எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, June 4, 2018

குஜராத் போகலாம் வாங்க – ஓட்டுனரின் படபடப்பு – பிறந்த நாள் பரிசுஇரு மாநில பயணம் – பகுதி – 47

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகத்திலிருந்து வெளியே வரும்போதே ஓட்டுனர் முகேஷ் கொஞ்சம் படபடப்புடன் தான் இருந்தார் – ஒரு வாரமாக எங்களுடனேயே பயணித்து அவரும் கொஞ்சம் தளர்ந்திருந்தார். எங்கள் அடுத்த திட்டம் என்ன என்று கேட்க, ரிலையன்ஸ் மெகா மார்ட் அழைத்துச் செல்லக் கேட்டுக் கொண்டோம். அவரது படபடப்பு என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. மெகா மார்ட் சென்று வாகன நிறுத்துமிடத்தில் இறக்கிவிட நண்பர்கள் முன்னே சென்றார்கள். நான் கொஞ்சம் பின் தங்கி, முகேஷிடம் என்ன விஷயம் சொல்லுங்க, என்று கேட்க, “இல்லை இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும் அதான்!” என்று சொல்லி காரணத்தினையும் சொன்னார் – அவரது மகன்களுக்கு – இரட்டைக் குழந்தைகள் – அன்று பிறந்த நாள் – அதனால் கொஞ்சம் சீக்கிரம் போனால் கொண்டாட வசதியாக இருக்கும் என்று சொன்னார்.
 
அட நல்ல விஷயம் தானே, இதைச் சொல்ல ஏன் தயக்கம் – சீக்கிரமாகவே நீங்கள் வீட்டுக்குப் போகலாம் – ஒரு மணி நேரத்திற்குள் எங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு உங்களை அனுப்பி விடுகிறோம் என்று சொல்லி நானும் மெகா மார்ட் உள்ளே சென்றேன். நண்பர் பிரமோத்-இடம் விஷயம் சொன்னவுடன், நான் நினைத்ததையே அவரும் சொன்னார் – பொதுவாக எங்களை அழைத்துச் செல்லும் வாகன ஓட்டியை எப்போதுமே நல்ல விதமாகத் தான் நடத்துவோம் – அவரும் குடும்பத்தில் ஒருவர் போலவே தான் நடத்துவோம். அதே போல பயணம் முடிக்கும்போது கணிசனமான தொகையை அன்பளிப்பாகவும் தருவது எங்களது பழக்கம். இப்போது அவரது குழந்தைகளின் பிறந்த நாள் என்றதும் நானும் நண்பரும் ஒரே மாதிரி யோசித்திருந்தோம்.நண்பர்கள் அவரவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொள்ள நான் முகேஷின் மகன்களுக்கு உடைகளை தேர்வு செய்தேன். பொதுக் கணக்கில் உடைகள் வாங்கி வந்தோம் – மெகா மார்ட்-ல் நல்ல கூட்டம் – பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம். அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் – அஹ்மதாபாத் சென்றால் கண்டிப்பாகச் செல்ல வேண்டிய இன்னுமொரு இடம் – கண்டோய் போகிலால் மூல்சந்த் சுத்தமான நெய்யில் தயாரிக்கப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யும் இடம்! கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் விற்கப்படும் பொருட்களின் தரம் ஓஹோ! அவரவர்களுக்குத் தேவையான இனிப்பு வகைகளை வாங்கிக் கொண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். என்ன வாங்கலாம்? அவர்களது இணையதளம் என்ன என்று அடுத்த பத்தியில் சொல்கிறேன். அதற்கு முன்னர் ஒரு இனிப்பின் படம்!அவர்களது இணையதளம் – Kandoi Bhogilal Mulchand Sweet Shop – 100 ஆண்டுகள் பழமையான கடை! இங்கே கிடைக்கும் பண்டங்களின் பட்டியல் மிகப் பெரியது – Pista Ghari, Toprapak, Kaju Maisur, Nutty Buddy, Dates Diet, Pista Bite, Rajwadi Ladu, Dry Fruit Tos…. இப்படி நிறைய நிறைய இனிப்புகள் – கார வகைகளும் இப்படி நிறையவே இருக்கின்றன. அவர்களது இணைய தளம் வழியே ஆன்லைனிலும் வாங்கும் வசதி இருக்கிறது – தமிழகத்திற்கு அனுப்பி வைப்பார்களா என்று தெரியவில்லை. அங்கேயே கொஞ்சம் சாப்பிட்டும் பார்த்தோம் – நன்றாகவே இருந்தது. அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் க்ரிஸ்டல் வந்து சேர்ந்தோம்.மாலை நேரமாகி இருந்தது. இரவு என்ன செய்யப் போகிறோம் என்பதை முடிவு செய்யவில்லை – ஆனாலும் ஓட்டுனர் முகேஷிடம் சொன்னபடி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம் – அனுப்புவதற்கு முன்னர் அவருக்குக் கொடுக்க வேண்டிய அன்பளிப்பையும் கொடுத்து மகன்களுக்காக வாங்கிய உடைகளையும் கொடுக்க அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி. நீங்களும் வீட்டுக்கு வாருங்கள் – இரவு வீட்டுச் சாப்பாடு சாப்பிடலாம் என அழைக்க அவரை அன்புடன் மறுத்தோம் – நண்பர் குரு வருவதாகச் சொல்லி இருக்கிறாரே!

தங்குமிடத்திற்குச் சென்று உடைமைகளை சரி பார்த்து அவரவர் பெட்டிகளை தயார் செய்தோம் – அடுத்த நாள் காலையில் எனக்கு தலைநகர் திரும்ப வேண்டும் – நண்பர்கள் கேரளத் தலைநகருக்குத் திரும்புவார்கள். அதற்கான வேலைகளில் இருக்க நண்பர் குருவிடமிருந்து அழைப்பு. அவருடைய வேலைகளை முடித்துக் கொண்டு இரவு எட்டு மணிக்கு வருகிறேன் – தயாராக இருங்கள் வெளியே சென்று சாப்பிடலாம் – கொஞ்சம் வேலை அதிகம் – இல்லை எனில் என் வீட்டிலேயே சமைத்து சாப்பாடு போட்டிருப்பேன் என்று சொன்னார். நண்பர் வந்து எங்களை எங்கே அழைத்துச் சென்றார், அங்கே என்ன சாப்பிட்டோம், கிடைத்த அனுபவம் என்ன என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி


படங்கள் - இணையத்திலிருந்து....

24 comments:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. காலை வணக்கம் 🙏 கீதாஜி.

   Delete
 2. அட! முகேஷின் குழ்ந்தைகளுக்குப் பிறந்தநாள்!! ஆமாம் இரட்டைப் பிள்ளைகள் வேறு பிறந்தநாள் என்றால் பாவம் அவருக்கு ஆசை இருக்குமே....ஆமாம் நம்மை அழைத்துச் செல்ல்லும் ஓட்டுநர்களும் நம் குடும்பத்தவர் போலத்தான்...நாம் நல்லபடியாக அவரிடம் இருந்தால் அவரும் நம்முடன் நல்ல தோழமையுடன் இருப்பார்கள் பெரும்பான்மையான ஓட்டுநர்கள்...நல்ல காலம் அந்தப் படபடப்பிற்கு வேறு எதுவும் வருந்தும் காரணம் இல்லாமல் இருந்ததே....

  கண்டோய் போகிலால் மூல்சந்த்// ஆமாம் ஜி சுவைத்ததுண்டு. என் கஸினின் மகள் மற்றும் மற்றொரு கசின் அஹமதாபாத்தில் இருந்தார்கள் சிலகாலம். அப்போது அவர்கள் இங்கு வரும் போது வாங்கிக் கொண்டு வந்தார்கள். அடுத்தது என்ன என்று அறிய தொடர்கிறோம்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. படபடப்பிற்கு காரணம் நல்லதாகவே இருந்தது எங்களுக்கும் மகிழ்ச்சி.

   ஆஹா அந்தக் கடையின் பதார்த்தங்களை நீங்களும் ருசித்தீர்கள் என அறிந்து மகிழ்ச்சி. நன்றாகவே இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 3. உங்கள பண்பு பாராட்டுக்குரியது.
  உங்கள் முகப்பு படத்தில் இன்னொரு மானையும் சேர்த்து விடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. முகப்பு படத்தில் இன்னொரு மான் - மூன்று மான்கள் இருக்கும் படம் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்! இருந்தால் மாற்றியமைக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன் ஜி!

   Delete
 4. ஓட்டுநரின் குழந்தைகளுக்கு உடை எடுத்துக் கொடுத்த குணம் போற்றுதலுக்கு உரியது ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. நல்ல இதயத்திற்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 6. அருமையான பதிவு.
  ஓட்டுனருக்கும் தன் குழந்தைகளுடன் பிறந்த நாள் அன்று இருக்க வேண்டும் என்று ஆசைஇருக்கும் இல்லையா?
  குழந்தைகள் நன்றாக இருக்கட்டும் வாழ்க வளமுடன்.
  அவர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுத்து விட்ட உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 7. மகிழ்ச்சியான படபடப்பு...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. ஓட்டுநரைக் கௌரவித்தது மகிழ்ச்சி

  இனிப்பு படம் நேற்று தங்கசாலைத் தெருவில் என் பையன் வாங்கித்தரச் சொல்லி நான் மறந்துவிட்ட அஜ்நபி கடை இதே இனிப்பை ஞாபகப்படுத்தியது

  ReplyDelete
  Replies
  1. அஜ்நபி கடை - இது எங்கே இருக்கின்றது?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 9. ஓ! அந்த ஸஸ்பென்ஸ் ஓட்டுநர் முகேஷின் குழந்தைகளின் பிறந்தநாளா!! களைத்துப் போயிருப்பார் கொண்டாட்டத்தில் உற்சாகம் பெற்றிருப்பார்.

  அடுத்து அறிய தொடர்கிறோம் ஜி

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   Delete
 10. வணக்கம் சகோதரரே

  தங்கள் ஓட்டுனரின் நிலையறிந்து, அவரை குறிப்பட்ட நேரத்திற்கு அனுப்பியது மட்டுமின்றி, அவரின் இரு குழந்தைகளுக்கும், பரிசினையும் வாங்கித் தந்து அனுப்பிய செயல் பாராட்டுக்குரியது. இனிப்பு படங்கள் பார்க்க நன்றாக உள்ளது. தகவல்களும் பயனுள்ளவை. அடுத்து என்ன என்று அறியும் ஆவலில் உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   Delete
 11. ஓட்டுநருக்குக் கொடுத்த கௌரவம் ஏற்கத் தக்கதே! நீங்கள் சொல்லி இருக்கும் இந்தக் கடைக்குப் போனதில்லை. குஜராத் பயணம் முடிவுக்கு வருதா?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 12. முகேஷின் குழந்தைகளின் அளவு தெரியாமலேயே உடைகள் வாங்கினீர்களா? சரியாய் இருந்ததாமா?

  ReplyDelete
  Replies
  1. குழந்தைகளுக்குப் பிறந்த நாள் என்று தெரிந்தவுடன் எத்தனை வயது எப்படி இருப்பார்கள் என விசாரித்துக் கொண்டேனே! சரியாகவே இருந்ததாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....