனது வாழ்க்கையின் லட்சியமாக ஏற்றார் வில்லியம் ஜாக்சன். அதனால் மறுமணம்கூட செய்து கொள்ளாமல் குழந்தைகளை பராமரிப்பதிலேயே கவனம் செலுத்தினார். கைக்குழந்தையை வைத்துக் கொண்டு தந்தை படும் சிரமங்களை நேரில் பார்த்து வளர்ந்த மகள் சொனாராவுக்கு தந்தையின் மீது அளவு கடந்த பாசமும் மரியாதையும் ஏற்பட்டது. 


இந்நிலையில், 1909ம் ஆண்டு அமெரிக்காவில் அன்னையர் தினம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அறிந்த சொனாரா, தனது தந்தை போன்றவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என 1910 ஆண்டில் கோரிக்கை விடுத்தார். தனது தந்தையின் பிறந்த நாளான ஜூன் 5ம் தேதி கொண்டாட தேவாலயத்தில் அனுமதி கோரினார். ஆனால், ஏற்பாடுகளை செய்ய கால அவகாசம் தேவைப்பட்டதால், முதல் தந்தையர் தினம் ஜூன் 19, 1910ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டு தோறும், ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாக கொண்டாடி வந்தார் சொனாரா. நாடு முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென கருதிய சொனாரா இது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கை நிறைவேற 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனது.

 அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1972ல் அதிகாரப்பூர்வமாக தேசிய அளவில் தந்தையர் தினம் அனுசரிக்க ஆணை பிறப்பித்தார்.  இன்றைக்கு அமெரிக்காவில் மட்டுமல்ல பெரும்பாலான நாடுகள் தந்தையர் தினம் கொண்டாடப்படுவதற்கு மூல காரணம் சொனாரா.  சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம்.

பொதுவாகவே வருடம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய உறவுகளுக்காக, வருடத்தின் ஒரு நாள் மட்டும் கொண்டாடுவது எனக்குப் பிடிக்காத ஒன்று – குறிப்பாக – அம்மா தினம், அப்பா தினம், பெண் குழந்தை தினம், .....  எல்லா நாட்களும் அவர்களுக்கானவை தான் என்பது எனது எண்ணம். நீங்க என்ன சொல்றீங்க!

நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

28 comments:

 1. ஓ... அன்னையர் தினத்துக்கு இல்லாத குழப்பம் தந்தையர் தினத்துக்கு மட்டும்!

  :)))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. நல்ல பதிவு.
  இங்குள்ள காலண்டரில் நேற்றுதான் தந்தையர் தினம். மகன் மூன்றாவது ஞாயிறு என்றான்.
  சொனாரா கதை தெரிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
  2. சகோ கோமதி அரசு அவர்களுக்கு இந்தியாவில் மூன்றாவது ஞாயிறுதான் தந்தையர்தினம் ஒவ்வொரு நாட்டுக்கு் வேறுபடுகின்றது உண்மைதான்.

   Delete
  3. தங்களது வருகைக்க்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 3. மத்த எல்லாத்தையும்விட கடைசி மூன்று வரிகள் நான் விரும்புவது ... http://ethilumpudhumai.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   Delete
 4. தந்தையர் தின வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. தங்களுக்கும், தந்தையர் தினவாழ்த்துகள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 6. இரு வித்தியாசமான அழைப்புகள், மன நிறைவான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete

 7. /பொதுவாகவே வருடம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய உறவுகளுக்காக, வருடத்தின் /ஒரு நாள் மட்டும் கொண்டாடுவது எனக்குப் பிடிக்காத ஒன்று – குறிப்பாக – அம்மா தினம், அப்பா தினம், பெண் குழந்தை தினம், ..... எல்லா நாட்களும் அவர்களுக்கானவை தான் என்பது எனது எண்ணம் / I FULLY AGREE WITH YOU

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 8. மூன்றாம் ஞாயிறு என்று வருவதால் குழப்பங்கள் போல! நீங்கள் சொல்வது போல எல்லா நாட்களும் அவர்களுடைய நாட்களே என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 9. ஆம், ஜூன் மூன்றாவது ஞாயிறு என்பதையே கணக்கில் கொள்கிறார்கள்.

  தந்தையர் தின வாழ்த்துகள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 10. இவர்களுக்கெல்லாம் முன்னதாகவே -
  நம் முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள்..

  நாம் தான் நினைவில் கொள்ளவில்லை.. என்ன இருந்தாலும்,
  மேலை நாட்டவர் சொன்னால்தான் மண்டையில் ஏறுகின்றது..

  அன்பின் நல்வாழ்த்துகள்.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 11. தந்தையர் தின வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 12. தந்தையார் நாள் பற்றிய தகவலுக்கு நன்றி!
  // பொதுவாகவே வருடம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய உறவுகளுக்காக, வருடத்தின் ஒரு நாள் மட்டும் கொண்டாடுவது எனக்குப் பிடிக்காத ஒன்று – குறிப்பாக – அம்மா தினம், அப்பா தினம், பெண் குழந்தை தினம், ..... எல்லா நாட்களும் அவர்களுக்கானவை தான் என்பது எனது எண்ணம். நீங்க என்ன சொல்றீங்க!//

  உங்கள் கருத்தே என் கருத்தும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 13. பெரும்பாலும் பிறந்த தினம், திருமண தினம் போன்றவற்றை மறந்து விட்டு, அல்லது தப்பாக நினைவு கூர்ந்து திண்டாடும் சராசரி ஆண் நான்!// ஓ ஜி! நாங்கள் இருவருமே... கீதாவும் அடக்கம். ஹஹஹ

  உங்கள் இறுதிக் கருத்தும் //பொதுவாகவே வருடம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய உறவுகளுக்காக, வருடத்தின் ஒரு நாள் மட்டும் கொண்டாடுவது எனக்குப் பிடிக்காத ஒன்று – குறிப்பாக – அம்மா தினம், அப்பா தினம், பெண் குழந்தை தினம், ..... எல்லா நாட்களும் அவர்களுக்கானவை தான் என்பது எனது எண்ணம்./ அதே அதே!!! எங்கள் கருத்தும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....