எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 7, 2016

Rail Wire - இலவச இணைய சேவை – துர்பிரயோகம்இந்திய ரயில்வே துறை இந்த ஆண்டு துவங்கிய ஒரு சேவை – நாடு முழுவதிலும் உள்ள முக்கிய இரயில் நிலையங்களில் இலவச இணைய சேவை. Rail wire மற்றும் Google இணைந்து இந்த இலவச WI-FI சேவையை வழங்குகிறார்கள். சமீபத்தில் தமிழகம் வந்திருந்தபோது திருச்சி ரயில் நிலையத்திலும் சென்னையின் சில ரயில் நிலையங்களில் இந்த இலவச WI-FI சேவையை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல வேகத்தில் இணைய இணைப்பு கிடைத்தது.  ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது இந்த இலவச இணைய வசதி தான் கைகொடுத்தது.

FACEBOOK, BLOG, WHATSAPP என அனைத்தும் பயன்படுத்தினேன் அந்த ஒன்றரை மணி நேரமும்.  சென்னை எக்மோர் ரயில் நிலையத்திலும் இச்சேவையை பயன்படுத்தினேன்.  இணைப்பு இலவசம் என்பது மட்டுமல்ல, நல்ல வேகமும் இருந்தது என்பதைச் சொல்ல வேண்டும்.  இந்த இலவச சேவையை வழங்கும் ரயில்வே துறைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.  பயன்படுத்துவதும் அத்தனை கடினமான விஷயம் இல்லை. 

மிகச் சுலபமாக WI-FI இணைப்பை நமது Android அலைபேசிகளில் சேர்க்க முடிகிறது. நமது அலைபேசிக்கு ஒரு கடவுச்சொல் வர, அதை உள்ளீடு செய்து சில நொடிகளில் நாம் இணைய இணைப்பை பெற்று விட முடிகிறது.

விமான நிலையங்களிலும் இப்படி இலவச இணைப்பு உண்டு என்றாலும் அரை மணி நேரம், அல்லது 45 நிமிடங்கள் மட்டுமே இந்த இலவச இணைப்பு கிடைக்கும்.  அந்த இணைப்பும் அத்தனை வேகமில்லை. Facebook-ல் உலவும்போதே ரொம்பவும் மெதுவாகத் தான் இயங்குகிறது.  ரயில் துறை தரும் வசதியை ஒப்பிடும்போது விமான நிலையத்தில் கிடைக்கும் சேவை மோசம் என்று தான் சொல்ல வேண்டும். 

இலவசம் என்றாலே நம் மக்களுக்கு அதிக ஆசை தான். தமிழகத்தில் இலவசம் கொடுத்துக் கொடுத்தே ஆட்சியை பிடிக்கும் வித்தையைத் தானே பல வருடங்களாகச் செய்து வருகிறார்கள் ஆட்சியாளர்கள்.  இப்படி கிடைக்கும் இலவச வசதிகளை நல்ல வழியில் பயன்படுத்தினால் பரவாயில்லை. அதையும் துர்பிரயோகம் செய்வதில் இந்தியர்களுக்கு இணையில்லை…..

சமீபத்தில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. Railwire மற்றும் Google இணைந்து வழங்கும் இந்த இலவச WI-FI எந்த ரயில் நிலையங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள், எந்த விஷயங்களைப் பார்க்க பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தபோது ஒரு அதிர்ச்சியான விஷயம் தெரிய வந்திருக்கிறது.  ஒரு மாத காலத்திற்கு முன்னர் சேவை துவங்கப்பட்ட பட்னா நகரின் ரயில் நிலையத்தில் இந்தச் சேவையை அதிகமாக பயன்படுத்தியது எதற்குத் தெரியுமா?   ஆபாச வீடியோக்கள் தரவிறக்கம் செய்யவும், அதைப் பார்க்கவுமே அதிகம் பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள். 

ரயில் நிலையத்திற்கு வந்து பயணத்திற்காகக் காத்திருக்கும்போது இவர்களுக்கு பலான படங்கள் பார்க்கத் தோன்றுகிறது. வக்கிர புத்தி கொண்டவர்களுக்கு இங்கே குறைவில்லை. ஆபாசப் படங்களுக்குத் தான் முதலிடம். எல்லா நேரமும் ஒரே நினைப்பு தான் போலும் அவர்களுக்கு!  அடுத்த அதிக பயன்பாடு YOUTUBE மற்றும் WIKIPEDIA தளங்களைப் பார்வையிட பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இலவச சேவைய பயன்படுத்திய நபர்களின் எண்ணிக்கைப் பட்டியலிலும் பாட்னாவிற்குத் தான் முதலிடம்.  இரண்டாமிடம் ஜெய்ப்பூர்.  மூன்றாவது மற்றும் நான்காம் இடங்களில் பெங்களூருவும் புது தில்லியும்.  சென்னை எந்த இடத்தில் இருக்கிறது என்பது தெரியவில்லை. பெரும்பாலானவர்களுக்கு இந்த வசதி இருப்பது தெரியவில்லை என்றும் தோன்றுகிறது. 

இந்த இலவச இணைய வசதியை இந்தியாவின் பல ரயில் நிலையங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கும் இந்திய ரயில்வே பட்னா விஷயம் பற்றி தெரிந்ததும் கொஞ்சம் யோசிக்கிறது. முறையான பயன்பாடு இருக்கும் என்றால் இலவச இணைப்பு தரலாம்.  இப்படித் தேவையில்லாத விஷயங்களுக்குப் பயன்படுத்தவா நாம் இலவச சேவையைத் தர வேண்டும் என்றும், இந்தச் சேவையை நிறுத்தி விடலாமா என்றும் யோசிக்கிறது ரயில்வே துறை.  

இலவசமாகக் கிடைப்பதையும் நிறுத்த வழி செய்து விடுவார்கள் போல இந்த பட்னா வாசிகள்…… இது பற்றி உங்கள் எண்ணம் என்ன என்பதைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்……

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


36 comments:

 1. அந்த இலவசச் சேவை வேகமாகவும் கிடைக்கிறது என்னும் தகவல் ஆச்சர்யம் அளிக்கிறது. நிறைய பேர்களுக்கு இந்த விஷயம் இன்னும் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். அதனாலேயே குறைந்த நபர்கள் உபயோகித்திருக்கலாம். அதனால் வேகம் கிடைத்திருக்கலாம்!!!

  ReplyDelete
  Replies
  1. அதிக பயனாளர்கள் என்றால் வேகத்தினை அதிகரிக்கவும் திட்டமிருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. பாட்னா வாசிகளுக்கு நம் கண்டனத்தைத் தெரிவிப்போம்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. இலவச வசதி செய்து தருபவர்களால் இந்த மாதிரி தளங்களுக்கு செல்லுவதையும் தடுக்க இயலும், அதை அவர்கள் முதலில் செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தடுக்க முடியும் என்பது உண்மை தான். அதையும் தாண்டி தேடுபவர்களும் உண்டு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 5. நானும் இந்தச் சேவையை உபயோகித்திருக்கிறேன். ரயில், நிலையத்தை விட்டு செல்லச் செல்ல இணைய கனெக்ஷன் மறைவது கண்டு வேடிக்கை!! எந்த ஸ்டேஷனில் அதிக நேரம் வருகிறது என்று போட்டி வேற!! சமீப காலம் வரை எங்கள் வீட்டில் 3 பேர் வெளியூரில் இருந்து சொந்த ஊர் வந்ததால் இந்த இணைப்பு ரொம்ப உபயோகம்!! நீங்கள் சொல்வது போல், தவறாக உபயோகிப்பவர்களால், மற்றவர்களுக்கு இழப்பாகலாம்!! ரயில்வே நிர்வாகம் வேண்டாத தளங்களை தொழில்நுட்ப ரீதியாய் தடை செய்ய முடியுமா என்று பார்க்கலாம்!!

  ReplyDelete
  Replies
  1. தொழில்நுட்ப ரீதியாக தடை செய்ய முடியும். ரயில்வே தளம் அதைச் செய்யுமா இல்லை சேவையை கட்டணம் வாங்கிக் கொண்டு தொடருமா என்பது தான் தெரியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   Delete
 6. நானும் திருச்சி ரயில் நிலையத்தில் wifi சேவை முயற்சித்தேன்...ஆனால் எப்பொழுதும் தான் இதை செய்கிறோமே என்று உடனே off செய்து விட்டு....அந்த நிமிடங்களை வேடிக்கை பர்க்கவேனே மாற்றிக் கொண்டோம்....  ஆனாலும் அரசின் நல்ல பணியை நன் முறையில் பயன்படுத்த வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 7. அதைப்பார்த்த நினைப்பிலேயே பயணம் செய்தால் ,வில்லங்கம் செய்வதும் நடக்குமே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 8. Railwire வீடுகளுக்கும் லோக்கல் கேபிள் காரர்களுடன் சேர்ந்து பைபர் இணைய இணைப்பு தருகிறது. நான் அதைத்தான் உபயோகிக்கிறேன். BSNL மற்றும் Asianet போன்ற ISP காரர்களுடன் பட்ட பாடு!!! 520 ரூபாயில் 10GB 1 மாதம் @ 1Mbps, மேற்கொண்டு unlimited 512Kbps. இணைய வேகம் பரவாயில்லை. ​

  --
  Jayakumar​​

  ​P. S நான் இருப்பது திருவனந்தபுரத்தில். ​

  ReplyDelete
  Replies
  1. வீடுகளுக்கும் அந்த சேவை இருக்கிறது என்பது இணையத்திலும் பார்த்தேன். இன்னும் தில்லியில் கொடுக்க ஆரம்பிக்கவில்லை. இங்கே MTNL தான். அல்லது வேறு தனியார் நிறுவனங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயகுமார் ஜி!

   Delete
 9. தவறாகப் பயன்படுத்துபவர்கள் எங்கிருந்தாலும் தவறாகத்தான் பயன்படுத்துவர் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 10. இதுவரை நான் புகை வண்டி நிலையத்தில் உபயோகிக்க வில்லை . விமான நிலையத்தில் உபயோகித்திருக்கிறேன் . நிஜமாகவே உபயோகமாக உள்ளது . அதுவும் நாம் எந்த இடத்தில் உள்ளோம் என்பதை உறவினரிடம் சொல்ல இது மிகவும் சவுகரியமாக உள்ளது ,தவறாகப் பயன்படுத்துவது தவிர்க்கலாம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 11. 'நம்ம ஊரில் தளங்களுக்குக் கட்டுப்பாடு வேண்டும். அதுவும் இந்திய அளவில். பல நாடுகளில், தரமில்லாத தளங்களுக்குச் செல்ல இயலாது. நாம (இந்தியர்கள்), பல மேலை நாடுகளைப்போல் மெச்சூரிட்டி கொண்ட மக்களைப் பெற்றிருக்கவில்லை.

  மற்றபடி இணைய வசதி மிகவும் உதவிகரமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 12. ரயில் நிலையங்களிலும் இந்த இலவச வசதி இருப்பது மகிழ்ச்சியைத்தருகிறது. தகவலுக்கு அன்பு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 13. நல்லவைகளை படிக்க , தேவைக்கு பயன்படுத்தினால் நல்லது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 14. என் வீட்டிலும் wifi இருக்கிறது1500 ரூபாய் கொடுத்து D links கருவி வாங்கினேன் அதை உபயோகிக்க பாஸ் வேர்ட் கேட்கிறார்கள் எனக்கு இதெல்லாம் ஞானம் போதாது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 15. நம் மக்கள் திருந்த மாட்டார்கள் போலும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 16. //ரயில் துறை தரும் வசதியை ஒப்பிடும்போது விமான நிலையத்தில் கிடைக்கும் சேவை மோசம் என்று தான் சொல்ல வேண்டும்.
  //

  வாவ்..
  இணைய தொழில் நுட்பத்தில் ஆய் படங்களை லாக் செய்வது வெகு எளிதானது...சர்வர் செட்டிங்க்ஸ்தான்..

  இல்லாவிட்டால் எலிக்கு பயந்து வைக்கோல் போரை கொளுத்திய கதைதான்

  தம +

  ReplyDelete
  Replies
  1. சர்வர் செட்டிங்க்ஸ் தான்... அப்படி இருந்தாலும் தேடிப்பார்க்கும் நிலை தான் இங்கே.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 17. பாட்னாகாரர்கள் இணைய சேவையை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக அதை நிறுத்துவது என்பது சரியான தீர்வு அல்ல. திரு முத்து அவர்கள் சொன்னதை நானும் வழிமொழிகின்றேன். மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தலாமா?

  ReplyDelete
  Replies
  1. இன்னும் இந்த சேவை தொடர்கிறது. நிறுத்தலாம் என்ற யோசனை மட்டுமே இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 18. ரெயில்வே இந்தச் சேவையை வழங்குகிறது என்று அறிந்தோம். ஆனால் இன்னும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

  இப்படிப் பார்ப்பதைத் தடை செய்ய முடியுமே..கட்டணம் வசூலிக்கலாம்...ஆனால் நம்மவர்கள் கட்டணம் வசூலித்தாலும் டவுன்லோட் செய்து பார்ப்பார்கள் ஒருவர் கட்டணம் கட்டிவிட்டுக் குழுவாகக் கூடப் பார்ப்பார்கள்... நம் மக்களும் கில்லாடிகள் என்னதான் தடை செய்தாலும் அதையும் உடைத்துக் கொண்டு பார்ப்பதில் மூளை வேலை செய்யும் ஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட ...ஏதேனும் வழி பிறந்தால் நல்லது ஜி

  ReplyDelete
  Replies
  1. நானும் சமீபத்திய பயணத்தில் தான் பயன்படுத்த முடிந்தது. நல்ல சேவை. தொடர்ந்தால் எல்லோருக்கும் நல்லது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....