எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, November 4, 2016

ஃப்ரூட் சாலட் 182 – அரசு ஆம்னி பஸ் – பெண் மனதில் இடம் பிடிப்பது எப்படி? – புதுல் நாச்….


இந்த வார செய்தி:

தமிழக அரசின் ஆம்னி பஸ்கள் பொங்கல் பண்டிகைக்குள் தயாராகின்றன

தீபாவளி சமயத்தில் தமிழகம் வந்திருந்தபோது ஆம்னி பஸ் நிறுவனங்கள் அதிக கட்டணம் வாங்கியதைப் பார்க்க முடிந்தது. அரசுப் பேருந்துகள் நிறையவே இயக்கினாலும், ஆம்னி பேருந்துகளில் செல்பவர்கள் எண்ணிக்கையும் கணிசமாகவே இருந்தது. இன்று தமிழ் இந்து நாளிதழில் பார்த்த செய்தி கவனம் ஈர்த்தது.  செய்தியில் இருக்கும் இந்த விஷயம் நடந்து விட்டால் நன்றாக இருக்கும்.  பார்க்கலாம்!

தமிழகத்தில் நகரமயமாக்கல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து தேவையும் அதிகரிக்கிறது. பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள் மட்டுமல்லாது, பல்வேறு சூழ்நிலை காரணமாக மக்களின் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப் பது வாடிக்கையாகிவிட்டது. இதனால், வெளியூர் செல்பவர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

தமிழக அரசு போக்குவரத்து துறையின் கீழ் சென்னை, விழுப்புரம் உட்பட மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சுமார் 22,400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 10 ஆயிரம் பேருந்துகள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி இடையே இயக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் சுமார் 1,000 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால், நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பிரேக் டவுன் ஆகின்றன. மேற் கூரை, இருக்கை, ஜன்னல் ஆகியவை உடைந் திருப்பது மக்களை முகம்சுழிக்க வைக்கிறது. இவற்றுக்கு மாற்றாக, புதிய பேருந்துகள் வருவதும் தாமதமாகிறது.

விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து களை அதிகபட்சம் 2 ஆண்டுகள் அல்லது 8 லட்சம் கி.மீ தூரம்தான் இயக்க வேண்டும். ஆனால், விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மூன்றரை ஆண்டுகளைக் கடந்து 500 பேருந்து கள் இயக்கப்படுகின்றன. இந்த பழைய பேருந்து களால் போக்குவரத்து ஊழியர்கள் மட்டுமல்லா மல், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்டும் வகையில், ஆம்னி பேருந்து போல அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திலும் நவீன சொகுசு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

நீண்ட தூரம் செல்பவர்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து கொஞ்சம் வசதியாக செல்ல விரும்புகின்றனர். எனவே, இதுபோன்ற பயணிகளைக் கவரும் வகையில் அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் அதிநவீன சொகுசு பேருந்துகள் இயக்குவது குறித்து தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

குறிப்பாக, ஒரே வரிசையில் மூன்று சொகுசு இருக்கை (2+1), ஏசி, படுக்கை வசதி, தொலைக்காட்சி, செல்போன் சார்ஜ் போடும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றில் இருக்கும். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இந்த ஆண்டு மொத்தம் 200 புதிய பேருந்துகள் வாங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், கணிசமான பேருந்துகளை ஆம்னி பேருந்துகள்போல ஒதுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இவை 2017 பொங்கல் பண்டிகைக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– தமிழ் இந்து நாளிதழிலிருந்து.

இந்த வார முகப்புத்தக இற்றை:

An apple a day keeps the doctor away…..  இது எல்லோருக்கும் தெரிந்த பழமொழி…. தில்லி வந்த புதிதில் ஒரு புத்தகத்தில் படித்தது – “If the doctor is a girl, keep the apple away!”. இன்று முகப்புத்தகத்தில் இன்னுமொரு Apple-Doctor மொழி படித்தேன் – அது…..

I wonder what happens when a doctor’s wife eats an apple a day?

நல்ல கேள்வி!

இந்த வார குறுஞ்செய்தி:

அம்மாவின் வலியை ஐந்து வயதில் கூட உணரலாம்.... ஆனால் அப்பாவின் வலியை உணர, நீ அப்பாவானால் தான் முடியும்.

இந்த வார காணொளி:

புதுல் நாச் [Putul Nach] – West Bengal

சென்ற மாதம் பார்த்த ஒரு பொம்மலாட்டம் – இதன் பெயர் புதுல் நாச் – வங்காளத்தில் நடத்தப்படும் இந்த பொம்மலாட்டத்தின் ஒரு காணொளி – தில்லியில் நடந்த போது எடுத்த காணொளி… - இதோ உங்கள் ரசனைக்கு…..இந்த வார ஓவியம்:ஊர்வலம் போகும் ராஜா….. – வரைந்தது யாராக இருந்தாலும் அவருக்கு ஒரு பூங்கொத்து!


ராஜா காது கழுதை காது:

திருவரங்கத்திலிருந்து திருச்சி பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த போது, பின் சீட்டில் இருந்த யுவதி அவருடன் வந்திருந்த இளைஞருக்குச் சொன்னது...

வாழ்க்கையில சேமிப்பு ரொம்பவே முக்கியம்.  கொஞ்சமாவது சேமிக்கணும். உனக்கு அந்தப் பழக்கமே கிடையாது. ஒரு ரூபாய் கூட சேமிக்க மாட்டே.... இப்படியே செலவு பண்ணு.... உன் கிட்ட ஒண்ணுமே மிச்சம் இருக்காது....

ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ....  நான் வேலைக்குப் போகும்போது சம்பாதிக்கிற காசு முழுசும் எனக்கு தான். நான் நிறைய சேமிப்பேன். அதுல இருந்து உனக்கு ஏதும் தருவேன்னு கனவுல கூட நினைக்காதே!”

இந்த வார புகைப்படம்:

இரண்டாவது தேசிய கலாச்சார திருவிழா சமயத்தில் வேடமிட்ட பலரைப் பார்க்க முடிந்தது – சிவபெருமான், கிருஷ்ணர், ராதா, ராமர், காளி என பல வேடங்கள். ஜிந்த் பாபா என்று கூட ஒருவர் வேடமிட்டுக் கொண்டிருந்தார் – பார்த்தால் பூதம் மாதிரி இருந்தார்.  கண்களை விரித்து விதம் விதமாய் போஸ் கொடுத்தார்.  அவருடன் நானும் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டேன் – ஆனால் அந்தப் புகைப்படம் வெளியிடக்கூடாது என அம்மணி சொல்லி விட்டார்கள்…. அதனால் ஜிந்த் பாபா புகைப்படம் மட்டும் இங்கே….  இது கேமராவில் எடுத்தது. 

படித்ததில் சிரித்தது:

பெண்கள் மனதில் இடம் பிடிப்பது எப்படி?
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

30 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. சமீபத்தில் திருப்பூர்ப் பேருந்தை அதன் ஓட்டுநரும், நடத்துனருமே அழகு படுத்திய செய்தியைப் பார்த்து அரசுக்கு இது போல யோசனை தோன்றியிருக்குமோ!

  திருச்சி பேருந்தில் பேசிய அந்தப் பெண் முன்யோசனையுள்ளவள் மட்டுமல்ல, எவ்வளவு நொந்து போயிருக்கிறாள் என்பதையும் காட்டியது!

  ஜிந்த் பாபா பட்டணத்தில் பூதம் ஜாசீ போல இருக்கிறார்! கொஞ்சம் அசோகன் சாயலில் இருக்கிறார்!

  பொண்ணு கிட்ட ஐடியா உண்மையான நல்ல ஐடியா தான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. மிகவும் அருமையான ஃப்ரூட் சாலட் தகவல்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. ஆஹா.... பொம்மலாட்டம் எப்பவும் எனக்குப் பிடிச்ச சமாச்சாரம்.

  ஜிந்த் பாபா .... புதுமை :-)

  இன்றைக்குக் காலை இங்கே ஃப்ரூட் ஸாலட் ப்ரேக்ஃபாஸ்டில் ஆராம்பிச்சு இருக்கேன் :-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 5. அரசுப் பேரூந்துகளில் மாற்றம் தேவை. சுபஸ்ய சீக்கிர என்றால் நலம் வந்திருந்த இளைஞர் அவளது கணவரா. பொது இடங்களில் பேசும்போது கவனம் தேவை ஃப்ரூட் சாலட் ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 6. அனைத்தும் அருமை..


  ஓவியமும், ஜிந்த் பாபா வும் மிகவும் கவர்ந்தன...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 7. ப்ரூட் சாலட் அருமை.
  அந்தப் பெண் சொன்னதைக் காதலன் கடை பிடித்தால் பிழைப்பான்.
  ஆப்பிள் ஜோக் சுவை.
  ஜிந்த் பாபா பயங்கரமா இருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 8. /?இந்த நிலையில், பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால், நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பிரேக் டவுன் ஆகின்றன. மேற் கூரை, இருக்கை, ஜன்னல் ஆகியவை உடைந் திருப்பது மக்களை முகம்சுழிக்க வைக்கிறது. இவற்றுக்கு மாற்றாக, புதிய பேருந்துகள் வருவதும் தாமதமாகிறது.//

  அரசு பஸ்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று யார் சொன்னது? ஆபீஸ் பைல்களைப் பாருங்கள். எல்லாம் முறையாகப் பதிந்து வைத்திருக்கிறது.

  ஒரே ஒரு திருத்தம் - எல்லாம் பேப்பரில் மட்டுமே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   Delete
 9. தகவல்கள் நன்று ஜி
  சிறுவயதில் நானும் பொம்மலாட்டம் திரையின் மறைவில் நடப்பது கண்டு இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. ப்ருட் சாலட் இனித்தது! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 11. Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 12. அய்யா கந்தசாமி அவர்களின் கருத்தை ரசித்தேன் ,அதுதான் உண்மை :)

  ReplyDelete
  Replies
  1. அது தான் உண்மை.... :) தெரிந்த விஷயம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 13. பொம்மலாட்டம் அருமை. நூல்களை வைத்து அசைத்து செய்யாமல், கையில் மாட்டிக் கொண்டு செய்கிறார்.
  பகிர்வுகள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 14. சாலட் சூப்பர்
  தம +

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 15. அட ! அந்தப் பேருந்து முன்பு பேருந்து அழகு படுத்தியது பற்றிச் சொல்லியிருந்தீர்களே அதன் தாக்கமோ

  இற்றை குறுஞ்செய்தி பொம்மலாட்டம், ஓவியம் அருமை..

  படித்ததில் பிடித்தது நல்ல ஐடியாதான்...ஹஹஹ்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....