எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, April 13, 2017

ஸ்டென்சில் – பழசும் புதுசும்….சில நாட்கள் முன்னர் தட்டச்சுப் பயிற்சி பற்றிய பதிவு படித்தது என்னுடைய நினைவுகளையும் மீட்டெடுக்க உதவியது. +2 முடித்த கல்லூரியில் சேர்ந்தபிறகு தான் தட்டச்சுப் பயிற்சி ரொம்பவே முக்கியம் – ”நாளைக்கு வேலை கிடைக்கணும்னா அதுல சேர்ந்து, தட்டச்சு ஹையர் பாஸ் பண்ணிட்டா, அதுவும் ஒரு Extra Qualification – English, Tamil என ரெண்டுமே முடிச்சுட்டா ரொம்பவே நல்லது” என்று சொல்லி என்னையும் நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள ஒரு Typewriting Institute-ல் சேர்த்துவிட்டார் அப்பா. Shorthand-ம் படிச்சா ரொம்ப நல்லதுன்னு சொன்னாலும், ஏனோ படிக்கவில்லை!

பெரிதாய் அதில் ஈடுபாடு இல்லை என்றாலும், கையில் ஒரு பேப்பரை சுருட்டி எடுத்துக்கொண்டு சைக்கிளில் வீட்டிலிருந்து மெயின் பஜார் Institute வரை சென்று வருவேன். புதுசாகப் பழகுபவர்களுக்கென்றே ஒரு பாடாவதி ஓட்டை மெஷின் வைத்திருப்பார் அந்த Institute owner! ஒவ்வொரு Key மீதும் ஏறி உட்கார்ந்தால் தான் அதன் அச்சு பேப்பரில் விழும்! அப்படி பல முறை ஏறி உட்கார்ந்து ஒரு வழியாக பத்து நாட்கள் ஆனபின்னர் தான் வேறு ஒரு மெஷின்! அப்படியே Lower, Higher என ஆங்கில தட்டச்சு மட்டுமே பயின்றேன். தமிழ் தட்டச்சில் அத்தனை ஆர்வம் வரவில்லை! ஒன்றிரண்டு முறை முயன்று, கைவிட்டேன். Typewriter-இல் பல முறை Shift Key அழுத்த வேண்டியிருப்பது, தமிழ் தட்டச்சின் சாபக் கேடு!

அந்த Institute owner எப்போதாவது தான் வருவார். தட்டச்சு சொல்லித்தர ஒரு அக்கா தான் இருப்பார்கள்! அவருக்கு நம்மள பார்த்தாலே ஏதோ பயம் – இத்தனைக்கும் ஊதினா பறந்து போற மாதிரி தான் இருப்பேன் நான்! மொத்தமே முப்பது, முப்பத்தி ஐந்து கிலோ தான்! பெரும்பாலான நாட்கள் தட்டச்சு செய்து முடித்தபிறகு பேப்பரைக் காண்பித்தால், “டைப் அடிச்சாச்சு இல்ல, போய்ட்டே இரு… காத்து வரட்டும், வழிவிடுன்னு”ன்ற மாதிரி அனுப்பிடுவாங்க! எப்படியோ, ஆறே மாதத்தில் லோயர், அடுத்த ஆறாவது மாதத்தில் ஹையர் என இரண்டும் முடித்தேன்.

Institute வரும் பெரும்பாலானவர்கள் தெரிந்தவர்களாகத் தான் இருப்பார்கள். அப்போதைய நெய்வேலி ஒரு Close Knit Community! இப்போது எப்படி என்பது தெரியாது! பெரும்பாலானவர்கள் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். இன்ஸ்டிடியூட் போனமா வந்தமான்னு இருக்கணும்.  விதி படத்துல வர மாதிரி சைட் அடிக்க மட்டும் அங்கே நான் போனதில்ல! L, O, V, E எழுத்துகள் தேய்ந்து போனதும் இல்லை! ஆனா, நான் கத்துக்கிட்ட மெஷின்ல a எழுத்து மட்டும் மேல் பகுதி பாதி தான் வரும்! அந்த Key-ஐ மட்டுமாவது மாத்துங்கன்னு அந்த அக்காட்ட சொன்னா, “அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு!, எதை மாத்தணும், எப்ப மாத்தணும்னு எங்களுக்குத் தெரியும், போயிட்டே இரு”ன்னு சொல்லிடுவாங்க!

வெறும் டைப்ரைட்டிங் மட்டும்தான் கத்துக்கிட்டேன்! ஸ்டென்சில் எப்படி கட் பண்ணனும் தெரிஞ்சுக்கல, சொல்லித்தரவும் இல்லை! கல்லூரி முடிக்கிறதுக்குள்ளேயே, வேலைக்கான தேர்வு எழுதி, அதிலே பாஸ் பண்ண, டைப்ரைட்டிங் டெஸ்ட் – பாண்டிச்சேரியில்! நெய்வேலிலருந்து மெஷின் தூக்கிட்டுப் போகணும்! பஸ்லயும், கையிலும் தூக்கிக்கொண்டு போய், டைப் டெஸ்ட் எழுதி, மெஷின பத்திரமா கொண்டுவந்து திருப்பிக் கொடுக்கணும்! மெஷின தூக்கிட்டுப் போறது பெரிய தொல்லை! எப்படியோ பாஸ் பண்ணி, தில்லி வந்தாச்சு! டைப் ரைட்டிங் என்னைத் துரத்தியது!

வேலைக்குச் சேர்ந்தபிறகு எனக்கு கொடுக்கப்பட்ட பிரிவு அதிக ஆட்களைக் கொண்டது. அதுவும் Statistics சம்பந்தப்பட்டது. சாதாரண கடிதங்களைத் தவிர பட்டியல்கள், Tables தான் நிறைய டைப் பண்ண வேண்டியிருக்கும்! அதுவும் வருஷத்துக்கு 300, 400 பக்கம் கொண்ட இரண்டு புத்தகங்கள் வெளியிடுவார்கள் – அதில் முக்கால்வாசி Tables! நிறைய Copies என்பதால் சாதாரண பேப்பர் டைப்பிங் கிடையாது! Stencil Cut பண்ணனும்! ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு Stencil! அழுத்தி அடிச்சா, ஸ்டென்சில் கிழிந்து விடும், லேசா அடிச்சா, கட் ஆகாது! பெரிய தொல்லை! தப்பா அடிச்சா, சிவப்பு கலர்ல ஒரு Solution தடவி, அது காய்ந்த பிறகு அதே இடத்தில் சரியான வார்த்தையை அடிக்கணும்! கம்ப்யூட்டர் வர வரைக்கும் இப்படி மூணு நாலு வருஷம் Stencil கட் பண்ணி கட் பண்ணியே வாழ்க்கை வெறுத்தது! விரல் நுனிகள் எரியும்!, கைவிரல்கள் முழுவதும் கெஞ்சும்….

இதுல நான் வேற ரொம்ப திறமைசாலின்னு நிறைய வேலை செய்து காட்ட, எல்லோருடைய வேலையும் என் தலையில்! ஹிந்தி வேற தெரியாது – யார் வேலை குடுத்தாலும் மாங்கு மாங்குன்னு செய்வேன்! செய்ய முடியாதுன்னு சொல்லத் தெரியாது! பெரும்பாலான அதிகாரிகள் மருத்துவர்கள்! அவர்கள் Dictation கொடுக்கற மாதிரி சொல்ல, நான் நேரடியாக Typewriter-ல டைப் பண்ணுவேன்! நம்ம வேகம் அவ்வளவுன்னு புகழ்ந்தே வேலை வாங்கிடுவாங்க! ஒரு டாக்டர் – காஷ்மீரி – நடிகர் அனுபம் கேர்-க்கு சொந்தக்காரங்க! அவங்க டிக்டேஷன் கொடுக்கும்போது திண்டாடுவேன்! வார்த்தை உச்சரிப்பு அந்த மாதிரி!

பேயன், அக்கேயன் என்றெல்லாம் வார்த்தைகள் சொல்லுவார்கள்! பேயன் – இது என்ன நம்ம ஊர் வாழைப்பழமா, இல்லை, யாரையாவது பேயன்னு திட்டறாங்களா, இதை ஆங்கிலத்தில் peyan அப்படின்னு டைப் பண்ணனுமான்னு தெரியாது! அதுக்கப்புறம் அவங்க கிட்டயே ஸ்பெல்லிங்க் கேட்க, ”அட பேயன், பேயன், இது தெரியாதா உனக்கு?” என்று கேட்டு, P A S S I O N அப்படின்னு சொல்லுவாங்க! அக்கேயன் – O C C A S  I O N…..  நம்ம பேஷன், அக்கேஷன்-னு சொல்றதுதானே வழக்கம்! இப்படி நிறைய வார்த்தைகள்!ஒரு வழியா கணினி வந்து, டைப்ரைட்டிங் மெஷின்களுக்கு ஓய்வு கொடுக்க, பல விஷயங்கள் சுலபமாச்சு! இப்பல்லாம் ஸ்டென்சில் கட்டிங் வழக்கொழிந்து போனது! ஆனா இந்த ஸ்டென்ஸில் வேற ஒரு விஷயத்துக்குப் பயன்படுது - அந்த பழைய ஸ்டென்ஸில் இல்லை – வார்த்தை மட்டும் இருக்கு! புதுசா தலைமுடிக்கு டிசைன் பண்ண ஸ்டென்சில் பயன்படுத்தறாங்க! பாருங்களேன்!


அலுவலகம் வழியாக, ஹிந்தி கற்றுக்கொண்டு தேர்வுகள் எழுதி அதிலும் தேர்ச்சி பெற்ற பிறகு, ஹிந்தி டைப்ரைட்டிங் கத்துக்கலாமே என ஒருவர் கேட்க, அலறி அடித்து பதில் சொன்னேன் – No! தமிழ் தட்டச்சே கத்துக்கல, நான் ஹிந்தி தட்டச்சு நிச்சயம் கத்துக்க மாட்டேன்னு கண்டியனா [அதாங்க கண்டிஷனா] சொல்லிட்டேன்!

நாளை வேறொரு பதிவில் சந்திக்கும்வரை…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

28 comments:

 1. அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
  Tamil News

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹென்றி.

   Delete
 2. அந்தக் காலத்தில் தட்டச்சு ஏன் பழகவில்லை - என்று, இப்போது வருத்தமாக இருக்கின்றது..

  காணொளி - அருமை..

  ஆனாலும், எத்தனை நாளைக்கு கூந்தலைப் பிரிக்காமல் வைத்திருப்பது?..
  தலையை அரித்தால் என்ன செய்வது!?..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. நான் டைப் இன்ஸ்டிடியூட் போன காலத்தை நினைவுகூர வைத்துவிட்டீர்கள்.


  "விதி படத்துல வர மாதிரி சைட் அடிக்க மட்டும் அங்கே நான் போனதில்ல!" - வாக்கியம் சரியா வரலையே. இதுக்கு அர்த்தம், 'சைட் அடிக்க மட்டுமல்ல, டைப்பிங் கத்துக்கவும் போனேன்' என்றும் வரும். 'அதை மட்டும் நான் பண்ணியதில்லை' என்றும் வரும். எனக்கென்னவோ முதல் அர்த்தம்தான் சரி என்று தோன்றுகிறது.

  காணொலி நல்லாத்தான் இருக்கு (அடுத்த பொண்ணுங்க உபயோகப்படுத்தும்போது). நம்ம பொண்ணு இதனைக் கேட்டால், 'சரி' சொல்லுவோமா என்பது சந்தேகம்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கென்னமோ முதல் அர்த்தம் தான் சரி என்று தோன்றுகிறது! :)

   நான் சென்றது டைப்பிங்க் கற்றுக்கொள்ள மட்டுமே! :))

   நம்ம பொண்ணு இதனைக்கேட்டால்... சொல்ல மாட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 4. அனுபவ பகிர்வு அருமை.
  புத்தாண்டு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றிம்மா... உங்களுக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 5. 1994 வாக்கில் நெய்வேலி வந்திருக்கிறேன் என் மைத்துனன் அங்கு பிஎச் இ எல் லில் பணியில் இருந்தான்

  ReplyDelete
  Replies
  1. BHEL? NLC?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 6. நானும் தட்டச்சு கற்றுக்கொண்டேன் ஆனால் தேர்வுக்கு போகவில்லை. வங்கியில் சேர்ந்த பிறகு அங்கிருந்த தமிழ் தட்டச்சு இயந்திரத்தில் தமிழில் தட்டச்சு செய்ய நானே கற்றுக்கொண்டேன். ‘ஹ’ என்று அடிக்க முதலில் ‘உ’ அடித்துவிட்டு பின்னர் ‘ற’ அடிக்கவேண்டும். அது எனது வேலை இல்லை என்றாலும் ஒரு ஆர்வத்தில் எப்படியோ கற்றுக்கொண்டேன். எனது பழைய நினைவுகளை மீட்டெடுக்க உதவியமைக்கு நன்றி.

  தலைமுடிக்கு Design செய்ய Stencil பயன்படுத்தப்படுகிறது என்பது புதிய தகவல்.பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உ அடித்து பின்னர் ற அடிக்க வேண்டும்... இப்படி நிறைய எழுத்துகளுக்கு இருப்பது கொஞ்சம் கடினமான விஷயம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 7. விருப்பமில்லை என்றால் எதுவும் சிரமம் தான்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. நான் கூட தட்டச்சு பயின்றிருக்கிறேன். தமிழ் ஆங்கிலம் இரண்டுமே ஹையர் பாஸ். சுருக்கெழுத்து மண்டையில் ஏறவில்லை. ஸ்டென்சில் கேட் செய்வது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தெரியாது.

  ReplyDelete
  Replies
  1. தமிழிலும் ஹையர்! :) எனக்கு ஏனோ தமிழ் தட்டச்சு பயிலத் தோன்றவில்லை.
   சுருக்கெழுத்தும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. கல்லூரிக் காலங்களில் விளையாட்டாய் கற்றுக் கொண்ட,
  ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு
  இப்பொழுது வலைப் பூவிற்குப் பெரிதும் கைகொடுக்கிறது ஐயா

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். வலைப்பூவில் பெரிதும் பயன்படுகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 10. ஹஹ்ஹஹஹ் வெங்கட்ஜி நானும் கற்றுக் கொண்டிருக்கிறேன்...பழைய நினைவுகள் வந்தது. நானும் ஆங்கிலத்தில் தட்டச்சு கற்றேன் ஹையர் பாஸ்....ஆனால் இப்போது கணினியில் டைப்பிட வெகு எளிதாக இருக்கு. ஸ்டென்சில் கற்றுக் கொண்டேன்....ஷார்ட் ஹேண்ட் என் மர மண்டைல ஏறல...அது ஏறலைனா என்ன நமக்குனு சில ஷார்ட் ஹேன்ட் நாமளே உருவாக்கிக்கற ஒன்னு...என்ன மத்தவங்களுக்குப் புரியாது நமக்கு மட்டுமே...ஹஹ

  கீதா...

  ReplyDelete
  Replies
  1. ஷார்ட் ஹேண்ட் மரமண்டைல ஏறல! கத்துக்கணும்னே இந்த மரமண்டைக்குத் தோணல! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 11. கணனியில் கூட தமிழ் தட்டச்சு சிரமம்தான் ,ஆங்கிலத் தமிழ்தான் நமக்கு லாயக்கு :)

  ReplyDelete
  Replies
  1. கணினியில் தமிழ் தட்டச்சு - பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது Transliteration தானே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 12. how to type tamil in desktop,i am to type tamil in mobile application uising ezthuani but i find it very difficult in my desktop

  ReplyDelete
  Replies
  1. NHM Writer என ஒரு மென்பொருள் உண்டு. அதைத் தரவிறக்கம் செய்து கொண்டால், கணினியில் அனைத்து இடங்களிலும் தமிழ்/ஆங்கிலம் என மாற்றி மாற்றி தட்டச்சு செய்ய முடியும். முயற்சித்துப் பாருங்கள். நான் அதைத்தான் பயன்படுத்துகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ghost!

   உங்கள் பெயர் பயமுறுத்துகிறது! :) முதல் வருகையோ?

   Delete
 13. ஆஹா அனுபவம் இனிமை, நானும் சோட் ஹாண்ட், ரைப்பிங் படிச்சு முடிச்சேன்.. இப்போ சோட் ஹாண்ட் மறந்து போயிந்தி:)..

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து பயன்படுத்தாவிட்டால் சுருக்கெழுத்து மறந்து தான் போகும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.....

   Delete
 14. ஆஹா! தமிழ், ஆங்கிலத்தட்டச்சு, ஆங்கிலச் சுருக்கெழுத்து, அக்கவுன்டன்சினு எல்லாத்திலேயும் ஹையர்! :) இப்போ அந்தப் பேப்பரெல்லாம் எங்கேனு தேடணும்! :) என் நினைவுகளை மீட்டெடுத்து விட்டீர்கள்! நோஸ்டால்ஜியா! இப்போக் கூட கை சுருக்கெழுத்துப் பழகிட்டே இருக்கும்! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....