எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, July 28, 2017

ஃப்ரூட் சாலட் 202 – தேன்கூட்டில் – பேப்பர் சிலைகள் – காத்திருப்பு!

இந்த வாரத்தின் குறுஞ்செய்தி:எல்லாப் பயணங்களும் நாம் நினைத்த இடத்தில் முடிவதில்லை…..  வழி தவரும் சில பயணங்கள் தான் நமக்கு வாழ்க்கையின் பல பாடங்களை கற்றுத் தருகிறது.இந்த வார காணொளி – அழாதே மாமா….  So Sweet!


இந்த வார புகைப்படம்:தலைநகரில் மறையும் சூரியன்! சில நாட்கள் முன்னர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் முன்னர் நண்பர் பத்மநாபன் அவர்களுடன் இராஜபாட்டை பகுதியில் புல்வெளியில் அமர்ந்திருந்த போது எடுத்த ஒரு புகைப்படம் – எடுத்தது அலைபேசியில் தான்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

மனைவி கணவனைத் திட்டுவது குளத்தில் கல் எறிவது போல! கணவன் மனைவியைத் திட்டுவது தேன்கூட்டில் கல் எறிவது போல! [புரிந்தால் சரி!] – யாரோ!

பாவம், மனைவியிடம் கடிபட்டு, கொட்டு வாங்கிய கணவர் இப்படி எழுதி இருக்கிறார் போலும்!

இந்த வார WhatsApp:

Felix Semper – பேப்பர்களைக் கொண்டு சிலைகள் அமைக்கும் உன்னதக் கலைஞர்! பாருங்களேன் இவரின் கைவண்ணத்தினை…..


இந்த வாரத்தின் பொன்மொழி:

You will never reach your destination if you stop and throw stones at every dog that barks – Winston Churchil.

ராஜா காது கழுதை காது:

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது முன்சீட்சில் அமர்ந்திருந்த பெண்:  “நீ Graduation முடிச்சுட்டியா இல்லையா, சீக்கிரம் முடி! நீ எப்ப முடிக்கறது! எப்ப வேலைக்குப் போகறது? எப்ப நம்ம கல்யாணம் பண்ணிக்கிறது!” 

பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞர்: “நான் லைன்ல காத்திருக்கேன்”னு சொல்லு! சொன்னது அவரது அலைபேசியில் என்றாலும், பொருத்தமா இருந்தது!

நாளைய பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.34 comments:

 1. அனைத்தையும் ரசித்தாலும், 'அழாதே மாயமா வை வெகுவாக ரசித்தேன். என்ன அழகிய சிறுவன், முகத்திலும், குணத்திலும்... ரசிக்க வைக்கிறான்.

  ReplyDelete
  Replies
  1. 'அழாதே மாயமா' இல்லை, மாமா.. மன்னிக்கவும்! விட்டுப்போன இன்னொரு வரி... வீடியோ ஆரம்பிக்கும்போது அந்தச் சிறுவனின் முகத்தில் இருக்கும் மோகனப்புன்னகை...

   Delete
  2. சிறுவன் காணொளி பார்த்த உடனேயே பிடித்து விட்டது. இரண்டு மூன்று முறை பார்த்து விட்டேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  3. அலைபேசி மூலம் தட்டச்சு செய்யும் போது இப்படி தவறுகள் வருகிறது....

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் தமிழ்மணம் வாக்கிற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. எல்லாவற்றையும் ரசித்தேன். குழந்தையின் இயல்பான மனிதநேயம் இன்னும் ரசிக்கவைத்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 4. இந்த வார இற்றை அருமை இரசித்தேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 5. அழாத மாமா, பேப்பர் சிலைகள் அருமைண்ணே.

  ராஜா காதும் நச்..

  த ம 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 6. அனைத்தும் அருமை. அழாதே மாமா என்று சொன்ன குழந்தை மனதை கவர்ந்தார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 9. ஹஹஹ அழாதே மாமா....ஸோ ஸ்வீட்...அக்குழந்தை அழுவதும் அழகு என்றால் அழும் முன்ன்ன்அ புன் சிரிப்பும் அழுகையின் இடையே...ஓரு சின்ன சிரிப்பு. அதுவும் அழகு...குழந்தையின் மனித நேயம் மெய் சிலிர்ப்பு...

  பேப்பர் சிலைகள் செம...
  அனஒத்தையும் ரசித்தோம் ஜி....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 10. எல்லாம் நன்றாக இருந்தன. யாரிடமாவது மனிதநேயத்தைக் காணும்போது, அதுவும் கள்ளமில்லாத குழந்தையிடம் காணும்போது மனது நெகிழ்ந்துவிடுகிறது. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று சொல்ல எத்தனை விசால மனது இருக்கவேண்டும்? (காலையிலேயே த ம)

  ReplyDelete
  Replies
  1. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 11. ஒவ்வொன்றும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 12. அழாதே மாமா பேப்பர் சிலைகள் ரசனை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 13. அனைத்தும் அருமை.. காணொளி மனதைக் கவர்கின்றது..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 14. பேப்பரில் கலை வண்ணம் கண்டேன் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 15. குழந்தையும் தெய்வமுமொன்று ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 16. காணொளிகள் இரண்டும் அருமை.பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....