ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

சாலையைக் கடக்கும் ஒட்டக மந்தை – காணொளி






நம்ம கிராமங்களில் மாடு, ஆடு இல்லை என்றால் வாத்துகளை மொத்தமாக சாலைகளில் ஓட்டிக்கொண்டு போவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி ஒட்டகங்களைக் கூட்டமாக நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை – அரபு நாடுகளில் இருப்பவர்கள் தவிர்த்து! ஏற்கனவே ஒரு முறை எனது பதிவொன்றில் பல ஒட்டகங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டதுண்டு.  ஆனால் இன்று, இந்த ஞாயிறில் ஒரு காணொளி – கிட்டத்தட்ட 150 ஒட்டகங்களுக்கு மேல் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் ஒரு சாலையைக் கடக்கும்போது எடுத்த காணொளி ஒன்று!



நம் ஊரில் மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் கழுத்தில் மணி கட்டி அது ஒலிப்பதைக் கேட்டு ரசிப்பதைப் பார்த்திருக்க முடியும்.  இங்கே ஒட்டகங்களுக்கும் அதன் கழுத்தில் மணி! என்ன கொஞ்சம் பெரிய மணி! அதன் கழுத்தில் இருக்கும் மணி ஒலிக்க, ஒட்டகங்கள் நடந்தும் ஓடியும் சென்றதைப் பார்க்க அப்படி ஒரு ஆனந்தம் எங்களுக்கு! நாங்கள் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்க, இந்த ஒட்டக மந்தையைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தி விட்டு, சாலையை அனைத்து ஒட்டகங்கள் கடக்கும் வரையில் பார்த்துக் கொண்டும், அந்த ஒட்டக மந்தையை மேய்ப்பவருடன் பேசிக்கொண்டும் இருந்தோம். 

இதோ அந்த காணொளி – உங்கள் பார்வைக்கும், ரசனைக்கும்…..




ஆங்கிலத்தில் இப்படிக் குழுவாக இருக்கும் ஒட்டகங்களை Caravan என அழைக்கிறார்கள். ஹிந்தியில் ”ஊண்ட் கா சமூஹ்” என்று அழைத்தாலும், எனக்கென்னமோ, நம் தமிழ் மொழியில் சொல்லும் மந்தை தான் பிடித்திருக்கிறது!

குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில், குறிப்பாக White Rann of Kutch எனும் பகுதியில் ஒட்டக சவாரி செய்ய வாய்ப்புகள் உண்டு! ஒட்டகத்தின் மீது அமர்ந்து பயணிப்பது ஒரு சவாலான விஷயம். ஒட்டக வண்டியாவது பரவாயில்லை. மாட்டு வண்டியில் பயணிப்பது போல பயணித்து விடலாம்! ஆனால் ஒட்டகத்தின் மீதமர்ந்து பயணிப்பது ஒரு த்ரில் அனுபவம்! குறிப்பாக அது கீழே அமர்ந்திருக்க, அதன் மீது நாம் அமர்ந்த பிறகு அது எழுந்து நிற்கும் – முன்பக்கம், பின்பக்கமும் மாறி மாறி நாமும் சாய, எட்டடி உயரத்தில் அது எழுந்து நிற்க, சாப்பிட்டதெல்லாம் வெளியே வந்துவிடும் போன்ற உணர்வு உட்காருபவர்க்கு உண்டாகும்!

ஒவ்வொரு முறை அந்த ஒட்டகம் உட்கார்ந்து எழுந்திருப்பதும் மிகவும் கொடுமையான விஷயம்! அந்த ஒட்டகத்திற்கு வாயிருந்தால் நிச்சயம் கதறி அழலாம்! முதன் முதலாக இந்த அனுபவம் பெற்றது சண்டிகரை அடுத்த பிஞ்சோர் கார்டனில் தான்! அதன் பிறகு ஜெய்பூரில் – சௌக்கி தானியில் ஒரு முறை – பிறகு குஜராத் மாநிலத்தில் சில சமயம்…… முதல் முறை தவிர, மற்ற எல்லா முறையும், பயப்படும் வேறு யாருக்காகவாது ஒட்டக சவாரி!  கீழே உட்கார வைக்காமல், அது நின்றபடியே இருக்க, மேடை மீது ஏறி அதன் முதுகில் அமர்ந்து கொள்ள முடிந்தால் நல்லது – ஆனால் அப்படி அமர்ந்து கொள்வதில் முன் சொன்ன விதம் போல த்ரில் இருக்காது!

என்ன நண்பர்களே, இந்த வாரத்தில் பகிர்ந்து கொண்ட காணொளியை, தகவல்களை ரசித்தீர்களா?  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

30 கருத்துகள்:

  1. உங்கள் மந்தையிலிருந்து இரண்டு ஒட்டகங்கள் வேறுவேறு பாதையில் சென்றுவிட்டன (Video 1:30)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவற்றை அங்கிருந்த இன்னுமொருவர் சரியான பாதையில் செலுத்தி விடுவார்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராகவேந்திரன்.

      நீக்கு
  2. சில நிறம் மாறிய ஒட்டகங்கள் கண்ணில் படுகின்றன. அதாவது நாம் வழக்கமாகப் பார்க்கும் ஒட்டக நிறத்தை விட! ஒரு மாடு பயந்து ஓடுகிறது! மாடுதான் எவ்வளவு சின்னதாக இருக்கிறது! ஓரிரு ஒட்டகங்கள் நீங்கள் எல்லாம் என்ன செய்கிறீர்கள் என்று பார்க்கிறது! கேரவன் என்கிற சொல்லுக்கு "தங்குமிடம்" என்கிற அர்த்தம் கூட ஒன்று உண்டு இல்லை? ஆர் டி பர்மன் இசையில் பல இனிய பாடல்களைக் கொண்ட ஒரு படம் உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரவன் - இந்த வார்த்தைக்கு, இப்படியும் அர்த்தம் உண்டு. நடிகர்-நடிகைகள் வெளிப்புறப் படப்பிடிப்புக்குச் செல்லும்போது இப்படிச் சொல்லப்படும் தங்குமிடத்தில் தான் ஓய்வெடுப்பார்கள் அல்லவா!

      ஆர்.டி.பர்மன் இசை - இனிய பாடல்கள் கொண்ட படம். ஜீதேந்திரா, ஆஷா பரேக், அருணா இரானி நடித்த படம். 1971-ஆம் வருடம் வந்ததோ? பியா து... அப் தோ ஆஜா, கித்னா ப்யாரா வாதா.... போன்ற பாடல்கள் கொண்ட படம்.. ஒரு முறை கேட்க வேண்டும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஆகா
    அற்புதமான காட்சியைத் தங்களால் கண்டேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. கேரவன் என்றவுடன் ஒட்டக மந்தைக்கு வார்த்தை என்றாலும் மனதில் உடன் தோன்றுவது நடிகர் நடிகைகள் பயன்படுத்துவதுதான் நினைவுக்கு வருகிறது. அதில் தங்கி பயணிப்பது, ஓய்வெடுப்பது என்று...

    ஹப்பா எத்தனை ஒட்டகங்கள்....ஓரிரண்டு உங்களைப் பார்த்தது போல இருக்கே...உங்களை மிரட்டவில்லையா?!! ஹ்ஹஹஹ்ஹ் காணக் கண் கொள்ளாக் காட்சி. இதுவரை ஆடு, வாத்து, யானைகள், மாடுகள் இப்படிப் பார்த்ததுண்டு. மந்தை மந்தையாக. ஏன் கழுதைகள் கூடப் பார்த்ததுண்டு.(10 தான் இப்படி அல்ல) ஆனால் ஒட்டகம் இப்போதுதான் உங்கள் காணோளி மூலம். நேரில் பார்க்க முடியுமோ தெரியவில்லை.... மிக்க நன்றி வெங்கட்ஜி இப்படி அருமையான காணொளியை எங்களுடன் பகிர்ந்தமைக்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிரட்டும் ஒட்டகம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. Caravanஆ ?சினிமா துறையினர் பயன்படுத்தும் வாகனத்துக்கு இந்த பெயர் வந்தது எப்படியோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  7. ஒட்டக மந்தை நல்லா இருக்கு. அதுல சவாரி பண்ணும்போது (யானை சவாரியும் அப்படித்தான்) கொஞ்சம் ஜாக்கிரதையாக கயறைப் பிடித்துக்கணும். உட்கார்ந்திருக்கும் ஒட்டகத்தில் ஏறினால், அது எழுந்துக்கும்போது ரொம்ப ஆடும், நமக்குக் கஷ்டமாகவும் இருக்கும்.

    கல்ஃப்ல (அதிலும் சௌதியில), தவறுதலாக ஒட்டகத்தின்மீது கார் மோதி, அது இறந்தால், கிட்டத்தட்ட 85 லட்சம் ரூபாய் தண்டனை. (இப்போ கம்மியாயிடுத்தான்னு தெரியலை. ஆனால் ஒட்டகம் சௌதியின் தேசிய விலங்கு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 85 லட்சம் ரூபாய் தண்டனை! அப்பாடி..... இங்கே சில இடங்களில் ஒட்டக கறி கூட சாப்பிடுகிறார்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.....

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா....

      நீக்கு
  12. பிரிந்து சென்ற ஒட்டகங்கள் மீண்டும் மந்தியில் கலந்தனவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மந்தையில் கலந்தன. சற்று கழித்து!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  13. ஒட்டக மந்தையின் ஊர்வலத்தை காணொளியில் கண்டு இரசித்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  14. ஓமானிலும் ஒட்டகங்கள் நிறைய உண்டு. ஓமான் மலைகள் சூழ்ந்த பகுதி. சாலையின் இரு பக்கமும் எந்த பசுமையும் இல்லாமல் மலைகள். மலைகளின் நிறத்திலேயே அதன் அருகில் நின்றிருக்கும் ஒட்டகங்களையும் மலைகள் என்றே நினைத்துக் கொள்ளும் காரோட்டிகள் திடீரென்று அவை சாலைக்கு வரும் போது நிலை குலைந்து விபத்துக்குள்ளாவார்கள் என்று கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓமான் ஒட்டகங்கள் பற்றிய மேலதிகத் தகவல்கள் - ஏற்படும் விபத்துகள் பயமுறுத்துகின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மேலதிகத் தகவல்களுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....