ஞாயிறு, 11 ஜூன், 2017

துப்புவது எங்கள் உரிமை! - சின்னச் சின்னதாய்!


இரண்டு பதிவுகள் வெளியிட்ட பிறகு மீண்டும் ஒரு இடைவெளி! இன்னமும் பழையபடி தொடர்ந்து பதிவுகள் எழுதும் நிலை வரவில்லை! வேலைகள், வேலைகள் ஏதேதோ வேலைகள்! – விசாரித்து வந்த மின்னஞ்சலுக்குக் கூட நீண்ட நேரம் கழித்தே பதில் அனுப்பமுடிந்தது! என்ன செய்ய முடியும்! சரி இன்றைய பதிவுக்கு வருவோம்! பொதுவாக ஞாயிறன்று, நான் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வது வழக்கம். இன்றைக்கும் அப்படி சில புகைப்படங்கள் – கூடவே சில சிந்தனைகள் – சின்னச் சின்னதாய்!

வியாழன், 8 ஜூன், 2017

மூணு க்வார்ட்டர் வருமா? – Quarter as Barter!….

படம்: இணையத்திலிருந்து....

நேற்றைய பதிவில் சொன்னது போல, இதோ, இன்னிக்கும் ஒரு பதிவுடன் வந்துட்டேன்! தமிழகத்தில் இருந்த போது நிறைய விஷயங்கள் பார்க்கக் கிடைத்தது. தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் சோம பானத்தில் மூழ்கி விட்டார்கள் என்பதை சிலரின் பேச்சிலும் செயலிலும் தெரிந்து கொள்ள முடிந்தது. எங்கே பேச்சு தொடங்கினாலும், எந்த விஷயத்தில் தொடங்கினாலும், சுத்தி சுத்தி சோம பானம் பற்றிய பேச்சாகத் தான் முடிவதைப் பார்க்க முடிந்தது! அப்படி சில விஷயங்கள் பார்க்கும் முன்னர் தலைப்பில் சொன்ன Barter அதாவது பண்டமாற்று பற்றி சில விஷயங்கள் பார்க்கலாமே….

புதன், 7 ஜூன், 2017

காணாமல் போனேன்….



கடந்த 30 நாட்களாக நான் காணாமல் போனேன்! என்னைத் தேடி ஆங்காங்கே பதாகைகள் வைத்தீர்களா? ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் நான் காணாமல் போனது பற்றி செய்திகள் கொடுத்தீர்களா? கண்டு பிடித்துக் கொடுத்தால் பரிசு கிடைக்கும் என தெரிவித்தீர்களா? காவல்துறையில் புகார் கொடுத்தீர்களா? என்பது பற்றி நான் அறியேன்.  ஆனால் எனக்குத் தெரிந்த ஒரே ஒரு விஷயம் நான் காணாமல் போனேன் என்பது மட்டுமே! பூக்களையும் வண்ணத்துப் பூச்சிகளையும் படம் பிடித்து பகிர்ந்து கொண்டபிறகு எனக்கும் சிறகு முளைத்து எங்கோ பறந்து சென்றுவிட்டேன். இத்தனை நாட்களாகக் காணவில்லையே என்று யாருக்கும் பதட்டம் இருந்ததாய் தெரியவில்லை! அப்பாடா கொஞ்சம் நாள் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்துவிட்டீர்கள் போலும்! அது எப்படி உங்களை நிம்மதியாக இருக்க விட முடியுமா! இதோ மீண்டும் வலையுலகிற்கு வந்து சேர்ந்தாயிற்று – தலைநகர் தில்லிக்கும் திரும்பியாயிற்று!