எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, June 26, 2016

ஓவியம் – கண் பார்ப்பதை கை வரையும்....நம் கண்களுக்கு மட்டும் பார்த்தவுடன் ஒருவரது திறமைகளைக் கண்டுபிடிக்கும் திறன் இருந்தால்..... எவ்வளவு நன்றாக இருக்கும்? யாரையும் பார்வையால் எடை போட்டு விட முடிவதில்லை.  இந்த வாரம் ஃப்ரூட் சாலட் பதிவில் ஒரு காணொளியைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். காவி உடை அணிந்து கைகளில் குரங்கை வைத்திருக்கும் ஒரு முதியவர் சாலையில் சாக்பீஸ் கொண்டு விறுவிறுவென அத்தனை லாவகமாக அனுமனின் படத்தை வரைந்தார்.  அவரே இன்னுமொரு காணொளியில் முருகனின் படமும் வரைவதையும் பார்த்தேன்.  அவரைப் பார்த்தால், அவருள் இப்படி ஒரு திறமை ஒளிந்திருப்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா?

இப்படி திறமைகள் பலரிடமும் ஒளிந்திருக்கிறது. பார்க்கும் அனைத்தையும் ஓவியமாக வரைபவர்கள், எவரிடமும் பயிற்சி எடுத்துக் கொள்ளாமலேயே கேள்வி ஞானத்திலேயே இனிய குரலில் சிறப்பாக பாடுபவர்கள் என எத்தனை எத்தனை உதாரணங்கள்.  இன்று நாம் பார்க்கப் போகும் புகைப்படங்களும் அப்படி திறமை மிகுந்த ஒரு சிறுவன் வரைந்த ஓவியங்களே.....

நண்பரின் வீட்டுக்கு வரும், பள்ளியில் படிக்கும் மாணவன் அமித்.  தந்தை தோட்ட வேலை செய்பவர். இவனும் மாலை நேரங்களில் நண்பர் வீட்டிலும் இன்னும் சிலர் வீட்டிலும் தோட்ட வேலை செய்கிறான். புதிது புதிதாய் செடிகள் வைப்பது, செடிகளை பராமரிப்பது, தண்ணீர் பாய்ச்சுவது என பல வேலைகள்.  காலை நேரத்தில் எங்கள் பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு செய்தித்தாள் விநியோகிப்பது என பல வேலைகள் செய்து வருமானம் ஈட்டி தனது தந்தைக்கும், குடும்பத்திற்கும் உதவுவதோடு படிக்கவும் செய்கிறான்.  உழைப்பாளி.....

ஓய்வு நேரங்களில் நண்பர் வீட்டில் இருக்கும் திருப்பதி தேவஸ்தான கேலண்டரில் பார்க்கும் படங்களை அப்படியே பென்சில் ஓவியமாக தீட்டுவதும் இவனது பொழுது போக்கு. அமித்தின் பெரிய சகோதரன் ஓவியக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். அவனது ஓவியங்களும் வெகு அழகு. அவற்றை பிரிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைக்கு இளையவனின் ஓவியங்கள் – புகைப்படங்களாக!


என்ன நண்பர்களே, ஓவியங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 26 comments:

 1. அருமை. கடவுளின் கொடை. பட்டை தீட்டப்பட்ட வேண்டிய வைரம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. அழகான அருமையான ஓவியங்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 3. சித்திரமும் கைப்பழக்கம் என்றார்கள்..
  மேலும் வளர்வதற்கு வாழ்த்துவோம்..

  பதிவில் வழங்கியமைக்கு மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. ஆஹா...அருமை அருமை...சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 5. Replies
  1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 6. இவனது திறமைக்கு ஊக்குவிக்க ஆள் இருந்தால் இவனும் சிறந்த ஓவியனே அமித்துக்கு வாழ்த்துகள் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 7. அமித் தின் திறமைக்கு வாழ்த்துகள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 8. உங்கள் பதிவைப்படிக்கும் முன்பு ரோஷினியின் ஓவியங்களோ என்று நினைத்தேன். படித்ததும் அமித் வரைந்த ஓவியங்கள் பார்த்து மகிழ்ந்தேன். கோட்டோவியங்கள் அருமை. கோடுகள் தீர்க்கமாகவும் அழுத்தமாகவும் இருப்பதுடன் நுணுக்கமான திறமை பளிச்சிடுகிறது. எதிர்காலத்தில் பட்டை தீட்டிய வைரமாய் ஜொலிக்க என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஒரு சிறந்த ஓவியரிடமிருந்து பாராட்டு.... அமித்-இடம் சொல்லிவிடுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 9. மிக மிக அருமை, நல்ல ஷார்ப்பாக வரைந்திருக்கிறான் அமித். நுணுக்கமான திறமையை நல்ல முறையில் வளர்த்தெடுத்தால் நிச்சயமாக ஒரு நல்ல ஓவியனாக மிளிர முடியும் வாழ்த்துகள் அமித்திற்கு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   அனைவருடைய வாழ்த்துகளையும் வரைந்த அமித்-இடம் சொல்லி விடுகிறேன்.....

   Delete
 10. அமித் சிறந்த ஓவியக்கலைஞனாக திகழ எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 11. ஆஹா அருமையான ஓவியங்கள் ஐயா.நன்றி பகிர்தமைக்கு ஐயா.தொடர்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்.

   Delete
 12. அருமையான ஓவியங்கள். பையர் ரொம்பச் சுறுசுறு போல! குழந்தைத் தொழிலாளி அது, இதுனு சொல்லிட்டு இவரின் உழைப்புக்குத் தடை விதிக்காமல் இருந்தால் சரினு தோணுது! ஏனெனில் படிப்பு மட்டும் இல்லாமல் ஏதேனும் ஓர் தொழிலும் குழந்தைகளுக்குத் தெரிஞ்சிருக்கணும். படிக்கும் படிப்பை வைத்து அந்தத் தொழிலை முன்னேற்றவும் பார்க்கணும்! நல்ல மனிதர்கள் கிடைத்து அந்தச் சிறுவனுக்கு மேன்மேலும் ஊக்கம் கிடைக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 13. படங்கள் அனைத்தும் அபாரம். வருங்காலத்தில் சிறந்த ஓவியராக வருவார் இந்த பையன். அவருக்கு என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....