ஞாயிறு, 25 டிசம்பர், 2016

வட இந்திய நடனங்கள் – புகைப்படங்கள்



இந்த ஞாயிறில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவது சில புகைப்படங்கள் – வழக்கம் போல ஞாயிற்றுக் கிழமை என்றால் புகைப்படங்கள் தானே! இந்த புகைப்படங்கள் எடுத்து சில மாதங்கள் ஆகிவிட்டன என்றாலும் இப்போது தான் பகிர்ந்து கொள்கிறேன். தலைநகர் தில்லியில் நடந்த இரண்டாவது கலாச்சாரத் திருவிழா சமயத்தில் தினமும் மாலை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பதைப் பற்றி சில பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்தப் புகைப்படங்களும் அத் திருவிழாவில் எடுக்கப்பட்டவையே. நடனங்கள் பெரும்பாலும் உத்திரப் பிரதேசம், உத்திராகண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவை.  நடனங்களின் பெயர்கள் மறந்து விட்டாலும் நடனம் மறக்க வில்லை! நடனத்தின் போது எடுத்த சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு!


படம்-1:  நம்மளா இருந்தா கைகளை விழாமல் பார்க்கவே சிரமப்பட்டிருப்போம்! இவர் பத்து கைகளோடு ஆடினார் - அதுவும் பாட்டுப் பாடியபடியே!



படம்-2:  உத்திரப் பிரதேசத்தின் ஒரு நடனம்.. 
ஆண்களின் உடை சாதாரணமாக இருக்க, பெண்களுக்கு மட்டும் ஜிகுஜிகு உடைகள்!



படம்-3:  நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்.....



படம்-4:  வட இந்திய நடனம் என்றாலே கைகளில் ஒரு துணியைக் கொடுத்து விடுவது ஏன்!


படம்-5:  ஒயிலாய் ஒரு நடை....


படம்-6:  முன்னும் பின்னும்! 


படம்-7:  என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா....


படம்-8:  சுற்றிச் சுற்றி நடனம்....


படம்-9:  குச்சிகளில் நின்று நடனமும் புல்லாங்குழல் வாசிப்பும்!


படம்-10:  ஒரு வித பிரமீடு! கொஞ்சம் அசைந்தாலும் விழ வேண்டியது தான்!


படம்-11:  மலையால் ஒரு குடை - காட்சி!


 படம்-12:  மேலே ஒருவரைச் சுமந்தபடி, குச்சிகளின் மீது நின்று கொண்டு குச்சியால் நடக்கவும் செய்கிறார்! என்ன ஒரு திறமை!


படம்-13:  மனிதர்கள் கொண்டு ஒரு வண்டி!


படம்-14:  ஓட்டமாய் ஓடும் வண்டி...


படம்-15:  தோகை விரித்தாடும் மயில்....

என்ன நண்பர்களே, படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  2. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் அழகு நம் நாட்டுக்கு பெருமை சேர்ப்ப்தே இம்மாதிரியான பாரம்பரிய நடனக் கலைகளே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  3. பாங்கிரா டான்சை நேரில் பார்கிற மாதிரி இருக்கே !வண்ணப் படங்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. மிக மிக அற்புதம்
    வண்ணங்கள் ஆடை அலங்காரங்கள்
    படமாகப் பார்க்கவே அத்தனை அழகு
    நிகழ்வாகப் பார்த்தால் எத்தனை அழகாக
    இருந்திருக்கும் ?
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரில் பார்க்க மிகவும் அழகு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  6. கவித்துவமிக்கப் படங்கள்
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. அனைத்தும் சூப்பர் வெங்கட்ஜி! நடனங்கள் அழகு என்றால் உங்கள் புகைப்படங்கள் அதன் அழகை இன்னும் கூட்டுகிறது ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  10. கலக்கலான கலைப்புகைப்படங்கள் , ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....