எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, May 29, 2018

கதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சிகொழுக்கட்டை:

நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க. மகள் தேடியதில் கிடைத்தது. பார்க்கவே ஆசையா இருக்கு. கண்டிப்பா பாருங்க.


கோவையில் நாங்கள் இருந்த வீடு:சில நாட்கள் முன்னர் கோவை சென்றிருந்த போது, நாங்கள் இருந்த குடியிருப்புப் பக்கம் சென்று வந்தேன். கண்கள் குளமாகி விட்டன :( நாங்கள் இருந்த கட்டங்களே அங்கு இல்லை. பழுதடைந்து குடியிருக்கவே தகுதி இல்லாது போய்விட்டதால் சில வருடங்களுக்கு முன்னர் இடித்து விட்டதாக கேள்விப்பட்டேன். வெறும் முட்செடிகளே எங்கும் காணப்படுகின்றன.

ஏறக்குறைய 14 வருடங்களுக்குப் பின்னர் அங்கு சென்றேன். எத்தனை எத்தனை சந்தோஷங்களையும், துக்கங்களையும் தாங்கி வந்த கட்டிடம். மூன்று மாத குழந்தையாக அந்த குடியிருப்புக்குச் சென்று இருபது வயதில் திருமணமாகி வெளியே சென்றேன்.

சிறிய அறையானாலும் எத்தனை உறவுகள் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பர். அம்மா, அப்பாவோடு வாழ்ந்த நாட்கள், தம்பியுடன் சண்டை போட்ட நினைவுகள். அம்மாவுடன் கொண்டாடிய பண்டிகைகளும், செய்து தந்த பட்சணங்களும் என பசுமைத் தாங்கிய நிகழ்வுகள்.

வழியெங்கும் கண்ணீர்... இப்போ நினைத்தாலும் கண்கள் குளமாகின்றன :(

இரண்டே நாள் பயணம்….

இரண்டு நாட்கள் கோவை பயணம் இதோ இன்று நிறைவடைந்தது... ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்குப் பிறகு தான் இந்த வாய்ப்பு கிடைத்தது..

இந்தப் பயணத்தில் பள்ளிப்பருவ நட்புகளையும், அந்த நினைவுகளையும் சந்திக்கவும், அசைபோடவும் வாய்ப்புக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி..

அப்பா, அம்மாவோடு வாழ்ந்த நாட்களை நினைத்து மனம் ஏங்கியது.. மீண்டும் அந்த நாட்கள் வாராது.. சிறுவாணித் தண்ணீரும் சிறுபிராயத்து நினைவுகளும் என்றும் மனதுள் பசுமையாய்...

இரண்டு நாட்களும் தோழியின் இல்லத்தில் இருந்தது மறக்கவியலாது.. மீண்டும் இப்படியொரு வாய்ப்பு எப்போது கிடைக்குமோ பார்க்கலாம்.

சிலரை சந்திக்க நினைத்திருந்தேன், முடியாத சந்தர்ப்பம்.. அடுத்த பயணத்தில் பார்க்கலாம்..

நேற்று இரவும் இங்கு நல்ல மழை.. சில்லென்ற சூழலை விட்டு நீங்க மனமில்லாமல் பிரிகிறேன்.. திருச்சி சுட்டெரித்து வரவேற்குமோ தெரியலை..:) வீட்டை நோக்கி பயணிக்கும்போதே, செய்ய வேண்டிய வேலைகள் கண்முன்னே..:)

நரகப் பேருந்து! :(ஒருவழியாக திருச்சி வந்து சேர்ந்தாச்சு..இங்கு வியர்வை மழையில் நனைந்தாச்சு..:)

ஸ்ரீரங்கம் போக ஜங்ஷனில் ஒரு தனியார் பேருந்தில் ஏறினோம்...படியும் ஏறமுடியா உயரத்தில்...இரண்டு கைகளிலும் லக்கேஜ்களுடன் ஏறுவதற்குள் வண்டியும் எடுத்திடறாங்க..

ஏறியதிலிருந்து பிடித்து நிற்க முடியாத வேகத்தில் ஓட்டுனரின் திறமை..அரசுப் பேருந்துடன் போட்டி.. இப்படியே ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டும், பிந்திக் கொண்டும் வந்த பேருந்துகள் இரண்டும் ஓயாமாரி என்ற இடத்துக்கு அருகே கிராஸாக எடுக்க முடியாமல் நிறுத்தி விட்டு சண்டை...

வழியெங்கும் போக்குவரத்து நெரிசல்.. அதைப் பற்றி இருவருக்குமே கவலையில்லை.. என்னால எடுக்க முடியாது.. அவன் எப்படி எடுப்பான்னு பார்க்கிறேன் என்று எங்கள் ஓட்டுனரும்.. அப்படியே அரசுப் பேருந்தின் ஓட்டுனரும்...

எங்கள் ஓட்டுனர் " இருக்கற கேஸோட இதுவும் சேரட்டும்!! ஐம்பது பேருக்கு பதில் சொல்லிட்டு போறேன்!! ஒரு எஸ்ஸு போட்டுடலாமா!! என்று நடத்துனரிடம் கேள்வி!!

இப்படியே தொடர்ந்த சண்டை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.. அரசுப்பேருந்து முதலில் நகர, எங்கள் பேருந்தும் அடுத்து எடுக்கப்பட்டது.. அப்படியும் போட்டி நிற்கவில்லை.

இப்படியாக பொதுமக்களைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் அலட்சியத்துடன் செயல்படும் மனிதர்களை என்ன சொல்வது,???

வேறு ஒரு கதம்பம் பகிர்வில் சந்திக்கும் வரை….

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்

44 comments:

 1. இனிய காலை வணக்கம் ஆதி, வெங்கட்ஜி

  இத்தனை நேரம் ஆகிவிட்டது தளம் திறக்க

  ஊர் சுற்றி வந்திருக்கோம் ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கீதா ஜி! ஊர் சுற்றி வர நேரம் ஆகிவிட்டது. அதை விட பதில் சொல்ல அதிக நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 2. ஆதி வீடு இடிக்கப்படும் படம் மனதை என்னவோ செய்துவிட்டது...இப்படியான படங்கள் ஏனோ மனதை டல்லாக்கிவிடுகிறது

  கோயம்புத்தூர் செம ஊர் ஆதி. மூன்று வருடங்கள் இருந்த எனக்கே அது பிடித்துப் போனது என்றால் உங்களுக்கு?!!! கேட்கவும் வேண்டுமா....ஆனால் கோயம்புத்தூரும் மாறி வருகிறது சென்னைக்கு நிகராக அதுதான் மனதை வேதனைப்படுத்துகிறது. மருதமலை அடிவாரம் வரை சென்றுவிட்டது கட்டிடங்கள் மலையை உடைக்காமல் இருந்தால் சரி...

  தனியார் பேருந்துகள் ஹூம் பயணம் செய்துள்ளேன். போட்டி போட்டுக் கொண்டு பயணம் செய்யும் மனிதர்களின் உயிரைப் பணயம் வைத்து..என்னவோ போங்க

  சொப்புச் சமையல் வாட்சப்பில் வந்தது....ஒரு சில....நன்றாகவே இருந்தது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வீடு இடிக்கப்படும் படம் - கஷ்டம் தான்! இந்தப் படம் இணையத்தில் வந்த செய்தியிலிருந்து எடுக்கப்பட்டது.

   கோயம்புத்தூர் ரொம்பவே மாறி விட்டது. 90-களின் ஆரம்பத்தில் பார்த்ததற்கும் இப்போதைக்கும் நிறையவே மாற்றம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 3. என்னாச்சு ஸ்ரீராமைக் காணலை....தளத்திற்குள் நுழைய கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இதோ வந்துட்டேன் கீதா... அமரர் நரசிம்மன் பற்றி படித்து விட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு வருவதற்கு சற்று தாமதமாகி விட்டது.

   Delete
  2. அமரர் நரசிம்மன்?????????????

   Delete
  3. ஆம் ஸ்ரீராம் மனம்கலங்கிவிட்டது

   கீதா

   Delete
  4. கீதாக்கா செல்லப்பா சார் பதிவு....

   கீதா

   Delete
  5. சில சமயங்களில் இப்படி பல கடினமாகவே இருக்கிறது கீதா ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
  6. அமரர் நரசிம்மன் - நானும் பதிவில் படித்து மனம் கலங்கினேன். இறைவனின் தீர்ப்புகள் புரிந்து கொள்ள முடியாதவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  7. செல்லப்பா ஐயா எழுதிய பதிவு படியுங்கள் கீதாம்மா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
  8. கலக்கம் தான் கீதா ஜி!.... எல்லாம் வல்லவனின் நடவடிக்கைகள் அபுரி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
  9. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 4. குட்மார்னிங் மிஸ்டர் அண்ட் மிஸஸ் வெங்கட்,,,, பஸ் பற்றிய பதிவு முகநூலில் படித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஸ்ரீராம். முகநூல் பதிவுகளின் தொகுப்பு தான் இங்கே பதிவாக....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 5. நினைவோட்டங்களை பகிர்ந்த விதம் சற்றே வருத்தம்தான் சகோ.

  ஓட்டுனர்களுக்கு பயணிகளின் உயிரைப்பற்றி கவலையில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஓட்டுனர்களுக்கு பயணிகளின் உயிரைப் பற்றி கவலையில்லை - நூற்றுக்கு நூறு உண்மை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 6. ஏழு நிமிட வீடியோவா என்று தயக்கத்துடன் போட்டேன். ஈர்த்து விட்டது. சோப்பு வைத்து சின்னச் சின்னதாய், அழகழகாய்... ரொம்பக் கஷ்டமான விஷயம் என்னன்னா... அந்த குட்டியூண்டு உரலில் எல்லாவற்றையும் இடித்து மாவாக்குவதுதான். ரொம்பப் பொறுமை வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. ஏழு நிமிட வீடியோவா? :)))) இவர்கள் பக்கத்தில் இப்படி நிறைய காணொளிகள் இருக்கிறது ஸ்ரீராம். முடிந்தால் பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 7. குடியிருந்த வீடு கண்முன்னால் இடிக்கப்படுவதை பார்ப்பதைவிடக் கொடுமை வேறேது?

  ReplyDelete
  Replies
  1. இங்கே கண்முன்னால் இடிபடவில்லை! இடிக்கப்பட்டு இருந்ததை பார்த்தபோதே கொடுமையாக இருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. வீடியோவை மத்தியானம் தான் பார்க்கணும். இந்தச் செய்திகள் முகநூல் மூலம் படிச்சேன். மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது வீடியோ பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete
 9. இதை எழுதி முடித்த பிறகு ,மழை வந்துவிட்டது இல்லையா ஆதி.

  கொழுக்கட்டை வீடியோ வெகு அழகு. வீடு இடிக்கப் படுவதைப் பார்த்தீர்களா.
  வருத்தம்மா.

  இனிமேல் இனிய நினைவுகளே நிறையட்டும்.

  ReplyDelete
  Replies
  1. இடிக்கப்பட்ட போது பார்க்கவில்லை வல்லிம்மா. பிறகு தான் பார்த்தார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 10. குட்டி ரெசிப்பி அருமை...

  நம்ம நினைவுகளுடன் உள்ள இடங்கள் இடிக்க படும் போது...வருத்தமே..


  நம்ம திருச்சி ல இந்த பஸ் காரங்க சண்டை எப்பவும் ஓயாது...என்ன பண்ண..

  ReplyDelete
  Replies
  1. பஸ்காரங்க சண்டை ஓய்வதே இல்லை! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 11. நல்ல கதம்பம்! அனைத்தும் நன்று

  துளசிதரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 12. வீடு - மனம் மிகவும் வருத்தப்பட்டது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 13. ரோஷ்ணி தேடிய போது கிடைத்த செய்முறை மனதை கவர்ந்து விட்டது.
  நாங்கல் சின்ன வயதில் இப்படி விளையாடி இருக்கிறோம். ஆனால் இதை விட கொஞ்சம் பெரிது. முன்பு நான் அந்த விளையாட்டு சாமன்களை பதிவு செய்து இருந்தேன்.
  இது மிகவும் குட்டி பொருட்கள். செய்வது மிககஷ்டம்.

  வீடு இடிக்கப்படுவது மனதுக்கு கஷ்டம் தான்.

  ReplyDelete
  Replies
  1. சொப்பு சாமான் வைத்து சமையல் - இந்தக் காணொளி பலருக்கும் பிடித்திருக்கிறது கோமதிம்மா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 14. பழைய காலத்தில் வாழ்ந்த இடங்களுக்குப் போகும்போது வரும் உணர்வே தனி. அதை நாம்தான் உணர முடியும். நம்முடன் கூட வருபவர்கள் அல்ல. அதுபோல, அந்த இடங்களைப் பார்க்கும்போது தற்போது இருக்கும் நிலையை வைத்து ஏமாற்றம் வரத்தான் செய்யும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   Delete
 16. குட்டி குட்டியா சாமான் வைத்து செய்யப்படும் சமையல் மினி ஃபுட்ன்னு சொல்லி யூட்யூப்ல அப்டேட் செய்வது திருவண்ணாமலையை சேர்ந்த தம்பதியர்.. சும்மா தகவலுக்கு

  ReplyDelete
  Replies
  1. மேலதிகத் தகவல் தந்தமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 17. வளர்ந்த வீட்டினுடனான பந்தம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்றே.

  நல்ல தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 18. கூனூரில் நாங்கள் வாழ்ந்த வீட்டின் சுவடே இருக்கவில்லை அது ஒரு பேரிக்காய் ஆரஞ்சு தோட்டத்தின்நடுவிலிருந்தது இப்போது தோட்டமே இல்லை வெல்லிங்டனில் அந்த வீடு இப்போதுகுடிரை லாயமாக இருகிறது என்னென்னவோ நினைவுகள் சுமையாகவும் சுகமாகவும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....