எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, January 8, 2017

குஜராத் - மொதேரா – சூரியனார் கோவில் புகைப்பட உலா


குஜராத் மாநிலத்தின் மெஹ்சானா மாவட்டம் பால் உற்பத்திக்கு மிகவும் பெயர்பெற்றது. பால் தவிர வேறு ஒரு விஷயத்திற்கும் இந்த மாவட்டம் பெயர் பெற்றது – அது மொதேரா கிராமத்தில் இருக்கும் சூரியனார் கோவில்! கோவில், சபா மண்டபம், ராம்குண்ட் எனும் குளம், அழகிய தோட்டம் என மனதை மயக்கும் இடம் மொதேரா சூரியனார் கோவில். மற்ற விவரங்கள் பிறிதொரு சமயத்தில் – பயணக்கட்டுரைகளாக வரும்போது எழுதுகிறேன்.  இப்போதைக்கு ஒரு புகைப்பட உலா மட்டும் உங்களுக்காக இந்த ஞாயிறில்…..


படம்-1: கோவிலும் சபா மண்டபமும் ஒரு தூரப் பார்வை….
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-2: ராம் குண்ட், சன்னதி கோபுரங்களில் ஒன்று…
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-3: ராம் குண்ட், குளக்கரையில் 108 சன்னதிகள்
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-4: ராம் குண்ட், குளக்கரை சன்னதிகள் – ஒரு பார்வை
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-5: ராம் குண்ட், குளக்கரை சன்னதிகள், வேறொரு கோணத்தில்
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-6: ராம் குண்ட், மற்றும் தோட்டம்….
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-7: சபா மண்டபம்….
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-8: சபா மண்டபம் அருகே இரு பெரும் தூண்கள்
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-9: சபா மண்டபத்தின் உட்புறம், எத்தனை சிற்பங்கள்…
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-10: சபா மண்டபத்தின் மேற்கூரை… கூரையிலும் வடிவங்கள்…
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-11: சபா மண்டபத்தின் உட்புறம் – இன்னுமொரு கோணத்தில்….
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-12: சபா மண்டபத் தூண்களும், சிற்பங்களும்….
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-13: வெளிப்புற சிற்பங்கள்…..
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-14: வெளிப்புறச் சிற்பங்கள் – ஒரு கிட்டப்பார்வை…
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-15: கோவிலும், சபா மண்டபமும் – பின் புறத்திலிருந்து…
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-16: வேறொரு கோணத்தில்….
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-17: சூரியனார் கோவில்…..
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-18: கோவில் – இன்னுமொரு படம்….
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-19: ராம் குண்ட் – வேறொரு கோணத்தில்….
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்


படம்-20: கோபுரத்தில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள்….
சூரியனார் கோவில், மொதேரா, குஜராத்

என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்….

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

28 comments:

 1. மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் மொதேரா சூரியன் கோயில் புகைப்படங்கள். தமிழ்நாட்டில், நவக்கிரக தலங்களில் ஒன்றாக இருக்கும் சூரியனார் கோயிலை இவ்வளவு பிரமாண்டமாக ஏன் கட்டாமல் போனார்கள் என்ற ஆதங்கம் வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. இந்தக் கோவிலிலும் பல அழிவுகள்..... பராமரிப்பு நம் நாட்டில் எங்கும் இல்லை என்பது தான் வருத்தமான விஷயம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. படங்கள் மிக அருமை. சிற்பிகள் நுணுக்கமாக செய்துள்ளதை துல்லியமாக படம் பிடித்துள்ளீர்கள். பாராட்டுகள்! பயணக் கட்டுரையை படிக்க காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 4. இந்த புகைப் படங்கள் பேளூர் ஹளே பேட் கோவில்களை நினைவு படுத்துகினறன அருமை சார்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 5. சூரியனார் கோயில் புகைப்பட உலா அருமை..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. வெங்கட்ஜி! ஸ்டன்னாகிட்டேன்! பிரமிச்சு! அப்படியே பார்த்துக் கொண்டே இருந்தேன் ஜி!!!! ஹையோ!!!! என்ன ஒரு கலை நயம்!! நீங்கள் ஒவ்வொரு ஊர் பற்றியும், ஊரில் இருக்கும் சிறப்பு பற்றியும் தகவல் சொல்லி படங்களுடன் வெளியிடும் போது, நம்மூரில் நாம் பார்ப்பதற்கு இடங்கள் கொட்டிக் கிடக்கின்றன! வாழ்நாள் முடியும் முன் பார்த்துவிட வேண்டும் என்ற அவா பெருகி வருகிறது ஜி!

  அருமை அருமை...வார்த்தைகள் இல்லை விவரித்திட....

  மிக்க மிக்க நன்றி ஜி பகிர்ந்தமைக்கு....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நம் நாட்டில் எத்தனை எத்தனை கலைப் பொக்கிஷங்கள். அத்தனையும் பார்க்கிறோமோ இல்லையோ, பார்க்க முடியுமோ இல்லையோ, நம் ஊருக்குப் பக்கத்தில் இருப்பவற்றையாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. எத்தனை முடிகிறது பார்க்கலாம்.

   தங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 7. ஃ போட்டோக்கள் சூப்பர் . கட்டியவர்கள் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை

  ReplyDelete
  Replies
  1. வியப்பூட்டும் திறமை தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி.

   Delete
 8. சூரியனார் கோவிலை , சினிமா படங்களில் பார்த்த மாதிரி இருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. பார்த்திருக்கலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 9. வாழ்வில் ஒருமுறையேனும் சென்று வர வேண்டும் ஐயா

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது சென்று வாருங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 11. வழக்கத்தை விட இந்த முறை படங்கள் .... ஹைய்யோ.... அதி சூப்பர்! புதுக்கெமெராவா? ஆமாம் என்றால் டீடெய்ல்ஸ் கொடுங்க :-)

  ReplyDelete
  Replies
  1. அதே பழைய கேமரா தான் டீச்சர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 12. ஜி! தயவாய் உங்கள் பதிவுகளைப் பன்னாட்டுப் பதிவுகளாக்குங்கள் ஜி! சரி எழுத நேரம் இருக்காது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அட்லீஸ்ட் புகைப்படங்கள், ஊர், இருக்கும் மாநிலம், தூரம், தங்கும் இடங்கள், உணவு வகை என்ன கிடைக்கும். இத்தனையும் மட்டுமேனும் தொகுத்து வெளியிட வழி செய்யலாமே ஜி!! உங்கள் திறமையினால் நம் நாட்டிற்குச் சுற்றுலா பெருகுமெ!! வருமானம் கூடுமே! முயற்சி செய்து பாருங்களேன் ஜி!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உற்சாகம் தரும் தங்களது கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி. ஆங்கிலத்தில் எழுதி வெளியிட வேண்டும் - நேரப் பற்றாக்குறையும் எழுதாததற்குக் காரணம் - நடுவே ஒரு ஆங்கில வலைப்பூ தொடங்கி பாதியிலேயே மூடிவிட நேர்ந்தது. பார்க்கலாம் விரைவில் ஆங்கிலத்தில் பதிவு தொடங்கி புகைப்படங்கள் மட்டுமாவது பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 13. சூரியனார் கோவில் படங்கள்....wow சூப்பர்...அனைத்தும் அழகு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 14. படங்கள் பேசுகின்றன! அருமை!நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....