எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறோம்....

சனி, 19 மே, 2018

கதம்பம் – மயில்களும் குரங்குகளும் – கொழுக்கட்டை – பராய் மரம் - தூதுவளைமயில்களும் குரங்குகளும்…
ஏறக்குறைய பறவைகள் சரணாலயம் போல் உள்ளது திருவரங்கம். காலையும் மாலையும் மயில், புறா, தவிட்டுக் குருவி, இரட்டை வால் குருவி, இன்னும் பெயர் தெரியாத பட்சிகள் என மக்கள் வைக்கும் சாப்பாட்டுக்கும் அரிசிக்கும் வருகை தருகின்றன.

காடுகளை அழித்து வருவதால் செல்ல இடமின்றி அடுக்கு மாடி குடியிருப்புகளில் அங்கும் இங்கும் அலைகின்றது குரங்குகளும் பறவைகளும். சமீபத்தில் காலை கண்ட காட்சிகள்.

ரோஷ்ணி கார்னர்சமீபத்தில் ரோஷ்ணி செய்த காதணி – சில்க் த்ரெட் கொண்டு செய்தது….

கொழுக்கட்டை:

சமீபத்திய பேருந்துப் பயணத்தில் பார்த்த சில வாசகங்கள்.

கண்ணீர் அஞ்சலி!! என்று ஒரு பாட்டியின் படத்துடன். பெயரைப் பார்த்ததும் நானும் மகளும் சிரித்துக் கொண்டோம்.

கொழுக்கட்டை (எ) மாரியாயி அம்மாள்!!

சிறுவயதில் கொழுக்கட்டை மாதிரி புஷ்டியாக இருந்திருப்பார் போல!

இன்னொரு இடத்தில் நாள்பட்ட வலி - நாள்பட்ட வளி என்று இருந்தது.

பஸ்லாரிவேன்!!!!

பஸ், லாரி மற்றும் வேன் வாடகைக்கு விடும் கடை போல!

பராய் மரமும் காய்களும்!பராய்மரம்!!! திருப்பராய்த்துறை உறையும் பராய்த்துரை நாதர் கோவிலின் ஸ்தலவிருட்சம்!! அதன் காய்களுடன்!!

தூதுவளை!தூதுவளை பார்த்திருக்கிறீர்களா? இது தான். இந்த இலைகளை வைத்து தூதுவளை தோசை செய்யலாம். திருப்பராய்த்துறை சென்ற போது எடுத்த படம்….

உலக புத்தக தினம்!

சிறுவயது முதல் அம்புலி மாமாவில் ஆரம்பித்து வார, மாத இதழ்கள், சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள், பொட்டலம் கட்டி வரும் காகிதங்கள் என அன்றாடம் சிறிதேனும் வாசிக்காமல் இருந்ததில்லை.

அமைதியான இடத்தில் அமர்ந்து ஆழ்ந்து வாசிக்கப் பிடிக்கும். வாசிப்பினால் தெரிந்து கொண்ட விஷயங்கள் ஏராளம். தொடர்ந்து நிறைய வாசிக்கணும். இப்போது மகளும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறாள் என்பதில் மகிழ்ச்சி!

படித்ததில் பிடித்தது….எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்.

அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.

ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும்.

நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.

அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும் அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது.

மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்.

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

20 கருத்துகள்:

 1. திரும்பவும் உங்கள் தளம் திறக்காததால் முகநூல் சுவரேறி.....! அங்கிருந்து வந்தால் தளம் புதிய தோற்றத்தில் இடது பக்கம் ஒதுங்கி இருக்கும். ஒரு கமெண்ட் போட்டால் தளம் சரியாகி விடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... சுவரேறி குதிப்பது இப்போது நன்கு பழகி இருக்கும் உங்களுக்கு ஸ்ரீராம்!

   தளம் புதிய தோற்றத்தில் இடது பக்கம் ஒதுங்கி இருக்கும் - கீதாம்மாவும் இப்படித்தான் சொல்கிறார்கள். என்ன பிரச்சனை என்பது கூகிளாண்டவருக்கே வெளிச்சம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. அழகிய இளம்பெண்களைச் சுற்றிவந்து தொந்தரவு செய்யும் ரௌடி இளைஞர்களைப் பற்றிய பதிவு என்று நினைத்து விட்டேன் - தலைப்பைப் பார்த்ததும்! ரோஷ்ணிக்கு வாழ்த்துகள். இதில் சிலவற்றை முகநூலில் படித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைப்பைப் பார்த்து உங்களுக்குத் தோன்றிய விஷயம் - நகைச்சுவை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. தூதுவளை தவிர்த்த மற்றவை முகநூலில் படித்தேன். தூதுவளை ரசமும் செய்யலாம். அம்பத்தூரில் அநேகமாய் வாரம் ஒரு தரம் தூதுவளை ரசம், கஷாயம்! துளசியும் சேர்த்துப் போடுவேன் கஷாயத்துக்கு மட்டும். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தூதுவளை ரசம் - பெரியம்மா செய்து சாப்பிட்ட நினைவு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 4. இங்கே பக்கத்தில் உள்ள தோப்பைக் கொஞ்சம் கொஞ்சமாய் அழிக்கின்றனர். நினைக்கவே வேதனையா இருக்கு! மரம், செடி, கொடிகள் இல்லாமல் பறவைகள் எங்கே குடி இருக்கும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மரம் செடி கொடிகள் இல்லாமல் பறவைகள் - வேதனை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 5. கதம்பம் மணத்தது சகோ.
  கொழுக்கட்டைக்கு எமது அஞ்சலிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொழுக்கட்டைக்கு அஞ்சலி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 6. தனது வாழ்விடத்தை வெட்டவெளியாக்குவதே மனிதனின் நோக்கம்...
  அப்பாவி விலங்குகளும் பறவைகளும் என்ன செய்யும் பாவம்...

  பதிவின் படங்கள் அருமை.. வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாவி விலங்குகள்-பறவைகள் - :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 7. தூதுவளை செடி தெரியாதோ!?

  பாவம் எலி, யானைக்கு மட்டுமல்ல, எலிக்கும் தன் பலம் தெரியாது போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எலிக்கும் தன் பலம் தெரியாது போல! :) எவருக்குமே தன் பலம் தெரிவதில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 8. கதம்பம் சுவாரஸ்யமாக இருந்ததது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

   நீக்கு
 9. கதம்பம் அருமை. ரோஷ்ணி குட்டிக்கு வாழ்த்துகள்!!

  கீதா: ரோஷ்ணி கலக்குகிறார்!! செமையா இருக்கு கை வேலை. தூதுவளை பயன்படுத்தி சில நல்ல ரெசிப்பிஸ் உண்டு. ரசம், துவையல் தோசை என்று....கஷாயமும் உண்டு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....

Related Posts Plugin for WordPress, Blogger...