எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, July 30, 2017

தக்காளி விலை – புதிய காய்கறிகள் வாங்கலாம்!தக்காளி விலை கிலோ நூறு ரூபாய்க்கு விற்கிறது தலைநகரில். வெங்காயத்தின் விலையும் கொஞ்சம் கொஞ்சமாக ஏறுமுகத்தில்….. அப்போது தான் ஹரியானா நண்பர் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது – அது எங்கள் கிராமங்களில் தக்காளிக்கு பதில் காச்ரி என அழைக்கப்படும் காயைப் பயன்படுத்திக் கொள்வோம் என்று சொன்னது! இந்தக் காயைப் பற்றியும், அதில் செய்யப்படும் சட்னி பற்றியும் ஏற்கனவே ஒரு முறை எனது பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் – படிக்காதவர்கள் வசதிக்காக இங்கேயும் அப்பகிர்வின் இணைப்பு!


இதைப் பற்றி யோசிக்கும் போது தான் ஹிமாச்சலப் பிரதேசப் பயணம் ஒன்றில் பார்த்த வித்தியாசமான காய்கறிகள் சிலவற்றைப் பற்றி நினைவுக்கு வந்தது.  அந்த உணவுப் பொருட்களின் படங்கள் மட்டும் இந்த ஞாயிறில்! இது என்ன, எப்படி சமைக்கணும் என்று மட்டும் என்னிடம் கேட்டு விடாதீர்கள்!

இப்படங்களில் உள்ள காய்கறிகள் பற்றிய மேலதிகக் குறிப்புகள் பிறிதொரு சமயத்தில்!


இதற்குப் பெயர் பக்சோய் - சைனீஸ் உணவுகளில் பயன்படுத்துவது.  நரம்பனா இருக்கும் இதன் பெயர் ஓசின் - சைனீஸ் உணவுகளில் பயன்படுத்துவது.  காளான் வகையைச் சார்ந்தது. இயற்கையாகவே வளர்வது என்றாலும் அரிதாகக் கிடைக்கக் கூடியது. அதனால் விலை அதிகம்! இது விலை குறைவு - கிலோ பத்து ரூபாய் தான் - உருளைக்கிழங்குடன் சமைக்கிறார்கள்! ஆனா பார்க்கத் தான் ஒரு மாதிரி இருக்கு! 

என்ன நண்பர்களே, இந்தக் காய்கறிகளில் நீங்கள் முன்னால் பார்த்தவற்றைச் சொல்லுங்களேன்!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


34 comments:

 1. இதுவரை இவற்றைப் பார்த்ததில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. முதலாவது படத்தில் இருப்பது Lettuce தானே!..

  ம்ற்றவைகளைப் பார்க்கவே ஒருமாதிரியாக இருக்கின்றது.. அதிலும் அந்தக் காளான்!?..

  ReplyDelete
  Replies
  1. அந்த வகையைச் சார்ந்ததாக இருக்கலாம்....

   காளான் - :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. அந்த நடுவில் பார்த்த காய் "ஓசின்"?? அது மட்டும் கொஞ்சம் தாமரைக்கிழங்கு மாதிரி இருக்கு. வட மாநிலங்களில் குறிப்பா டெல்லி போன்ற நகரங்களில் தாமரைத் தண்டு, கிழங்கு கிடைக்கும். சமைத்துச் சாப்பிடவும் ருசி!

  இங்கே வெங்காயம் (பெரிது) சுமாரான ரகம் கிலோ பத்து ரூபாய், நேற்றைய விலை. நல்ல தரமான வெங்காயம் 15 அல்லது 20 ரூபாய். தக்காளி 80 ரூபாயிலிருந்து 100 ரூ வரை கிடைக்கும்.

  ReplyDelete
  Replies
  1. இங்கே பெரிய வெங்காயம் 20 ரூபாய்.... தாமரைத் தண்டு, கிழங்கு கிடைக்கிறது. ஆனால் இது வேறு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 4. இங்க தக்காளி படு சல்லிசா கிடைக்குது. அதுலயும் விலை ஜாஸ்தியா (3கிலோ 110ரூபாய்) உள்ளதை வாங்கி, இப்போ எப்படி செலவழிக்கிறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன். த ம

  முதலில் உள்ள இலையை (பக்சோய்?) சாண்ட்விச், சாலட்ல சேப்பாங்க. உடம்பு எடை குறையும்.

  ReplyDelete
  Replies
  1. பக்சோய் பற்றிய மேலதிகத் தகவலுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 5. புதுவகை காய்கறிகள். பக்சோய் மட்டும் பார்த்தது போல் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 6. "அவன் பெரிய பணக்காரன் போல? " "எப்படி சொல்ற?" "லஞ்சுக்கு தினமும் தக்காளி சாதம் எடுத்துகிட்டு வர்றானே !" - இந்த நிலை இருக்கும்போது மாற்று காய்களை நாடுவது நல்ல ஐடியா ஜி !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி!

   Delete
 7. பார்க்காத காய்கள்.. அழகான படங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன்ஜி!

   Delete
 8. வெங்கட்ஜி காச்ரி சட்னி உங்கள் ரெசிப்பியும் செய்து பார்த்துட்டேன் நல்லாருக்கு. இந்த காச் ரி என் குர்காவன் தங்கை பரவால் என்று சொல்வதால் குழப்பம்...ஹாஹா...இங்கும் கிடைக்கிறது...காட்டு கோவைக்காய் னு , பாண்டி சைடில் சுக்கங்கா னு சொல்றாங்க..

  முதல் படம் பக்சோ ஒரு வகை லெட்யூஸ்...கோஸ் குடும்பம்....இலையே காயாக....இந்த லெட்யூஸ் நிறைய வகைகள் இருக்கு. சாலதில், சாண்ட்விச்ச்ல்ல் பயன்படுத்துவங்க...சாப்பிட்டதுண்டு. ஊட்டி யில் விளைகிறது. கோயம்புத்தூர் பழமுதிர் நிலையத்தில் கிடைக்கும் இங்கு சென்னையிலும் பழமுதிர் நிலையம் போன்ற கடைகளில் கிடைக்கிறது..வெளிநாடுகளில் நிறைய கிடைக்கும்.

  ஓரிரு முறை வாங்கி செய்ததுண்டு...ஆசைக்காக...மற்றபடி இதன் விலையும் அதிகம்...அதனால் வாங்குவதில்லை....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பர்வல் வேறு காச்ரி வேறு. சுக்கங்கா பார்த்ததில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
  2. ஓ! பர்வல் வேறு காச்ரி வேறா...ஓ அப்போ நான் உங்கள் ரெசிப்பி பார்த்துச் செய்தது பர்வலும் இல்லை காச்ரியும் இல்லை..இங்கு கிடைக்கும் சுக்கங்கா...கொஞ்சம் புளிப்பு தெரியும்...மூன்றையும் வைத்துப் பார்த்தால்தான் வேறுபாடு தெரியும் போலும்...

   கீதா

   Delete
  3. சுக்கங்கா நான் பார்த்தது இல்லை. பர்வல் மற்றும் காச்ரி வெவ்வேறு தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 9. இரண்டாவது படம் ஆஸ்பராகஸ் என்று சொல்லப்படும் ஒரு காய் தண்டு வெரைட்டி பொல் உள்ளது.அதுவா என்று தெரியலை....பார்த்தால் அப்படித்தான் தெரியுது. ஆஸ்பராகஸ் மிக மிக நல்ல காய். வெளி நாட்டில் அதிகம் காணலாம்....இங்கும் சில சமயம் பார்த்ததுண்டு....விலை அதிகம் எனவதால் வாங்குவதில்லை....

  மஷ்ரூம் பற்றி தெரியல....பயன்படுத்துவது இல்லை எனவதால்...

  கடைசி படம் பீன்ஸ் வரைட்டியோ.....??

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பீன்ஸ் வரைட்டியோ? தெரியவில்லை. ஹிமாச்சலப் பிரதேசத்தில் வாங்கி தில்லி வரை எடுத்து வந்து சமைத்தேன். படம் எடுத்து வைக்கவில்லை, பதிவும் போடவில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
  2. வெங்கட்ஜி எப்படிச் சமைத்தீர்கள் என்பதையாவது பதிவில் சொல்லுங்களேன்!!! அப்போது மொபைலில் பார்த்ததால் சரியாகத் தெரியவில்லை...இப்போது கணினியில் பார்க்கும் போது பீன்ஸ் போன்றும் இல்லை...எப்படி இருந்தது சுவை, அதன் டெக்சர் என்பதைச் சொல்லுங்களேன் ஜி! பதிவாக...தெரிந்து கொள்ள ஆசை

   கீதா

   Delete
  3. சமைத்த போது படங்கள் எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் பதிவிட முயற்சிக்கிறேன்.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 11. விலைகள் மாறும் பொழுது நாமும் மாறிக்கொள்ளவேண்டும் ஜி

  ReplyDelete
  Replies
  1. மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது - இல்லையா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 13. So nice and useful information. Thanks. Once I enjoyed these vegetables in Parawanoo, Himachal Pradesh. Lord Jesus Christ abundantly bless you! - Kannan - http:// kannan.edublogs.org

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி கண்ணன்.

   Delete
 14. நம்ம ஊருக்கு அந்த செடிய கொண்டு வாங்க. இங்கிட்டு தக்காளி விலை என்பது ரூபா

  ReplyDelete
  Replies
  1. கொண்டு வந்துவிடலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி..

   Delete
 15. தக்காளி இல்லையென்றல் என்ன காச்ரி உபயோகியுங்கள் அரிசி கிடைக்கவில்லை என்றால் கேக் சாப்பிடவும் என்பது போலா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....