எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, May 18, 2018

குஜராத் போகலாம் வாங்க – வித்தியாசமான நெடுஞ்சாலை உணவகம்இரு மாநில பயணம் – பகுதி – 40

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


Gகிர் வனத்திலிருந்து ஆம்தாவாத் நோக்கி பயணம் செய்தபோது ராஜ்கோட் அருகே ஒரு உணவகத்தில் தேநீர் அருந்த வண்டியை நிறுத்தினோம்.  அந்த உணவகத்தின் பெயர் “Horn OK Please!”.  Bansal Petroleum என்ற பெட்ரோல் பங்க் உரிமையாளர் பெட்ரோல் பங்க் வளாகத்திலேயே நடத்தும் உணவகம் தான் இந்த Horn OK Please! முழுக்க முழுக்க நெடுஞ்சாலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான் இந்த உணவகத்தின் Theme! ஒரு லாரியின் முகப்பினை வைத்து அதிலிருந்து உணவு தருகிறார்கள்.  உணவகத்தின் சுவர்களில் லாரிகளில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள்.தவிர அவர்கள் தரும் மெனு கார்டு கூட ஒரு வாகனத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது! பஞ்சாபி, ராஜஸ்தானி, சைனீஸ், சௌத் இண்டியன், ஸ்னாக்ஸ் என அனைத்தும் இங்கே கிடைக்கும்! ஒவ்வொரு பக்கத்திலும் கொடுக்கப்பட்ட உணவு வகைகளுக்கு வாகனம் சம்பந்தப்பட்ட பெயர்கள்! – Soups மற்றும் Starters இருக்கும் பக்கத்திற்கு Liquid Checkup, Self Lagaao என்று தலைப்பு! ஒவ்வொரு பக்கத்திலும் இப்படி தலைப்பு கொடுத்து சிறப்பாக மெனு கொடுக்கிறார்கள்!வித்தியாசமான இந்த உணவகம் ஒரு Chain of Restaurants.  இதே பெயரில் பல இடங்களில் அமைத்திருக்கிறார்கள் என்றாலும், நான் பார்த்தது ராஜ்கோட் அருகே.  பெங்களூருவிலும் இந்த பெயரில் உணவகம் இருக்கிறது. வித்தியாசமான பெயர், வித்தியாசமான தீம் என இருக்கும் இந்த உணவகம் ராஜ்கோட்டில் மிகவும் பிரபலம்.  வழிப்போக்கர்கள் மட்டுமன்றி, ராஜ்கோட் வாசிகளும் சனி, ஞாயிறில் இங்கே உணவு உண்ண வந்து விடுகிறார்கள்! 


மெனு கார்டு - வாகன வடிவத்தில்....

பெரும்பாலான வட இந்திய உணவகங்கள், குறிப்பாக நெடுஞ்சாலை உணவகங்கள் போலவே இங்கேயும் வெளியே நாற்காலிகள் தவிர கயிற்றுக் கட்டில்களும் போட்டு வைத்திருக்கிறார்கள்.  கட்டிலில் அமர்ந்து எதிரே ஒரு சிறிய ஸ்டூலில் உணவை வைத்து சாப்பிட்டு, வேண்டுமெனில் ஒரு குட்டித் தூக்கம் போடலாம்! அல்லது கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு பிறகு வாகனத்தினைச் செலுத்தலாம்! நாங்களும் இங்கே கொஞ்சம் ஸ்னாக்ஸ் மற்றும் தேநீர் வாங்கிக் கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டோம். வயிற்றுக்கு சுத்தமான உணவு கிடைப்பது தவிர, இங்கே இருக்கும் கழிப்பறை வசதிகளும் சுத்தமாகவே இருக்கிறது என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.  ராஜ்கோட் பக்கம் சென்றால், இந்த இடத்தில் உணவு சாப்பிடலாம்! ப்ரீத்திக்கு நான் கேரண்டி என்று விளம்பரத்தில் சொல்வது போல Horn OK Please உணவகத்தின் சுத்தத்திற்கு நான் கேரண்டி!மேலே கொடுத்திருக்கும் தகவல்கள் பார்க்கும்போது “முன்னாடியே படிச்ச மாதிரி இருக்கே” என்று தோன்றியிருக்கலாம்! ஆமாம் இந்த உணவகம் பற்றி முன்னரே என் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். இருந்தாலும், பயணத்தொடரின் பகுதியாக இங்கேயும்! இந்த இடத்திலிருந்து புறப்பட்டு ஆம்தாவாத் எல்லையை நாங்கள் அடைந்தபோது இரவு எட்டு மணிக்கு மேலாகி இருந்தது. குஜராத் வந்ததிலிருந்து அசைவ உணவு சாப்பிடுவது ரொம்பவே அரிதாகி விட்டது என்று கேரள நண்பர்களுக்கு ஒரே குறை. நானோ டேய் பொய் சொல்லாதீங்கடா… தியுவில் நல்லா சாப்பிட்டீங்களேன்னு மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்!ஒட்டுனர் முகேஷிடம் அவர்களது ஆதங்கத்தினைச் சொல்ல அவர் ஆம்தாவாத் நகரின் எல்லையில் இருந்த ஒரு உணவகத்தில் வாகனத்தினை நிறுத்தினார். அங்கே கிடைத்த அனுபவம் என்ன, என்ன சாப்பிட்டோம், பிறகு தொடர்ந்து என்ன செய்தோம், தங்குவதற்கு இடம் கிடைத்ததா, இல்லையா என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்.….

தொடர்ந்து பயணிப்போம்.
 
நட்புடன்

வெங்கட்
தமிழகத்திலிருந்து....

9 comments:

 1. குட்மார்னிங் வெங்கட்...ஆம்தாவாத் என்றுதான் அவர்கள் சொல்வார்கள் போலும். அப்படிச் சொல்வது நம் வழக்கில் வினோதமாக இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஆம்தாவாத்/ஆம்டாவாத் என்பார்கள். நம்ம பக்கம் கும்பகோணத்தைக் கும்மோணம் அல்லது கும்மாணம் என்பது போல! அதே போல புஜ் பக்கம் காடியாவாட்/அல்லது கத்தியாவாட்! இங்கே கொஞ்சம் ராஜஸ்தானி கலப்புப் போல் இருக்கும்.

   Delete
 2. வித்தியாசமான உணவகம். வித்தியாசமான வடிவமைப்பு! கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். நம் ஊரிலோ...!

  ReplyDelete
 3. முன்னாடியே சொல்லி இருக்கீங்களா? நான் இப்பதான் படிக்கிறேன்! அசைவம் சாப்பிடப்போன இடத்தில் ஏதோ "சுவை"யாக நடந்திருக்கும் போலவே....!

  ReplyDelete
 4. அருமை... தொடர்கிறேன் ஜி...

  ReplyDelete
 5. மெனு கார்டே வித்தியாசமாக இருக்கிறதே...

  ReplyDelete
 6. எனக்கும் இது பற்றி நீங்கள் முன்பே எழுதி இருக்கிறீர்களோ என்னும் சந்தேகம் படித்தது போல் நினைவு

  ReplyDelete
 7. வெங்கட்டே உணவகத்துக்கு கேரண்டி கொடுத்தாச்சா... பெங்களூரில் எங்கு இருக்கு என்று பார்க்கிறேன்.

  ReplyDelete
 8. இந்த மாதிரி உணவகம் பத்தி இப்போத் தான் கேள்வி. :)))))

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....