எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, July 8, 2018

கோலாட்டம் ஆடலாமா – படங்களின் உலா


Photo of the day Series – Part 4

கடந்த வாரத்தில் #Photo_of_the_day என்ற தலைப்பில் முகநூலில் பகிர்ந்து கொண்ட படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இதோ உங்களுடன்…. இங்கேயும் ஒரு சேமிப்பாக…


படம்-1: எடுத்த இடம் – ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு நெடுஞ்சாலை.


நகைகள் – ஐஸ்க்ரீம் மாதிரி… எவ்வளவு சாப்பிட்டாலும்/போட்டிருந்தாலும், இன்னும் கொஞ்சம் இடம் இருக்கற மாதிரியே இருக்கும்!

கொலுசும் கவிதையும் பிரிக்க முடியாதவை. எத்தனை எத்தனை கவிதைகள், சினிமா பாடல்கள் கொலுசு சம்பந்தப்பட்டவை. காதலியின் கொலுசை வைத்துக் கொண்டு சோக கீதம் பாடும் காதலர்கள்! யாருக்கும் தெரியாமல் காதலிக்கு கொலுசு வாங்கித் தரும் காதலன்! விதம் விதமாகக் காண்பித்து விட்டார்கள், இன்னும் காண்பிக்கிறார்கள்.

கொலுசு வைத்து எத்தனை கவிதைகள்.

“மேகத்திற்கு யார் பூட்டு போட்டது –
கால் கொலுசு!” என்று கூட ஒரு கவிதை படித்த நினைவு.

இந்தப் பெண்மணியின் கால்களில் மூன்று அணிகலன்கள். அனைத்திற்கும் வேறு வேறு பெயர்கள் உண்டு – அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியவில்லை.


படம்-2: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

திருவரங்கத்தின் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து தேர் திருவிழா சமயத்தில் இப்படி வருவார்கள். அரங்கனின் வீதி உலா நடக்கும் சித்திரை வீதியில் ரப்பர் பைகளிலிருந்து தண்ணீர் தெளித்தபடியே வருவது அவர்கள் வழக்கம். அப்படி ஒரு குழு வந்தபோது எடுத்த படம்….


படம்-3: எடுத்த இடம் – ராஜஸ்தான் மாநிலத்தின் புஷ்கர் அருகே ஒரு நெடுஞ்சாலை. [ஒரு ஓவியத்தின் படமும் சாலையில் தண்ணீர் கொண்டுசென்றபோது எடுத்த படமும் இணைக்கப்பட்டது!] 

கிணறு வற்றும்வரை, தண்ணீரின் அருமையை நாம் உணர்ந்து கொள்வதில்லை…..

லோகேஷ் நாகராஜன் என்பவர் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது…. இணையத்திலிருந்து எடுத்துத் தந்திருக்கிறேன்.

வளம் காப்போம்

தாகம் தீர்த்த கிணறுகள் தவித்து
நிற்கிறது தண்ணீருக்காய்...
பரந்து பரவிய ஏரிகளோ மாறி
நிற்கிறது குடியிருப்பாய்...

அசைந்து ஓடிய ஆறுகளும் இங்கு
அழுது தீர்கிறது வறுமையினால்...
அன்பு அலை பேசிய கடலும் கூட
அழிந்து போகிறது கழிவுகளால்...

எட்டும் தொலைவில் நீரின்றி
ஏங்கி தவிக்கிறது ஒரு பாதி...
வற்றிய நிலையில் நீரிருந்தும்
வாரி இறைக்கிறது மறு பாதி...

சொட்டும் நீரின் வழித்தேடி
சுற்றும் காலம் தூரமில்லை...
வளங்கள் காக்க தவறிவிட்டால்
வாழ இனி வழியுமில்லை...


படம்-4: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

தேர் திருவிழாவிற்கு வந்திருந்தவர்களைப் பார்க்கலாம் என வீட்டிலிருந்து வெளியே வந்த பெண்மணியின் குழந்தை – கூட்டத்தில் யாரையோ பார்த்து அழ ஆரம்பித்தது…..

அழாதடா குட்டிச் செல்லம்….
அந்த கேமராவோட இருக்கற,
பூச்சாண்டி மாமாவை விரட்டிடலாம்!

என்று சொல்லி இருப்பாரோ குழந்தையின் அம்மா!


படம்-5: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

அம்மாவின் இடுப்பிலும், அப்பாவின் தோள்களிலும் இருப்பது ஒரு சுகானுபவம். இந்த அனுபவம் திரும்பக் கிடைத்திடாதா? என்ற ஏக்கம் வளர்ந்த ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும்….


படம்-6: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

அரங்கனின் வீதி உலா – சித்திரைத் தேரில்.  அவனுக்கு முன்னால் கோலாட்டம் ஆடுகின்ற சிறுமிகள். தேரில் இருக்கும் சாமிக்கு இவர்கள் ஆட்டம் பிடிக்கிறதோ இல்லையோ, இப்படி ஆடுவது இச்சிறுமிகளுக்குப் பிடித்திருக்கிறது! கோலாட்டம் ஆடி முடிந்த சமயத்தில் தங்களது மகிழ்ச்சியை அனுபவிக்கும் சிறுமிகள் – நெற்றிச்சுட்டி காதருகே வந்திருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் புன்னகை புரிந்தபடி இருக்கும் சிறுமியின் சிரிப்பு உங்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும்….. 


படம்-7: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

கிராமத்து மிட்டாய் கடைகளில் கிடைக்கும் இனிப்புகள் – நம்மைத் தூண்டும் விதத்தில் தான் எப்போதுமே – “என்னைக் கொஞ்சம் சாப்பிடேன் என அழைப்பது போலவே இருக்கும்! என்ன தான் பெரிய பெரிய கடைகளில் அலங்கார விளக்குகளோடு அமைந்திருக்கும் கடைகளில் கிடைக்கும் இனிப்புப் பண்டங்கள் சாப்பிட்டாலும், அவ்வப்போது இப்படியான கடைகளில் விற்பவர் பாசத்துடன் தரும் இனிப்பைச் சாப்பிடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி அங்கே கிடைப்பதில்லை.

பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதைச் சொல்லுங்களேன். படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது, படம் பார்த்த போது தோன்றிய எண்ணம் என்ன என்பதையும் சொல்லுங்கள் – முடிந்தால் கவிதையாகவும் எழுதலாமே – பின்னூட்டத்தில்….

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

45 comments:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

  கீதா

  ReplyDelete
 2. காலில் கொலுசு...என்ன திக்காக இருக்கு! ஒன்று நம்மூரில் சொல்லப்படும் தண்டை யோ? மற்றொன்று தெரியலை...கையில் போடும் கங்கண் போல இருக்கு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. விதம் விதமான கால் கொலுசு/அணிகள்... கொலுசு சலங்கை வைத்து பெரிதாகவே இருக்கின்றன இங்கே.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 3. குட்மார்னிங் வெங்கட். முன்னால் செல்லும் வாகனத்திலிருந்து தெரியும் ஸ்மைலி... நட்பூ!

  ReplyDelete
  Replies
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   நட்பு - சிரிப்பு! நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. கொலுசைத்தவிர இருப்பதன் பெயர் தண்டட்டியோ?

  ReplyDelete
  Replies
  1. தண்டட்டி - இந்த வார்த்தையை நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேட்[படிக்]கிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. வண்டியின் பின்னால் அந்தப் படம் புன்சிரிப்பைத் தோன்ற வைத்தது

  ஸ்ரீரங்கத்தில் ரப்பர் பையிலிருந்து தண்ணீர் தெளித்துக் கொண்டு வருவது வெயில் என்பதாலோ? அடுத்து ராஜஸ்தான் பெண்கள் புஷ்கர் அருகே தண்ணீர் கொண்டு செல்வது எவ்வளவு கடினமான வாழ்க்கை என்று சொல்லுகிறது...இரு படங்களுக்கும் உள்ள வித்தியாசம்!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் வெயில் தான். இப்படி பல குழுவினர் செல்வார்கள்.

   இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் - உண்மை. கடினமான வாழ்க்கை தான் அங்கே. அதுவும் பாலைப் பகுதியில் ரொம்பவே கஷ்டம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 6. //அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியவில்லை //

  வார்த்தைகளில்தான் என்ன சோகம்...!!!! .ஹா.... ஹா....ஹா...

  ReplyDelete
  Replies
  1. வார்த்தைகளில் சோகம்! ஹாஹா... கேட்டிருந்தால் விடை கிடைத்திருக்கலாம் எனும் சோகம் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. ஓவியமும் படமும் - ஸூப்பர். கவிதை அருமை. முகத்தில் அறைகிறது. சென்னையில் 2020 க்குப் பிறகு கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் வருமாம். நிலத்தடி நீரே இருக்காதாம்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம் போர் போட்டுட்டே இருக்காங்களே உறிஞ்சுராங்களே அப்புறம் எப்படி நிலத்தடி நீர் இருக்கும்?!....நினைத்தாலே நடுக்கம் தான்..

   கீதா

   Delete
  2. இருக்கும் நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொண்டே இருக்கிறோம். பெய்யும் மழையும் நிலம் உறிஞ்சமுடியாத படி எங்கேயும் காங்க்ரீட்.... என்ன செய்ய...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  3. ஆமாம் கீதா ஜி! உறிஞ்சித் தள்ளுகிறார்கள்..... எங்கே கொண்டுவிடப் போகிறதோ

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 8. அழும் குழந்தையும் சிரிக்க வைக்கும் கவிதை வரிகளும்...... ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா.... ர்சிக்க முடிந்ததா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. கவிதைகள் நன்றாக இருக்கின்றன..

  அழும் குழந்தையின் முக உணர்வுகள் செமையா இருக்கு. அருமையான ஃபோட்டோ...

  கோலாட்டம் போடும் பெண்கள் க்யூட்!! கள்ளமில்லா உள்ளம் சொல்லும் முகங்கள்!! மகிழ்வான முகங்கள்! அருமையா வந்திருக்கு இந்த ஃபோட்டோவும்...

  கிராமத்து இனிப்புகள் இப்படியான கடைகள் ஆம் ஈர்க்கும். ஊரில் இருந்தவரை சாப்பிட்டிருக்கேன்...ஆம் அன்பும் சேர்ந்து கிடைக்கும்!

  எல்லா படங்களும் அட்டகாசம் ஜி! மிகவும் ரசித்தோம்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கள்ளமில்லா உள்ளம் சொல்லும் முகங்கள்.... உண்மை. இப்படியே இருந்துவிட்டால் என்ற கேள்வி மனதிற்குள் வந்து கொண்டே இருந்தது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 10. கோலாட்டச் சிறுமியின் நீண்டபல் அணில் சிரிப்பும், இனிப்புப்பாட்டியும் ரசிக்க வைத்தார்கள். மொத்தத்தில் எல்லாமே அருமை.

  ReplyDelete
  Replies
  1. அனைத்தும் ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. அருமையான தொகுப்பு
  பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் ஜி!

   Delete
 12. ஓவியமும், புகைப்படமும் இணைந்த படத்தை கவிதையோடு ரசித்தேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 13. காலுக்கு வலு சேர்க்கும் தண்டை வகைகள், கொலுசு அணிந்து செல்வார்கள். கேதார்நாத் சென்ற போது நல்ல வாட்டசாட்டமான பெண்கள் இது போல் காலில் தடிமான தண்டை அணிந்து நன்றாக நிமிர்ந்து கையில் தடியுடன் மகாராணி போல் நடந்து போன காட்சி கண்ணில் இருக்கிறது.

  என் அம்மா பாட்டி இது போல் தண்டை அணிந்து இருக்கும் படம் எங்கள் மாமா வீட்டில் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தண்டை, தண்டட்டி இப்படி பலவற்றை கால்களில், கைகளில் அணிந்து அவர்கள் நடப்பது ஒரு அழகு - குறிப்பாக மூதாட்டிகள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 14. //அரங்கனின் வீதி உலா நடக்கும் சித்திரை வீதியில் ரப்பர் பைகளிலிருந்து தண்ணீர் தெளித்தபடியே வருவது அவர்கள் வழக்கம்.//

  அழகர் வரும் போது இது போல் தண்ணீர் தெளிப்பார்கள் மதுரையில். அவர்கள் தலையில் தொப்பி அணிந்து வருவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா இங்கே கைகளில் என்றால் மதுரையில் தொப்பியாகவா.... தகவல் புதியது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 15. லோகேஷ் நாகராஜன் கவிதை இனி வரும் நிலைமை சொல்கிறது.
  பயமாய் தான் இருக்கிறது.அந்த நிலைமை வராமல் காக்க வேண்டும். இயற்கையை காத்து.

  ReplyDelete
  Replies
  1. பயம் தான்..... என்ன செய்யப் போகிறோம் என்று தான் புரியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 16. இடுப்பில் மணி கட்டி செல்வது வேண்டுதலோ!
  எல்லா படங்களும் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. சுற்றுப் புற கிராமங்களிலிருந்து வந்திருந்த பலர் இப்படி மணிகளை இடுப்பில் கட்டியிருந்தார்கள். வேண்டுதலாகத் தான் இருக்க வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 17. படங்களும், விளக்கங்களும் அருமை. தண்ணீர்ப்பையுடன் திருவரங்கத்தில் வருவோரைப் பார்த்தபோது Ten Commandments திரைப்படம் நினைவிற்கு வந்தது. அதில் கதாநாயகன் பாலைவனத்தில் விடப்பட்டு தண்ணீர் இல்லாத நிலையில், தன்னிடம் வைத்திருந்த தண்ணீர்ப்பையை முடிந்த மட்டும் உறிஞ்சிக் குடிக்கும் காட்சி பார்ப்பவர் மனதை உலுக்கிவிடும்.

  ReplyDelete
  Replies
  1. Ten Commandments படத்தின் காட்சி நினைவுக்கு வரவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 18. படங்களை ரசித்தேன்.

  தண்ணீர் தெளித்துக்கொண்டே செல்வது - பார்க்கவே நல்லா இருந்தது. புழுதி கிளம்பக்கூடாது என்ற காரணமாக இருக்கலாம். இல்லை வெயிலின் தாக்கம் தெரியக்கூடாது என்பதற்காகவும் இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. என்ன காரணம் என்று எனக்கும் தெரியவில்லை. கேட்கவும் இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 19. முதல் படத்திலிருக்கும் அம்மணியின் காலில் இருப்பது ஒன்று கொலுசு , மற்ற இரண்டும் காப்பு வகையை சார்ந்தது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 20. படங்கள் அனைத்தும் அருமை வெங்கட்ஜி. ரசித்தோம்.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 21. அழாதடா குட்டிச் செல்லம்….
  அந்த கேமராவோட இருக்கற,
  பூச்சாண்டி மாமாவை விரட்டிடலாம்!

  என்று சொல்லி இருப்பாரோ குழந்தையின் அம்மா!//

  ஹா ஹா ஹா ஹா....இதை வாசித்ததும் சிரித்துவிட்டேன். இந்தக் கமென்ட் காலையில் போட்டேன்....வந்துவிட்டது என்று நினைத்து அடுத்த கமென்டுக்குப் போயிருக்கேன் ஆனா இது வந்திருக்கவில்லை இப்பத்தான் பார்த்தேன்...துளசியின் கமென்டை இங்கு போடும் போது...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 22. இந்தப் பெண்மணியின் கால்களில் மூன்று அணிகலன்கள். அனைத்திற்கும் வேறு வேறு பெயர்கள் உண்டு – அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியவில்லை.//

  கொலுசுக்கு மேல் தண்டை, அதன் மேல் காப்பு. இதெல்லாம் பிறந்த குழந்தைக்கு காப்பு போடும் சடங்கில் இன்றும் போடப்படுகிறது.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....