எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, January 6, 2017

ஃப்ரூட் சாலட் 189 – சாம்சங்க் – சோம்பேறித்தனமும் தண்டனையும் - அன்பு


இந்த வார விளம்பரம்:

இரு நாட்களுக்கு முன்னர் ஒரு விளம்பரம் பார்க்க நேர்ந்தது. Samsung நிறுவனத்தின் விளம்பரம் அது. கோளாறு ஆன ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை சரி செய்வதற்காக அவர்கள் எத்தனை மெனக்கெடுகிறார்கள் என்பதைக் காட்டும் காணொளி. உண்மையில் இப்படிச் செய்கிறார்களா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்!  ஆனால் காணொளியை மிக அருமையாக எடுத்திருக்கிறார்கள் என்பதால் பிடித்தது….  ஃப்ரூட் சாலட் பகுதியாக இங்கேயும்…..


  
இந்த வார முகப்புத்தக இற்றை:

”உழைப்பிற்கேற்ற பலன் இல்லையே” என்று கடவுளிடம் புலம்பினேன்… ”இது உன் போன ஜென்ம சோம்பேறித்தனத்திற்கான தண்டனை” என்றார் கடவுள்.

”போன ஜென்ம பாவத்திற்கு இந்த ஜென்மத்தில் தண்டிக்கும் உன் சோம்பேறித்தனத்திற்கு யார் தண்டனை கொடுப்பார்?” என்று கடவுளைக் கேட்டேன்…..

”இந்த வாய்க்கு உனக்கு அடுத்த ஜென்மத்திலும் தண்டனை இருக்கு” என்று சொல்லி மறைந்தார் கடவுள்!

இந்த வார குறுஞ்செய்தி:

கண்ணாடி தான் ஒருவரின் உண்மையான நண்பன்…. கண்ணாடி முன் நின்று அழும்போது கண்ணாடி சிரிப்பதில்லை…..

இந்த வார WhatsApp Message:

அடுத்தவர்களுக்கு உதவி செய்வது நல்லது தான் என்றாலும் சில சமயங்களில் செய்பவருக்கே கஷ்டத்தில் முடியலாம்…..  பாருங்களேன் இந்த காணொளியை!இந்த வார கார்ட்டூன்:

சில சமயங்களில் தில்லியில் நிறையவே ட்ராஃபிக் ஜாம்! Bumper to Bumper traffic! மூன்று கிலோமீட்டர் தூரத்தினைக் கடக்க ஒரு மணி நேரம் கூட ஆகிறது! இப்படி யாராவது கேட்டாலும் கேட்கலாம்!இந்த வார காணொளி:

அதிர்ஷ்டம் என்பதை காரணம் காட்டுவது நமக்கு பழக்கமாகி இருக்கிறது.  இந்தக் கதை அப்படி ஒரு அதிர்ஷ்டசாலி பற்றியது! எத்தனை முறை இவருக்கு துன்பம் வந்தாலும், அதிர்ஷ்டவசமாக இவர் தப்பி இருக்கிறார்! பாருங்களேன் அவர் கதையை!படித்ததில் பிடித்தது:

சிலர் அன்பை
வார்த்தைகளால் உணர்த்தலாம்….
சிலர் அன்பை
உணர்வுகளால் உணர்த்தலாம்…..
ஆனால்…
சிலர் அன்பு புரியாது
அதை காலம்
நமக்கு உணர்த்தும்போதுதான்
கண்கள் கலங்கும்…..

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

22 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.....

   Delete
 2. காணோளி விளம்பரம் என்றாலும் மனதை நெகிழ்த்திவிட்டது....எடுத்த விதம் அருமை!

  இற்றையை வாசித்ததும் குபீரென்று சிரிப்பு வந்துவிட்டது!!

  குறுஞ்செய்தி, காணொளி, ட்ராஃபிக் கார்ட்டூன் அருமை..

  படித்ததில் பிடித்தது மிகவும் பிடித்திருந்தது. வரிகள் அருமை!!

  அனைத்தும் ரசித்தோம்..

  ReplyDelete
  Replies
  1. காணொளிகளில் சொல்வது பல சமயங்கள் உண்மையாக இருப்பதில்லை என்றாலும் எடுத்த விதத்திற்கு மட்டுமே இங்கே பகிர்ந்தேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 3. சோம்பேறித்தனத்தின் தண்டனை அருமை. சாம்சங் விளம்பரமெல்லாம் ஓகேதான் ஆனால் உண்மைத்தன்மை வேறல்லவா? கண்ணாடியைப் பற்றிச் சொன்னது சார்லி சாப்ளின் என்று படித்த ஞாபகம். "ராஜா காதுக்கு" அடுத்த திருச்சி டிரிப்புக்கப்புறம்தானா?

  ReplyDelete
  Replies
  1. விளம்பரங்களில் சொல்வது பல சமயங்களில் உண்மையாக இருப்பதில்லை.... என்றாலும் எடுத்த விதத்திற்காகவே பகிர்ந்து கொண்டேன்.....

   ராஜா காது - அப்படி இல்லை... இந்த வாரமே கூட எழுதி இருக்கலாம்! :) அடுத்த வார ஃப்ரூட் சாலட்-ல் பகிர்ந்து கொள்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 4. நன்றி ஐயா
  இதோ இணைப்புகளுக்குச் செல்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. ஹார்ட் டிஸ்க் பிரச்னையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் என்னால் அந்தக் காணொளியைப் பார்க்க முடியவில்லை. கணினி அணைந்து விடும்! பார்க்க விரும்பும் வீடியோ. இப்போதுதான் என் சோனி டிவி ரிப்பர் ஆகி வந்தது.

  இற்றை சிரிக்க வைத்தது. கடவுள் சின்னம்மா மாதிரி!! யாராலும் கேள்வி கேட்க முடியாது.

  கண்ணாடி - - ஸூப்பர்.

  மறுபடியும் ஒரு காணொளி! பார்க்க முடியாது. வெள்ளி வீடியோவின் எங்கள் பதிவுக்கு வீடியோ இணைப்பதற்குள் நான் பட்ட பாடு.... அதை ஓடவிடாமல் நிறுத்தி எம்பெடிங் லிங்க் மட்டும் எடுத்து....!!!

  கார்ட்டூன் ஸூப்பர். பேஸ்புக்கில் சேட்டை வேணுஜி கார்ட்டூன்களை என்னைப்போலவே நீங்களும் ரசித்திருப்பீர்கள். தூள் கிளப்புகிறார்.

  ஹிஹிஹி... மறுபடி ஒரு வீடியோ!

  பபி - ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. விரைவில் உங்கள் கணினி சரியாகட்டும்.... கணினி இப்படி இருப்பது எவ்வளவு தொந்தரவாக இருக்கிறது!

   கடவுள் சின்னம்மா மாதிரி! :))))


   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. சாலட் - நல்ல variety யான பழங்களுடன்...அருமை ஜி !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பி. பிரசாத்.

   Delete
 7. ''இந்த வாய்க்கு உனக்கு அடுத்த ஜென்மத்திலும் தண்டனை இருக்கு”
  இந்த திமிருக்கு யார் தண்டனைக் கொடுப்பது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 8. குறுஞ்செய்தியில் பெருஞ்செய்தி ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. எதைச் சொல்ல எதை விட தெரியாமல் விழிக்கிறேன் எல்லாவற்றையும் ரசித்தேன் கடவுளிடம் ஒரு நேர்காணல் என்னும் பதிவே சீரியசாக எழுதி இருந்தேன் எல்லாமே அருமை,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 10. பழக்கலவையில் உள்ள அனைத்துமே அருமை. அந்த சாம்சங்க் காணொளி இறுதியில் மானாட நெகிழவைத்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. மானாட என்பதை மனதை என படிக்கவும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது மீள் வருகைக்கு நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....