எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, August 30, 2016

லண்டன் டயரி – இரா. முருகன்
இரண்டு நாட்களுக்கு முன்னர் திருவரங்கம் வடக்கு அடையவளஞ்சான் தெருவில் இருக்கும் நூலகத்திற்குச் சென்றிருந்தோம். புத்தக அலமாரியில் பார்த்துக் கொண்டிருந்தபோது “லண்டன் டயரிஎன்ற புத்தகம் கண்ணில் பட, அதில் எழுதி இருந்த இந்த வரி “பயண அனுபவங்களின் ஊடாக தேம்ஸ் நதி நகரத்தின் சுவாரசிய சரித்திரம் பார்த்த உடனேயே கையில் எடுத்துவிட்டேன். எனக்குத் தான் பயணம் என்பது மிகவும் பிடித்த விஷயமாயிற்றே! எடுத்து வந்த அடுத்த நாளே முழுவதும் படித்து விட்டேன்.  

மொத்தம் 26 பகுதிகள் – ஒவ்வொரு பகுதியிலும் முதல் பாதியில் லண்டன் மாநகரின் வரலாற்றைச் சொல்வதோடு, இரண்டாம் பாதியில் அவர் பார்த்த இடங்கள் பற்றிய குறிப்புகளை மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் இரா. முருகன். பிரபல எழுத்தாளர், முகப்புத்தகத்திலும் நிறைய எழுதுகிறார். அவரது புத்தகங்கள் நான் இதுவரை படித்ததில்லை. இது தான் நான் படிக்கும் அவரது முதல் புத்தகம். ஆங்காங்கே நகைச்சுவை மிளிர மிகவும் சுவையாக எழுதி இருக்கிறார்.

பல வரலாற்றுக் குறிப்புகளையும் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. லண்டன் நகருக்கு முதன் முதலில் வைத்த பெயர் லண்டினீயம்! கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது லண்டன் நகரின் வரலாறு! அவரது வார்த்தைகளில் சொன்னால் ரோமானிய வழக்கப்படி ‘லண்டீனியம்என்று கனகம்பீரமாக நாமகரணம் செய்யப்பட்ட அந்தக் கிராமம் வளர்ந்து பெருநகரமானபோது பெயரிலிருந்து “ஈயம்உருகிப்போக, சிக்கென்று ‘லண்டன்ஆனது. அபிதகுஜலாம்பாள் அபிதா ஆனது போல காலத்தோடு ஒட்டிய மாற்றம் இது!

குழாயைத் திறந்தால் வெள்ளமாகத் தண்ணீர் கொட்டும் நாட்டில், எத்தனை மரத்தை, காட்டை வெட்டிக் காய்ச்சிக் கூழாக்கி இப்படி சுருள் சுருளாக துடைக்கிற பேப்பர் செய்து தள்ளிக் கொண்டிருக்கிறார்களோ. காகிதத்துக்குக் கட்டுப்பாடு வந்தால் முதலில் பத்திரிகை அச்சடிப்பதைத்தான் நிறுத்துவார்களோ என்னமோ, துடைத்துப் போடுகிற காகித உற்பத்தி தடையின்றி நடக்கும் போலிருக்கிறதுஎன்று எழுதியதைப் படிக்கும் போது எனக்கும் எங்கள் அலுவலகத்தில் கை துடைக்க இது போன்று பேப்பர் நாப்கின்கள் எத்தனை எத்தனை வீணாக்குகிறார்கள் என்று தோன்றியது!

1338-ஆம் ஆண்டு.... இப்போதைய பிக்கடிலிக்கு அருகே டைபர்ன் பகுதியில், கொலைக் குற்றவாளிகளுக்கு பகிரங்கமான தூக்கு தண்டனை நிறைவேற்றுவதும் அறிமுகமானது. யாரையாவது தூக்கில் போடும்போது, திருவிழா போல் மக்கள் கூட்டம் கட்டுச்சாதம், இனிப்பு, சாராயம், சரக்கு இத்யாதிகளோடு வேடிக்கை பார்க்க நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு, நோட்டீஸ் வைத்துக் கூப்பிடுவதுபோல ஆஜராகிவிடும்! பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இந்தப் பகிரங்கத் தூக்குத் தண்டனை அமலில் இருந்ததாம்!  எட்டாம் ஹென்றி எனும் அரசன் தனது முதல் மனைவி ஆன் போலின் என்பவரை சிரச்சேதம் செய்தாராம் – காரணம் அரசன் இரண்டாம் முறையாக திருமணம் புரிந்து கொள்ள தடையாக இருந்தது தானாம்!

1944-ஆம் ஆண்டு போரில் இங்கிலாந்து கடற்படையில் சுறுசுறுப்பாக செயல்பட்ட எச்.எம்.எஸ். பெல்ஃபாஸ்ட் என்ற போர்க்கப்பலை இப்போது யுத்தகால அருங்காட்சியகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  அது பற்றிய ஒரு தகவல் – உண்மையோ, பொய்யோ – ஆனால் சுவாரஸ்யம்!

கப்பலின் ஒரு பகுதி – கக்கோல்ட் முனை. “சொல்பேச்சு கேட்காத பெண்டாட்டியை வில்லியம் கக்கோல்ட் இங்கேயிருந்து தான் பிடிச்சுத் தள்ளிவிட்டானாம். திரும்பிப் பார்த்தால், பெரிய கும்பல். என் வீட்டுக்காரியையும் தள்ளி விடுய்யான்னு அவனவன் க்யூவில் நின்னு கெஞ்சறான். நோ ப்ராபளம்னு ஒருத்தருக்கு ஒரு பென்ஸ் காசு கூலி வாங்கிப் போட்டுக்கொண்டு அப்புறம் அவன் முழுநேரம் இதே உத்தியோகம் பார்த்தானாம்! 

தேம்ஸ் நதி என நாம் சொன்னாலும், அதை டெம்ஸ் என்று தான் உச்சரிக்கிறார்களாம். ஒண்ணாம் ஜார்ஜ் மன்னனின் அம்மா ஜெர்மனியிலிருந்து வந்தவராம். ஜார்ஜுக்கு தேம்ஸ் என்று சொல்ல நாக்குப் புரளவில்லை. ஜெர்மன் மொழி உச்சரிப்பில் டெம்ஸ் என்று அரசன் சொல்ல, என்னத்துக்கு வம்பு என்று அரசவையில் எல்லோருமே மரியாதையை உத்தேசித்து அதேபடி டெம்ஸ் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். “ராஜா உச்சரிச்சா அது ராங்காப் போனதில்லைஎன்பதல் இன்றைக்கும் அதிகாரபூர்வமான உச்சரிப்பு டெம்ஸ்தான்....

மதுக்கடை ஒன்றிற்குச் சென்றபோது அங்கே Pub Quiz நடந்ததாம். அது பற்றி இப்படிச் சொல்கிறார் நூல் ஆசிரியர்.  மைக்கைப் பிடித்தபடி ஒருத்தர் குடிமக்களுக்கு முன்னால் மேடையில் கேள்வி கேட்கத் தயாராக நிற்கிறார். சுற்றிலும் பார்க்கிறேன். முட்டக் குடித்தபடி இருக்கும் இந்த ஜனக்கூட்டத்திடம் என்ன க்விஸ் நடத்தப் போகிறார்? இரண்டு விரலை விரித்துக் காட்டி இது எத்தனை என்று கேட்டு, உத்தேசமாகச் சரியாக மூணு என்று சொன்னவர்களுக்குப் பரிசாக இன்னொரு கோப்பை பியர் கொடுப்பார்களோ?

பழைய காலங்களில் லண்டன் நகரின் பெரும்பாலான கட்டிடங்கள் மரத்தினால் கட்டப்பட்டிருக்க, அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு பலத்த அழிவு உண்டாயிற்றாம். வில்லியம் மன்னன் நாட்டு மக்களுக்கு விடுத்த அரச கட்டளை – “கவர் ஃபயர்”.  ஊர் முழுக்கக் கடைப் பிடிக்கவேண்டி ஆயிரம் வருடத்துக்கு முந்திப் போடப்பட்டது அந்த கவர் ஃபயர் சட்டம். அது தான் நாளடைவில் திரிந்து கர்ஃப்யூ என்ற ஊரடங்கு உத்தரவு ரூபத்தில் இன்னமும் அமலாக்கப்படுகிறது!

இப்படி பல ஸ்வாரஸ்யமான தகவல்களும், அனுபவங்களும் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. தினமணிக் கதிரில் தொடராக வெளிவந்த கட்டுரைகளை நூல் வடிவில் “கிழக்குப் பதிப்பகம்வெளியிட்டு இருக்கிறார்கள். நூலின் விலை ரூபாய் 125.

பயணமும் வரலாறும் பிடித்தவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் இந்த நூல் நிச்சயம் பிடிக்கும். முடிந்தால் படித்துப் பாருங்கள்....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து....

26 comments:

 1. சுவாரஸ்யமான பகிர்வு. விலை குறைவாகவும் இருக்கிறது! எத்தனை பக்கங்கள்?

  ReplyDelete
  Replies
  1. 192 பக்கங்கள் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. #பெயரிலிருந்து “ஈயம்” உருகிப்போக#
  பழைய பெயரை மறக்க முடியாதபடி செய்து விட்டாரே :)

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். இனிமேல் மறக்க முடியாது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 3. நல்ல ரசனையுடன் - நூல் அறிமுகம் அருமை..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

   Delete
 4. உங்கள் பதிவினில் நீங்கள் சொன்ன சுவாரஸ்யமான தகவல்கள்,அந்த நூலை வாங்கி படிக்கும் ஆர்வத்தை தந்துள்ளன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி.

   Delete
 5. வணக்கம் சகோதரரே

  நல்லதொரு நூல் விமர்சனம். அனைத்துப் பக்கங்களிலும், மெலிதான நகைச்சுவைக்கு பஞ்சமில்லை போலிருக்கிறதே! அனைத்துமே சுவாரஸ்யமான விசயங்களாக உள்ளது. கண்டிப்பாக வாங்கி படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   Delete
 6. நல்ல புத்தக அறிமுகம்
  அதுவும் மிக மிக அருமையாக..
  அவரது மொழியிலேயே எடுத்துக்காட்டுக்களைப்
  பகிர்ந்தது இரசிக்க முடிந்தது
  நிச்சயம் வாங்கிப் படித்துவிடுவேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

   Delete
 7. சுவாரஸ்யம் நிறைந்த செய்திகள் கொண்ட நூல் என்று தெரிகிறது. அதை உங்கள் பாணியில் சொன்னவிதமும் அர்மை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 8. லண்டன் டயரியை உங்கள் மூலமாகக் காணும் வாய்ப்பு கிடைத்தது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 9. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 10. லண்டன் டயிரி நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 11. புத்தகத்தைப் பற்றிய தங்களின் விமர்சனம் யதார்த்தமாக மேற்கோள்காட்டி அளித்திருப்பது சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

   Delete
 12. அருமையான புத்தக விமர்சனம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 13. சுவாரஸ்யமாக இருக்கிறதே!! நல்ல நூல் அறிமுகம். பயணம் பிடிக்கும் என்பதால் நிச்சயமாகப் படிக்க வேண்டும்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....