எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, October 21, 2016

ஃப்ரூட் சாலட் 180 – மழை நீர் சேகரிப்பு - பேரம் - சின்னத் தாயவள்இந்த வார செய்தி:

மழை நீர் சேகரித்த நாட்டின் முதல் கிராமம்!- மைக்கேல்பட்டினம் டு வாஷிங்டன்: எளிய பெண்ணின் சாதனைப் பயணம்...பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலை. பச்சையைப் பார்க்க முடியவில்லை. சாலையின் இருபுறமும் பொட்டல்காடு. கிட்டத்தட்ட விவசாயம் செத்துவிட்டது. உழுது கிடக்கும் நிலங்களில் உப்பு பூத்து வெளறிப்போயிருக்கின்றன. மினி பேருந்து நிற்கிறது. இறங்கும்போது “அப்படியே மேக்கால போனீங்கன்னா பத்து நிமிஷத்துல ஊர் வந்துடும்” என்கிறார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். மேற்கில் சென்றுக்கொண்டேயிருக்கிறேன். முட்காடுகள், கள்ளிச் செடிகள் என பாலைபோல நீள்கிறது பொட்டல்வெளி. கிராமத்துப் பாஷையில் பத்து நிமிடம் எனில் அரை மணி நேரம் என்று கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்போல. பிழை அவர்கள் மீது இல்லை. அவர்களின் நடை அப்படி. விறுவிறுவென நடந்துவிடுவார்கள். நகரங்களைப் போல பக்கத்து வீதிக்குச் செல்ல பைக்கை உதைப்பதில்லை. சட்டென உள்வாங்குகிறது கிராமத்து இணைப்புச் சாலை ஒன்று. நுழைந்தோம். வயல் வரப்புகள் சூழ பாலைவனச் சோலை ஒன்று வரவேற்கிறது. அது மைக்கேல்பட்டினம் கிராமப் பஞ்சாயத்து!

ஊருக்குள் நுழைகிறோம். மையமாக அவ்வளவு பெரிய ஊருணி. ஒரு பெரிய கால்பந்து மைதானம்போல விரிந்திருக்கிறது அது. நடுவே இரண்டு குளங்கள். வறட்சியால் ஊருணி நிரம்பாதபோதும் குளங்களில் தண்ணீர் எட்டிப் பார்க்கிறது. அருகே ஒரு தேவாலயம். வரிசையாக ஏழெட்டுத் தெருக்கள். இதென்ன ஆச்சர்யம், ஒவ்வொரு வீட்டில் இருந்து சொல்லி வைத்ததுபோல பிளாஸ்டிக் குழாய்கள் கூரையில் இருந்து கீழ் இறங்குகின்றன. இப்படி எங்கேயும் பார்த்ததில்லை. எங்கே செல்கின்றன அவை?

சேலை தலைப்பில் கையைத் துடைத்துக் கொண்டே வரவேற்கிறார் ஜேசுமேரி. மைக்கேல்பட்டினம் பஞ்சாயத் துத் தலைவர். எளிமையான தோற்றம்.

“பொறுத்துக்கிடுங்க தம்பி! சமையல் முடிக்க நேரமாயிட்டு. என்கிட்ட வண்டி எதுவும் கெடையாது. ஊருக்குள்ள எல்லாரும் வெவசாயத்துக்குப் போயிட்டாங்க. ரொம்ப தூரம் நடந்துட்டிங்களா..?” வாஞ்சையான வார்த்தைகளால் பறந்தோடியது களைப்பு.

என் கண்கள் வீடுகளில் இருந்து இறங்கும் குழாய்களை மேய்ந்துக்கொண்டிருந்தன. “என்ன தம்பி அப்பிடி பாக்குறீங்க? மழை நீர் சேகரிப்பு தொழில்நுட்பம் தம்பி. நம்ம கவர்மெண்ட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஆரம்பிச்ச ஊராக்கும் இது. சொல்லப்போனா வீடுகள் மூலம் மழை நீர் சேகரிச்சதுல இந்தியாவுக்கே எங்க கிராமம்தான் முன்னோடி” என்கிறார். ஆம், நினைவு வருகிறது. முதன்முதலில் அதிமுக ஆட்சியின்போது முதல்வர் ஜெயலலிதா மழை நீர் சேகரிப்பு குறித்து விரிவான ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் மழை நீரை சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் குறிப்பிட்டிருந்தவர், ‘‘ஏன் நமது மாநிலத்திலேயே முதன்முறையாக ஒரு கிராமப் பஞ்சாயத்துத் தலைவி இதனை சிறப்பாக செய்திருக்கிறார்’’ என்று பெயர் சொல்லாமல் குறிப்பிட்டார். அந்தப் பஞ்சாயத்துதான் மைக்கேல்பட்டினம்!

முழு செய்தியும் படிக்க இங்கே செல்லலாம்…. பஞ்சாயத்து மக்களுக்கும் அதன் தலைவிக்கும் இந்த வாரப் பூங்கொத்து…..

இந்த வார முகப்புத்தக இற்றை:

முயன்றால் முடியாதது இல்லை…..  இதுவும் ஒரு வெற்றியாளர் பற்றிய காணொளி தான்…..  பாருங்களேன்!


இந்த வார மீம்!:

பேரம் பேச வேண்டாமே.....இந்த வார காணொளி:

முத்துநிலவன் ஐயாவின் ஒரு புத்தகம் “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே”….  இங்கே சிங்கப்பூர் வாழ் பள்ளி முதல்வர் ஒருவர் தேர்வுக்கு முன்னர் மாணவர்களின் பெற்றோர்களுக்குச் சொன்ன ஒரு செய்தி – காணொளியாக…  அருமையான கருத்தைச் சொல்லி இருக்கிறார் – பாருங்களேன்…..


இந்த வார ஓவியம்:

எனது மகள் சமீபத்தில் வரைந்த ஒரு ஓவியம்….. 
இந்த வார இசை:

தளபதி படத்திலிருந்து…..  சின்னத் தாயவள் தந்த ராசாவே பாடல் இந்த வார இசையாக…..


இந்த வார குறுஞ்செய்தி:

காதைத் தொட்டால் பள்ளியில் சேர்த்தது அந்தக் காலம்…. தவழ ஆரம்பித்தாலே பள்ளியில் சேர்ப்பது இந்தக் காலம்!

படித்ததில் சிரித்தது:

எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்கும் மதுரைத் தமிழனுக்கு போட்டியா ஒரு ஆளு இங்கே!

மனைவி கத்த ஆரம்பித்ததும்.....

கதவு மூடுறவன் மனிதன்....
டி.வி. வால்யூமைக் கூட்டுறவன் பெரிய மனிதன்.....
சட்டையை போட்டு வெளியே போறவன் ஞானி.....
காதுல எதுவுமே விழாத மாதிரி உட்கார்ந்திருப்பவன் – வாழும் கடவுள்!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

22 comments:

 1. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. அனைத்து பகிர்வும் அருமை.
  ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 3. அனைத்தும் அருமை. மகளுக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 4. அனைத்தும் அருமை!
  சிங்கப்பூர் பள்ளி முதல்வரின் கடிதத்தை எனது முகநூலில் பகிர்ந்துள்ளேன். மிக்க நன்றி
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 5. எல்லாவற்றையும் ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 6. வழக்கம்போல் இந்த வார பழக் கலவை அனைத்தும் அருமை.
  மைக்கேல் பட்டிணம் கிராம மக்களுக்கும் அதன் ஊராட்சித் தலைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! முயன்றால் முடியாதது இல்லை என் நிரூபித்த ஜெயவேலுவுக்கும் வாழ்த்துகள்!
  சிங்கப்பூர் வாழ் பள்ளி முதல்வர் சொன்ன செய்திக்கான காணொளியில் திரும்பவும் ஜெயவேலு பற்றிய காணொளியே இருக்கிறது.
  ஆனால் தளபதி படத்திலிருந்து….. சின்னத் தாயவள் தந்த ராசாவே பாடல் என்ற இடத்தில் உள்ள காணொளியில் சிங்கப்பூர் முதல்வரின் செய்தி உள்ளது. ஆனால் அந்த பாட்டு இல்லை. பதிவேற்றம் செய்யும்போது தவறு ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன். மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  தங்கள் மகளின் ஓவியத்திற்கு ஒரு ‘சபாஷ்’!

  ReplyDelete
  Replies
  1. பாடல் சரியான இடத்தில் இருக்கிறதே... இப்போது கூட பார்த்தேன். மீண்டும் ஒரு முறை பார்க்கிறேன்..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 7. கதவு மூடுறவன் மனிதன்....
  //டி.வி. வால்யூமைக் கூட்டுறவன் பெரிய மனிதன்.....
  சட்டையை போட்டு வெளியே போறவன் ஞானி.....
  காதுல எதுவுமே விழாத மாதிரி உட்கார்ந்திருப்பவன் – வாழும் கடவுள்!//

  நான் கடவுள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete
 8. BARGAINING from the petty traders is a crime really...
  i have been very firm not to bargain when i buy keerai etc...
  all beautiful articles.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Nat Chander.

   Delete
 9. அந்த வகையில் நானும் வாழும் கடவுள்தான் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 10. அனைத்தும் அருமை...
  வாழ்த்துக்கள் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 11. ரோஷினியின் ஓவியம் அருமையாக இருக்கிறது வாழ்த்துகள் ரோஷினிக் குட்டி!

  ஹஹஹஹ் இவரைக் கடவுள் என்றால் மதுரைத் தமிழன் அடி வாங்கியும் அப்படியே நிமிர்ந்து நிற்கிறாரே அப்போ அவர் யார் சூப்பர் கடவுள்?!! ஹஹஹஹ்

  சிங்கப்பூர் பள்ளி முதல்வரின் வார்த்தைகள் அருமை. அதைப் பகிர்கின்றோம்..

  ஜெயவேவில் வெற்றி பிரமிக்க வைக்கிறது. வாழ்த்துகள் அவருக்கு! அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....