எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, May 31, 2018

யார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…


”நிறுத்துங்க!”

”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் பார்க்கிறார்கள்.

ஒரு வீட்டில் துக்க நிகழ்வு. இறந்தவரின் உடலை இடுகாடு வரை கொண்டு சென்று அங்கே ஆக வேண்டிய காரியங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தான் இப்படி ஒரு மனிதர் வந்து இறந்தவரின் உடலை அடக்கம் செய்யக் கூடாது என்று சொல்கிறார். இறந்தவரின் உடலை வைத்திருக்கும் கட்டிலைப் பிடித்துக் கொண்டு முடிவு தெரியும் வரை விட மாட்டேன் என்கிறார். இறந்து போனவர் எனக்கு 45 லட்சம் தர வேண்டும். அதைக் கொடுக்கும் வரை அவரது உடலை அடக்கம் செய்ய விடமாட்டேன் என்று சொல்கிறார். இறந்து போனவருக்கு மூன்று மகன்கள். அவர்கள் அனைவரும் அந்த மனிதரைப் பார்க்கிறார்கள். அவர் இறந்து போன தங்கள் அப்பாவின் நண்பர் தான். இருவருக்கும் இப்படி கொடுக்கல் வாங்கல் உண்டு என்றாலும் 45 லட்சம்….

மூன்று மகன்களும் அவரிடம் பேசுகிறார்கள். எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக் கொள்ளலாம், இப்போதைக்கு அவரது உடலை அடக்கம் செய்ய விடுங்கள். இறந்தவரின் உடலை இப்படி நீண்ட நேரம் வைத்திருப்பது நல்லதல்ல. நீங்கள் சொல்வது போல, உங்களுக்கு 45 லட்சம் கடன் தர வேண்டும் என எங்கள் அப்பா எங்களிடம் சொல்லவே இல்லை. ஏதோ ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்றால் பரவாயில்லை. இப்படி 45 லட்சம் கடன் நிச்சயம் வாங்கி இருக்க மாட்டார். என்னதான் வீடு வாசல், பணம் என இருந்தாலும் அதை எங்களால் உங்களுக்கு விட்டுத் தர முடியாது. நீங்கள் பணம் கொடுத்ததற்கு என்ன சாட்சி என்றெல்லாம் தகராறு செய்கிறார்கள். ஊரில் உள்ள பெரியவர்களும் சொல்லிப் பார்த்தாலும், கேட்பதற்கு யாருமே தயாராக இல்லை.

இப்படி இடுகாட்டில் நடந்து கொண்டிருக்கும் விஷயம் இறந்தவரின் வீட்டில் இருக்கும் அவரது மகளுக்கும் தெரிகிறது. மகன்கள் இங்கே சண்டை போட்டுக் கொண்டிருக்க, தனது அப்பாவின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் இப்படி ஒரு நிலையா என வருந்தி, தன்னிடம் உள்ள அனைத்து நகைகளையும், பணத்தையும் கொடுத்து, அங்கே வந்திருக்கும் அப்பாவின் நண்பரிடம் சொல்லுங்கள், “இந்த நகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் – கிட்டத்தட்ட பத்து லட்சம் பெறும். மீதிப் பணமும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விடுகிறேன் என்று உறுதியாகச் சொல்லுங்கள் – இப்போது இறந்த என் அப்பாவின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கச் சொல்லுங்கள்” என தகவல் அனுப்புகிறார்.

நகை, பணத்துடன் வந்த நபர், இடுகாட்டில் பார்த்தால் இன்னமும் பிரச்சனை முடிந்த பாடில்லை. இறந்தவரின் நண்பர் அருகே வந்து மகள் கொடுத்த நகைகளையும் பணத்தையும் கொடுத்து அவர் சொல்லி அனுப்பிய விஷயத்தினையும் சொல்கிறார். அப்போது, இறந்து போனவரின் நண்பர், ‘உரக்கச் சொல்கிறார் – நீங்கள் அவரது உடலை அடக்கம் செய்யலாம். எனக்குத் தெரிய வேண்டியது தெரிந்து விட்டது – இறந்தவரின் உண்மையான வாரிசு யார் என எனக்குத் தெரிய வேண்டியிருந்தது. எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்” என்றார். உண்மையில் இறந்து போனவர் எனக்கு 45 லட்சம் தர வேண்டியதில்லை. நான் தான் அவருக்கு அவ்வளவு பணம் கொடுக்க வேண்டும். எனக்கு ஏதாவது ஆனால், நீ கொடுக்க வேண்டிய பணத்தினை என் உண்மையான வாரிசுக்கு கொடு எனச் சொல்லி இருந்தார்.


வரைந்தவருக்கு நன்றியுடன்...

மூன்று மகன்கள் இருந்தும், வீடு, வாசல், பணம் விற்றாவது கடனைக் கொடுக்க முடியாது என்று சொன்ன இந்த மூன்று மகன்கள் எங்கே, திருமணம் ஆகி வேறு வீட்டுக்குச் செல்ல வேண்டிய அவரது மகள் எங்கே – தன் நகைகள் அனைத்தையும் கொடுத்து பணத்தினையும் திருப்பித் தர முன் வந்த அந்த மகள் தான் இவரது உண்மையான வாரிசு. இறந்த என் நண்பருக்குத் தர வேண்டிய 45 லட்ச ரூபாயும் அவருடைய உண்மையான வாரிசான அந்த மகளுக்குத் தான் தருவேன் என்று சொன்னாராம். நான் தான் இப்படி 45 லட்சம் ரூபாய் இறந்தவருக்குத் தர வேண்டும் என்று முன்னரே சொல்லி இருந்தால், பலரும் தான் தான் வாரிசு என வந்திருப்பார்கள் – உண்மையான வாரிசு யாரென்று தெரியாமல் போயிருக்கும். அதனால் தான் இப்படி மாற்றிச் சொல்லி விட்டேன் - என்னை எல்லோரும் மன்னியுங்கள் என்று சொல்லி, இறந்தவரின் உடலை நல்லமுறையில் அடக்கம் செய்து முடிக்க உதவி செய்தார். பிறகு அந்த மகளுக்கும் கொடுக்க வேண்டிய பணத்தையும் அவர் அனுப்பி வைத்த நகைகள் பணத்தினையும் திருப்பி அளித்தார்.

என்ன நண்பர்களே உங்களுக்குப் பிடித்திருந்ததா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

குறிப்பு: சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு காணொளி அனுப்பி வைத்திருந்தார். நல்லதொரு காணொளி – ஹிந்தி மொழியில் என்பதால் நம் நண்பர்களில் பலருக்கும் புரியாது! அதனால் காணொளியாக இங்கே பகிர்ந்து கொள்ளாமல் அதன் சுருக்கத்தினை எழுத்து வடிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

32 comments:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி..

  கீதா

  ReplyDelete
 2. குட்மார்னிங் வெங்கட். முன்பு எழுதியதா? இல்லை, இன்னும் தமிழகத்தில்தானா?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஸ்ரீராம். தலைநகரில் தான். முன்னரே எழுதி Schedule செய்து வைத்ததில் வந்த தவறு! :) சரி செய்து விட்டேன்.

   Delete
 3. வாரிசு யார் என்று கண்டு பிடிக்க நல்ல டெக்னிக். அதற்குள் அவரை உதைக்காமல் விட்டார்களே...!

  ReplyDelete
  Replies
  1. உதைக்காமல் விட்டார்களே! அதே தான். இப்போதெல்லாம் உடனே கோபம் வந்துவிடுகிறது மக்களுக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. ஆனால் அந்தப் பெண்ணின் நல்ல மனதிற்கு அந்தப் பணத்தை அவள் தனியாக எடுத்துக்கொள்ள மாட்டாள். சகோதரர்களுடன் பிரித்துக் கொள்வாள். (கதையோடு ஒன்றி விட்டேனாம்!)

  ReplyDelete
  Replies
  1. நல்ல மனதிற்கு அந்தப் பணத்தை தனியாக எடுத்துக் கொள்ளா மாட்டார் - நல்ல சிந்தனை ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 5. கதை நன்றாக இருக்கிறது...

  இதைப் போல ஒரு நகைச் சுவைக்காட்சி கூட விவேக் என்று நினைக்கிறேன் அல்லது வடிவேலுவோ....காட்சி ஒன்று பார்த்த நினைவு....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இதே போன்ற நகைச்சுவைக் காட்சி - விவேக் உடையது ஒரு காமெடி சற்றேறக்குறைய இதே போன்று ஒன்று உண்டு கீதா ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 6. வெங்கட்ஜி தமிழகத்தில்தானா....நேற்று தில்லி என்று பார்த்த நினைவு...அதான் கேட்டிருந்தேன் தில்லி போயாச்சா என்று

  பெண்ணின் மனது மிக நல்ல மனது.....நல்ல டெக்னிக் உண்மையான வாரிசு அறிய....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தில்லி வந்தாச்சு. முன்னரே பதிவு எழுதி வைத்திருந்ததில் நடந்த தவறு! மாற்றி விட்டேன் கீதா ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 7. தமிழகம்? கதை நன்றாக இருக்கிறது. ஆனால் ஆங்கிலத்தில் படித்த நினைவு.

  ReplyDelete
  Replies
  1. தில்லி திரும்பியாச்சு..... விளக்கம் மேலே தந்திருக்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 9. கதை நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 10. பரவாயில்லயே உண்மை தெரிய இப்படிஒரு சோதனை பலே பலே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 11. நல்லொரு கண்டுபிடிப்பு இவர்தான் உண்மையான நண்பர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 12. வணக்கம் சகோதரரே

  நல்ல கதை. தகுந்த வாரிசு யாரென்று அறிய நல்ல உபாயத்துடன் கண்டு பிடித்த அந்த நல்ல நண்பர் உண்மையிலேயே மிகவும் சிறந்தவர். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 13. கதை நல்லாத்தான் இருக்கு. ஆனால் நம்பும்படியாக இல்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 14. நல்ல டெக்னிக் சொல்லும் கதை. உண்மையிலேயே தந்தையிடம் மிகுந்த அன்பும் அக்கறையும் உள்ளவர்தானே உண்மையான வாரிசு. நல்ல கதை...

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. தந்தையிடம் மிகுந்த அன்பும் அக்கறையும் உள்ளவர் தானே உண்மையான வாரிசு - அதானே.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 15. ஆகா..

  கதை மனதைத் தொட்டது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 16. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....