ஞாயிறு, 5 நவம்பர், 2017

திருவையாறு கோவில் ஓவியங்கள் – புகைப்பட உலா



ஐயாறப்பர் கோவில் என அழைக்கப்படும் திருவையாறு கோவிலுக்கு சமீபத்திய தமிழகப் பயணத்தின் போது சென்று வந்தேன். பெரிய கோவில், அழகிய சிற்பங்கள் தவிர நிறைய ஓவியங்களும் இருந்தன.  சில ஓவியங்கள் காலங்களைக் கடந்து இருக்கின்றன என்றாலும் பெரும்பாலானவை கவனிப்பின்றி, பராமரிப்பின்றி உருக்குலைந்து போய் இருக்கின்றதைப் பார்க்கும்போதே மனதில் வலி! இருக்கும் சில ஓவியங்களையாவது புகைப்படமாக ஆவணப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த ஓவியங்கள் அழியாமல் இருக்கும் என்பது அந்த ஐயாறப்பருக்கே வெளிச்சம்.


இயற்கை வண்ணங்கள் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் தவிர சிற்பங்களும் அங்கே உண்டு. அவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அங்கே கிடைத்த அனுபவங்கள் தனிப்பதிவாக பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு அங்கே இருந்த ஓவியங்களின் புகைப்படங்கள் மட்டும் இந்த ஞாயிறில் புகைப்படப் பகிர்வாக!






























என்ன நண்பர்களே, ஓவியங்களை ரசித்தீர்களா? கடைசி ஓவியம் மட்டும் சமீபத்திய ஓவியமாக இருக்கலாம்! ஓவியம்/புகைப்படங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாமே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

40 கருத்துகள்:

  1. புகைப்படங்களை ரசித்தேன். திருவையாறு கோவிலுக்கு என் பாத்து வயதில் சென்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சென்றது இப்போது தான் முதல் முறை...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மதுரையிலும் பொற்றாமரையைச் சுற்றிப் பழமையான நாயக்கர் காலத்து ஓவியங்கள் இருந்தன. வெகு சமீபத்தில் கோயிலில் திருப்பணி செய்கையில் அவற்றைத் தெரிந்தோ, தெரியாமலோ அழித்து விட்டனர்! :( புகைப்படங்கள் எடுத்து வைச்சுக்கலை! இப்போதிருக்கும் ஓவியங்கள் யாரோ கேரள ஓவியரால் வரையப் பட்டது. அந்த கதி இந்த ஓவியங்களுக்கும் நேராமல் இருக்கணும்! வேறென்ன சொல்ல முடியும்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல இடங்களிலும் இப்படி பராமரிப்பு இல்லாமல் இருப்பது வருத்தம் தரக்கூடிய விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  3. கண்ணப்ப நாயனாரின் வரலாற்றைக் கூறும் ஓவியம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அந்த ஓவியம் பிடித்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. >>> இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த ஓவியங்கள் அழியாமல் இருக்கும் என்பது அந்த ஐயாறப்பருக்கே வெளிச்சம். <<<

    கிழக்கு மற்றும் தெற்குப் பிரகாரங்களில் உள்ள ஓவியங்கள் இவை.. அந்த திருச்சுற்று நடையில் உபயோகமற்ற பொருட்களையும் போட்டு வைத்திருப்பார்கள்...

    பார்க்கும் போதெல்லாம் வருத்தம் தான் ஏற்படும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருப்பவை கொஞ்சமே. பல அழிந்திருக்கின்றன. நீங்கள் சொல்வது போல த்ட்டுமுட்டுச் சாமான்களும் போட்டு வைத்திருக்கிறார்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  5. ஓவியங்களும் அருமை உங்கள் புகைப்படங்களும் அழகு! இப்படிப் பல ஓவியங்களும் சிற்பங்களும் அழிந்து வருகின்றன. திருவையாறு சென்றதில்லை. செல்ல வேண்டும் என்ற அவா உண்டு.

    கோயில்களில் புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கின்றனரா வெங்கட்ஜி. நான் சென்ற கோயில்களில் எல்லாம் அனுமதி கேட்ட போது கேமராவைஉள்ளே எடுத்துச் செல்லக் கூடாது என்றும் புகைப்படம் எடுக்கக் கூடாது என்றும் சொன்னதால் கேட்கிறேன். ஆனால் பலர் மொபைல் கேமராவில் எடுப்பதைப் பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இப்போது தான் முதல் முறையாகச் சென்றேன். முடிந்தால் சென்று வாருங்கள்.

      கோவிலில் புகைப்படம் எடுக்க அனுமதி! :) இந்த கோவிலில் கிடைத்த அனுபவம் - தனிப்பதிவாக வெளி வரும் - விரைவில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. எங்கள் ஊரின் எதிர் கரையிலும், அம்மாவின் ஊருக்கு அருகிலும் இருப்பதால் திருவையாறு ஊருக்கும், கோயிலுக்கும் அடிக்கடி சென்று இருக்கிறேன். கோயிலிலுள்ள படங்களை பார்வையிட்டதோடு சரி. அங்குள்ள படங்களைப் பார்க்கும் போதெல்லாம், அந்தகாலத்து பெரிய எழுத்து நல்லதங்காள் கதை, விக்கிரமாதித்தன் கதை புத்தகங்களில் இருந்த படங்கள்தான் நினைவுக்கு வரும்.

    நீங்கள் எடுத்த வண்ண புகைப்படங்கள் ரொம்பவும் அருகில் இருந்து ரசிக்கும் உண்ர்வைத் தருகின்றன. ஆண்டி முருகன், ‘ஊனுக்கு ஊன்’ (கண்ணுக்கு கண்) இட்ட கண்ணப்பன், சைவக் குரவர் நால்வர் படங்கள் விவரங்கள் மட்டும் எனக்கு புரிகின்றன. - பதிவிற்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் அடிக்கடி சென்றிருக்கும் கோவில் என்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. அந்த கால ஓவியங்கள் சிறப்பு வாய்ந்தவை கவனம் எடுத்து பராமரிக்கலாம் ஏன் இப்படி அஜாக்கிரத்தையாக இருக்கிறார்கள் ? உண்மையில் உங்கள் கேமரா மிக அருமையானது உங்களை எங்களை எப்போதும் ரசிக்கவைக்கிறது அருமையான பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  9. இப்பொழுதுகூட பார்க்கலாம். நான் திருவையாறு போகும்போதெல்லாம் பார்த்துவருகிறேன். அருமையான கருவூலத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பார்த்ததும் மிகச் சமீபத்தில் தான் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. மிக அழகிய படங்கள்... கால பொக்கிசங்கள் இவை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  11. ஓவியங்கள் அருமை ஜி ! போட்டோக்ராபரின் நேர்த்தியும் அழகு ! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி!

      நீக்கு
  12. வண்ணமிகு ஓவியங்கள் ! அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  13. இங்கே சில ஓவியங்களை மைசூர் பாணி ஓவியங்கள் என்கின்றனர் அது போல் தெரிகிறது அந்தக் கால ஓவியங்கள் என்பதற்கு வாய் வார்த்தை தவிர சான்றுகள் உண்டா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைசூர் பாணி ஓவியங்கள் - புதுத் தகவல்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. ஓவியங்கள் நேர்த்தியாக உள்ளன எந்தக் கால மாக இருந்தால்தான் என்ன கும்பகோணம் ராமசாமிக் கோவில் சுற்றுச் சுவரில் ராமாயண்மே ஓவியங்களாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமாயண, மஹாபாரத காட்சிகள் ஓவியமாக - சில இடங்களில் பார்த்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  15. படங்கள் அருமை. பாராட்டுகள்! ஓவியங்கள் எல்லாம் தஞ்சை பாணியில் உள்ளனவே. எப்போது இவைகள் வரையப்பட்டன என்பது தெரிந்தால் இந்த ஓவியங்கள் பற்றி எழுத இருக்கும் தனிப் பதிவில் சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகப் பழமையானவை என்று மட்டுமே தெரிந்து கொள்ள முடிந்தது. கோவிலில் இருந்த பரபரப்பில்! [பிற்கு சொல்கிறேன்!] கோவில் விவரங்கள் சொல்பவர் யாருமில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  16. பதில்கள்
    1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  17. திரு. தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.( http://ilakkiyapayilagam.blogspot.in ) அவர்களுக்கு திருவையாறு ஓவியங்கள் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிகத் தகவல்களுக்கு மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  18. கோவில் உள்ள ஒவியங்கள் அழிந்தாலும் எதிர்காலத்தில் அந்த கோயிலின் ஒவியங்கள் எப்படி இருக்கும் என்பதை உங்கள் தளம் உள்ளவரைக்கும் அழியாமல் இருக்கும். சபாஷ் வெங்கட்.. உண்மையிலே பாராட்டுகிறேன் ஏதோ பாராட்டணும் என்று உதட்டளவில் பாராட்டவில்லை உள்ளத்தில் இருந்து என் பாராட்டுக்கள் உங்களை நோக்கி வருகின்றன.சிறு வயதில் இந்த மாதிரி படங்களை பார்த்து வரைவேன் அதனால் என்னவோ இதை பார்த்ததும் மிக சந்தோஷமாக இருக்கிறது


    சில சமயங்களில் நீங்கள் மனம் சோர்ந்து போய்விடுகிறீர்கள் ஆனால் ஒன்று சொல்லுகிறேன் மனம் சோர்ந்து போகாமல் இது போல தொடர்ந்து பதிவிடுங்கள் உங்கள் பதிவுகள் பொக்கிஷங்கள் கீப் இட் அப்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மனம் திறந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      சோர்வு - உண்மை தான்! அலுவலக சிக்கல்கள், வேலைகள் என பெரும்பாலான நேரம் அதற்கே சரியாக இருக்கிறது. பதிவுகள் எழுத முடிவதில்லை. அதை விட மற்றவர்கள் பதிவுகள் வாசிக்க முடிவதில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  19. எனது சொந்த ஊர் திருவையாறுதான் ஐயா
    தற்பொழுது தஞ்சையில்
    தங்கள் திருவையாறு சென்றது தெரிந்திருந்தால்,தங்களைச் சந்தித்திருப்பேன்
    படங்கள் அருமை அழகு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சை வந்து உங்களையும் முனைவர் ஐயாவையும் சந்திக்க விருப்பமுண்டு. இந்த முறையும் வர நினைத்தேன். அடுத்த முறை கட்டாயம் வருகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  20. திருவையாறு கோவிலுக்கு ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன். ஆனா, சித்திரம்லாம் பார்த்ததா நினைவில் இல்லைண்ணே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சென்றது இதுவே முதன் முறை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....