ஞாயிறு, 19 நவம்பர், 2017

வரகூர் – ஒரு புகைப்பட உலா


சமீபத்திய தமிழகப் பயணத்தின் போது விஜயவாடாவிலிருந்து வந்திருந்த நண்பர் குடும்பம், நான் மற்றும் பெரியம்மா ஒரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு காவிரிக் கரையோர ஊர்கள் சிலவற்றுக்குச் சென்றிருந்தோம். நண்பர் குடும்பத்திற்கு குல தெய்வம் வரகூர் தான். வரகூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் வீடுகளுக்கு நடுவே அமைந்திருக்கும். கோவிலை அடுத்த சில வீடுகள் நண்பரின் குடும்பத்திற்குச் சொந்தமாக இருந்தவை. அவர் அப்பா காலத்திலேயே மற்ற உறவினர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டார் என்று சொல்லிக் கொண்டு வந்தார்.  திண்ணை வைத்த வீடுகள், சாலையின் நடுவே கிணறு, அதே தெருவில் இருக்கும் சிவன் கோவில் என பார்த்து வந்தேன்.





இக்கோவிலில் நடக்கும் உறியடி திருவிழா மிகவும் விசேஷமான ஒன்று. இந்த ஊரைச் சொந்த ஊராகக் கொண்ட பலரும், அச்சமயத்தில் இங்கே ஒன்று சேர்ந்து விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.  கோவிலைப் பார்த்துக் கொள்ளும் பட்டர் வீட்டில் தான் போய் இறங்கினோம். பழைய வீடு தான் என்றாலும், நிறைய புதிய விஷயங்கள் – தொலைக்காட்சியில் கூவிக் கூவி விற்கும் Table Mate உட்பட! அதுவும் இப்போது ஒண்ணு வாங்கினா இன்னுமொண்ணு இலவசம், கூடவே செல்ஃபோன் இலவசம்! வாங்கிட்டீங்களாஆஆஆ… ந்னு நம்ம இமான் அண்ணாச்சி கேட்டுட்டே இருக்காரே! சில்லென்று இருந்த கிராமத்து வீட்டில் தான் காலை உணவு – நாங்கள் கொண்டு போயிருந்த உணவை அங்கே வைத்து உண்டோம்.

வரகூர் சென்றபோது பார்த்த காட்சிகள், எடுத்த புகைப்படங்கள் சில இந்த ஞாயிறில் புகைப்பட உலாவாக…..


கோவில் வெளிப்புறத்தில் சின்னத் திருவடி - ஹனுமான்....


கோவில் வெளிப்புறத்தில் பெரிய திருவடி - கருடன்....


பிரதான கோபுரச் சிற்பங்கள்.... 


பிரதான கோபுரச் சிற்பங்கள்.... 


பிரதான கோபுரச் சிற்பங்கள்.... 


உட்புற கோபுரச் சிற்பங்கள்.... 


பிரதான கோபுரமும் நுழைவாயிலும்...


கோவிலின் உள்ளே ஒரு ஓவியம்.... 


சிவன் கோவில் வளாகம்....... 


சிவன் கோவில் உள்ளே ஒரு செடியில் இருந்த காய்....


அதே செடியின் காய்கள்.... 


அந்தச் செடியில் பூக்கும் பூ ஒன்று!


சிவன் கோவில் கோபுரத்தில் நம்மாளு!


பிரதான தெரு - வரகூர் - புதுப்பித்த வீடுகள் .... 


திண்ணை வைத்த பழைய வீடு ஒன்று - பாழடைந்த நிலையில்....  

என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! 

நாளை மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

42 கருத்துகள்:

  1. ஒரு காலத்தில் எங்கள் வீட்டில் கூட திண்ணை இருந்தது ஐயா
    இன்று எல்லாமே போய்விட்டது
    படங்கள் அழகோ அழகு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா உங்கள் வீட்டில் திண்ணை இருந்ததா.... மகிழ்ச்சி. எங்கள் உறவுக்காரர்களின் கிராமத்து வீடுகளில் இப்படி பார்த்ததுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தமிழ் மணம் முதலாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன்ஜி!

      நீக்கு
  4. வண்ணமிகு கோவில், சிற்பங்கள். இவற்றைப் பார்த்தால் சமீபத்தில் வண்ணமடித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. பழமை மாறாத கோவில்கள்தான் அழகு என்று எனக்குத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழமை மாறாத கோவில்களில் இருக்கும் அழகு, இப்போதைய கோவில்களில் இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. கிராமத்துக் கவிதையாய் படங்கள்.. அழகு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  6. Thinnai veedu yaarume marakka mudiyathu. Nostalgic moments.
    Thank you.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜானகி ராமன் ஜி!

      நீக்கு
  7. படங்கள் பளிச் என்று நேரில் பார்ப்பது போல இருக்கிறது குட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  8. படங்கள் மிக அழகு! கலர்ஃபுல்!!! இப்போதெல்லாம் இப்படிக் கலர் கலராக வண்ணம் அடித்திருக்காங்க. மைலை கோயில் கோபுரம் கூட அப்படித்தான்....அது மட்டுமில்லை பல கோயில்களும் கோபுரங்களும் இப்படி இருப்பது ஏதோ மேக்கப் போட்டது போல் இருக்கிறது போல் என் மனதிற்குப் படும். ஒரு வேளை என் மனதிற்கு அப்படிப் படுதோ என்னவோ..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில்களும் கோபுரங்களும் இப்படி இருப்பது ஏதோ மேக்கப் போட்டது போல இருக்கிறது! :) சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  9. படங்கள் அனைத்தும் அருமை ஜி திண்ணை வீடுகள் இனி புகைப்படங்களில்தான் காண இயலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்ணை வீடுகளை படங்களில் மட்டுமே பார்க்க முடியும்! உண்மை தான். பல திண்ணை வீடுகள் இடிக்கப்பட்டு விட்டன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. வரகூர் இந்த அளவு மாறி விட்டதா? என் மகனுக்கு மொட்டை அடிப்பதற்கு சென்றதுதான் சமீபத்தில் செல்லவில்லை.

    மிகவும் சக்தி வாய்ந்த ப்ரார்த்தனை ஸ்தலம். நாராயண தீர்த்தர் இங்குதான் கிருஷ்ண லீலா தரங்கினி பாடினார். உங்கள் புகைப்படங்கள் வாயிலாக மீண்டும் அங்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி👍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறையவே மாற்றங்கள் தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களை இங்கே கண்டதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நடராஜன் வெங்கடராமன் ஜி!

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நடராஜன் வெங்கடராமன் ஜி!

      நீக்கு
  13. மிக அருமையான படங்கள். அந்தப் பூ கொள்ளை அழகு.. அதன் கயைப் பார்த்தால் முன்பு சாப்பிட்டிருக்கிறேனோ என்பதுபோல நினைவு வருது..

    ஆஞ்சனேயர் அழகு.

    திண்ணை வீடு பார்க்க நெஞ்சுக்குள் என்னமோ செய்கிறது... அக்காலத்தில் அத்திண்ணையில் எத்தனைபேர் இருந்து கதைபேசி மகிழ்ந்திருப்பார்கள்.. இன்று தேடுவாரில்லாமல்.... இப்படிப் பல திண்ணைகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திண்ணை வீடு பார்க்க நெஞ்சுக்குள் என்னமோ செய்கிறது....// எத்தனை பேர் அங்கே புழங்கி இருப்பார்கள், பல கதைகள் பேசி இருப்பார்கள், அப்படி இருந்த இடம் இப்போது கேட்பாரற்று இருக்கிறது என நினைக்கும்போது கொஞசம் அல்ல, நிறையவே வருத்தம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதிரா.

      நீக்கு
  14. படங்களையும் படங்களில் உள்ள சிற்பங்களையும், வீதியையும் ரசித்தேன். படத்தில் உள்ள செடியை எங்கள் அம்மா ஊரில் உள்ள வாரியில் பார்த்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  15. உங்கள கைவண்ணத்தில் அத்தனை படங்களும் பளிச்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  16. சிற்பங்களை ரசித்தேன். அந்தப் பழைய வீட்டையும் திண்ணையையும்தான். என் கிராமத்து நினைவுகளைக் கொண்டுவந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  17. படங்கள் எல்லாம் அழகு.
    அழகான திண்ணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  19. வண்ண வண்ண சிற்பங்கள்....

    அனைத்தும் மிக அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  20. படங்கள் அருமை. சிவன் கோவிலில் கண்ட காயினை உடைத்து பார்த்தால் அதிலிருக்கும் விதைகள் சிவலிங்கம் போல் காட்சியளிக்கும்ண்ணே. அடுத்த முறை பாருங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  21. படங்கள் அத்தனையும் மிக நன்றாக உள்ளன. மொபைலில் எடுக்கப்பட்டதா அல்லது கேமராவிலா?

    நான் சிறுவயதில் குடியிருந்த வீட்டில் திண்ணை இருந்தது. அதன்பின் பள்ளிப்படிப்பு முடிக்கையில் குடியிருந்த வீட்டிலும் இருவர் மட்டுமே அமரக்கூடிய ஒரு சிறு திண்ணை இருந்தது. இவை இரண்டும் சென்னையில். திண்ணையில் உட்கார்ந்து நண்பர்களோடு அரட்டை அடிக்கும் சுகமே தனிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் எனது டி.எஸ்.எல்.ஆர். கேமராவில் எடுக்கப்பட்டவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....