எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, September 13, 2017

கொலுசே கொலுசே - கல்யாண் ஜுவல்லர்ஸ் – பயண முடிவு!அரக்கு பள்ளத்தாக்குபகுதி 31

பகுதி 30 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


இந்தக் குட்டிச் செல்லத்துக்கு தான் கொலுசு!

தௌலிகிரியில் அமைந்திருக்கும் ஷாந்தி ஸ்தூபா பார்த்த பிறகு நாங்கள் சென்ற இடம் ஒரு கடை! அந்தக் கடை புவனேஷ்வர் நகரில் இருக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் கிளை! தலைநகர் தில்லியில் இல்லாத நகைக்கடையா? அதை விட்டு, ஒடிஷா மாநிலத் தலைநகர் புவனேஷ்வர் சென்று நகை வாங்குவீர்களா? என்றெல்லாம் கேட்பதற்கு முன்னரே பதில் சொல்லி விடுகிறேன்! எங்களுக்காக அங்கே செல்லவில்லை. இரண்டு நாட்கள் புவனேஷ்வர் நகரில் தங்கி அங்குள்ள இடங்களைச் சுற்றிப் பார்க்கும்போது எங்களுக்கான வாகன ஏற்பாடு செய்ததோடு, சில வேளைகள் உணவளித்த திருப்பதி தேவஸ்தானத்தின் திருமண மண்டபம் மற்றும் கோவிலில் பூஜை செய்பவருக்கு ஏதாவது மரியாதை செய்ய வேண்டும் என்பதால் தான் நகைக்கடை பயணம்! அந்த இளைஞருக்கு ஒரு வயது ஆகப்போகும் சிறு பெண் உண்டு என்பதால், குழந்தைக்கு ஒரு கொலுசு வாங்கலாம் என நினைத்தோம்! கடைக்குச் சென்றோம்.இந்த ஃபோட்டோ புடிக்கிற மாமாவப் பார்த்தா சிப்புச் சிப்பா வருது! ஹையோ ஹையோ!

எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து இந்தியா மட்டுமல்லாது, உலகத்தில் பல இடங்களிலும் கடை திறந்திருக்கிறார்கள் இந்த கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தினர்! புவனேஷ்வர் கடை கூட நல்ல பெரிய கடை தான் – இரண்டு மாடிகளில் கடை! கேரள டிசைன்கள் மட்டுமல்லாது, ஒடிஷா டிசைன்களிலும் நகைகள் கிடைக்கின்றன. பெரும்பாலான ஊழியர்கள் மலையாளிகள் என்றாலும், உள்ளூர் ஆட்களையும் வேலைக்கு வைத்திருக்கிறார்கள். உள்ளே நுழையும்போதே என்ன பார்க்க வேண்டும் எனக் கேட்டு, அதற்கான இடத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்! நாங்கள் கொலுசு என்றவுடன், தங்கத்திலா, வெள்ளியிலா எனக் கேள்வி! வெள்ளி என்று சொன்னவுடன் முதலாம் மாடிக்கு மின்தூக்கியில் அனுப்பி வைத்தார் ஒரு ஊழியர்!


விதம் விதமா எடுக்கட்டும்... நம்ம வேலையைப் பார்க்கலாம்!


முதலாம் மாடிக்குச் சென்றால் வெள்ளி வெள்ளி எங்கெங்கும் வெள்ளி! கொலுசுகளை எடுத்துக் காண்பிக்க நண்பரும் அவரது மனைவியும் பார்த்து தேர்ந்தெடுக்க, நான் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தேன்! சில ஊழியர்களிடம் மலையாளத்தில் சம்சாரித்து, அவர்களுடைய வேலை பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். காலை 10 மணிக்குத் திறக்கும் கடை இரவு 10 மணி வரை திறந்திருக்குமாம்! கிட்டத்தட்ட 12 மணி நேரம்! ஒவ்வொரு நாளும் பன்னிரெண்டு மணி நேர உழைப்பு! நடுவில் கொஞ்சம் ஓய்வு உண்டென்றாலும் அதிகம் தானே.  குழந்தைக்குப் பொருத்தமான அளவில் கொலுசு தேர்ந்தெடுத்த பிறகு அதற்கான தொகையை அட்டையில் தேய்த்து, வெளியே வந்தோம்.


ஏலே சின்ராசு! இன்னும் எத்தனை ஃபோட்டோ புடிப்ப?


அங்கிருந்து புறப்பட்டு நேராக திருப்பதி தேவஸ்தான மண்டபம்/கோவில்! அன்றைய தினம் பார்த்து வந்த கோனார்க், பூரி, ரகுராஜ்பூர், தௌலி பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தபடியே இரவு உணவையும் முடித்துக் கொண்டோம். சில நாட்களில் முதலாம் பிறந்த நாள் கொண்டாட இருக்கும் குழந்தைக்கு நாங்கள் வாங்கிய கொலுசினைக் கொடுத்த பிறகு அவருக்கு நன்றி கூறி அங்கிருந்து புறப்பட்டோம் – தங்குமிடம் நோக்கி! புவனேஷ்வர் நகரில் அன்றைக்கு தான் கடைசி இரவு! அடுத்த நாள் காலையில் புறப்பட்டு தலைநகர் திரும்ப வேண்டும்! ஆந்திரா – ஒடிஷா என இரண்டு மாநிலங்களில் சுற்றி விட்டு மீண்டும் தலைநகர் திரும்ப வேண்டும் என நினைக்கும்போதே கொஞ்சம் கஷ்டமாக இருந்தது! ஊர் சுற்றிக்கொண்டே இருந்தால் எப்படி? தலைநகருக்குத் திரும்பித்தானே ஆக வேண்டும்.


என்னப்பா புறப்படலையா இன்னும் நீங்க?


எனக்குத் தூக்கம் வருது! தாச்சி தூச்சி! பை பை!


தங்குமிடம் சென்று உடமைகளைச் சரி பார்த்து, காலையில் புறப்பட ஏதுவாக பெட்டிகளை Pack செய்தோம். இரவு நல்ல உறக்கம்! காலை நேரத்தில் புறப்பட்டு மீண்டும் திருப்பதி தேவஸ்தானம் கோவிலுக்கு வந்து வழிபட்டு, அங்கே இருக்கும் நண்பருக்கும், வாகன ஓட்டிக்கும் நன்றி சொல்லி புறப்பட்டோம்.  இந்தப் பயணம் கிட்டத்தட்ட ஐந்து நாட்கள். ஐந்து நாட்களில் பார்த்த இடங்கள் அனைத்தும் பற்றி இத்தொடரில் எழுதி இருக்கிறேன்.  ஆந்திரப் பிரதேசம் சென்றால் பார்க்க வேண்டிய இடங்களில் “அரக்கு பள்ளத்தாக்கு” முதலில்! ஒடிசா என்றால் கோனார்க்…. பயணம் பற்றிய குறிப்புகள் உங்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். பயணத்தொடரின் அனைத்து பகுதிகளையும் படிக்க ஏதுவாய் வலப்பக்கத்தில் Drop Down Menu இருக்கிறது. ஒரே இடத்தில் படிக்க வசதியாக, விரைவில் மின்புத்தகமாகவும் வெளியிடும் எண்ணம் உண்டு!

பயணத்தில் என்னுடன் தொடர்ந்து வந்த உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.  விரைவில் அடுத்த பயணத்தொடர் – குளுகுளு இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன்!   

பயணம் நமக்கு நல்ல பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது! பல்வேறு அனுபவங்களைத் தருகிறது! ஆதலினால் பயணம் செய்வோம்!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

31 comments:

 1. குழந்தைகள் படங்கள் அழகு.
  கல்யாணம் நடக்காத இடம்கூட இருக்கும், கல்யாண் ஜூவல்லர்ஸ் இல்லாத இடம் இருக்காது போலயே...

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலான மாநிலத் தலைநகரங்களில் இடம் பிடித்து விட்டார்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 2. பதிவினை ஒரு முறைதான் படித்தேன். குழந்தையின் புகைப்படத்தைத் திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டேயிருந்தேன். அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 3. நல்லதொரு அனுபவப் பகிர்வு. குழந்தை கொள்ளை அழகு. படத்துக்கு தந்திருக்கும் வரிகளையும் ரசித்தேன்:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி

   Delete
 4. நல்ல பயணம். நிறைவாக இருந்தது. விரைவில் அடுத்த பயணத்தை ஆரம்பிக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அடுத்த திங்கள் முதல் புதிய பயணத்தொடர்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 5. >>> பயணம் நல்ல பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது!..<<<

  நல்லதொரு பயணத்தில் எங்களையும் அழைத்துச் சென்றமைக்கு மகிழ்ச்சி..
  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. அருமையான சுற்றுலா. சில இடங்கள் நாங்கள் போகவில்லை! நேரப்பற்றாக்குறை என்பதோடு சில இடங்கள் குறித்த முன்கூட்டிய தகவல் சேகரிப்பும் இல்லை! யாரும் சொல்லவும் இல்லை! எப்போதும் போல் அருமையான விளக்கங்கள், படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் பார்க்காத சில இடங்களும் இந்தத் தொடரில் இருப்பது அறிந்து மகிழ்ச்சி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 7. அருமையான பயண அனுபவம்...
  அந்த குழந்தை படங்கள் அழகோ அழகு...
  வாழ்த்துக்கள் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 8. பாப்பாக்கு எம்மாம்பெரிய பொட்டு?!

  ReplyDelete
  Replies
  1. திருஷ்டிப் பொட்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 9. அனைத்து பயணக் குறிப்புகளும் அருமை வெங்கட்ஜி! அடுத்த பயணக் குறிப்புகளை அறிய ஆவல்!!! தொடர்கிறோம் ஜி! பாப்பா படங்கள் மிக அழகு!

  கீதா: வைசாக் என்றால் அரக்கு ஆம் ஜி! அங்கு கைலாசகிரியும் அழகுகடற்கரையும் மிக அழகு ஜி நான் கடற்கரையையும் மிகவும் ரசித்தேன். சிந்து பைரவி படத்தில் வரும் ஒரு பாடல் சிவக்குமார் ஒரு பாறையில் உட்கார்ந்து மோகம் என்னும் மாயப் பேயை..என்ற ஒரு பாடல் வருமே அது வைசாக் கடற்கரை என்று எங்கேயோ வாசித்த நினைவு. அருமையான பாறை பாயின்ட் அது...ஆனால் அந்தக் குறிப்பிட்ட பாயின்ட் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை..வைசாகிலும் போகாத இடங்கள் உங்கள் குறிப்புகளில் மிகவும் பயனுள்ளதெ.

  ஒடிஷா போனதில்லை. எனவே உங்கள் குறிப்புகள் மிக மிகப் பயனுள்ளதே. குறித்துக் கொண்டாயிற்று ஜி! ஊர் சுற்றிக் கொண்டே இருந்தால் நன்றாகவே இருக்கும்...மனசுமிகவும் ஃப்ரெஷாக இருக்கும் தான்... ஆனால் கடமை இருக்கிறதே!

  நல்ல பயணக் குறிப்புகள் ஜி..பாப்பா மனதைக் கொள்ளை கொள்ளுகிறது அதுவும் அதன் சிரிப்பு!!

  ReplyDelete
  Replies
  1. பயணத்தின் போது கூடவே வந்து உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 10. மீண்டும் கால்களில் சக்கரம் கட்டிக் கொள்ளப்போவது எப்போ

  ReplyDelete
  Replies
  1. கால்களில் சக்கரம் - இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சக்கரம் தான்! :) சென்று வந்த பயணங்கள் மூன்று உண்டு - எழுத!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 11. பயணத்தில் உதவியரின் குழந்தைக்கு கொலுசு வாங்கி பரிசளித்து, நன்றி மறப்பது நன்றன்று என நிரூபித்துவிட்டீர்கள். பாராட்டுகள்! பயணத்தில் தங்களோடு கூடவே பயணித்தது போன்ற உணர்வை உண்டாக்கிவிட்டீர்கள். நன்றியும் வாழ்த்துகளும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 12. நடமாடும் கவிதைக்கு வெள்ளிப் பாதசரம் - அருமையான பரிசு.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா கவித... கவித!....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 13. நீங்கள் மலையாளமும் அறிவீர்களா? அட! குழந்தைக்கு கொலுசு வாங்கிக்கொடுத்த செயல் நெகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் கொஞ்சம்! மனசிலாவும், சம்சாரிக்கான்பற்றில்லா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 14. குட்டிப் பாப்பா படங்கள் அழகு! அழகுக்கு அழகு சேர்க்க கொலுசளித்தது அழகோ அழகு!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   Delete
 15. குழந்தை அழகு, பயண அனுபவம் வாசகர்களையும் உடன் அழைத்து சென்றது போன்ற உணர்வை தந்தது .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமல்.

   Delete
 16. Hello
  nice trip and you shared beautifully your experiences. I am also planning for odisha trip. Can you share a ny info about local tour operators? Thank you

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....