எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, June 7, 2016

பூவுக்குள் புன்னகை! - படமும் கவிதையும்


[படம்-3 கவிதை-3]

படமும் கவிதையும் வரிசையில் மூன்றாம் புகைப்படத்திற்கு வந்த மூன்றாம் கவிதையோடு உங்களை இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி. கவிதையை எழுதி அனுப்பியவர் தில்லி நண்பர் பத்மநாபன் அவர்கள்.  படம் பற்றிய குறிப்பும் கவிதையும் இதோ....

புகைப்படம்-3:எடுக்கப்பட்ட இடம்:  சமீபத்தில் விசாகபட்டிணம் அருகே இருக்கும் அராக்கு வேலி எனும் இடத்திற்கு பாசஞ்சர் ரயில் மூலம் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பாசஞ்சர் ரயிலின் ஒரு பெட்டி முழுவதும் சுற்றுலா பயணிகள். அதில் பல இடங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள்.  அங்கே வந்திருந்த ஒரு சுற்றுலா பயணிக்கு இரண்டு பெண் குழந்தைகள். சுட்டியாக அங்கேயும் இங்கேயும் சென்றும், சிரித்தும் சக பயணிகளை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்.  அதில் மூத்த பெண் தான் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர். பாசஞ்சர் ரயிலின் மேல் சாமான்கள் வைக்கும் இடத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு கம்பிகள் வழியே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.  அவரை என் காமிராவில் சிறை பிடித்தேன். 

புகைப்படத்திற்கு நண்பர் பத்மநாபன் எழுதி அனுப்பிய கவிதை இதோ.....

கவிதை-3:

பூவுக்குள் புன்னகை!

கண்ணே! இளைப்பாறு! உன்
தாய்மேல் வருதே அழுக்காறு!

மின்னும் கண்கள்!
மிளிர்கின்ற பூவதனம்!
உள்ளம் போனது கொள்ளை!
கொள்ளை கொண்டதனால் சிறைவாசம்!
எம் மனச்சிறையில் உன்வாசம்!

கண்ணுக்குள் நீள்மின்னல்!
பூவுக்குள் புன்னகை!
பூவதனப் புன்னகையால்
எம்மனச்சிறைக்குள் உன்  சுவாசம்!
நினைத்தாலே சுகம் வீசும்!

கொள்ளை போக திறந்ததென் மனக் கதவு!
கொள்ளை கொண்டது இந்தச் சிறு நிலவு!
கள்ளப் புன்னகையில் காட்டிய துள்ளல்,
அள்ளக் குறையாத அழகின் விள்ளல்!

கண்ணே! இளைப்பாறு! உன்
தாய்மேல் வருதே அழுக்காறு!

     பத்மநாபன்.....

என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் மூன்றாம் படமும் நண்பர் பத்மநாபன் அவர்கள் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? தொடர்ந்து புதன் கிழமைகளில் படமும் கவிதையும் பதிவுகள் வெளிவரும். நான் எடுத்த புகைப்படத்திற்கு கவிதை எழுத விருப்பம் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் [ venkatnagaraj@gmail.com ] அனுப்பினால் நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை.  சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம்.  அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

18 comments:

 1. அருமை. ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 3. மனம் கொள்ளை கொள்ளும் கவிதை
  பத்மநாபன் மேல் வருகிறதே அழுக்காறு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 4. கவிதை அருமை ஜி திரு. பத்மநாபன் அவர்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   Delete
 6. கவிதையை நினைச்ச மாத்திரத்தில் எழுதுபவர்களைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமையாகவே இருக்கு! :)

  ReplyDelete
 7. நினைத்த மாத்திரத்தில் கவிதை! :)))

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

  ReplyDelete
 8. திரு பத்மநாபனின் கவிதை இரசித்தேன்! அவருக்கு பாராட்டுகள்! இந்த கவிதை பிறக்க காரணமாக இருந்த தங்களுக்கும் பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா...

   Delete
 9. பூவுக்குள் புன்னகை! - படமும் கவிதையும் - திரு பத்மநாபனின் கவிதை அருமை. பாராட்டுகள். கவிதைக்கு ஏற்ற படம் உங்களுக்கும் பாராட்டுக்கள்.
  விஜயராகவன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 10. படமும் கவிதையும் மிக மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....