செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

பஞ்ச துவாரகா – பயணக்கட்டுரைகள் - புஸ்தகா மின்புத்தகமாக…..

அன்பின் நண்பர்களுக்கு,


தமிழகத்தில் நிலவும் சூழலில் வலைப்பக்கம் வரும் நண்பர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.  எல்லா இடங்களிலும் VKS மற்றும் OPS பற்றிய தகவல்களும், சித்திரங்களும், கார்ட்டூன்களும் என எல்லாவற்றிலும் அரசியல் நெடி! இந்தப் பதிவு வெளியிட்ட சில மணி நேரங்களுக்குள் இந்தச் சூழலில் இருந்து விடுதலை கிடைக்குமா என்பது தெரிந்து விடும். என்ன நடக்கப் போகிறது என பலரும் காத்திருக்கும் வேளையில் இந்த விஷயங்களிலிருந்து கொஞ்சம் மாற்றாக ஒரு பதிவு!

எனது வலைப்பூவில் பயணக்கட்டுரைகள் எழுதி வருவது உங்களுக்குத் தெரிந்த விஷயம் தான்.  எனது பயணக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியே கொண்டு வர வேண்டும் என பலரும் என்னைத் தொடர்ந்து கேட்பது வழக்கம்.  அவர்களுக்கு பதிலாக ஒரு புன்சிரிப்பை மட்டுமே அளித்து வந்திருக்கிறேன்.  புத்தகமாகத் தான் கொண்டு வரவில்லை, மின்புத்தகமாக கொண்டு வரலாமே எனவும் கேட்க, மூன்று மின்புத்தகங்கள் இது வரை வெளிவந்திருக்கின்றன. 

சமீபத்தில் புதுக்கோட்டை நகரில் 18 ஜனவரி 2017 அன்று நடந்த முதலாவது மின்னூலாக்க முகாம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.  புதுக்கோட்டை நண்பர்களின் நல் முயற்சியால் கிட்டத்தட்ட 100 புத்தகங்கள் மின்னூலாக மாற்ற வழி செய்திருந்தார்கள்.  அடுத்த மின்னூலாக்க முகாம் வருகிற 25 ஃபிப்ரவரி 2017 அன்று சென்னையில் நடக்க இருக்கிறது. இந்த முகாம்களின் மூலம் மின்புத்தகங்களை வெளியிட வழிசெய்யும் புஸ்தகா நிறுவனத்தின் மூலமாகத் தான் எனது நான்காவது மின்னூலாக “பஞ்ச துவாரகா” நேற்றைய தினம் வெளிவந்திருக்கிறது.



புஸ்தகா டிஜிட்டல் மீடியா மூலம் தமிழ, கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கில மின்புத்தகங்கள் வெளியிடுகிறார்கள். இந்த தளத்தில் மின்புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்ள முடியும் என்பதோடு இன்னுமொரு வசதியும் உண்டு.  அது மின்புத்தகங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் வசதி. தலைநகரின் கரோல் பாக் பகுதியில் இருந்த போது Lending Library மூலம் தான் நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன். இந்த வசதி இப்போது இணையத்திலும் கிடைப்பது நல்ல விஷயம். 

பல முன்னணி எழுத்தாளர்களின் மின்புத்தகங்கள் தவிர வலையுலக நண்பர்களின் புத்தகங்களும் இந்த தளத்தின் மூலம் நீங்கள் தரவிறக்கம் செய்தோ, வாடகைக்கு எடுத்தோ படிக்க முடியும்.  இந்த தளத்தின் மூலம் எனது மின்புத்தகமான “பஞ்ச துவாரகா” புத்தகமும் வந்திருக்கும் தகவலை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  பஞ்ச துவாரகா மின்புத்தகம் பற்றிய தகவல்கள்/விவரங்கள் கீழே…. 



புத்தகத்தினை வாங்க/வாடகைக்கு எடுக்க இங்கே சொடுக்கலாம்!

இந்தப் புத்தகத்தில் பஞ்ச துவாரகா என அழைக்கப்படும் ஐந்து துவாரகா – குஜராத்/ராஜஸ்தான் மாநில கோவில்களுக்கு செல்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.  நானும் நண்பர்களும் சென்ற போது எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள், பார்த்த இடங்கள், அந்த இடங்களில் எடுத்த புகைப்படங்கள், சாப்பிட என்ன கிடைக்கும், பயணம் செய்ய என்ன தேவை போன்ற பல விவரங்கள் இப்புத்தகத்தில் உண்டு. 

இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதித் தந்த ரஞ்சனிம்மா அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.  தனது பணிச் சுமைகளுக்கு இடையே மிகச் சிறப்பான ஒரு முன்னுரை எழுதித் தந்திருக்கிறார்கள்.  புத்தகத்தினை வாங்கி/வாடகைக்கு எடுத்துப் படிக்கப் போகும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி……. 

மீண்டும் ச[சி]ந்திப்போம்……

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.   

34 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்டு @ நொரண்டு.

      நீக்கு
  2. முதலில் மனமார்ந்த வாழ்த்துகள் ஜி! மீண்டும் வருகிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  3. மனமார்ந்த வாழ்த்துக்கள் வெங்கட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  5. புஸ்தகா நிறுவனம் மிகவும் பயனுள்ள நல்லதொரு செயலைத் தொடங்கியிருக்கிறார்கள்! அதனை நமக்குஇங்கு அறிமுகப்படுத்தி நிகழ்வாய்க் கொடுக்கும் புதுக்கோட்டை நண்பர்களுக்கும் முத்துநிலவன் ஐயா/அண்ணா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!!!

    தங்கள் புத்தகம் அதன் வழி வெளி வருவதற்கும் மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துகள்! பாராட்டுகள் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. நல்ல முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு, நண்பர்களையும் ஊக்குவிக்கின்றீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. இன்று சங்கடஹர சதுர்த்தி ... மிகவும் நல்லதொரு நாள்.

    சங்கடங்களெல்லாம் விலகும் வகையில் காலையிலிருந்து நல்ல செய்திகளாகவே கிடைத்து வருகின்றன.

    இதோ மேலும் ஓர் நல்ல செய்தியாக தங்களின் இந்த மின்னூல் வெளியீடும் அமைந்துள்ளது, மேலும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது.

    பாராட்டுகள் + நல்வாழ்த்துகள், வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. எனக்கு இன்னும் நேரம் கூடிவரவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் வெளியாகட்டும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி.....

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  15. அருமையான பணி! வாழ்த்துக்கள் சகோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.....

      நீக்கு
  16. உங்கள் சாதனைக் கிரீடத்தில் மற்றுமோர் வைரக்கல்
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  17. புத்தகம் கிடைக்கப் பெற்றேன். வாசித்துக் கொண்டிருக்கிறேன். விமரிசனம் எழுதும் அளவுக்கு ஒண்ணும் தெரியாது எனினும் உங்கள் பதிவுகளில் வரும்போதே ரசித்துப் படித்திருக்கிறேன் என்பது அவ்வப்போது நினைவில் வருகிறது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  18. தங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

    முடிந்தால் உங்கள் வாசிப்பனுபவத்தினை பதிவாக அல்லது மின்னஞ்சலாக எழுதி அனுப்புங்கள்.....

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....