எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, March 8, 2018

அடுத்த புகைப்பட புதிர் – ஐந்து படங்கள்புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு இருப்பதில் என்ன பலன். நான் எடுக்கும் புகைப்படங்களை மற்றவர்களும் ரசிக்கத் தருவதில் எனக்கும் மகிழ்ச்சி.  அப்படி சில புகைப்படங்கள் எடுத்த எனக்கு அவை என்ன என்று தெரியும் என்றாலும், மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள இப்படி ஒரு புகைப்படப் புதிர்!  

சென்ற வாரத்தில் வெளியிட்ட புதிருக்கு இருந்த வரவேற்பு குறைவு தான் என்றாலும், இந்த வாரமும் வெளியிடுகிறேன். பதில் யார் யார் சொல்லுகிறார்கள் எனப் பார்க்கலாம்…. படங்கள் இங்கே….  புதிர்களுக்கான விடைகள் நாளை இரவு 09.00 மணிக்கு தனிப் பதிவாக வெளி வரும். அதுவரை கருத்துரைகள் மட்டுறுத்தப்படும்! பிறகு வழக்கம் போல மட்டுறுத்தலை எடுத்து விடலாம்! இதோ படங்கள்!


படம்-1: அலங்கரிக்கப்பட்ட இந்தப் பொருள் என்ன?


படம்-2: அலங்கரிக்கப்பட்ட இந்தப் பொருள் என்ன?


படம்-3: அழகிய வடிவம் தானே இது? இது என்ன?


படம்-4: இந்தக் கலைஞர் என்ன செய்கிறார்? இந்தக் கலைவடிவம் என்ன?


படம்-5: அட பளபளன்னு மின்னுதே! இது என்ன?

சொல்லுங்க… விடை சொல்லுங்க!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

28 comments:

 1. எல்லாமே நல்ல ரசனையுள்ளவர்கள் செய்து ரசனையுள்ள மனிதரால் படமாக்கப்பட்டிருப்பது மட்டும் உறுதி

  ReplyDelete
  Replies
  1. ரசனையுள்ளவர்கள் செய்தது - மிகச் சரி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.

   Delete
 2. 1) பெண்கள் தலையில் வைத்துக்கொள்ளும் ஹேர் பேண்ட். அல்லது பாத்திரம் தேய்க்கும் ஸ்க்ரப் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கிறது!!

  2) வடநாட்டில் தலையணை போல டீபாய் மெலோ, படுக்கையில வைத்துக்கொள்ளும் சிறிய ரக தலையணைகள். அல்லது தலையில் அல்லது மூக்கிலோ, காதிலோ போட்டுக்கொள்ளும் ஆபரணம் வரிசையாக் குத்தி வைக்கப்பட்டுள்ளது!


  3) அகல் அல்லது அலங்கார விளக்கு.

  4) அவர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. (ஏதோ மற்றவை எல்லாம் நன்றாகத் தெரிந்து விட்டாற்போல்!!!) சிக்கும் இல்லை.. நூல்கள் நேராகத்துடன் இருக்கின்றன... ராக்கியில் தங்க முலாம் பூசாறார்!


  5) அலங்கார விளக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஹேர் பேண்ட் - பலரும் சொல்லி இருக்கிறார்கள்! பாத்திரம் தேய்க்கும் ஸ்க்ரப் - வித்தியாசமான சிந்தனை! :)

   அனைத்துப் படங்களுக்கான உங்கள் பதில்கள் கண்டு மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. Replies
  1. இல்லை தமிழ் பையன். விடைகள் இப்போது தான் தனிப்பதிவாக வெளியிட்டு இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 4. Replies
  1. தலைப்பாகை அல்ல தொப்பி! மற்றதும் ஓரளவுக்கு சரி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. முதல் படம் மண்பானை வைக்க அல்லது தலையில் வைக்க அழகிய சும்மாடு.
  இரண்டாவது முரசு போன்ற வாத்திய கருவியின் அழகிய கவர்.
  மூன்றாவது மெழுவத்தி அல்லது சின்ன மின்சார பல்பு மாட்டும் அழகிய ஸ்டாண்டு.
  சின்ன அகலும் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

  நாங்காவது திரட் ஒர்க் செய்கிறார். நூலை துணியில் ஒட்டுகிறார்.

  மட்டை தேங்காய் பூஜைக்கு இப்படி அலங்கரித்து கொடுக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல முயற்சிம்மா... விடைகள் வெளியிட்டு இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 6. ரசனையான படங்கள். விடைக்காகக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. விடைகள் தனிப்பதிவாக வெளியிட்டு இருக்கிறேன் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 7. 1 குஷன்

  2.தலைபாகை

  3. CANDLE HOLDER

  ௪.மதுபானி ஓவியம்

  5.தாமரை போன்ற அலங்கார விளக்கு...

  ReplyDelete
  Replies
  1. நல்ல முயற்சி. பாராட்டுகள். விடைகள் தனிப்பதிவாக வெளியிட்டு இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 8. பதில் கரெக்க்ட்டாச் சொல்ல தெரியவில்லை பட் அத்தனையும் அழகு...

  ReplyDelete
  Replies
  1. விடைகள் தனிப்பதிவாக வெளியிட்டு இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 9. 1. க்ரோஷியோ வேலைப்பாடு...டேபிள் MAT

  2. (ஹிமாச்சல் ப்ரதேஷில் அதிகம் காணப்படும்) தொப்பி

  3 ஒன்றிணைக்கப்பட்ட டிசைனில் அகல் விளக்குகள்..என்றுதான் தோன்றுகிறது..அழகான டிசைன்..இது கொஞ்சம் வித்தியாசமான டிசைனில் அதாவது ரவுண்டாக எனக்கு முன்பு கிடைத்தது அப்போது அதில் நான் சட்னி, ஊறுகாய்கள் போட்டு கெட்டுகெதரில் பயன்படுத்தினேன். அப்புறம் நான்கு இலைகள் இப்படி இணைக்கப்பட்டு வந்ததில் நான் விளக்கும் ஏற்றினேன்...அப்புறம் அதில் சந்தனம், குங்குமம், விபூதி என்று போட்டும் பயன்படுத்தினேன்...

  4. ஆரி வேலைப்பாடு என்று முதலில் நினைத்தேன்...ஆனால் இல்லை... இது ஃபேப்ரிக் பெயிண்டிங்க் போன்று இருக்கு மெட்டல் ஆர்ட் போல....

  5. குங்குமச் சிமிழ் போன்று இருந்தாலும்...மேலே ஒரு வளையம் இருப்பதால் இது கீ செயின் அல்லது தொங்கவிடப்படும் அலங்காரப் பொருள்...மேலே அல்லது கிறித்துமஸ் மரம் என்று...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. விடைகள் இப்போது வெளியிட்டு இருக்கிறேன். இரண்டாவது தொப்பி சரி - ஆனால் குஜராத் தொப்பி! ஹிமாச்சலத் தொப்பி அல்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 10. இரண்டாவது புகைப்படம் மணமகன் அணியும் குல்லான்னு நினைக்குறேன்..

  மூன்றாவது புகைப்படம் அலங்கார விளக்குன்னு நினைக்குறேன். மத்த படங்கள் பத்தி யோசிக்க முடில

  ReplyDelete
  Replies
  1. நல்ல முயற்சி ராஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 11. 5. இந்தப் படம் தொங்கும் அலங்கார விளக்கு போலவும் இருக்கு....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அலங்கார விளக்கு! :) அலங்காரத் தோரணம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 12. 1.Hair band
  2.தலைப்பாகை அல்லது அலங்கார குஷன்
  3.வளையங்கள் இருப்பதால் ஏதாவது பொருள் மாட்டி வைக்க உதவும் ஸ்டான்ட் அல்லது ஹாங்கர்.
  4.Fabric painting / Aari work
  5.வட இந்தியாவில் பூஜையில் வைக்கப்படும் அலங்கரிக்கப்பட்ட தேங்காய்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ்....

   Delete
 13. படங்கள் ரசிக்க வைக்கிறது! விடைகள் தான் தெரியவில்லை!

  ReplyDelete
  Replies
  1. விடைகள் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 14. அட! இதை நான் பார்க்கவே இல்லை. (ம.சா. பார்க்கலையோ உளறிக்கொட்டாமல் தப்பிச்சே!) ஹிஹி, அது அப்படித் தான் மனசாட்சி நேரம், காலம் தெரியாமல் வந்து உயிரை வாங்கும்! :)

  ReplyDelete
  Replies
  1. மனசாட்சியின் குரல் - ஹிஹிஹி.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....