ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

என்னன்னு சொல்லுங்க – புகைப்பட புதிர் விடைகள்




நேற்றைய பதிவில் மூன்றாவது புகைப்படப் புதிராக ஐந்து படங்களை வெளியிட்டு இருந்தேன். யார் யார் பதிலை சரியாச் சொன்னாங்கன்னு சொல்லப் போறதில்லை! ஆனா சரியான பதில்களை கீழே தந்திருக்கிறேன். வாங்க, நேற்று பகிர்ந்த படங்கள் என்னன்னு பார்க்கலாம்…


படம் – 1


படத்திற்கான விளக்கம்: ஹரியானாவின் சூரஜ்குண்ட் பகுதியில் ஒவ்வொரு வருடமும் சூரஜ்குண்ட் மேளா நடக்கும். இந்த வருடத்தின் மேளாவின் போது எடுத்தது தான் இந்தப் படம். இந்த வருடம் சிறப்பு மாநிலமாக உத்திரப் பிரதேசம் மாநிலமும் சில வெளிநாடுகளிலிருந்தும் கலைஞர்களும் வியாபாரிகளும் வந்திருந்தார்கள். வெளி நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு குழுவின் நடன நிகழ்ச்சியின் போது எடுத்த படம் தான் இது. நடனத்தின் வேறு ஒரு காட்சி கீழே.


இந்த நடனத்தின் பெயர் Tanoura.  Sufi Whirling என்ற பெயரிலும் இந்த நடனத்தினை அழைக்கிறார்கள். நடனத்தின் போது அணிந்து கொள்ளும் கீழாடையின் பெயர் கூட Tanoura தான். மிகவும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அதைச் சுற்றிச் சுற்றி ஆடும்போது நமக்கே தலைசுற்றுவது போன்ற ஒரு உணர்வு.  நடனம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கூகிள் பாபாவின் துணையை நாடலாம்! நானும் ஒரு காணொளி எடுத்து வைத்திருக்கிறேன் – பிரிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.


படம் – 2

படத்திற்கான விளக்கம்: வேற ஒண்ணும் இல்லீங்க – இது நம்ம ஊர் பஞ்சு மிட்டாய் தான். கூடவே தில்லி அப்பளமும் தொங்க விட்டுருக்கு! தொலைதூரத்திலிருந்து பார்க்கும்போதே “அங்கே தின்பண்டம் இருக்குடோய்!” என குழந்தைகளை/பெரியவர்களை ஈர்க்க ஒரு யுக்தி! அவ்வளவு தான்.  இந்த பஞ்சு மிட்டாய்க்கு ஹிந்தியில் என்ன பெயர் தெரியுமா?  “Bபுடியா கா Bபால்!” அதாவது கிழவியின் தலைமுடி!


படம் – 3

படத்திற்கான விளக்கம்: டான் படத்தில் அமிதாப் மற்றும் ஜீனத் அமன் பாடல் – “காய்கே பான் Bபனாரஸ் வாலா” பாடல் மிகவும் பிரபலமான பாடல். எல்லோருமே பார்த்திருக்கக் கூடும் இல்லையா? அந்த Bபனாரஸி பான் படம் தான் இது!  பாடல் ரசிக்க நினைத்தால் இங்கே ரசிக்கலாம்!


படம் – 4

படத்திற்கான விளக்கம்: அலுவலகங்களில் பயன்படும் ஒரு பொருள் அரக்கு – ஹிந்தியில் லாக் என்றழைக்கிறார்கள்.  அந்த லாக் வைத்து வளையல்கள் செய்வது ஹைதை மற்றும் வடக்கே இருக்கும் பழக்கம். நிறைய விதங்களில் இந்த லாக் வளையல்கள் கிடைக்கின்றன.  இப்போது இன்னும் மாடல்கள் வந்து விட்டன.  அப்படியான லாக் வளையல்கள் தான் இவை – இவ்வளவு பெரிது பெரிதாய் போட்டுக்கொள்வது தான் ஃபேஷன்! தில்லி பெண்கள் காதில் போட்டுக்கொள்ளும் பெரிய பெரிய தொங்கட்டான் பார்க்கும்போது நம்ம ஊர் பாம்படப் பாட்டிகள் தான் நினைவுக்கு வருகிறார்கள்!


படம் – 5

படத்திற்கான விளக்கம்: சத்ரபதி ஷிவாஜியின் பிறந்த நாளான 19 ஃபிப்ரவரி அன்று பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் மஹாராஷ்ட்ரா முழுவதுமே அமர்க்களமாக இருக்கும். தலைநகர் தில்லியிலும் இந்த முறை கொண்டாட்டங்கள் இருந்தன. என்னுடைய பதிவு ஒன்றிலும் படங்கள் மற்றும் காணொளிகளை இணைத்திருந்தேன் – [ஷிவ் ஜெயந்தி – சத்ரபதி ஷிவாஜி – புகைப்பட உலா] அந்த கொண்டாட்டத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் தான் இவை.  டோல் என்ற பெரிய மேளம் கூடவே இந்த கருவியையும் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கருவியின் பெயர் தாஷா – பயிற்சி முடிந்த பின் தலைகீழாக வைத்திருக்கிறார்கள்!

என்ன நண்பர்களே, புகைப்படங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டீர்களா?  வேறொரு புகைப்படப் புதிர் பதிவில் விரைவில் சந்திப்போம்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

10 கருத்துகள்:

  1. அங்க எழுதின பதில்களை வெளியிட்டிருக்கலாமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு Schedule செய்து வைத்திருந்தேன். வெளியே சென்றிருந்ததால் புதிர் பதிவின் கருத்துகள் வெளியிடுவதில் தாமதம்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. நல்ல தகவல்கள் ஜி...என்ன என்று அறிய முடிந்தது...

    ரெண்டுதான் ஓகேயாச்சு...பஞ்சு மிட்டாய் லாஸ்ட் கொட்டு..அன்னிக்கு நீங்க கொடுத்திருந்த காணொளி கொஞ்சம் தான் பாக்க முடிஞ்சுது ....முழுவதும் நெட் பிரச்சனையால் வரலை...ஜி

    இப்படி நிறைய புதிட் போடுங்க ஜி...நிறைய தெரிஞ்சுக்க...நினைவுத்திறனை மேம்படுத்தவுன் உதவும் ஜி

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்படி நிறைய புதிர் போடுங்க!// நேரமும் படங்களும் இருந்தால் நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. ஒன்றிரண்டு சரியாய்ச் சொல்லியிருக்கேன் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. நான் விடைகள் எல்லாம் சரியாக சொல்லி விட்டேன்.
    மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகள் மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....