ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

பூப்பறிக்க கோடரி எதற்கு – படங்களின் உலா



Photo of the day Series – Part 8

கடந்த சில நாட்கள் #Photo_of_the_day என்ற தலைப்பில் முகநூலில் பகிர்ந்து கொண்ட படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இதோ உங்களுடன்…. இங்கேயும் ஒரு சேமிப்பாக…




படம்-1: எடுத்த இடம் – சுக்ரதால், உத்திரப் பிரதேசம்

எதைச் சாப்பிட்டாலும், நல்லா இருக்கா இல்லையான்னு பார்த்துட்டு சாப்பிடணும்னு அம்மா சொல்லி இருக்காங்க! அதான் பார்க்கறேன்!

பேசும் வார்த்தைகளும் நம்மை புண்படுத்தாத வார்த்தைகளாக இருக்கட்டும் – அப்போது தான் அடுத்தவர்களையும் புண்படுத்தாது…..


படம்-2: எடுத்த இடம் – தரம்ஷாலா, ஹிமாச்சலப் பிரதேசம்.

பூப்பறிக்க கோடரி எதற்கு என ரஜினி படத்தில் வரும் பாடல் வரிகள் கேட்டதை இந்த ஹிமாச்சல்காரர்கள் கேட்டதில்லையே! அதனால் தான் கோடரியும் பூவும் ஒரே இடத்தில்!! 


படம்-3: எடுத்த இடம் – மஹாபலிபுரம், தமிழ்நாடு.

பள்ளி நாட்களில் ஒரு சுற்றுலா கூட நான் சென்றதில்லை. போகும் வசதி அப்போது இல்லை. கல்லூரி சமயத்தில் இரண்டு முறை சுற்றுலா சென்றிருந்தாலும் பள்ளிப்பருவ சுற்றுலா நான் அனுபவிக்காத ஒன்று….

யார்ப்பா அது, அதுக்குத்தான் இப்போ சேர்த்து வைத்து சுத்தறியேன்னு குரல் கொடுக்கறது!

இந்த மாணவர்கள் சுற்றுலா வந்த இடத்தில் எப்படி எல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நானும் அதே கல் பொம்மை மீது அமர்ந்து கொண்டேன் – கூடவே மகளும்! அந்த புகைப்படத்தில் சில மாணவர்களும் இருக்கிறார்கள். பிறிதொரு சமயத்தில் பகிர்கிறேன்!


படம்-4: எடுத்த இடம் – மஹாபலிபுரம், தமிழ்நாடு.

அன்பு எப்போதும் நரகத்தைப் படைக்காது. அன்பு இருந்தால் சுவர்க்கமாகத் தான் இருக்கும்.  அன்பு செய்தால் உங்களுக்கு உண்டாவது மகிழ்ச்சி மட்டுமே. அந்த மகிழ்ச்சியே நீங்கள் நேசிப்பதின் அடையாளம் – Osho.

அண்ணா மற்றும் அம்மாவுடன் வந்திருந்த இக்குழந்தையின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. மஹாபலிபுரத்தில் 2013-ஆம் வருடம் எடுத்த படம்.
    
“ஹையோ ஹையோ…. இந்த ஃபோட்டோ புடிக்கிற மாமாவைப் பார்த்தா சிப்பு சிப்பா வருது….”


படம்-5: எடுத்த இடம் – புவனேஷ்வர், ஒடிஷா – ஏப்ரல் 2016

படித்ததில் பிடித்ததாக ஒரு கவிதை…. எழுதியவர்  அ. வேளாங்கண்ணி…

எங்களைப் பார்... சிரி
எங்களைப் பார்... சிந்தி
கள்ளமில்லா சிரிப்பு
கடைசிவரை இருந்தால்
உள்ளம் மிக மகிழும்
உள்ளவரை சுகம்தான்
தள்ளிவைத்து கஷ்டத்தை
கண்டுக்காமல் விட்டால்
கஷ்டம்கூட ஏண்டா
இங்குவந்தோமென நினைக்கும்
தேவையில்லா குழப்பங்கள்
வேண்டாத கற்பனைகள்
விஷயமில்லா பேச்சுக்கள்
மலிவாய்கிடைக்கும் கிசுகிசுக்கள்
அத்தனையும் அத்துவிட்டால்
இருக்கும்வரை மகிழ்ச்சிதான்
வாழும்வரை சிரிப்பு தான்...

சிரி... சிரிக்கவிடு
நமது புதிய குறிக்கோளாக இருக்கட்டும்....

ஹா.. ஹா... ஹா...


படம்-6: எடுத்த இடம் – வரகூர், தமிழ்நாடு

இறைவனின் படைப்பில் எத்தனை உன்னதம்…

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! – ஸ்வாமி விவேகானந்தர். 


படம்-7: எடுத்த இடம் – மஹாபலிபுரம், தமிழ்நாடு.

பிரார்த்தனைகளை விடவும் உயர்ந்தது பொறுமை – புத்தர்.

எத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கும் கடற்கரை கோவில். இப்படி ஒரு கட்டுமானம் இப்போது முடியுமா?   

பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதைச் சொல்லுங்களேன். படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது, படம் பார்த்த போது தோன்றிய எண்ணம் என்ன என்பதையும் சொல்லுங்கள் – முடிந்தால் கவிதையாகவும் எழுதலாமே – பின்னூட்டத்தில்….

இதுவரை Photo of the Day Series-ல் வெளியிட்ட படங்கள் அனைத்தையும் பார்க்க, கீழுள்ள சுட்டியைச் சுட்டலாம்!


மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


36 கருத்துகள்:

  1. அடடே நம்ம கோடரியும், பூவும் ஸூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... ஆமாம் நண்பரே. கோடரியும் பூவும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட். அத்தனை படங்களும் ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் மதியத்தில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஆறாவது படத்தில் உள்ள காயை நானும் ஒருமுறை பகிர்ந்துள்ளேன்! அதன் பூ கண்ணைப்பறிக்கும் கவர்ச்சியுடன் மிக மிக அழகாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவில் இருக்கிறது. பூவும் வெகு அழகான பூ தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. முதல் படத்தில் உள்ள நம் மூதாதையரை உங்களுக்கு குழந்தையாகத் தெரிகிறது... எனக்கு வயதானவராகத் தெரிகிறது!
    எனக்கு எப்படித் தோன்றுகிறது என்றால், மறைந்த மனைவியின் நினைவு வந்து விட்டது அதற்கு... கையில் உள்ள பொருளைச் சாப்பிடாமல் வைத்துக்கொண்டு "அவள் இருந்தா பிடுங்கிச் சாப்பிடுவா... அவளுக்குப் பிடித்தது..." என்று கண் கலங்குகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... உங்கள் எண்ணமும் சிறப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. நானும் பள்ளிப் பருவங்களிலும் கல்லூரிக்கு காலத்திலும் சுற்றுலா சென்றதில்லை.







    ஹிஹிஹிஹி... இப்போதும் செல்வதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதும்! :) செல்லலாம் ஸ்ரீராம். பயணம் நல்லது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. நெற்றி கொள்ளா பொட்டுடன் சிறுமி... ஏன் அவள் தாய் இவ்வளவு பெரிய மைத் திலகமிட்டாளோ... திருஷ்டிப்பொட்டும் வித்தியாசமான இடத்தில வைத்திருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னக் குழந்தைகளுக்குப் பொட்டு பெரிதாகத் தான் வைப்பார்கள். திருஷ்டிப்பொட்டும் கன்னத்திலும் வைக்கலாம். நெற்றிப் பொட்டிலும் வைக்கலாம். வழக்கம் தான்.

      நீக்கு
    2. பெரிய பொட்டு - சிலர் இப்படி வைக்கிறார்கள். திருஷ்டிப்பொட்டு எப்போதுமே கோணலாகத்தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  7. பூவும் கோடரியும்... பொருந்தா காம்பினேஷன்!! சிரிக்கும் பல்லில்லா சிறுவன் புன்னகைக்க வைக்கிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பொருந்தாத காம்பினேஷன் - வித்தியாசமாக இருந்ததால் அப்படியே எடுத்தேன்.

      பல்லில்லா சிறுவன் - எவ்வளவு அழகு அந்தச் சிரிப்பு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. பள்ளிப் பருவத்தில் மட்டுமில்லை. அதன் பின்னரும் கல்யாணம் ஆகும்வரை சுற்றுலானு போனதில்லை. திருப்பதிக்குப் போய் வருவோம். குலதெய்வம் என்பதால்! படங்கள் எல்லாமே அழகு. எல்லாவற்றிலும் அழகு அண்ணனுடன் வந்த தம்பியா, தங்கையா அதுவும், படம் பிடிக்கும் மாமாவைப் பார்த்துச் சிப்பாச் சிக்கும் பாப்பாவும் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலருக்கும் பயணம் வாய்ப்பதில்லை. உங்களுக்குப் பிடித்த அந்த அழகான படம்.... அனைவருக்கும் பிடிக்கும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. அழகான குழந்தை படங்கள் உட்பட அனைத்தும் அருமை...

    "பூப்பறிக்க கோடரி எதற்கு ?" படத்தை நம்ம கில்லர்ஜி தளத்திற்கு வைத்து விட்டால் பொருத்தமாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி தளத்தில் பயன்படுத்தலாம் - மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
    2. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  11. எல்லாப்படங்களும் ரசிக்க வைத்தன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  12. என்னை மிகவும் கவர்ந்த படம் அந்த இரண்டு பல் குழந்தை படம். போட்டோ எடுக்கிறார் என்றவுடன் அழதுகொண்டே சிரிக்கும் கள்ளமில்லா சிரிப்பு, கன்னத்தில் கண்ணீர் வரிகள் இவை துல்லியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜே.கே. ஜி!

      நீக்கு
  13. //முதல் படத்தில் உள்ள நம் மூதாதையரை உங்களுக்கு குழந்தையாகத் தெரிகிறது... எனக்கு வயதானவராகத் தெரிகிறது!//

    எனக்கும் வயதானதாக தெரிந்தது.

    எல்லா படங்களும் மிக அருமை. வயதான குரங்கிற்கும் அம்மா நினைப்பு வரும் தானே ! ஸ்ரீராம்.
    எத்தனை வயதானலும் அம்மா நினைப்பு வருதே .

    "பூப்பறிக்க கோடரி எதற்கு ?" என்ற படத்தைப்பார்த்ததும் எனக்கும் தேவகோட்டை ஜி நினைவுக்கு வந்தார்.
    தனபாலன் சொல்வது போல் இந்த படம் அவர் வலைத்தளத்திற்கும் பொருத்தமாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  14. படங்களும் அவற்றுடனான பகிர்வும் அருமை. கடைசிப் படம் மிகக் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  15. சின்ன வயசுக்கும் சேர்த்து ஊரு சுத்துறீங்கன்னு சொன்னது நானாக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீதானாம்மா அது... கண்ணு வச்சுட்டீங்க.... இப்பல்லாம் சுத்தவே வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குது! அக்டோபருக்கு அப்புறம் எங்கேயும் போகல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    அத்தனை படங்களும் சிறப்பு. குழந்தைகள் படங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன முகம் மறைக்கும் பொட்டுடன் கூடிய குழந்தை மிக அழகு. மாமல்லபுரம் படங்களும் கவர்ந்தன. தலைப்பை பார்த்தவுடன், சகோதரர் கில்லர்ஜி அவர்களுகேற்ற பொருத்தமான ஏதாவது பதிவோ என நினைத்தேன். அந்த படமும் அருமையாயிருந்தது. தலைப்புக்கேற்ற அந்த படம் சகோதரரை நினைவுபடுத்தியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....