ஞாயிறு, 10 டிசம்பர், 2017

காவேரிக் கரையிருக்கு – புகைப்பட உலா


பல மாதங்களாக வரண்டு கிடந்த காவேரி ஆற்றைப் பார்த்துப் பார்த்து மனதில் ஆற்றாமை மட்டுமே. ஒவ்வொரு முறையும் ஒன்றாம் எண் பேருந்தில் திருவரங்கத்திலிருது போகும்போதும் வரும்போதும், வறண்டு கிடக்கும் காவேரி ஆற்றைப் பார்க்கும் போது, “எப்படி இருந்த ஆறு, இப்படி ஆகி விட்டதே” என்று தோன்றுவதுண்டு.  எப்போதாவது தண்ணீர் வரத்து இருந்துவிட்டால், தண்ணீர் இருக்கும் காவேரி பார்த்து மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி பொங்கும். 

சமீபத்தில் தமிழகம் சென்றபோது, காவேரியில் நீர் வரத்து இருக்க, மனதில் மகிழ்ச்சி. காவேரிக் கரையோரமாகச் சென்ற சில பயணங்களில் எடுத்த படங்கள் “காவேரிக் கரையிருக்கு….” புகைப்பட உலாவாக இந்த ஞாயிறில்! முதலாம் படம் தவிர மற்ற படங்கள் அனைத்துமே பயணத்தபடியே எடுத்தவை தான்.






























தந்திருக்கும் படங்களில் கூட காவேரி ஆறு பொங்கிக் கொண்டு ஓடும் காட்சி – கல்லணையிலிருந்து வெளிவரும்போது மட்டுமே! மற்ற இடங்களில் கொஞ்சமாவது தண்ணீர் இருக்கிறதே என்று மகிழ்ச்சி அடையும் அளவிற்கு வரண்டு கிடந்த காவேரி ஆறு பார்த்தாயிற்று!

என்ன நண்பர்களே, புகைப்பட உலாவினை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லியிலிருந்து….

30 கருத்துகள்:

  1. அருமையான படங்கள் அதுவும் பயணித்துக் கொண்டே எடுத்த படங்கள் வெகு அழகாக வந்திருக்கின்றன. ரசித்தேன் மிகவும்...அதுவும் வாத்துகள் கரையில் இருக்கும் படம் அட்டகாசம்....மிக் மிக அருமை...முதல் படம் மடை திறந்த வெள்ளம் குறைவாக இருந்தாலும் அழகு..நீர் இவ்வளவாவது இருக்கிறதே என்று மகிழ வேண்டியய்துதான்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரையில் இருப்பவை வாத்து போலத் தோன்றவில்லை - நீர் நிலை உயிரினங்கள் - அவ்வளவு தான்!

      பயணித்தபடி எடுத்ததில் கொஞ்சம் சொல்லிக்கொள்ளும்படி வந்தவை இங்கே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  2. பயணித்தபடியே எடுத்தபடம் என்பது நம்ப இயலவில்லை ஜி
    அத்தனை சரியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரளவுக்கு இருக்கிறது! சரியாக இருப்பதாகத் தெரியவில்லை ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. காவேரி ஆற்றில் தண்ணீர்... பார்த்ததும் கண்களில் ஆனந்தக் கண்ணீர். தண்ணீர் சுழித்து ஓடினால்தான் அது ஆறு. இல்லாவிட்டால் அதன்பெயர் வேறு! படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லாவிட்டால் அதன் பெயர் வேறு! உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  5. காவேரியில் தண்ணீரும் மணலும் பார்க்கவே மகிழ்ச்சி. புதைகுழிகளோ, முதலைகளோ இருக்காதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில இடங்களில் புதைகுழிகள் உண்டு - குறிப்பாக, முக்கொம்பு, கல்லணை பகுதிகளில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. நீரின்றி அமையாது உலகு. நீரிருந்தால் இவ்வுலகே அழகு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  7. உங்களுடைய படங்கள் வழக்கம் போல அருமை. நீங்கள் சற்று தாமதமாகத்தான் காவிரிக் கரையோரம் சென்று படம் எடுத்து இருப்பது போல் தெரிகிறது. இன்னும் சில நாட்கள் முன்பு சென்று இருந்தால், இரு கரையும் நிரம்பிய காவிரியைப் பார்த்து இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமாகத் தான் எடுத்தேன். அதனால் தான் தண்ணீர் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  8. என்றும் காவிரியில் நீரோட வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஜி. அப்படி இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. காவேரியும் கல்லணையும் மறக்க முடியாத சில நினைவுகளைத் தாங்கி வரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. அருமை. காவிரியில் தண்ணீர் என்பதே இனிமை. ஆடி ,ஓடி வரும் காவிரி,. மணலாவது விட்டு வைத்திருக்கிறார்களே. எப்படி அசங்காமல் படம் எடுத்தீர்கள். பிறந்த இடத்தில் எத்தனை மழை பெய்ததோ என்று யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதாரணமாக எடுக்கும்போதே நடுக்கம் வந்தால் படம் சரியாக வராது. இப்படி பயணித்தபடியே எடுக்கும் படங்களில் சில மட்டும், ஓரளவு சரியாக வரும் - அவை மட்டும் இங்கே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  12. ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்மகிழ்ச்சி மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  13. எங்களுக்கு எல்லாம் பொறுமையாக நின்று கொண்டு படம் எடுத்தாலே
    கலங்கித்தான் வருகிறது
    தங்களுக்கு மட்டும் பயணித்தபடி எடுத்தாலம் அருமையாய் வருகிறதே
    அருமை ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில படங்கள் - ஓரளவுக்கு சரியாக வந்த படங்கள் இவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  14. பயணித்துக்கொண்டே எடுத்த படங்கள் போல் தெரியவில்லை. மிக அருமை. காவிரியில் நீரோட்டம் இருப்பது மகிழ்ச்சி தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....