வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

ஃப்ரூட் சாலட் 203 – ஒண்டிக்கு ஒண்டி! – சோம்நாத் – முடிவெட்டிப் பேய்


பெண்களின் தலைமுடி வெட்டி எடுக்கும் பேய்:



சில நாட்களாக, வட இந்தியாவின் சில மாநிலங்களில் புரளி! பேய்/ஏதோ ஒன்று பெண்களின் தலைமுடியை வெட்டி எடுத்துக் கொண்டு போய்விடுவதாக செய்திகள் பரவி வருகின்றன. கிராமத்துப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர பயந்து போய் இருக்கிறார்கள். தலைநகரை அடுத்த சிறு இடங்களில் கூட இந்தப் பேய் உலவுவதாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நடுவே அவர்களாகவே வெட்டிக்கொண்டு இப்படி வதந்தி பரவ விடுவதாகவும் காவல் துறை செய்தி சொல்கிறது! எப்படி இருந்தாலும் இந்த விஷயம் பயங்கரமாக பரவி வருகிறது! இதை வைத்து சிலர் பாடலும், காணொளிகளும் தயாரித்து வெளியிடும் அளவிற்கு இந்த விஷயம் பரவி இருக்கிறது. செய்தி இங்கே.  ஒரு மாதிரி காணொளி கீழே!


இந்த வாரத்தின் குறுஞ்செய்தி:

இதயம் – பல வருடங்கள் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு இயந்திரம்! அதை மகிழ்ச்சியாக வைத்திருப்போம் – நமதாக இருந்தாலும், அடுத்தவர்களுடையதாக இருந்தாலும் - யாரோ!

இந்த வார காணொளி – வித்தியாசமாய் ஒரு போட்டி – ஒண்டிக்கு ஒண்டி!


இந்த வார ரசித்த புகைப்படம்:



என்னைப் பார்த்து சொல்லு… என் கண்ணைப் பார்த்து சொல்லு… என்னையா ஃபோட்டோ புடிக்கிற!

இந்த வார முகப்புத்தக இற்றை:

கவலை இல்லாத மனிதன் இரண்டு பேர் மட்டுமே – ஒருவர் இறந்து விட்டார்; மற்றவர் இன்னும் பிறக்கவே இல்லை!

இந்த வார WhatsApp:



குஜராத் பயணம் ஒன்றில் தங்கி இருந்த இடத்தின் உரிமையாளர் நல்ல நண்பர் ஆகிவிட்டார். அவ்வப்போது WhatsApp மூலம் குஜராத் செய்திகள் அனுப்பி வைப்பார். நேற்று சோம்நாத் கோவில் சிவபெருமானுக்கு மாலை 7 மணி அளவில் செய்த அலங்காரம் புகைப்படமாக அனுப்பி வைத்திருந்தார். அந்தப் புகைப்படம் கீழே – இங்கிருந்தே சோம்நாத் தரிசனம்!



வார்த்தை விளையாட்டு:



புதன் கிழமை என்றாலே எங்கள் பிளாக் புதிர் நினைவுக்கு வரும் அளவிற்கு புதிராக வந்த வண்ணம் இருக்கிறது.  இங்கே ஒரு வார்த்தை விளையாட்டு.  மேலே உள்ள படத்தில் ஒன்பது தமிழ் எழுத்துகள் உண்டு. இந்த எழுத்துகளைக் கொண்டு எத்தனை தமிழ் வார்த்தைகள் எழுத முடியும் உங்களால்? எழுதுங்களேன்!

நாளைய பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.




38 கருத்துகள்:

  1. கவலை இல்லாத மனிதன் உண்மை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  2. 1.ஓடம்
    2.தடம்
    3.தடவு
    4.ஓம்
    5.கடி
    6.தடி
    7.ஓய்வு
    8.கல்
    9.கடல்
    10.ஓடி
    11.தவுல்
    12.ஓதம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி.. நீங்க எழுதினதுல "தவுல்" கிடையாது, அது தவில். ஆனாலும் கட கடன்னு நிறைய வார்த்தைகள் எழுதியிருக்கீங்களே! பாராட்டுக்கள்

      நீக்கு
    2. தவுல் - தவில்! 11 வார்த்தைகள் - ஆஹா..... வாழ்த்துகள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. கடிதம், ஓடம், கடவு, தடவு, ஓய்வு, கடல், கடம், தடி, தடம், ஓதம், ஓம், ஓடி, கதம். 13 வார்த்தைகள். இதில் கதம் என்பது வடமொழியா இருக்கலாம். கடவு அர்த்தம் கடல் கடக்கும் அல்லது எல்லைதாண்டும் உதாரணம். கடவுச் சீட்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம் தெரிந்தே நான் எழுதவில்லை தமிழ் இல்லையே...

      நீக்கு
    2. ஆஹா 13 வார்த்தைகள்! கதம் எடுத்து வைத்தேன் என்று சொல்வதுண்டு.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    3. கதம் - தமிழா வடமொழிச்சொல்லா? யாராவது சொல்லுங்கப்பா! எனக்குத் தெரிந்து கதம் எடுத்து வைத்தேன் என்று சொல்வதுண்டு.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. ஆஹா இன்னும் இரண்டு வார்த்தைகள்! மொத்தம் 15....

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. தலைமுடி வெட்டி எடுக்கும் பேய்? என்ன செய்வது முன்னுக்குப் போவதாகச் சொல்லிக்கொண்டே பின்னுக்குப் போகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னுக்குப் போவதாகச் சொல்லி பின்னுக்கு! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. முக்கண் நாயகி புகைப்படம் சூப்பர்.
    வார்த்தை விளையாட்டு:
    கடிதம்; கடம், கட, கதம், கடல், கல், கடவு, கதவு, கடி,
    தடவு, தகவு, தடம், தகம், தடி, தம், தவுல்
    ஓம், ஓடம், ஓடல், ஓட, ஓதல், ஓத, ஒய்வு, ஓதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

      எத்தனை வார்த்தைகள்!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  10. ஓ,கட, தட, தடி, மடி, கடி, ஓடி, ஓம், ஓட, ஓய்வு, கதவு, கடல், தடவு, மகவு, தகவு, ஓதல், ஓடல், கடிதல், மடிதல்

    இற்றையில் சொல்லப்படும் நிலைகளுக்கு நடுவில் இருக்கும் நிலைக்கு குறுஞ்செய்தியை பதிலாக எடுத்துக் கொள்ளலாமோ!! என்றாலும் இரண்டைய்மே ரசித்தேன் ஜி

    குழந்தை அழகு.

    பேய் அப்பாதுரை சாரின் பல்கொட்டிப் பேயை நினைவுபடுத்தியது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  11. கில்லர்ஜி வரிசைப் படுத்தி விட்டார். ஆனால் நான் ஒன்பது தான் கண்டு பிடிச்சேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  12. பேய் பார்க்க நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேய் எப்படி நல்லா இருக்கும் ?

      நீக்கு
    2. பேய் பார்க்க நல்லா இருக்கு! ஆஹா - :) ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம் போல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    3. பேய் எப்படி நல்லா இருக்கும்? நல்ல கேள்வி கில்லர்ஜி!

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  13. என்னைவிட புதிர் அவிழ்க்கும் சக்தி உள்ளோர் விடுவ்கட்டும் நான் விலகி நிற்கிறேன் இண்ரைய செய்தித் தாளில் இந்தமுடி செய்தி படித்தேனா மீண்டும் பார்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  14. பேய் சவுரி முடி தயாரிக்கும் தொழில் ஆரம்பித்து இருக்குமோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  15. அனைத்து செய்திகளும் அருமை.
    இற்றை, குறுஞ்செய்தி எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  16. இந்த வார முகப்புத்தக இற்றை அருமை.
    மொழி புரியாவிடினும் காணொளியை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹர்யான்வி மொழி காணொளி அது - இருந்தாலும் பார்த்தால் புரியும் என்பதால் இணைத்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....