எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, August 10, 2017

சுவையான விருந்து – ஹோட்டல் தஸபல்லா, விசாகப்பட்டினம்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 17

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


சுவையான விருந்து....
படம்: இணையத்திலிருந்து....

அரக்கு பள்ளத்தாக்கு சென்று வந்த பிறகு, பேருந்து எங்களை தங்குமிடம் அருகே இறக்கிவிட, அங்கே சென்று கொஞ்சம் Fresh ஆன பிறகு, இரவு உணவு எங்கே என்ற கேள்வி வந்தது? பயணத்தில் கிடைத்த நண்பர்கள் வீட்டிற்கு அழைத்தாலும், வேண்டாம் என்று சொல்லி தங்குமிடம் வந்தோம். அப்போது தான், நண்பர், முன்பு ஒரு முறை விசாகப்பட்டினம் வந்தபோது சாப்பிட்ட உணவகம் பற்றிச் சொல்லி, அங்கே போய் சாப்பிடலாம், உணவு ரொம்பவே நன்றாக இருக்கும் என்று சொல்ல, அங்கே எப்படிச் செல்வது என்பதை யோசித்தோம். முதலாம் நாள் எங்களுடன் இருந்த வண்டி, இரண்டாம் நாளன்று இல்லை. ஆட்டோவில் பயணிக்கலாம் என முடிவானது!பெசரட்டு....
படம்: இணையத்திலிருந்து....

சாப்பிட்ட உணவகம் என்று சொன்னாரே தவிர, உணவகத்தின் பெயர் அவருக்கு நினைவில்லை. வழி தெரியும், பார்த்துக்கொள்ளலாம் என இறங்கிவிட்டோம்! கீழே வந்து ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் தெலுங்கில் மாட்லாடி, “குண்ட்சாக” சில உணவகங்களின் பெயரைச் சொல்லக் கேட்க, அவர் அடுக்கினார்! நண்பர் சென்றிருந்த உணவகம் பெயர் சொன்னது, டக்கென்று நிறுத்தி, ”அந்த ஹோட்டலுக்குப் போங்க” என்று சொல்ல, அவர் சிரித்துக் கொண்டே, ஜகதம்பா ஜங்ஷன் என்ற பகுதியில் இருக்கும் தஸபல்லா அழைத்துச் சென்றார். தஸபல்லா ஒரு **** தங்குமிடம் மற்றும் உணவகம். உள்ளே நுழைந்ததும், அந்த வெயில் காலத்திலும் கழுத்திற்கு டை அணிந்த சிப்பந்திகள், வியர்க்க விறுவிறுக்க உழைத்துக் கொண்டிருந்தார்கள். 


நான் கோவமா இருக்கேன்... இந்த மாமா ஃபோட்டோ புடிக்கறாரு!....
சாப்பாடு வேற இன்னும் வரலை!

நாங்கள் மூன்று பேர் என்பதால், நான்கு இருக்கைகள் கொண்ட ஒரு இடம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இடம் கிடைத்ததும், அங்கே அமர, ஜூஸ் வந்தது! கூடவே தண்ணீர், மொறுமொறுவென வடாம் வர, அதைக் கொரித்த படி, ஜூஸ் குடிக்க என்ன வேண்டும் எனக் கேட்க ஒரு பெரியவர் வந்தார். சிரித்த முகத்தோடு, வணக்கம் சொல்லி, “என்ன சாப்பிடப் போகிறீர்கள்? என்று கேட்டதோடு, மெனு கார்டு கொடுத்தார். நண்பர் முன்னரே அங்கே சென்றிருந்ததால், நன்றாக இருக்கும் என பெசரட்டு, தோசை, சாம்பார் இட்லி என்று சொல்ல, எல்லாம் வந்தது. அனைத்துமே நல்ல சுவையுடன் சுடச்சுட இருக்க, நன்றாக சாப்பிட்டோம். ரசித்து, ருசித்து சாப்பிட முடிந்தது. இந்த உணவகத்தில் சைவம், அசைவம் என இரண்டும் உண்டு என்றாலும், சைவம் தனியாகவும், அசைவம் தனியாகவும் தான் – இரண்டும் தனித்தனி இடங்களில்!


சுவையான விருந்து....
படம்: இணையத்திலிருந்து....

போலவே விசேஷங்கள் நடத்தவும் இங்கே இடம் உண்டு. நாங்கள் சென்ற போது கூட ஏதோ ஒரு பிறந்த நாள் விழா கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். விசாகப்பட்டினம் நகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவகம்/தங்குமிடம் இந்த தஸபல்லா! தங்குமிடத்தின் கட்டணங்கள் அதிகம் தான். உணவுப் பொருட்களின் விலை பரவாயில்லை! கொஞ்சம் அதிகம் என்றாலும், சுவை, Ambience, பணியாளர்களின் உபசரிப்பு என அனைத்துமே A1 ரகம்.  அன்று அங்கே சாப்பிட்ட பிறகு அடுத்த நாளும் விசாகப்பட்டினத்தில் இருந்ததால், மூன்று வேளையுமே தஸபல்லாவில் தான் உணவு உண்டோம்! மொத்தம் நான்கு வேளை அங்கே சாப்பிட்டோம். வேறு எங்குமே செல்லத் தோன்றவிடவில்லை முதல் முறை சாப்பிட்ட உணவின் தரம்.  


இட்லி, புதினா சட்னி....
படம்: இணையத்திலிருந்து....

சாப்பிட்ட பிறகு பான் பீடாவும் கொடுக்க, அதையும் சாப்பிட்டபடியே, சாப்பிட்டதற்கான தொகையை, நண்பரின் கார்டில் தேய்த்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்தோம். எங்களுக்கு உணவு வழங்கிய சிப்பந்திக்கும் டிப்ஸ் கொடுத்துவிட்டு, அடுத்த நாள் போகும்போது அவருடைய கைகளால் தான் எங்களுக்கு உணவு – விசாகப்பட்டினத்தில் நான்கு வேளையும்! ரசித்து ருசித்து சாப்பிட முடிந்தது – நண்பருக்கு நன்றி! கூடவே எங்களைப் பார்த்துப் பார்த்து கவனித்த அந்த சிப்பந்திக்கும் தான்! பொதுவாகவே உணவகம் செல்லும்போது புகைப்படங்கள் எடுப்பதில்லை. சில பயணங்களில் மட்டுமே இதற்கு வாய்ப்பு கிடைக்கிறது! செல்லப்பெட்டியில் எடுப்பதில் சில சிக்கல்கள் உண்டு! கேமரா இருக்கும் அலைபேசி அந்தப் பயணத்தில் என்னிடம் இல்லை! இனிமேல் போகும் பயணங்களில் உணவின் படங்களை அலைபேசியில் எடுக்கலாம்! அதனால் இந்தப் பதிவில், உணவகத்தில் நான் எடுத்த ஒரு சிறுமியின் புகைப்படம் மட்டும் இங்கே! மற்றவை இணையத்திலிருந்து.

இரவு உணவினை சாப்பிட்டு மீண்டும் ஒரு ஆட்டோ பிடித்து தங்குமிடம் வந்து சேர்ந்தோம். அடுத்த நாளும் விசாகப்பட்டினத்தில் தான் தங்கப் போகிறோம். அடுத்த நாள் எங்கே சென்றோம், என்ன இடங்கள் பார்த்தோம் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன். உண்ட களைப்பு தொண்டனுக்கு உண்டல்லவா! நல்ல உறக்கம் தேவை! அடுத்த பதிவில் சந்திக்கும் வரை….

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


48 comments:

 1. சுவையான பதிவு. பெசரட் மேலே இருப்பது பொங்கலோ!

  ReplyDelete
  Replies
  1. ஆந்திராவில் பெசரட்டு என அழைக்கப்படும் பாசிப்பருப்பு பதார்த்தத்தின் உள்ளே ரவா உப்மா வைத்து தருகிறார்கள்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. ஶ்ரீராம், அநியாயமா இருக்கே! இதுக்குப் பேரு எம்.எல்.ஏ. பெசரட். கோதுமை ரவா உப்புமாத் தான் முன்னாலே எல்லாம் வைப்பாங்க. இப்போ ரவாவுக்கு மாறிட்டாங்க போல! இதன் செய்முறை எழுதி இருக்கேனே! :) இதைப் பார்த்ததுமே ஓடோடி வந்துட்டேன், சாப்பிட! :)

   Delete
  3. http://geetha-sambasivam.blogspot.in/2012/08/blog-post.html

   @ஶ்ரீராம், கமென்ட் கூடப் போட்டிருக்கீங்க! :)

   Delete
  4. அநியாயமா இருக்கே! :) எம்.எல்.ஏ. பெசரட்... பேர் நல்லாத்தான் வைக்கறாங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
  5. அஞ்சு வருஷம் ஆச்சே... மறந்துருக்கலாம்! எனக்கும் படிச்ச நினைவில்லை. இதோ போறேன்... உங்க தளத்துக்கு!


   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
  6. ஸ்ரீராம் நீங்களா இப்படிக் கேட்டுட்டீங்க!!! திங்க பதிவு போடற நீங்களா??!!!!

   எம் எல் ஏ பெசரட்...வினோதமான பெயர்..பெயர்க் காரணம் என்னவோ கீதாக்கா?!

   கீதா

   Delete
  7. ஸ்ரீராம்... கேள்விக்கென்ன பதில்!

   வினோதமான பெயர் தான். காரணம் என்ன என கீதாம்மா தான் சொல்லணும்...

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
  8. //https://en.wikipedia.org/wiki/Pesarattu // விக்கி விக்கிப்பார்த்ததில் கிடைச்சது! இது ஆந்திர எம்.எல்.ஏ. குடியிருப்புகளின் சிறப்பு உணவாம். நானும் கேள்விப் பட்டிருக்கேன். ஆந்திரப் பயணத்தில் ஓரிரு ஹோட்டல்களில் பெயர்ப்பலகையில் பார்த்திருக்கேன். காரணம் இப்போத் தான் தெரியும்! :)

   Delete
  9. எம்.எல்.ஏ. குடியிருப்பில் சிறப்பு உணவு! கொடுத்து வச்சவங்க! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete
 2. தஸபல்லா பெயரே ரஸகுல்லா போல் இனிக்கிறது ஜி

  ReplyDelete
  Replies
  1. தஸபல்லா - ரஸகுல்லா! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 3. தஸபல்லானதும் எனக்கும் ரஸகுல்லா தான் நினைவில் வந்தது. போனால் சாப்பிட்டுப் பார்க்கலாம். சாப்பாடுக்கு முந்திண்டாச்சு! :)

  ReplyDelete
  Replies
  1. போனால் சாப்பிட்டு பாருங்க! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 4. ஆகா.. காலையிலேயே சாப்பட்டு பந்தி..

  பதிவின் சுவை - அழகிய படங்கள்..
  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 5. காலையிலேயே இப்படி கண் கவர் சுவையான படங்களைப் போட்டு நாக்குல தண்ணீர் ஊற வைச்சுட்டீங்களே வெங்கட் ஜி!!ஹ்ஹஹ்ஹ

  கீதா: தலபெல்லா குறித்துக் கொண்டாயிற்று. குழந்தை அழகு! பெஸரெட்டு ரொம்பப் பிடிக்கும். செய்து கொஞ்சம் நாளாச்சு. செஞ்சுரணும்...

  ReplyDelete
  Replies
  1. அங்கே சென்றால் நிச்சயம் தஸபல்லா சென்று வாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 7. Replies
  1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 8. போகும் இடங்களில் உணவு நன்றாக இருந்தால் தான் பயணம் இனிமையாக இருக்கும்.
  உணவு சுவையாக கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி.
  படங்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. போகும் இடங்களில் உணவு நன்றாக கிடைத்துவிட்டால் ஆனந்தம் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 9. நானும் ஹைதராபாத்தில் தஸபல்லாவில் தங்கியிருக்கேன். காலை உணவு அங்குபோல் நான் எந்த நாட்டிலும், உணவகத்திலும் சாப்பிட்டதில்லை. ஏகப்பட்ட வெரைட்டி, எதைக்கேட்டாலும் செய்துதரும் வசதி (தங்கும் சார்ஜோட சேர்ந்த காலை உணவு). ஆனால், ஓரிரு நாட்களுக்கு ஓகே. அதற்கு மேல் என்றால் சாப்பாடு வெறுப்பாகிவிடும் என்று தோன்றியது. ஹைதிராபாத்தில், சட்னி உணவகத்திலும் சாப்பிட்டிருக்கிறேன். நன்றாக இருக்கும்.

  ஆனாலும், எப்படித்தான் சாப்பாட்டில் காம்ப்ரமைஸ் செய்து பயணிக்கிறீர்களோ. ரொம்பக் கஷ்டம்தான். (எனக்கு அதில் காம்ப்ரமைஸ் செய்வது கஷ்டம். யார் பண்றா, என்ன இன்'கிரிடியன்ட்ஸ் எல்லாம் பார்த்து எல்லாவற்றையும் தவிர்த்து, பழம் சாப்பிட்டே காலத்தை ஓட்டிவிடுவேன்)

  ReplyDelete
  Replies
  1. தஸபல்லா உணவு சுவைத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.

   தொடர்ந்து சாப்பிடுவது - எந்த உணவகத்திலும் - கஷ்டம் தான்.

   சாப்பாட்டில் காம்ப்ரமைஸ் செய்து பயணிக்க வேண்டியிருக்கிறது! சில இடங்களில் ஒன்றுமே சைவமாகக் கிடைக்காத போது பழங்களை வைத்து ஓட்டி இருக்கிறேன்! அதுவும் ஒன்றிரண்டு பழங்கள் மட்டுமே கிடைக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
  2. எங்களோட சுற்றுப் பயணங்களில் நானும் பெரும்பாலாக பழங்களிலேயே காலத்தை ஓட்டி விடுவேன். ஆப்பிள், கொய்யா, மாதுளை, வாழைப்பழம், சப்போட்டா போன்ற பழங்கள் வட மாநிலங்களில் நன்றாகவே கிடைக்குமே! அல்லது அவ்வப்போது எடுக்கப்பட்டப் புத்தம்புதிய பழச்சாறு. இது ஒண்ணும் பண்ணாதை வயிற்றை.

   Delete
  3. வட இந்திய பயணங்களில் பிரச்சனை இல்லை. ஆனால்,வடகிழக்கு மாநிலங்களில் உணவுப் பிரச்சனை உண்டு! தியு சென்றபோது சைவ உணவுக்கு அலைய வேண்டியிருந்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 10. குழந்தையும் படம் மிகவும் அழகு ஜி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 11. எம்.எல்.ஏ பெசரட்... நல்லா இருக்கு பேரு..

  ஸ்வீட பீடா எனக்கொன்னு வாங்கி இருக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. ஸ்வீட் பீடாதானே.... வாங்கினா போச்சு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 12. அருமையான அனுபவம் தான்! தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 13. முன்னே எல்லாம் பெசரட்டு தோசை மேலே எக்கச்சக்க வெங்காயம் நெய் போட்டுத் தருவார்கள் . இந்த வழக்கம் எனக்குத் தெரிந்து ஒரு இருபது வருடமாகத்தான் தோசை மேலே உப்மாக்கு ஒரு சீட் ரிசர்வ் பண்ணப் படுகிறது . உப்மா விக்காத ஹோட்டல்காரன் எவனோதான் இதை ஆரம்பிச்சு வச்சிருக்கணும்ன்னு நான் விளையாட்டாகச் சொல்வேன்
  வீட்டில் யாரும் இதையெல்லாம் சொல்லவில்லை

  ReplyDelete
  Replies
  1. உப்மா விக்காத ஹோட்டல்காரன் எவனோ தான் இதை ஆரம்பிச்சு வச்சுருக்கணும்! :))))) ஹாஹா.... இருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 14. படம் மட்டும் இணையத்துலந்தா? தசபல்லா படம் போடக்கூடாதோ?

  ReplyDelete
  Replies
  1. தசபல்லா படம் எடுக்கலை! சாப்பாடு படமும் எடுக்கல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத் அல்தாஃப்.

   Delete
 16. அந்த ஆட்டோகாரருக்கு பெயர் நினைவுக்கு வராமல் போனது போல் எனக்கு போகாது கில்லர்ஜி அப்படி கூறியிருக்காரே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 17. பெசரட்டு உணவு வகை தமிழ்நாட்டில் கிடைக்குமா? பயணமும் பகிர்வும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தமிழகத்தில் இருக்கும் ஆந்திர உணவகங்களில் கிடைக்கலாம். அந்த அளவு சுவை இருக்குமா என்பது சந்தேகமே...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா.

   Delete
 18. அங்கு மதிய உணவு காரமாக இருந்திருக்குமே? எப்படி சமாளித்தீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. அத்தனை காரமில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 19. ஒரு இடத்தில் உணவு பிடித்துவிட்டால் மீண்டும் மீண்டும் அங்கு போவது இயல்புதானே

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....