எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, April 11, 2018

ஃபேஸ்புக்கால் என்ன பயன்?

ஃபேஸ்புக் – இதனால் பெரிதாக என்ன பயன்? பலரும் இதைத் தவறாகவே பயன்படுத்துவதாக ஒரு கருத்துண்டு. எனக்கும் கூட இதில் பெரிதாக ஈடுபாடு இருப்பதில்லை. தினமும், எனது வலைப்பூவில் பதிவு வெளியானவுடன், அதற்கான இணைப்பினை இங்கே கொடுத்து சில நிமிடங்கள் அங்கே செலவிட்டு, அன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்களுக்கு வாழ்த்துகள் சொல்லி, சில பல லைக்குகளை போட்டு விட்டு அங்கிருந்து நகர்வதே வழக்கமாக இருக்கிறது! ஒரு நாளைக்கு அதிக பட்சமாக இங்கே செலவிடுவது நிமிடங்களில் மட்டுமே! ஆனால் சிலர் இங்கேயே மூழ்கிக் கிடக்கிறார்கள் – குறிப்பாக அவர்கள் எழுதுகிறார்களோ இல்லையோ, அடுத்தவர்கள் எழுதுவதை ஷேர் செய்கிறார்கள் – இல்லை காப்பி செய்து தன் பக்கத்தில், தானே எழுதியது போல வெளியிடுகிறார்கள்!


பெரிதாக இதன் பயன்பாட்டில் பலன் இல்லை என்றாலும் ஒவ்வொரு நாளும் யாருக்கு பிறந்த நாள் என்பதைச் சொல்வதால் ஒரு விதத்தில் பலன் இருக்கிறது. என்னைப் போன்று – பிறந்த நாள், திருமண நாள் [என்னுடையது உட்பட!] மறந்து போகும் பலருக்கு இது ஒரு நல்ல வசதி. பாருங்களேன் இன்று கூட ஒரு திருமண நாள் தான். நல்ல வேளையாக இதே நாளில் சென்ற வருடம் ஃபேஸ்புக்கில் எழுதி இருந்ததை நினைவுபடுத்தினார் மிஸ்டர் மார்க்! அப்படி என்ன எழுதி இருந்தேன்!   

இன்று காலை 03.00 மணிக்கே விழித்துவிட்டேன். புரண்டு புரண்டு படுத்தாலும் உறக்கம் வரவில்லை. வாராய் நீ வாராய் என அழைத்தாலும் உறக்கம் வரும் வழியில்லை. அடச்சே.... என்று சொல்லி, எழுந்து பல் துலக்கி, அடுப்பில் பாலை வைத்து, சூடு பண்ணி, ஒரு டம்ளர் பால் சுடச்சுடக் குடித்து, வீட்டுக்குள்ளேயே பேய் மாதிரி உலாவி, கொஞ்சம் நேரம். பிறகு கொஞ்சம் அலைபேசியில் வலை உலா! நான்கரை மணிக்கு மேல் கொட்டாவி வர, சரி உடனே படுத்துடுடா... என எனக்கே சொல்லிக்கொண்டு படுத்தாச்ச்!

எப்போது உறங்கினேன் என்று தெரியாது. 05.45, 06.00, 06.15 என மூன்று அலாரம் அடித்ததும் தெரியாது! அப்படி ஒரு உறக்கம்..... எழுந்த போது மணி 07.30! ஆஹா.... இன்னிக்கு ஆஃபீஸ்க்கு லேட் தான்! இன்றைக்கு இந்த ஊர் ஹனுமத் ஜெயந்தி! எங்கள் அலுவலகத்தில் இருக்கும் நண்பர்கள் மெஹந்திபூர் பாலாஜி என அழைக்கப்படும் ஹனுமானின் பக்தர்கள். இன்றைக்கு மதியம் அலுவலகத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் மதிய உணவு - பண்டாரா கொடுக்கும் நாள் - பூரி, ஆலு சப்ஜி, ராய்த்தா, அப்புறம் இனிப்பாக ஆளுக்கு ஒரு லட்டு! அதற்கான ஏற்பாடுகளில் எனக்கும் பங்கு உண்டு என்பதால் சீக்கிரம் செல்ல வேண்டும் என நினைத்திருந்தேன். சரி பரவாயில்லை. விரைவாக புறப்பட்டு விடலாம் என நினைத்தபோது......

அட இன்னிக்கு ஏப்ரல் 11-ஆம் தேதியாச்சே... போன வருஷமே மறந்து போய் பல்பு வாங்கினேனே, நினைவு வந்த உடனே ஃபோனப்போடுடா என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு அப்பாவின் அலைபேசி எண்ணுக்கு அழைத்தேன்! 11-04-1966 அன்று தான் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமண நாள். இன்றோடு 51 வருடங்கள் முடிந்துவிட்டன.... 50-வது வருடம் மறந்து விட்டாலும், 51-ஆவது வருடம் நினைவு வந்துவிட்டது! அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருமண நாள் வாழ்த்துகள் சொன்ன பிறகு, ரொம்ப சுறுசுறுப்பாக, மனைவிக்கு ஃபோன் செய்தேன். எதற்கு பல்பு வாங்கத்தான்! இப்படித்தான் இருந்தது அந்த அலைபேசி அழைப்பு.


நான்: ”இன்னிக்கு அப்பா-அம்மாவோட கல்யாண நாள்”

மனைவி: ஓ அப்படியா

நான்: இப்போதான் ஃபோன் பண்ணி வாழ்த்து சொன்னேன். நீயும் சொல்லிடு....

மனைவி: நீங்க இப்பதான் சொன்னீங்களா? நான் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன்.....

நான்: ஞே.....

[டேய் தேவையாடா உனக்கு!]

எனிவேஸ்.... இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் அப்பா-அம்மா.... நீங்கள் நீடுழி வாழ எல்லாம் வல்லவனின் அருள் தொடர்ந்து கிடைக்கட்டும்.....நல்ல வேளை நினைவூட்டினார் மார்க். உடனே அலைபேசியில் அப்பாவை அழைத்து, அம்மாவுக்கும், அப்பாவுக்கும் வாழ்த்துச் சொல்லி விட்டேன் – 52-ஆவது திருமண நாள்! எல்லாம் வல்லவனின் பூரண அருள் அவர்களுக்குக் கிடைக்க எனது பிரார்த்தனைகள்!

அப்பப்ப இப்படி நினைவூட்டுப்பா மிஸ்டர் மார்க்! இல்லைன்னா, என்னைப் போன்ற ஞாபக மறதி ஆசாமிகளுக்குக் கஷ்டம் தான்! ஃபேஸ்புக் – அளவுக்கு மிஞ்சினால் எதுவும் கெட்டதே!  இதில் இருக்கும் நல்லதை எடுத்துக் கொள்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

24 comments:

 1. முகநூலும் ஊறுகாய் போல! கொஞ்சமாய்த் தான் தொட்டுக்கணும். நான் காலை ஒரு அரைமணி, மதியம் ஒரு அரைமணி இருப்பேன். இன்னிக்கு மதியம் போகலை என்பதால் இப்போப் போய் ஒரு பார்வை பார்த்துட்டுக் கணினியையே மூடிடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. ஊறுகாய் போல கொஞ்சமாகத் தொட்டுக்கணும் - உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 2. ஹை, மீ த ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா நீங்க தான் ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 3. (துளசி: நான் முகநூலில் இருந்தாலும் ரொம்ப ஆக்டிவாக இல்லை...)

  தங்கள் பெற்றோருக்கு எங்கள் இருவரின் வாழ்த்துகள் + வணக்கங்கள். அவர்கள் தேக ஆரோக்கியய்த்துடன் பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகள்! ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 4. வணக்கம் சகோதரரே

  ஃபேஸ்புக் பற்றி தெரியாது. தாங்கள் கூறியதில் விபரங்கள் அறிந்து கொண்டேன்.
  தங்கள் பெற்றோர்களுக்கு அன்பான திருமணநாள் நல்வாழ்த்துக்கள். இறைவனின் பரிபூரண அருள் அவர்களுக்குக் கிடைக்க எனது பிரார்த்தனைகள்..

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 5. பெற்றோருக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.

  நானும் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 6. அப்பா, அம்மாவுக்கு என் நமஸ்காரங்களும், வாழ்த்துகளும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. என்னை பொருத்தவரையில் பேஸ்ப்புக்கின் மூலம் பல செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது... ஊடகங்கள் கட்சி சார்பாக அல்லது தங்களின் சுய்நலம் காரணமாக பல செய்திகளை எடிட் பண்ணி போட்டோ போடாமலோ ம்றைத்து இருப்பதை எல்லாம் இங்கே காண முடிகிறது அதுமட்டுமல்லாமல் மக்களின் நண்பர்களின் மன வோட்டங்கலையும் அறிய முடிகிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 8. பெற்றோருக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும் எனது பிரார்த்தனைகளும்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   Delete
 10. பெற்றோருக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 11. அப்பா - அம்மாவுக்கு வாழ்த்துகள்; பெரியவர்கள் ஆசீர்வாதம். - ஃபேஸ்புக் பற்றி நன்றாகவே சொன்னீர்கள்; ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறி விடுவது பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 12. கத்தி காய் நறுக்கவும் பயன்படும், கொலை செய்யவும் பயன்படும். அதுப்போலதான் முகநூலும் பயனாளியை பொறுத்து பயன் மாறுபடும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....