எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, April 1, 2017

ஹனிமூன் தேசம் – காலங்களில் அவள் கோடை…. குளிர்மிகு காலையில்


ஹனிமூன் தேசம் – பகுதி 9

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!


காலை நேரச் சூரியனின் கதிர்களில் பனிமலை பிரகாசிக்கும் காட்சி....
 
Snow Crown Cottage-ல் சென்று சேர்ந்ததிலிருந்து பாட்டு, ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வது என மிகவும் சந்தோஷமாக இருந்த மாலை அது. யாருக்கும் எந்த வேலையும் இல்லை என்றாலே மகிழ்ச்சி தானே. அதுவும் எல்லா நாட்களும் வீட்டு வேலை, அலுவலக வேலை என அனைத்தும் செய்து அதிலிருந்து கொஞ்சம் மாறுதலுக்காக சுற்றுலா செல்லும் போது அங்கேயும் சமையல் சாப்பாடு என்று செய்து சாப்பிடுவதில் அர்த்தம் இல்லை. பெரும்பாலான பெண்களுக்கும் [சில ஆண்களுக்கும்], இந்த சமையல், வீட்டு வேலைகளிலிருந்து விடுதலை கிடைக்காதா என்ற எண்ணம் உண்டு.   


காலை நேரக் காட்சிகள்....


குறுகிய சாலையில் மலைகளினூடே ஒரு காலை நேரப் பயணம்....

அப்படி சுகமாக, உல்லாசமாக இருக்கும்போது பாட்டு, கிண்டல், அரட்டை இதெல்லாம் தானே…  அப்படி இருந்த வேளையில் நண்பர் பாடிய ஒரு பாட்டு “காலங்களில் அவள் கோடை!” பெரும்பாலான சினிமா பாடல்களை அதே மெட்டில், வார்த்தைகளை மாற்றிப் போட்டு பாடுவது நம்மில் பலருக்கும் பழக்கம். தில்லி நண்பர் பத்மநாபன் இப்படி நிறைய பாடல்கள் பாடுவார். அதே மாதிரி சுற்றுலா வந்திருந்த நண்பர் ஒருவர் பாடிய பாடல் – காலங்களில் அவள் கோடை. அவர் பாடிய பாடலின் வரிகள் இங்கே….

காலங்களில் அவள் கோடை
கலைகளிலே அவள் பொம்மை
மாதங்களில் அவள் மாசி
மலர்களிலே அவள் ஊமத்தை

காலங்களில் அவள் கோடை
கலைகளிலே அவள் பொம்மை
மாதங்களில் அவள் மாசி
மலர்களிலே அவள் ஊமத்தை

காலங்களில் அவள் கோடை

பறவைகளில் அவள் காக்கா
பாடல்களில் அவள் ஒப்பாரி ஓஒ….
பறவைகளில் அவள் காக்கா
பாடல்களில் அவள் ஒப்பாரி
கனிகளிலே அவள் பப்பாளி
கனிகளிலே அவள் பப்பாளி
காற்றினிலே அவள் சூறாவளி

காலங்களில் அவள் கோடை
கலைகளிலே அவள் பொம்மை
மாதங்களில் அவள் மாசி
மலர்களிலே அவள் ஊமத்தை
காலங்களில் அவள் கோடை

பால்போல் சிரிப்பதில் குரங்கு - அவள்
பனிபோல் அணைப்பதில் கள்ளி
பால்போல் சிரிப்பதில் குரங்கு - அவள்
பனிபோல் அணைப்பதில் கள்ளி
கண்போல் வளர்ப்பதில் சிற்றன்னை
கண்போல் வளர்ப்பதில் சிற்றன்னை  - அவள்
பித்தனாக்கினாள் என்னை

காலங்களில் அவள் கோடை
கலைகளிலே அவள் பொம்மை
மாதங்களில் அவள் மாசி
மலர்களிலே அவள் ஊமத்தை
காலங்களில் அவள் கோடை…

யாரை நினைத்து இப்படிப் பாடினார் என்பதை அவரிடம் கேட்டு சொல்கிறேன்!


காலை நேரத்தில் நதியும் பனிபடர்ந்த மலைகளும்....


அமைதியான காலைப்பொழுதில்.....


சாலையோரப் பள்ளத்தாக்குகள் - அழைக்கும் ஆபத்து!

இப்படி பாட்டும் கூத்துமாக இருந்து இரவு உணவு உண்டு எலும்பை உருக்கும் குளிரில் ஒரு நடை சென்று வந்த பிறகு தான் உறங்கினோம். மணாலியில் ஒரு பிரச்சனை உண்டு. கொஞ்சம் லேட்டாகச் சென்றாலும், எல்லா இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து விட அனைத்திற்கும் காத்திருக்க வேண்டியிருக்கும். மணாலி வாகன ஓட்டிகள் பனிப்பகுதிகளில் வாகனம் செலுத்துவதில் திறமைசாலிகள் என்பதால் சுலபமாக பனிப்பகுதிகளில் வண்டியைச் செலுத்த, தலைநகரிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் செல்லும் வாகன ஓட்டிகள் காரணமாக எல்லா இடங்களிலும் Traffic Jam உண்டாகி நேர விரயம் அதிகமாக ஆகும். அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் புறப்பட வேண்டும் என காலையில் நல்ல குளிரிலும் எழுந்து விட்டோம்.


அதிகாலையில் இயற்கையை ரசித்தபடி.....


சில்லென்ற நதியில் - பனி உருகி ஓடும் நதி


சாலையோரக் கோவில் ஒன்று.... 

மலையில் அமைந்த வீடு ஒன்று...
இங்கே தங்க உங்களுக்கு ஆசையா....

நான்கு அறைகள் இருப்பதால், ஒருவர் பின் ஒருவராக தயாரானோம். சென்ற பகுதியில் தங்குமிடம் பற்றிச் சொல்ல விட்டுப்போன ஒரு விஷயம் – இரண்டு அறைகளில் Bath Tub கூட இருந்தது! ஆனால் எனக்கு என்னமோ இந்த மாதிரி Bath Tub குளியல் பிடிப்பதில்லை. தமிழகத்தில் கூட இப்போது சில மூன்று படுக்கயறை கொண்ட வீடுகளில் ஒரு Bath Room-ல் Bath Tub வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவற்றை பராமரிப்பது கடினம். என்னமோ ஆசைப்பட்டு அந்த வசதியை வைத்துக் கொண்டாலும், பின்னாட்களில் அவை துணிகளை ஊற வைக்க, பயன்படுத்திய துளிகளை போட்டு வைக்க, உபயோகிப்பதை ஒரு வீட்டில் பார்த்திருக்கிறேன்!  


ஆபத்தான வளைவில்.....

பனிபடர்ந்த மலை......
காலை நேரத்தில்!

அனைவரும் தயாராகி தங்குமிடம் விட்டு வெளியே வர, அப்படி ஒரு குளிர். நாங்கள் அணிந்திருந்த குளிர்கால உடைகள் ஓரளவுக்குத் தான் குளிரைத் தாங்கும் விதமாக இருந்தது.  மொத்தமும் பனி விழுந்திருக்கும் மலைகளுக்குச் செல்லப் போகிறோம். எப்படியும் இந்த உடைகளில் குளிரைத் தாக்குப் பிடிக்க முடியாது… என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்தபடியே வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். இனிய காலைப் பொழுதில் பனிப்பொழிந்து வீழ்ந்து கிடக்கும் இடத்திற்குச் செல்லப் போகிறோம். ஆனால் வழியில் ஒரு இடத்தில் வாகனத்தினை நிறுத்தினார் ஜோதி! அது எந்த இடம்? எதற்காக நிறுத்தினார் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்…..

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

26 comments:

 1. ஜி காலங்களில் அவள் வசந்தம் பாடலை நானும் நேற்று பதிவுக்காக உல்டாவாக எழுதினேன் இங்கு வந்தால் அதேமாதிரி ஆனால் வார்த்தைரள் வேறு.

  தங்களது நண்பருக்கு எனது வாழ்த்துகளை சொல்லவும்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவுகள் இன்னும் படிக்கவில்லை ஜி. படிக்க வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 2. புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 3. படங்களுடன் மிக அருமையான பகிர்வு அண்ணா....
  மற்ற பதிவுகளையும் வாசிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 4. மிக அழகிய மலையும் மலையடிவாரமும். அந்தக் வீட்டுக் கூரைகள் சைனாவை நினைவு படுத்துது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 5. பாடல் சூப்பர்ர்... ஏன் அவருக்கு ஏதும் காதலில் தோல்வியாக இருக்குமோ?:) அவ்ளோ திட்டுத் திட்டிப் பாடி தன் கோபத்தைத் தணிக்கிறார் போல இருக்கே.. ஹா ஹா ஹா ரசித்தேன். வோட்டும் போட்டாச்சு.

  ReplyDelete
  Replies
  1. காதல் தோல்வி இல்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 6. படங்களை ரசித்தேன். மாற்றி பாடப்பட்ட பாடல் வரிகள் சுவாரஸ்யம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. ​அருமையான 'லொகேஷன்ஸ்' ஜி ! ஏதேனும் திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கிறதா என்பதையும் எழுதினால், வாசகர்களுக்கு கொஞ்சம் ஈர்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்..!

  ReplyDelete
  Replies
  1. சினிமாக்களில் வந்திருக்கலாம். எனக்குத் தெரியாது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத்.

   Delete
 8. புகைப்படங்கள் அழகு! இது போலப் பல பாடல்கள் ,,,, வார்த்தைகள் மாற்றப் பட்டு பாடியிருக்கிறோம் கல்லூரி நாட்களில் . ஒரு தாள் போதுமா இந்தப் பரிக்ஷை எழுத ஒரு தாள் போதுமா ? பாசென்றும் ஃ பெயிலென்றும் சிலர் கூறுவார் ,,,, ரிசல்ட் வந்த பின் அவர் மாறுவார் ஞாபகமில்லை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 9. காலை நேரத்தில் தாங்கள் எடுத்திருந்த பனிபடர்ந்த மலைகளின் படங்கள் அருமை! பாராட்டுகள்! ஓட்டுனர் ஜோதி எதற்காக வாகனத்தை நிறுத்தினார் என அறிய காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 10. 'நதியையும் மலையையும் கண்டு 'சில்லென்ற உணர்வு' எனக்கும் வந்தது. எட்டிவிடும் தூரம்தானா? பனிப்பகுதியில் செல்லும் அனுபவம் கிட்டியதா?

  ReplyDelete
  Replies
  1. பனிப்பகுதியில் செல்லும் அனுபவம் கிடைத்தது. வரும் பகுதிகளில் சொல்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 11. பாட்டும்
  படங்களும் அருமைஅருமை
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 12. படங்களும் அழகு! பாடலையும் ரசித்தோம்...கல்லூரிக் கால நினைவுகள்...

  கீதா: பல படங்கள் நினைவுகளை மீட்டெடுத்தது..பனி மூடிய மலைகள் ஐயோ நேரில் பார்க்க அப்படியொரு அழகு..விட்டு வர மனதே இருக்காது...உங்கள் படங்கள் அழகு ஜி!!

  .ஆம் பாத் டப்பில் குளிப்பது என்பது ஒத்துவராது அப்படியே குளிக்கும் சூழல் வந்தால் அதில் நார்மலாக பாத்ரூமில் குளிப்பது போலவே குளித்துவிடுவதும் உண்டு...ஹஹ்ஹ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. கருத்துக்கள் இடாவிட்டாலும் பதிவோடு தொடர்கின்றேன். எனக்குல்லாம் பாத் டப் குளியல் இல்லாவிட்டால் குளித்த திருப்தியே வராது. சின்ன வயதிலிருந்தே பழகி விட்டதனாலோ என்னமோ வென்னீரை முழுவதுமாக நிரப்பி கூடவே சொட்டுச்சொட்டான் வாசனை ஷாம்பூ விட்டு நேரம் அதிகம் இருந்தால் ஒரு மணி நேரம். இல்லையெனில் அரை மணி நேரம் அப்படியே தூங்கி எழுந்து வந்தால் ?? ஆஹா! அதிலும் குளிர்ப்பிரதேச வாசிகளுக்கு இதுவல்லோ அருமைக்குளியல். நோ எருமைக்குளியல் ஒன்லி அருமை மட்டும் தான்

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி நிஷா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....