எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, August 20, 2016

அருணாச்சல் – தாமஸ் உடன் அறுவரானோம்.....ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 38

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான Drop Down Menu.....எங்கே செல்லும் இந்தப் பாதை....

தொடரின் ஆரம்பித்தில் சொன்னது போல ஐந்து பேர் – அதாவது – நான், கேரளத்திலிருந்து நண்பர்கள் பிரமோத், சுரேஷ், சசிதரன் மற்றும் நாசர் ஆகியோர் இந்த வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டோம்.  அருணாச்சலப் பிரதேசம் செல்லத் திட்டமிட்டதும் அந்த மாநிலத்தின் அரசுப் பணியில் இருக்கும் நாசரின் மற்றொரு நண்பரான தாமஸ் என்பவரிடம் தான் எங்கள் திட்டத்தினைச் சொல்லி இருந்தோம். அவரிடம் அருணாச்சலப் பிரதேசத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் குறிப்பாக தவாங் என்று சொல்ல, அவரும் “கவலைப் படாது வாருங்கள். எல்லா ஏற்பாடுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேனஎன்று சொல்லி விட்டார். 


காசிரங்காவிலிருந்து பாலிபாரா....
வரைபடம்: இணையத்திலிருந்து....


சொன்னது மட்டுமல்லாது, அவரும் அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் இடாநகரிலிருந்து வந்து எங்களோடு கலந்து கொண்டார். அருணாச்சலப் பிரதேசம் பயணம் முழுவதும் அவரும் எங்களுடன் வரப் போகிறார் என்று சொன்னதும் கூடுதல் மகிழ்ச்சி. தாமஸோடு நாங்கள் அறுவரானோம். அவர் கூடவே வந்த்து மட்டும் இல்லாமல் செல்லும் இடமெல்லாம் சிறப்பான ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார் – உணவு, தங்குமிடம், பெற வேண்டிய அனுமதிகள் என எல்லாம் அவர் செய்து வைத்திருந்தார். அதனால் எங்களுக்கு எந்த வித அலைச்சலும் இல்லாது போனது. கருமமே கண்ணாயினாள்!
பாலிபாராவில் காத்திருந்தபோது....

முன் கூட்டியே பேசி இருந்தபடி, இடாநகரிலிருந்து அவர் புறப்பட்டு தேஸ்பூரினை அடுத்த அசாம் மாநிலத்தின் பாலிபாரா வந்து சேர, நாங்களும் அவ்விடம் சென்று சேர்ந்தோம்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாசரும் அவரது நண்பர் தாமஸும் பார்த்துக் கொண்டார்கள். சற்றே அளவளாவிய பிறகு பாலிபாராவில் தேநீர் குடித்து, அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம்.  தொடர்ந்து பயணித்தபடியே, தாமஸ் அடுத்த தினங்களில் என்ன செய்யப் போகிறோம், எங்கே பயணிக்கப் போகிறோம், தங்குவதற்கு செய்திருக்கும் ஏற்பாடுகள் என்ன என்பதை எல்லாம் சொல்லிக் கொண்டு வந்தார். 


நெடுஞ்சாலை பதாகை
படம்: இணையத்திலிருந்து....


திட்டமிட்டது மட்டுமல்லாது, கூடவே அவரும் வந்து எங்கள் பயணத்தில் சேர்ந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலும் தெரியாத இடங்களுக்குச் செல்லும் போது அங்கே நமக்கு இப்படி ஏற்பாடுகள் செய்து தரவும், வழிகாட்டியாக கூடவே இருப்பதற்கும், மகிழ்ச்சியில் பங்கு பெறவும் நண்பர் ஒருவர் இருந்துவிட்டால் பயணமே சிறப்பாக இருக்கும் அல்லவா.....  அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் வடித்து விடமுடியாது.  மிகச் சிறப்பாக திட்டமிட்டிருந்தார். 


இடது ஓரத்தில் டோர்ஜி!
வாகனத்தினுள் இருந்து எடுத்த புகைப்படம்

காசிரங்கா பூங்காவிலிருந்து பாலிபாரா சுமார் 75 கிலோமீட்டர் தூரம்.  ஒரு மணிக்கு காசிரங்காவிலிருந்து புறப்பட்ட எங்கள் வாகனம் ஓட்டுனர் டோர்ஜி வந்த வேகத்தில் இரண்டே கால் மணிக்கே பாலிபாராவிற்கு வந்து சேர்ந்து விட்டோம். இடையில் தேஸ்பூரில் 15 நிமிடங்கள் நின்றிருப்போம். ஒரு மணி நேரத்தில் 75 கிலோமீட்டர் பயணித்து இருக்கிறோம். டோர்ஜியைப் பற்றி இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். டோர்ஜி ஒரு நேபாளி என்று முந்தைய பகுதியில் சொல்லி இருந்தேன்.  எங்கள் பயணத்தில் அவர் தொடர்ந்து நேபாளி பாடல்களையே கேட்டுக் கொண்டிருந்தார்.  எங்களுக்கும் நேபாளி பாடல்கள் புரிந்து விடும் என்ற அளவிற்கு!


பாலிபாராவின் பிரபலமான சனிக்கிழமை சந்தை
படம்: இணையத்திலிருந்து.....

அவரிடம் பேச்சுக் கொடுத்ததில் மேலும் சில விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று தெரிந்ததும், அதுவும் நான் தமிழகத்தினைச் சேர்ந்தவன் என்று சொன்னதும் அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சியைக் காண முடிந்தது. அதற்குக் காரணம் இருந்தது! அவரது சகோதரி திருமணம் புரிந்திருப்பது ஒரு தமிழரை! அருணாச்சலப் பிரதேசத்திற்கு ராணுவப்பணி நிமித்தம் வந்திருந்த ஒரு தமிழர் அவரது சகோதரியிடம் காதல் வயப்பட்டு திருமணம் புரிந்து கொண்டாராம்.  அவரது சகோதரியும், ஜீஜாவும் [அக்கா புருஷனுக்கு ஹிந்தி!] தற்போது சென்னையில் வசிக்கிறார்களாம். இவரும் ஒன்றிரண்டு முறை சென்னை வந்திருக்கிறாராம்.

இந்த செய்திகளை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் டோர்ஜி! பொதுவாகவே ஓட்டுனர்களிடம் பேசிக்கொண்டு வருவது எனக்கு பழக்கமான விஷயம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். எல்லாப் பயணங்களிலும் இப்படி ஓட்டுனர்களோடு பேசுவதால் சில பயன்களும் உண்டு! ஒன்று அவர் வண்டி ஓட்டும்போது தூங்க மாட்டார்! மற்றொரு பலன் – நமக்கும் சில ஸ்வாரஸ்யமான விஷயங்கள் கிடைக்கும்! டோர்ஜியும் எங்களோடு வருவதில் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனாலும் அன்று மட்டுமே அவர் எங்களோடு இருப்பார் என்பதை பிறகு தான் தெரிந்து கொண்டோம்! அவரது மூன்று மாதக் குழந்தையைப் பார்த்து ஒரு மாதம் ஆகிவிட்டது என்பதால் வீட்டுக்குப் போக ஆசை....  நாங்களும் மறுக்காமல் அனுமதித்தோம். வேறு ஓட்டுனர் வந்தால் சரி!


சாப்பாடு எப்ப வரும்?

காலையில் காசிரங்கா பூங்காவில் சாப்பிட்டதற்குப் பிறகு தேநீர் மட்டுமே. போலவே தாமஸும் இடாநகரில் சாப்பிட்டது. வழியில் மதிய உணவு சாப்பிடவும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். எங்கே மதிய உணவு சாப்பிட்டோம், அங்கே கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
   
மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

24 comments:

 1. தட்டு இருக்கிறது.. உணவு இன்னும் வரவில்லை.. பசி முகங்களில் தெரிகிறது.. சாப்பிட்டு விட்டு வாருங்கள்!! காத்திருக்கிறோம்!!

  ReplyDelete
  Replies
  1. பசி முகங்களில் தெரிகிறது! :) உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. #ஜீஜா#
  யாருக்கு ,எப்போ ,எங்கே காதல் வரும்னு யாருக்கும் தெரியலே :)

  ReplyDelete
  Replies
  1. //யாருக்கு ,எப்போ ,எங்கே காதல் வரும்னு யாருக்கும் தெரியலே :)//

   அது தான் காதல்! :))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 4. உங்களிம் அடுத்த பதிவிற்காக வெயிட்டிங்!

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பகுதி வரும் திங்களன்று....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

   Delete
 5. தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன் அண்ணா....

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 6. பயண அனுபவங்கள் அருமை.
  பசி நேரத்தில் உணவு எப்போது வரும் என்று காத்து இருப்பது கஷ்டம், வந்துவிட்டால் இன்பம் தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 7. காத்திருக்கிறோம்...
  களைப்பாறி வருக சகோ
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 8. இன்னும் சாப்பாடு வரவில்லையா சகோ....பயணங்கள் தொடரட்டும்..நானும் உங்களோடு....

  ReplyDelete
  Replies
  1. சாப்பாடு வந்து கொண்டிருக்கிறது! காத்திருக்கிறோம்... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 10. பசியோடு இருந்தாலும் எங்கள் செவிக்குணவாக பல செய்திகளை கொடுத்த பதிவு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 11. தொடர்கிறோம்
  பயணம் தொடர நல்வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 12. ஆஹா பசித்திருக்கும் போது வெறும் தட்டு மட்டும் நம் முன் என்றால்..அதுவும் பயணத்தில்....காத்திருக்கும் தருணங்கள்....பொறுமை ரொம்பவே வேண்டும் இல்லையா ஜி.

  கீதா: ஜி நானும் ஓட்டுநருடன் பேசும் வழக்கம் உண்டு. பேசிக் கொண்டே தான் வருவேன். அது கால் டாக்சி என்றாலும் கூட சிறிய தூரமாக இருந்தாலும்....அருமையான பயணத் தொடர்...இதோ உங்கள் அடுத்த பகுதிக்குச் செல்கின்றோம்

  ReplyDelete
  Replies
  1. உணவுக்காகக் காத்திருப்பது கொஞ்சம் கடினமான வேலை தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....