திங்கள், 12 பிப்ரவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – ராணிக் கிணறு – வாவ் சிற்பங்கள்



இரு மாநில பயணம் – பகுதி – 6

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


”அழகே அழகு.... தேவதை....”
ராணி கி வாவ் - பாடண்

சென்ற பகுதியில் மொதேராவில் அமைந்திருக்கும் சூரியனார் கோவில் பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். படிக்காதவர்கள் மேலே குறிப்பிட்ட படி Drop Down Menu மூலம் பதிவுகளைப் படிக்கலாம்! சூரியனார் கோவிலைப் பார்த்த பிறகு நாங்கள் புறப்பட்டு அடுத்ததாய் சென்ற இடம் பாடண் – பட்டணம் என்பதைத் தான் பாடண் என்று குஜராத்தி மொழியில் சொல்கிறார்கள். இந்த பாடண்-இல் என்ன இருக்கிறது – சோலங்கி மாஹாராஜாவான முதலாம் பீமதேவரின் நினைவாக ராணி உதயமதி அவர்கள் அமைத்த ஒரு கிணறு தான் இந்த ராணி கி வாவ் என அழைக்கப்படும் கிணறு.



”தரைக்குக் கீழே பல அடுக்குகளில் கிணறு”

ராணி கி வாவ் - பாடண்


மறைந்த தனது கணவரின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த ராணிக்கு ஒரு விஷயம் தோன்றியது. அந்தப் பகுதியில் தண்ணீர் பிரச்சனை உண்டு என்பது தான் அந்த விஷயம். மழை நீரை சேமிக்க வழி செய்வதோடு, தனது கணவரின் நினைவாகவும் இப்படி ஒரு கிணற்றைக் கட்டி வைத்தால் பல காலங்களுக்கு இது மக்களுக்குப் பயன்படும், அரசரின் பெயரும் நினைவில் இருக்கும் எனத் தோன்ற, இப்படி ஒரு அற்புதமான கிணற்றை உருவாக்கிவிட்டார். கூடவே பராமரிக்கப்பட வேண்டுமே என்ற எண்ணத்தோடு, இறை வடிவங்களையும் இதிலே சிலைகளாக வடிக்க, சுத்தமாகவும் பரிமாரிப்பார்கள் என்ற எண்ணம் தோன்ற அற்புதமான சிற்பங்கள் நமக்குக் காணக் கிடைத்தன.  தங்கள் நினைவு என்றென்றும் நிலைக்கும்படி இருக்க இப்படியான விஷயங்களைச் செய்து வைத்திருக்கிறார்கள் அக்காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள் – இப்போதைய ஆட்சியாளர்கள் எப்படி என்பதைச் சொல்லத் தேவையில்லை!


”நுழைவுச் சீட்டு....”

ராணி கி வாவ் - பாடண்


யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட்ட சின்னம் என அறிவிக்கப்பட்ட இந்த இடத்திற்குத் தான் நாங்கள் மொதேரா சூரியனார் கோவிலிலிருந்து சென்றடைந்தோம். மாலை ஆறு மணிக்கு பூட்டி விடுவார்கள் என்பதால் வேகமாகச் சென்றடைந்தோம். பழமையான ஊர் – கிராமம் என்று கூடச் சொல்லலாம்! நல்ல வேளையாக நாங்கள் சென்றடைந்தபோது திறந்திருந்தது. Archaeological Survey of India-வின் பராமரிப்பில் இருக்கும் இந்த இடத்திற்கு உள்ளே சென்று பார்க்க கட்டணம் உண்டு! உரிய கட்டணம் – இந்தியர்கள் எனில் ஒருவருக்கு 15 ரூபாய் [படம்!].  கேமராவிற்கும் கட்டணம் உண்டு. நுழைவுச் சீட்டைச் சரிபார்த்த பிறகு நம்மை உள்ளே அனுமதிக்கிறார்கள். உள்ளே நுழைந்தால்…..


”நுழைவு வாயிலிலிருந்து பார்க்கும்போது - தோட்டம்....”

ராணி கி வாவ் - பாடண்


மிகப்பெரிய மைதானம் – பச்சைப்பசேலன புல்வெளியோடு ஒரு மைதானம் நம்மை வரவேற்கிறது. இந்த மைதானத்தினைப் பார்ப்பதற்காகவா இவ்வளவு தூரம் வந்தோம் என நினைத்துவிடக்கூடாது. நாம் பார்க்கப் போகும் இடம் பூமிக்கு அடியில் அல்லவா! புல்வெளியில் அமைந்திருக்கும் பாதைகள் வழியே முன்னேறிச் சென்றால் ஒரு அற்புதமான காட்சி நம் முன்னே விரிகிறது. நாம் காணும் காட்சி – சமதளத்திலிருந்து கீழே பல அடுக்குகளில் சிற்பங்களோடு தண்ணீர் சேமிக்க ஒரு கிணறும் இருப்பது கீழே செல்லச் செல்லத் தான் நமக்குப் புலப்படுகிறது. ஒவ்வொரு படியாக கீழே இறங்கும்போது பக்கச் சுவர்களில் இருக்கும் ஓவியங்களைப் பார்த்தபடியே செல்ல வேண்டும். தசாவதாரம் – விஷ்ணுவின் பத்து அவதாரச் சிலைகள், சோலா ஷ்ரிங்கார் எனப்படும் 16 வித அலங்காரச் சிலைகள் என கண்ணைக்கவரும் பல சிற்பங்களை இங்கே வடித்து வைத்திருக்கிறார்கள்.


”சிற்பங்கள் - ஒரு கிட்டப் பார்வை....”

ராணி கி வாவ் - பாடண்


ஒவ்வொரு சிற்பத்தையும் பார்த்தபடியே செல்வது உத்தமம். தூண்களில் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள், சிறு சிறு வடிவங்கள், ஒரு வரிசைக்கும் அடுத்த வரிசைக்கும் இடைப்பட்ட இடங்களில் இருக்கும் கற்தோரணங்கள் என அத்தனை கலைநுணுக்கத்தோடு சிற்பங்களை வடிவமைத்த அந்தக் காலச் சிற்பிகளுக்கு எத்தனை பொருள் கொடுத்தாலும் குறைவு தான். இந்தச் சிற்பங்களை வடிவமைக்க எத்தனை உழைத்திருப்பார்கள், எத்தனை நாட்கள் ஆகி இருக்கும் என்ற யோசனையோடு ஒவ்வொரு இடத்தினையும் ரசித்துப் பார்த்தபடியே புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டிருந்தேன். நான் ஒரு பக்கம் எடுத்துக் கொண்டிருக்க, நண்பர் பிரமோத் அவருக்குப் பிடித்த இடங்களை அவரது கேமராவில் சுட்டுக் கொண்டிருந்தார்.


”எதை எடுப்பது, எதை விடுப்பது - திகைத்து ரசித்தபோது....”

ராணி கி வாவ் - பாடண்


ஒரு பக்கத்திலிருந்து படிகள் வழியே கீழே இறங்கிச் செல்ல தரையிலிருந்து வெகு கீழே சென்ற பிறகு தான் கிணறு உங்களுக்குப் புலப்படும் என்றாலும், அடுத்த பகுதியிலிருந்து மேலிருந்தே கிணறு புலப்படும் – ஆனால் படிக்கட்டுகள் கிடையாது என்பதால் கிணறும் கிணற்றின் சுவர்களில் இருக்கும் அழகிய சிற்பங்களும் மட்டுமே பார்க்க முடியும். மற்ற பக்கத்திலிருந்து படிக்கட்டுகள் வழியே கீழே இறங்கிச்சென்று பார்க்க நமக்குக் கிடைக்கும் காட்சி அற்புதமானது.  ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு விதத்தில் அழகு என்பதால் அதன் அழகில் மயங்கி அங்கேயே நின்று விட நேர்ந்தது. அனைத்து சிற்பங்களின் எழிலையும் பார்த்து, அணுஅணுவாக ரசிக்க உங்களுக்கு விருப்பம் இருந்தால் இங்கேயே சில நாட்கள் தங்கி தினம் தினம் இங்கே வரலாம். ரசிக்கலாம். 


”குதிரையில் அமர்ந்திருக்கும் வீரருக்கு பணிவிடை....”

ராணி கி வாவ் - பாடண்


இந்த இடத்தில் இருந்த சிற்பங்கள் குறித்த ஒரு கட்டுரையும், நான் எடுத்த படங்களும் ஏற்கனவே ஹாலிடே நியூஸ் மாத இதழில் வெளிவந்தது – எனது வலைப்பூவிலும் சிற்பங்கள் குறித்து எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம் – அக்கட்டுரைகளைப் படிக்க விருப்பமிருந்தால் கீழே இருக்கும் சுட்டிகள் மூலம் படிக்கலாம்…..



முதல் சுட்டியிலும் புகைப்படங்கள் உண்டு. மேலும் சில புகைப்படங்கள் கீழே....


”தரைத் தளத்திலிருந்து பார்க்கும்போது....”

ராணி கி வாவ் - பாடண்



”அடுக்கடுக்காய் சிற்பங்கள்....”

ராணி கி வாவ் - பாடண்



”நுணுக்கமான வேலைப்பாடுடன் தூண்கள்....”

ராணி கி வாவ் - பாடண்



”நாந்தேன்....”

ராணி கி வாவ் - பாடண்



”சிற்பங்கள்....”

ராணி கி வாவ் - பாடண்






”சிற்பங்கள்....”


ராணி கி வாவ் - பாடண்




”இரு சுவர்களையும் இணைக்கும் தூண்கள்....”


ராணி கி வாவ் - பாடண்




”அழிவின் விளிம்பில் சில சிற்பங்கள்....”


ராணி கி வாவ் - பாடண்




”சிற்பங்கள்....”


ராணி கி வாவ் - பாடண்




”நான்கு அடுக்குகள் இதில் தெரிகிறது.... இன்னும் உண்டு”


ராணி கி வாவ் - பாடண்




”தரைத்தளத்திலிருந்து....”


ராணி கி வாவ் - பாடண்




”தரைத்தளத்திலிருந்து....”



ராணி கி வாவ் - பாடண்




”கிணறு - மேல்புறத்திலிருந்து....”



ராணி கி வாவ் - பாடண்




”தரைத்தளத்திலிருந்து....”




ராணி கி வாவ் - பாடண்




”தரைத்தளத்திலிருந்து....”




ராணி கி வாவ் - பாடண்




”சிற்பங்கள்....”




ராணி கி வாவ் - பாடண்




”சிற்பம் ஒன்றின் கிட்டப் பார்வை....”




ராணி கி வாவ் - பாடண்




”சிற்பங்கள்....”




ராணி கி வாவ் - பாடண்







”தூண்களில் வேலைப்பாடுகள்....”




ராணி கி வாவ் - பாடண் 



”மீண்டும் ரசிக்க....”




ராணி கி வாவ் - பாடண்



”மரங்கொத்தியே மரங்கொத்தியே....”

ராணி கி வாவ் - பாடண்


சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே இருந்ததில் எவ்வளவு நேரம் போனது என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை. இருட்டத் துவங்கி இருந்தது. விரைவில் மூடி விடுவார்கள் என்பதால் மனதே இல்லாமல் சிற்பங்களை விட்டு மேலே வந்தோம். புல்வெளியில் சிறிது நேரம் அமர்ந்து அங்கே இருந்த காட்சிகளில் இலயித்திருந்தோம். பக்கத்திலே ஒரு மரங்கொத்திப் பறவை அமர்ந்திருக்க அதனையும் படம் பிடித்துக் கொண்டோம்.  சில நிமிடங்கள் அங்கே அமர்ந்திருந்த பிறகு காவலாளி ஒருவர் எல்லோரையும் புறப்படச் சொல்ல, மெதுவாக மனமே இல்லாமல் அங்கிருந்து புறப்பட்டோம்.  அடுத்ததாய் என்ன செய்தோம் என்பதை வரும் பதிவில் சொல்கிறேன்.  

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

18 கருத்துகள்:

  1. என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் பதிவினைக் கண்டேன். தரைக்குக் கீழ் கிணறு. சிற்பங்களைப் பார்த்தபோது பேலூர், ஹலேபேட், சோம்நாதபூர் நினைவிற்கு வந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு வார வெளியூர் பயணம் - மகிழ்ச்சி ஐயா. எங்கே சென்று வந்தீர்கள்?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  2. ராணி கி வாவ்.....wow..


    எத்தகைய கலை நுணுக்கம்...

    கண் கொள்ளா காட்சிகள்..

    ஒவ்வொரு படங்களும் அவ்விடத்தின் அழகை ஆராதிக்கிறது...

    ஒருமுறை சென்று நேரில் காண வேண்டிய அழகு பெட்டகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரில் காண வேண்டிய அழகு பெட்டகம் - உண்மை. முடிந்தால் சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  3. படங்கள் அனைத்தும் அருமை. படிக்கும்போதே முன்பே உங்கள் தளத்தில் வாசித்த நினைவு வந்தது. தனக்குத் தானே சிலை வைத்துக்கொள்வதைவிட, இந்த மாதிரி ஒன்றைச் செய்தால், காலா காலத்துக்கும் அது பெயரைச் சொல்லிக்கொண்டு நிற்கும், மக்களுக்கும் உபயோகம்.

    இதுல தண்ணீர் எடுப்பது பிராக்டிகலாத் தெரியலையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்வதை விட - உண்மை....

      தண்ணீர் எடுக்க வழி இருந்திருக்கலாம் - இப்போது அவை இல்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. அகமதாபாத் அருகே "Adalaj" என்ற இடத்தில் இதேபோல் அற்புதமான படிக்கிணற்றினை காணும் வாய்ப்பு கிட்டியது. அருமையான கலைக்கிணறுதான். ஆனால் நம் மாக்கள் தண்ணீரினுள் சில்லறைகளை வீசி நாணய சேமிப்புக் கிடங்கு ஆக்கி இருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடலாஜ் கி வாவ்.... அந்த இடத்திற்கு நானும் சென்றிருந்தேன். அதை விட இந்த ராணி கி வாவ் பல மடங்கு அதிக அழகு.....

      நாணய சேமிப்புக் கிடங்கு.... உண்மை தான். நம் மக்களை என்ன சொல்ல....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    அற்புதமான கலை பொக்கிஷங்கள். ஒவ்வொன்றும் ரசிப்பு தன்மையடன் ரசிக்க முடிந்தது. பெயரை பார்த்தவுடனே இதை உங்கள் தளத்தில் ஏற்கனவே ரசித்த நினைவு வந்தது. நீங்களும் குறிப்பிட்டு கூறி விட்டீர்கள்.ஆனால் எவ்வளவு தடவை பார்த்தாலும் அலுக்காத சிற்பங்கள். நேர்த்தியான கலைகளை அழகாய் படமெடுத்து பதிவிட்டமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு தடவை பார்த்தாலும் அலுக்காத சிற்பங்கள் - உண்மை தான். நேரம் போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  6. வெங்கட்ஜி!!! பிரமித்துப் போனேன்....இத்தனையும் பார்க்கவே ஒருநாள் போதாது போல இருக்கே!!! அப்படியும் நீங்கள் இத்தனைப் படங்கள் எடுத்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஜி. கண்ணிற்கும் விருந்து....கேமராவிற்கும் விருந்து....!!!

    ஹாலிடே ந்யூஸில் ராணி கி வாவ் வந்தது தெரியும் ஜி!!! நெட்டில் கூட செந்தில் சகோவின் சுற்றுலா தளத்தில்பார்த்த நினைவு..சரியா என்று தெரியவில்லை...

    ஒவ்வொன்றும் எவ்வளவு அழகாக இருக்கு!!!! ஹையோ....வெகு அழகு ஜி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நாள் போதாது போல இருக்கே - நிச்சயம் போதாது......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. உங்கள் தளத்திலும் வந்தது நினைவு இருக்கு ஜி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் கட்டுரை பற்றியும் பகிர்ந்திருக்கிறேன் - சுட்டி இப்பதிவிலும் இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  8. பார்க்க ஆவலைத்தூண்டும் இடம், ஆவலைக் கிளறிவிடும் புகைப்படங்கள். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் தான் ஸ்ரீராம். வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. அழகான படங்கள். முன்பே பார்த்து இருக்கிறேன் நீங்கள் சுட்டிக் கொடுத்த பதிவை.
    காலத்தில் அழியாத காவிய சிற்பங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலத்தில் அழியாத காவிய சிற்பங்கள் - அழியக்கூடாததும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....