வியாழன், 26 ஜூலை, 2018

மனதைத் தொட்ட விளம்பரங்கள்….



தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் யூ ட்யூபில் பாடல்/சினிமா பார்க்கும் போது நடுவில் வரும் விளம்பரங்கள் பல சமயங்களில் எரிச்சல் உண்டாக்குபவை. ஆனால் சில விளம்பரங்கள் மனதைத் தொடுபவை. சமீபத்தில் பார்த்த இரண்டு விளம்பரங்கள் மிகவும் பிடித்திருந்தது. ஹுண்டாய் நிறுவனம், இந்தியாவில் 20 வருடங்கள் முடிந்ததைக் கொண்டாடும் வகையில் சில விளம்பரங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அவற்றில் இரண்டு ரொம்பவும் பிடித்தது. குறிப்பாக இந்த விளம்பரம்..... எத்தனை முறை பார்த்து விட்டேன் என கணக்கில்லை.






பஞ்சாபி மொழியில் பேசுகிறார்கள் என்றாலும், ஆங்கிலத்தில் Sub-title இருப்பதால் புரிந்து கொள்ள முடியும். அவர்களது இன்னொரு விளம்பரமும் நன்றாகவே இருக்கிறது. அதையும் பார்க்கலாமே…



சில விளம்பரங்கள் மட்டுமே நமது மனதைத் தொடும்படி அமைகின்றன. 99 சதவீத விளம்பரங்கள் எரிச்சலூட்டுபவையாகவே அமைந்து விடுவது பெரும் சோகம்!

இந்த இரண்டு விளம்பரங்களும் உங்களுக்கும் பிடித்திருக்கலாம். சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

20 கருத்துகள்:

  1. உங்களின் ரசனையை இதிலும் கண்டேன். இரண்டுமே அருமை. நீங்கள் கூறுவதுபோல 99 விழுக்காடு விளம்பரங்கள் எரிச்சலூட்டுகின்றன. அத்துடன் அவை பண்பாட்டு மீறல்களாகவும் உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பண்பாட்டு மீறல்கள் - சினிமாக்களுக்கு இணையாக விளம்பரங்களும் இப்படியே அமைப்பது சோகம்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  2. உங்களிடம் இப்படியுமொரு ரசனை இருப்பதை அறிந்தோம் நண்பரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசனைகள் பலவிதம்..... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

      நீக்கு
  3. ரசித்திருக்கிறேன், நீளம் ஒன்று தான் குறை.
    hdfc இன்சூரன்ஸின் பழைய 'இதுவரை தலை தாழ்ந்ததில்லை, தலை குனிந்து வாழ்ந்ததில்லை' எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதற்கெல்லாம் ரொம்ப முன்பு ராகுல் டிராவிடின் 'ஜாம் ஜாம் ஜாமி" :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீளம் - சில நல்ல விளம்பரங்கள் நீளம் காரணமாகவே பலரால் பார்க்கப்படுவதில்லை.

      ஜாம் ஜாம் ஜாமி ! நல்ல விளம்பரம். சில சமயங்கள் யூவில் விளம்பரங்களாகப் பார்ப்பதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில் கிளாஸ் மாதவி.

      நீக்கு
  4. ரசனையான விளம்பரங்கள்...

    இன்னைக்கு என்ன விளம்பர தினமா...? எங்கள்Blog-லும் இதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னிக்கு என்ன விளம்பர தினமா? ஹாஹா.. சில சமயங்களில் இப்படி அமைந்து விடுவதுண்டு... தற்செயலாகவே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
    2. ஹாஹா.... தற்செயலாக ஒரே விஷயம் வந்து விட்டதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. மிக யதேச்சையாக எங்கள் தளத்திலும் இன்று விளம்பரம் பற்றி(யும்) பேசி இருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவும் பார்த்தேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. இந்த விளம்பரம் பார்த்ததில்லை என்று சொன்னால் நான் சரியில்லை என்று அர்த்தமாகுமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

      விளம்பரம் வந்தே சில வாரங்கள் தான் ஆகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  7. இந்த விளம்பரங்கள் இரண்டுமே பார்த்ததில்லை. மனதில் உணர்ச்சிப் பிரவாகம் எடுத்து ஓடியது. இரண்டுமே அற்புதம்! விளம்பரங்களை மனதில் பதியும் வண்ணம் எடுப்பதில் இந்தியர்களுக்கு நிகர் இல்லை என்பது உண்மை! இரண்டாவது பார்க்கையில் கண்ணீரே வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரங்கள் வந்து சில வாரங்கள் தான் ஆகின்றன. இரண்டில் எனக்கு முதலாவது தான் ரொம்பவே பிடித்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  8. இரண்டு விளம்பரங்களும் மிக அருமை.
    இரண்டாவது விளம்பரம் பார்த்த விளம்பரம். யாரோ அனுப்பினார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  9. அட! எபியிலும் இங்கும் விளம்பரம் பதிவுஅள்.

    இரு காணொளிகளும் அருமை...வெங்கட்ஜி! ரசித்தோம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இன்றைக்கு விளம்பர தினம் போல தற்செயலாக அமைந்து விட்டது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....