செவ்வாய், 1 மே, 2018

கதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்னா


தேன் நெல்லியும் தேன்மல்லியும்



சென்ற வாரத்தில் தேன்நெல்லி செய்தேன். அப்போது மனதில் "தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே" என்ற இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் வந்து சென்றது. வானொலியில் கேட்டிருக்கிறேன். ஆனால் படப்பெயர் தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இணையத்தில் தேடியதில் எல்லாம் smule வீடியோக்களே கிடைத்தது. விடாது முயற்சி செய்ததில் இது தியாகம் என்ற படம் என்றும் இளையராஜா இசையில் டி.எம்.சவுந்தர்ராஜன் பாடியிருக்கிறார் என்றும் தெரிந்து கொண்டேன். நீங்களும் ரசிக்கலாமே.


தும்பி – மை க்ளிக்ஸ்!



எத்தனை விதவிதமான பூச்சிகள்!! வாசல் கேட்டில் உட்கார்ந்திருந்தது!!!

ஈ மாதிரி இருக்கு, ஒற்றை இறக்கை, வால் போல் அமைப்பு!! கடவுளின் படைப்பில் தான் எத்தனை அற்புதங்கள்!!

ஆம் கா பன்னா:


வடக்கில் பிரபலமாக உள்ள ஆம் கா பன்னாவை காமாட்சியம்மா பதிவில் வாசித்ததிலிருந்து செய்யும் ஆவல் இருந்தது. நல்ல புளிப்பான மாங்காயாக கிடைத்தது.

மாங்காய் சூடு கொடுக்கும் என்று சொல்வார்கள். ஆனால் மாங்காயை வேகவைத்து செய்யும் இந்த பானம் சூட்டை தணிக்கும் என்றும், செரிமானத்திற்கு உதவும் என்றும் மேலதிகத் தகவல்களை இணையத்தில் பார்த்துத் தெரிந்து கொண்டேன். பலரும் ஆம் கா பன்னா செய்முறையை பகிர்ந்துள்ளார்கள்.

மாங்காயை முழுதாக வேகவைத்து, தோலை நீக்கி விட்டு, விழுதுடன் வெல்லம், காலா நமக் என்று சொல்லப்படுகிற கறுப்பு உப்பு, மிளகுத்தூள், வறுத்தரைத்த சீரகத்தூள், புதினா சிறிது சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.. இதனுடன் வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் எல்லாம் சேர்ந்த கலவை. பிரமாதம். நீங்களும் செய்து பாருங்களேன்.

குப்பை!

புத்தாண்டு அன்று எங்கள் குடியிருப்புவாசிகளுடன் ஒரு கலந்துரையாடல்.

அன்றாடம் வீட்டில் சேரும் குப்பைகளை சரியாக தரம் பிரித்து போட வேண்டும் என்றும் எவையெல்லாம் மக்கும் குப்பைகள், எவையெல்லாம் மக்காத குப்பைகளில் என்றும் கருத்துகளை பரிமாறிக் கொண்டோம்..

பிரித்துத் தராத குப்பைகள் வாங்கப்பட மாட்டாது என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. குப்பைகளுக்கு என்று விற்கப்படும் கவர்களையும் முற்றிலும் தவிர்த்து விடலாம் என்றும் முடிவெடுத்தோம்.

இது போல் எங்கள் குடியிருப்பு வாசிகளுக்கென ஒரு க்ருப் வாட்ஸப்பில் உருவாக்கி எல்லோரையும் இணைத்துக் கொண்டோம். குடியிருப்பைப் பற்றி அனைத்து செய்திகளும் அதில் பகிரப்படும்.

இது போன்ற நல்ல முடிவுகள் பல எடுக்கப்பட்டு திறம்பட செயல் பட வேண்டும்.


ரோஷ்ணி கார்னர்!!


என்னுடைய வலைப்பூவில் (blog) கதம்பம் என்று சிறு விஷயங்களை தொகுத்து தொடர் எழுதும் போது அதில் கடைசியாக ரோஷ்ணி கார்னர் எழுதுவது வழக்கம். இப்போதெல்லாம் வலைப்பூவில் எழுதுவதே இல்லை.

ரோஷ்ணிக்கு நேற்றோடு பரீட்சை முடிந்து விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. புத்தகமொன்றை எடுத்து வாசிக்க ஆரம்பித்து விட்டாள்.

கைவேலைகளில் தனக்காக ஒரு சிறு அலமாரியை அட்டைகளை வெட்டி தயாரித்துக் கொண்டிருக்கிறாள். காதணிகளும் தயாரிக்க இருக்கிறாள்.

அடுக்களை வேலைகளிலும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். தினமும் வாசலில் கோலம் போட்டும் பழகி வருகிறாள்.

இதுபோக பள்ளியிலும் விடுமுறை தின ஹோம்வொர்க்காக எழுதும் வேலை நிறைய இருக்கு.

அரங்கன் கோவிலில்…



சென்ற வாரத்தில் ஒரு நாள் மாலை கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வழியில் தெரிந்தவர்கள் சிலரையும் பார்க்க முடிந்தது. ஆண்டாளையும், கோதண்டராமரையும், தன்வந்திரியையும் பார்த்து குசலம் விசாரித்து விட்டு, வரும் வழியில் பெருமாள் புறப்பாடு.

இப்போ பூச்சாற்று உற்சவம் நடக்கிறது. பெருமாளுக்கு பூச்சாத்து என்று சரம் சரமாய் மல்லி. கண்குளிர ரங்கனை பார்த்து விட்டு, தாயார் சன்னிதியில் சிறிது நேரம் உட்கார்ந்தோம். வழியில் சில்லென்று பன்னீர் சோடாவை குடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்

46 கருத்துகள்:

  1. பாடல்களில் சந்தேகம் வந்தால் என்னிடம் கேட்டிருக்கலாமே.....!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டிருக்கலாம்..... :)) என்னிடம் கேட்டால் நிச்சயமாக தெரிந்திருக்காது ஸ்ரீராம். சினிமாக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.

      நீக்கு
  2. ஆம் கா பன்னா... என் நா வேண்டாம் என்கிறது! அது அப்படித்தான்... நல்லது எதுவும் அதற்குப் பிடிக்காது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா. பல சமயங்களில் நல்ல விஷயங்கள் பிடிப்பதில்லை ஸ்ரீராம்.

      நீக்கு
  3. புத்தகம் படிக்கும் பழக்கம் வருவது நல்ல பழக்கம். தொடரட்டும். ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. படிக்கும் ஆர்வம் இப்போதிலிருந்தே இருப்பதில் மகிழ்ச்சி எங்களுக்கும். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. காலை வணக்கம் வெங்கட்ஜி....ஒரு வழியா இப்பத்தான் டேஷ் போர்ட் உங்கள் பதிவைக் காட்டியது....இதுவரை காட்டவெ இல்லை....ப்ளாகர் சுற்றிக் கொண்டிருந்தது..ஹா ஹா ஹா தில்லி ஃப்ளைட் சென்னையில் ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடிட்யில் லேன்ட் ஆகிட்டு இங்கு எங்க வீட்டுக்கு வர தாமதம் போல..ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம்.

      பிளாக்கர் இப்படித்தான் பல சமயங்களில் படுத்துகிறது! இந்த சர்விஸ் ஓசில கொடுக்கறது - அதனால ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. தேன் நெல்லி மிகவும் நல்லது ஆதி. குறிப்பாக கேன்ஸர் நோயாளிகளுக்குப் புரிந்துரைக்கிறார்கள். ஆனால் சர்க்கரையில் போட்ட நெல்லி கூடாது என்றும் சொல்லுகிறார்கள். வீட்டில் தேன் நெல்லி இருக்கு....அது போல ஆம் கா பன்னா செஞ்சாச்சு வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.....இந்த முறை மாமியார் வீட்டு மாங்காய் அவ்வளவாகக் காய்க்கவில்லை....ஏனென்று தெரியலை...

    ரோஷிணிக்குட்டிக்கு வாழ்த்துகள். புத்தகம் வாசிக்கும் பழக்கத்திற்கும் கைவேலையில் கலக்குவதற்கும். வீட்டு வேலை, கோலம் என்று....அம்மாவாக நீங்களும் கலக்கல் அம்மாதான்!!!! ஒவ்வொரு தடவை ரோஷினிபற்றி வரும் போதும் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று தோன்றும்!

    தும்பி அழகு! க்ரூப்பில் ஒரு டிஸ்கஷனே ஓடியதே!! ஹா ஹா ஹா ஹா

    பாடல் கேட்டதில்லை கேட்கிறேன்

    வாழ்த்துகள்! ஆதி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாங்காய் இந்த வருஷம் அவ்வளவாக காய்க்க வில்லையோ?

      சென்னை வந்தால் சந்திக்க முயல்கிறோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. ஆம் கா பன்னா செய்யலை. செய்யணும். ரோஷ்ணியின் கைவண்ணம் முகநூலிலும் பார்த்தேன். குழந்தைக்கு ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  8. கதம்பம் நன்று சகோ.
    காணொளியில் ஸூப்பர் ஸாங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற எம் நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி தமிழ் US.

      நீக்கு
  10. வணக்கம் பயணச்சித்தரே

    ஆம் கா கான அருமையான தகவல்

    ஆதியின் புகைப்படம் அற்புதம்

    பெரிய படத்தில் கிராப் செய்ததுபோல இருக்கிறது

    மாக்ரோ மோடில் எடுக்க பழக்கவும்..இருப்பினும் மாக்ரோ மோடுக்காக அருகே சென்றால் ஈ பறந்துவிடும்தான் ... நல்ல முயற்சி ஆதி...தொடர்க

    ரோஷினி வாசித்தல் நன்று
    இன்னும் ஆழமான நூற்களை வாசிக்கவும்
    உனக்கு என் அன்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் - க்ராப் செய்தது அல்ல - மொபைலில் Zoom செய்து எடுத்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. புத்தக வாசித்தல் நல்ல பழக்கம். உற்சாகப்படுத்துங்கள்..

    நானும் பிளாஸ்டிக் பைகளில் குப்பையை கொட்டுவதில்லை. குப்பை கூடையை தினமும் கழுவிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் குப்பையை பிரிச்சு கொட்டுவதில்லை. ஆனா, அடுக்களை கழிவுகள் மட்டும் செடிக்கு உரமாக்கிடுவேன்

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  13. கதம்பம் அருமை. ஆம் கா பன்னா-செய்துபார்க்கவேண்டிய லிஸ்டில் இருக்கு. தன்வந்திரி சன்னிதி படம் அருமை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பார்த்துட்டு சொல்லுங்க.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  14. கதம்பம் நன்றாக இருக்கிறது. மகள் ரோஷினி புத்தகம் வாசிப்பது நல்ல பழக்கம். புகைப்படம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள் ரோஷிணி!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  15. வெங்கட்ஜி முகப்புப் படம் நன்றாக இருக்கிறது சொல்ல விட்டுப் போய்விட்டது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று தான் மாற்றினேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  16. கதம்பம் மணக்குது.
    சுவை மிகுந்த பகிர்வுகள்.

    விடுமுறையை நல்ல பொழுதாக பயன் படுத்துகிறாள்.
    ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  18. ஆம் கா பன்னா.. கேள்விபட்டதில்லை இப்போதுதான் கேள்விபடுகிறேன் நிச்சய்ம் செய்து பார்ப்பேன் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பாருங்கள் மதுரைத் தமிழன். நன்றாகவே இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  19. வெங்கட்ஜி உங்கள் பல்சுவை பதிவு நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கும்மாச்சி.

      நீக்கு
  20. ஆதிக்கும் , ரோஷ்ணிக்கும் இனிய வாழ்த்துகள்.
    ஆம் சத் போல இது இருக்குமோ. இனிப்பு எதையும் தான் சாப்பிட முடியாதே. படிக்க
    பார்க்க நன்றாக இருந்தது வெங்கட்.
    முக நூலிலும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிட முடியாதே..... :( கண்ணாலே பார்த்து சந்தோஷம் பட வேண்டியது தான் நீங்க சொல்ற மாதிரி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    கதம்பம் தொகுப்பு மிக அருமை. தேன் நெல்லி நன்றாக உள்ளது. அதற்கேற்ற பாடலும் கேட்க இனியதாக இருந்தது.

    பூச்சியின் படம் நல்ல தெளிவு. இறைவனின் படைப்புகளை போற்றாமல் இருக்க முடியவில்லை...

    ஆம் கா பன்னா செய்முறை அறிந்து கொண்டேன். மிகவும் நன்றாக இருக்கிறது.

    தங்கள் மகளின் படிக்கும் திறனுக்கும் கைவேலை திறனுக்கும் வாழ்த்துக்கள். கை வேலைகளிலும் தங்கள் மகளை ஈடுபடுத்தும் அவரின் அம்மாவுக்கு என் பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.

    ரங்கநாதன் கோவில் தரிசனத்தோடு, கம்பத்தை தொகுத்து நிறைவு செய்த சகோதரிக்கு பாராட்டுகளும், நன்றிகளும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....