புதன், 30 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – விண்டேஜ் வில்லேஜ் – கார்களின் மதிப்பு கோடிகளில்



இரு மாநில பயணம் – பகுதி – 45

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!



அடலாஜ் கி வாவ் – ரூதாபாய் படிக்கிணறுகளைப் பார்த்த பிறகு நாங்கள் புறப்பட்டுச் சென்ற இடம் – Dastan Auto World - விண்டேஜ் வில்லேஜ் - இந்த இடத்திற்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என கேரள நண்பர் ப்ரமோத் திட்டமிட்டிருந்தார் – அப்படி என்ன ஸ்பெஷல் அங்கே? ஒரு தனி நபர் எத்தனை கார்கள் வைத்திருக்க முடியும்? அதுவும் மிகவும் புராதனமான விண்டேஜ் வகைக் கார்கள் எத்தனை வைத்திருக்க முடியும் – ஒன்று, அல்லது இரண்டு – அதிக பட்சமாக 10! இந்த இடத்தில் மட்டும் இருக்கும் கார்கள் 106! இதைத் தவிர இவர் பங்க்ளாக்களில் இருக்கும் கார்களின் எண்ணிக்கை 134 – ஆக மொத்தம் 250 கார்கள்! அத்தனை கார்களின் மதிப்பு கோடிக் கணக்கில்.










இந்த இடம் பற்றிய ஒரு சிறு காணொளி கீழே. இங்கெ இருக்கும் கார்கள் பற்றி நிறைய காணொளிகள் யூட்யூபில் இருக்கின்றன. விருப்பமிருந்தால் பார்க்கலாம்.


காணொளி இணையத்திலிருந்து....







அஹமதாபாத் நகரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கத்வாடா எனும் சிறு கிராமம் – இங்கே அமைந்திருக்கும் இடம் தான் மேலே சொல்லி இருக்கும் ஆட்டோ உலகம்! மேலே சொன்னது போல 106 விண்டேஜ் கார்கள் இங்கே உண்டு. இருக்கும் கார்கள் அனைத்தும் ராஜா-மஹாராஜாக்கள் பயன்படுத்தியவை. இருப்பதிலேயே பழைய கார் எனப் பார்த்தால் 1906-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட Minerva – பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்டது – குவைத்திலிருந்து வாங்கப்பட்டது - இன்னுமொரு 1906-மாடல் கார் ஃப்ரான்ஸ் நகரில் தயாரிக்கப்பட்ட Mors! Rolls Royals Phantom-III, Lincoln Continental [1947], Hispano Suiza H6C [for hunting], Maybach SW38 [1937], Cadillac 20 Ft. [1958], Buick [1935], Fiat [1909] from Italy! இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.









இவரிடம் இருக்கும் சில கார்கள் தயாரித்த கம்பெனிகள் கூட மூடி விட்டார்கள். சில கார்கள் கம்பெனியிடமே கூட இல்லை என்றும், அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்ள கம்பெனி தயாராக இருந்தாலும் இவர் தரத் தயாராக இல்லை என்றும் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார் இங்கே இருந்த சிப்பந்தி. அதுவும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் தர மாட்டேன் என்று சொல்கிறார் இந்த கார்களின் உரிமையாளர். சின்ன வயதில் தீப்பெட்டிகள் சேர்க்கும் பழக்கம் இருந்தது – எவ்வளவு காசு கொடுத்தாலும் தரமாட்டேன் என்று சொல்லியதுண்டு! அது ஏனோ நினைவுக்கு வந்தது – அந்த தீப்பெட்டியே பெரிதாக இருந்தது நமக்கு. இவருக்கு கார்! ஒரு தனிமனிதர் சேமித்து வைத்திருக்கும் கார்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் இவரிடம் தான் உலகிலேயே அதிக அளவில் விண்டேஜ் கார்கள் இருக்கின்றன என்பதும் தகவல்.








கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகளாக இந்த வாகனங்களைச் சேகரித்து வருகிறார்கள் – இப்போது இருப்பவர் – Pran Lal Bhogi Lal என்பவர் – இவ்வளவு விண்டேஜ் கார்கள் வைத்திருக்குபோதே பெரிய புள்ளி எனத் தெரிந்திருக்கும் – நிறைய தொழில்கள் – ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்திருக்கிறார். ஒரு விஷயம் சொல்ல வேண்டும் – இங்கே இருக்கும் அத்தனை வாகனங்களும் இன்னும் பராமரிப்பில் இருக்கிறது – ஓடவும் ஓடுகிறது – இந்த ராஜா மஹாராஜாக்கள் வண்டி ஏதேனும் ஒன்றில் பயணம் செய்ய ஆசை இருந்தால் நீங்களும் பயணிக்கலாம் – ஒரு கிலோமீட்டருக்கு 500 ரூபாய் கட்டணம். தவிர, விழாக்கள், மாப்பிள்ளை ஊர்வலம் போன்றவற்றுக்கும் இங்கே இருக்கும் கார்களை தருகிறார்கள் – கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு 50000 ரூபாய்! அப்படி பணம் கொடுத்து பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்!









பராமரிக்க ஆகும் செலவும் அதிகம் தான்.  Rolls Royals Phantom-III வாகனம் பற்றி சொல்லும் போது 12 cylinder கொண்ட வாகனம் என்றும், ஒரு கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க 5 லிட்டர் பெட்ரோல் தேவை என்றும் தகவல் தந்தார்.  எல்லாத் தகவல்களையும் எங்களுக்குச் சொல்லிக் கொண்டே வந்தார் சுனில் என்ற சிப்பந்தி. அதே இடத்தில் 20 வருடங்களாக வேலை பார்த்து வருகிறாராம். வாகனங்களைப் பராமரிப்பது, சுற்றிப் பார்க்க வருபவர்களுக்கு வாகனங்கள் பற்றிச் சொல்வது, வாகனங்களை வரும் வால் இளைஞர்களிடமிருந்து காப்பது போன்றவை அவரது வேலை.  இந்த Auto World சுற்றிப் பார்க்கவும், புகைப்படம் எடுக்கவும் கட்டணம் உண்டு – 100 ரூபாய் நுழைவுக் கட்டணம், புகைப்படம் எடுக்க 150 ரூபாய் என்ற நினைவு. இங்கே எடுத்த படங்கள் ஏராளம் – அவற்றில் சில மட்டுமே இங்கே தந்திருக்கிறேன். முடிந்தால் பிறிதொரு சமயம் பகிர்ந்து கொள்கிறேன்.








நிறைய வாகனங்களைப் பார்த்து பெருமூச்சு தான் விட முடிந்தது. கார்கள் தவிர பல்லக்குகள், குதிரை வண்டிகள் போன்றவையும் சேமித்து வைத்திருக்கிறார் இவர். இந்த இடத்தின் அருகிலேயும் ஒரு பங்களா இருக்கிறது. அந்தப் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. கார் அருங்காட்சியகம் தவிர, இங்கேயே “விண்டேஜ் வில்லேஜ்” என்ற உணவகமும் இருக்கிறது. பாரம்பரிய குஜராத்தி உணவு இங்கே கிடைக்கிறது. கார் அருங்காட்சியகத்தினை விட உணவகத்தின் புகழ் பரவி இருக்கிறது. ஆள் ஒன்றுக்கு 240 ரூபாய் – ருசியான உணவு தருகிறார்கள் என்று சொல்லி நிறைய பேர் வருகிறார்கள். நாங்களும் அங்கே சென்றிருந்த சமயம் மதிய உணவுக்கான நேரம் ஆகி இருந்ததால், சாப்பிடலாம் என்று சொல்ல நண்பர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள் – சைவ உணவுக்கு விலை அதிகமோ என்று சந்தேகம் அவர்களுக்கு!








சில சமயங்களில் குழுவாகச் செல்லும்போது இப்படி சிலர் வந்துவிடுவார்கள் – பயணம் செல்லும்போது செலவு பற்றி யோசிக்கக் கூடாது – சேமிப்பதாக நினைத்து அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும் – மதிய உணவிலும் அதேதான் நடந்தது – ஐந்து பேருக்கு 1200 ரூபாய் ஆகியிருக்க வேண்டியது – விண்டேஜ் வில்லேஜில் சாப்பிட்டு இருந்தால் – வேறு இடத்தில் சென்று தனித்தனியாகச் சொல்லி சாப்பிட்ட உணவுக்குக் கொடுத்த தொகை – 1700 ரூபாய்! தியு செல்லும்போது வண்டியில் ஏற்பட்ட அதே பிரச்சனை மீண்டும் வர முகேஷ் அவர் நிறுவனத்தின் உரிமையாளர் தர்ஷன் பாயை அழைத்தார். அவர் உடனேயே வேறு வாகனத்துடன் வந்து எங்களையும் சந்தித்து – பிரச்சனை ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து – பிரச்சனையான வாகனத்தினை எடுத்துச் சென்றார்.  இந்த புதிய வண்டி இப்போது முகேஷ் கையில்.






கார்களின் முன் நானும் நண்பர்களும்...
படம் எடுத்தது அங்கே இருந்த சிப்பந்தி.

அடுத்தது எங்கே சென்றோம், அங்கே என்ன செய்தோம் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்.     

தொடர்ந்து பயணிப்போம்.
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

24 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!
    கார்கள் எல்லாம் செமையா இருக்கு...விண்டேஜ்
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ஜி! பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றியது அங்கே.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வாவ்!!! இது எனக்குப் புதிய சேதி! இங்கே நம்ம நண்பர் ஒருவர் வின்டேஜ் கார் க்ளப்பின் தலைவர். எல்லா வீக் எண்டும் அவுங்க கார்களைக் கணவரும் மனைவியுமாக் கொண்டு போவாங்க. மகளின் கல்யாணத்துலே மணமகள் வந்திறங்கியது இவுங்க காரில்தான். ஒரு கார் தோழிப்பெண்களுக்கும். பராமரிப்புச் செலவு ரொம்பவே அதிகம். 250 கார்கள்ன்னா.... ஹைய்யோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துளசி டீச்சர். இந்த வகைக் கார்களை பராமரிப்பது கொஞ்சம் கடினம் தான். பரம்பரைப் பணக்காரர்கள் என்பதால் அவர்களால் இதைச் செய்ய முடிகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கார்கள் எல்லாம் செம...நிஜமாவே அவர் பெரிய புள்ளிதான். பராமரிப்பு எல்லாம் எப்படிச் செய்கிறார்களோ..பெரிய பணக்காரர்கள் போலும்.

    ஆமாம் ஜி பயணத்தில் பணம் செலவாகத்தான் செய்யும். அதைத் தவிர்க்க முடியாது....

    படங்கள் எல்லாம் செம

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய பணக்காரர்கள் போலும் - அதே அதே - பல ஏக்கர் நிலங்கள் அவர்களிடம் உண்டு. தவிர தொழிற்சாலைகளும்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. குட்மார்னிங் வெங்கட். வித்தியாசமான பதிவு. எத்தனை கார்கள்... பழைய மாடல் கார்கள் வியப்பை உண்டாக்குகின்றன. இப்போதெல்லாம் அம்பாஸடர், பியட் கார்களே கூட கண்ணில் படுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதும் அம்பாஸ்டர் கார்கள் உண்டு - அரசு அலுவலகங்களில்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. வித்தியாசமான சேகரிப்பு. பணச் செலவைப் பற்றீக் கவலைப்படாமல் இருந்தால் தான் இத்தனை வாங்க முடியும். மிகப் பெரும் பணக்காரர் போல! எல்லாக் கார்களூம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வித்தியாசமான சேகரிப்பு தான் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. இவர் நிச்சயமாக பரம்பரை, பரம்பரையாக கோடீஸ்வரர்களாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு ரசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பரம்பரை பணக்காரர்கள் தான் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஓ! வெங்கட்ஜி பேக் டு தில்லியா...இன்றுதான் கவனித்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாஜி. வந்தாயிற்று.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. எத்தனை எத்தனை வித விதமான கார் கலெக்ஷன். கொஞ்சம் காஸ்ட்லி கலெக்ஷ்ன் தான் போலும். பராமரிப்பு என்று எவ்வளவு இருக்கும் பிரமிப்புதான். படங்கள் எலலம் மிக மிக அழகாக இருக்கு.
    நல்ல தகவல்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரமிப்பு தான் துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. இது போன்ற் கார் க்லெக்ஷ்ன் அமெரிகாவில் பார்த்தோம்.

    நல்ல பாராம்ரிப்பில் இருப்பது சந்தோஷ்ம். வாடகைக்கு வேறு விடுகிறார்.அதனால் நன்றாக் பாராமரிக்க வேண்டும் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. விண்டேஜ் கார் என்று எனக்குத் தெரிந்தது எல்லாம் morris minor austin கார்கள் மட்டும்தான் இவரது கலெக்‌ஷன் அடேயப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி
      எம்.பி. ஐயா

      நீக்கு
  12. வாவ்...எத்தனை எத்தனை கார்கள்...பள பள வென சுத்தமாக பளிச் பளிச் கலரில் ....

    அட்டகாசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான பராமரிப்பு என்பதால் இன்றைக்கும் சுத்தமாக இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....