எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, June 28, 2016

ஆண் [அ]சிங்கம்

நல்ல சிங்கம்.....
படம்: இணையத்திலிருந்து.....

அலுவலகத்தில் ஒரு பாதுகாப்புத்துறை ஊழியர் – மதுராவினைச் சேர்ந்தவர். திருமணம் ஆகிவிட்டது. இரண்டு குழந்தைகள் – இரண்டுமே ஆண் குழந்தைகள். பெரியவன் முதலாம் வகுப்பில் படிக்கிறான், இரண்டாமவன் இரண்டு வயதுக் குழந்தை.  மதுராவில் மனைவி, மகன்கள் ஆகியோர் ஊழியரின் வீட்டில் இருக்க, இவர் மட்டும் இங்கே தனியாக இருந்து கொண்டிருந்தார். வெள்ளியன்று இரவு சென்றால் திங்கள் அன்று தில்லி திரும்புவார்.  தில்லியில் அவர் தனது Unit-ல் தங்கிக் கொண்டிருந்தார்.

சில மாதங்கள் முன்னர் Unit-ல் தங்க அனுமதி மறுக்கப்பட்டபோது, தினமும் மதுராவிலிருந்து தில்லிக்கு பயணிக்க ஆரம்பித்தார். பாதுகாப்புத் துறையில் இருப்பதால் தினமும் ரயில் பயணிக்க சீட்டு வாங்குவதில்லை. எப்போதாவது TTE கேட்டால் அவர் யார், அவரது தந்தை யார் [தந்தையும் உத்திரப் பிரதேச காவல் துறையில்] என்ற பிரதாபங்களைச் சொல்லி சீட்டு வாங்க முடியாது என்று சொல்லி விடுவார். இப்படியே சென்று வருவதை அவரால் தொடர முடியவில்லை.

தில்லியின் எல்லையிலேயே அலுவலக குடியிருப்பில் தங்குமிடம் வாங்கிக் கொண்டு குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டார். இது நடந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இந்த மாதங்களில் மூன்று முறை என்னிடம் வந்து புலம்பி இருக்கிறார் – எல்லாம் ஆண் சிங்கம் வேலை தான். ஒவ்வொரு முறையும் அறிவுரை சொன்னாலும் திருந்தவில்லை.

நேற்று மூன்றாவது முறையாக அவரது மனைவிக்கு கருக்கலைப்பு! மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அவர் சகட்டு மேனிக்குத் திட்டியிருக்கிறார் – மனைவியின் உடல்நலத்தோடு ஏன் விளையாடுகிறாய் என்று அவரைத் திட்டியதோடு, மனைவியையும் கன்னா பின்னாவென்று திட்டி இருக்கிறார். மனைவியின் உடல் நிலை மோசமாக இருக்கிறது என்று நேற்று வந்து என்னிடம் புலம்பிக் கொண்டிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னரே இப்படி நடந்தபோது அவருக்கு அறிவுரை கூறி இருந்தேன்.

படம்: இணையத்திலிருந்து.....

ஆறு ஏழு மாதங்களுக்குள் மூன்றாவது முறையாக கருத்தரிப்பு. கொஞ்சம் கூட தனது மனைவியின் உடல் நலத்தில் அக்கறை இல்லாது, தனது வேட்கைக்குத் தீனி போடும் ஒரு பொருளாக மனைவியை பயன்படுத்துவது தவறு என்று நேரடியாகவும், இப்படி அடிக்கடி கருத்தரிப்பு, கருக்கலைப்பு என்றால் அவரது மனைவிக்கு எத்தனை தொந்தரவுகள், உடல் உபாதைகள் உண்டாகும் என்றும் விளக்கிச் சொன்னாலும் புரிவதில்லை.

நேற்று மூன்றாவது முறை என்று சொன்னதும் கொஞ்சம் கோபமாகி, நீ எல்லாம் மனுஷனா, இல்லை மிருகமா என்று திட்டியதோடு, எத்தனையோ கருத்தடை சாதனங்கள் இருக்கிறது, இல்லை எனில் நீயோ, மனைவியோ கருத்தடை ஆபரேஷன் செய்து கொள்ளலாமே என்றால் அதற்கு அவர் சொன்ன பதில் இன்னும் அதிக கோபத்தினை வரவைத்தது.  அவர் ஆபரேஷன் செய்து கொண்டால் அவரது மர்[dh]தானி அதாவது ஆண்மை குறைந்து விடுமாம்... சரி மனைவியையாவது ஆபரேஷன் செய்து கொள்ளச் சொல்லலாமே என்றால், குண்டாகி விடுவாராம்..... அடேய் மாக்கான்... குண்டானா பரவாயில்லைடா, உண்டாகத்தான் கூடாது என்று திட்டினேன்.

கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதிலும் அவருக்கு விருப்பம் இல்லை. அவற்றால் சரியான சுகம் கிடைப்பதில்லையாம்.....  அசிங்கமாக திட்டலாம் என்று தோன்றியது -  திட்டினேன் – இங்கே எழுத முடியாத அளவு திட்டினேன். 

மனைவியின் உடல்நிலை சரியில்லை என்பதை தனது வீட்டிற்குச் சொல்லாமல் தில்லியில் இருக்கும் அவரது சித்தப்பா மகளைத் துணைக்கு அழைத்து வந்து மனைவியைப் பார்த்துக் கொள்கிறார். மருத்துவரும் இன்னுமொரு முறை இப்படி நடந்தால், அதைத் தாங்கும் சக்தி உன் மனைவிக்கு இல்லை என்று சொல்லி இருக்கிறாராம்.

நானும் தொடர்ந்து இப்படி கருத்தரிப்பும், கருக்கலைப்பும் நடந்தால் அவரது மனைவிக்கு கர்ப்பப்பையில் புற்று நோய் உண்டாகும் அபாயமும் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன். அவளுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு நீ திண்டாடுவாய் என்றும் சொல்லி பயமுறுத்தி இருக்கிறேன். 

ஆண் சிங்கம் இப்போதைக்கு வாலைச் சுருட்டியபடி இருந்தாலும், ஆண்மையைப் பறை சாற்ற ஏதாவது செய்து, அடுத்த முறை இப்படி ஏதாவது நடந்தால் நிச்சயம் வெட்டி விட வேண்டியது தான்! வேறு வழியில்லை......

என்ன ஆண்மையோ...  என்ன பெருமையோ..... தனது துணைவியின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளாத ஆண்மை என்ன ஆண்மை?.....

வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

24 comments:

 1. பாவம் அந்தப் பெண்மணி..

  ReplyDelete
  Replies
  1. பாவம் தான். அது பற்றி அந்த ஆணுக்கு கவலை இல்லையே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. (அ)சிங்கம்தான் :-( ஆனாலொரு விநோதம் பாருங்க.... இப்படி வேணாம் வேணாமுன்னு இருப்பவர்களுக்கு அள்ளித்தரும்(!) ஆண்டவன், ஒரு குழந்தை.... ஒரே ஒரு குழந்தைக்காக ஏங்கும் எத்தனையோ தம்பதியரைக்கண்டுக்கறதில்லை பாருங்க :-( அவன் கணக்கு என்னவோ... யாருக்குத் தெரியுது?

  ReplyDelete
  Replies
  1. அவன் கணக்கு யாருக்கும் புரியாத கணக்கு......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 3. இப்படியும் பல (அ)சிங்கள் இருக்கின்றன

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 4. Vali pennirku thane sako....avanuku yenna

  ReplyDelete
  Replies
  1. அதனால் தானே உணர்ந்து கொள்ள மறுக்கிறான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 5. துளசி சொல்வதை வழிமொழிகிறேன். பல நாட்கள் ஆகி விட்டன உங்கள் பதிவுகளைப் படித்து!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.... நீங்க வந்து ரொம்ப நாளாச்சு... என்ன Imposition கொடுக்கறதுன்னு யோசிச்சு வைக்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
  2. கொடுங்கள்...கொடுங்கள்.... கொடுத்துக் கொண்டே இருங்கள்...

   ஹி.... ஹி.... ஹி...

   Delete
  3. ஹாஹா.... நிச்சயம் கொடுத்து விடலாம்! :)

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. ஒரு மாற்றத்துக்கு அவனை அவளாகவும் அவளை அவனாகவும் நினைக்கச் சொல்லிப் பாருங்கள் பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் வேண்டாத ஈகோ வேறு

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் - உண்மை தான் ஐயா. குறிப்பாக வடக்கே இருக்கும் ஆண்களுக்கு மர்தா[dh]னி/ஆண்மை பற்றிய சிந்தனைகள் அதிகம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 7. // தனது துணைவியின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளாத ஆண்மை என்ன ஆண்மை?.....//

  சரியான சாட்டையடி. ஆனால் இவர்களுக்கெல்லாம் எங்கே அது உறைக்கப்போகிறது? பாவம் அவரது துணைவியார்.

  ReplyDelete
  Replies
  1. கடந்த இரண்டு முறை சொன்னது அவருக்கு உறைக்கவில்லை. இம்முறை கொஞ்சம் ஆடிப் போயிருக்கிறார். திருந்துவார் என நம்புவோம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. அவன் ஒண்ணும் செய்யாமலிருக்க என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன். இவனுக்கெல்லாம் Dr. ஜனகராஜ் தான் சரி.

  ReplyDelete
  Replies
  1. அவன் ஒண்ணும் செய்யாமலிருக்க என்ன செய்யலாம்..... நல்ல யோசிங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 9. பெண்கள் நலனில் நீங்கள் காட்டும் அக்கரைக்கு நன்றி வெங்கட்!. உங்கள் சகா ஷாஜஹானின் வாரிசோ? பதினான்கு வருடங்களில் பதிமூன்று குழந்தைகளை பெற வைத்து, ரத்த சோகையால் மனைவி செத்த பிறகு அவள் நினைவில் காதல் சின்னமாம்..? என்ன ஒரு பம்மாத்து..

  ReplyDelete
  Replies
  1. ரத்த சோகையில் செத்த பிறகு காதல் சின்னம்.... - உண்மை தான். அங்கே நிற்கும்போது இதே தான் தோன்றியது....

   தங்களத் முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   Delete
 10. Aan chingam-----a singamaga irukkiran. (sorry venkatji...tamil font keyboard accept panna matenguthu error. velai seiyala athaan..)

  muthalil chingam patriya pathivu entru ninaithu vandal hum ippadiyum aangal ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 11. தலைப்புக்கு ஏற்ற விளக்கம். இந்த மாதிரி (அ)சிங்கங்களுக்குப் புரிய வைப்பது மிகவும் கடினம். எப்படியோ அவன் தவறை மண்டையில் ஏற்றிவிட்டீர்கள், இனியாவது அவன் மனைவியைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரிதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....