வியாழன், 30 ஆகஸ்ட், 2018

கதம்பம் – அகர் அகர் இனிப்பு – வரலக்ஷ்மி விரதம் – சென்னையும் நானும் – ரவா இட்லி



அகர் அகர் இனிப்பு…





சுதந்திரத்தை இனிப்போடு கொண்டாடுவோமா!! அகர் அகர் என்றும் சைனா கிராஸ் என்றும் சொல்லப்படுகிற இதை கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர சுவைத்ததில்லை. இது சைவம் தானா என்பதில் பெருத்த சந்தேகம் இருந்தது. மகள் தன் பாடப்புத்தகத்திலும், இணையத்திலும் தகவல்களைச் சேகரித்து சந்தேகத்தை தீர்த்தாள்.

அப்புறம் இணையத்தில் கிடைத்த பலதரப்பட்ட ரெசிபிக்களில் தேர்ந்தெடுத்து செய்தேன். பக்குவம் திருப்தி தரவில்லை. மீண்டும் செய்து பார்க்க வேண்டும்.

ரோஷ்ணி கார்னர் – மாணவர்களிடமிருந்து மாற்றம்:



மாணவர்களிடமிருந்து மாற்றம் என்ற திட்டத்தின் கீழ் சென்ற மாதம் முழுவதும் தரம் பிரித்த குப்பைகளை கார்ப்பரேஷனுக்கு வழங்கி ஊழியர்களிடம் அன்றாடம் கையொப்பம் பெற்றதற்காக ஒரு அங்கீகாரம்..

ரவா இட்லி!!



இதற்கு முன்பு இந்த இட்லியை செய்திருக்கிறேனா என்பது நினைவில்லை...சிறுவயதில் பார்த்த MTR ரவா இட்லி விளம்பரம் நினைவுக்கு வரவே இணையத்தில் தேடினேன். அந்த விளம்பரம் கிடைக்கவில்லை. நடுத்தர வயதுள்ள ஒருவர் ஹோட்டலில் ஆசையாக ரவா இட்லி ஆர்டர் செய்து, அதை பிய்த்து சாப்பிடுவதை அழகாக காண்பித்திருப்பர்.

இந்த இட்லி செய்வது மிகவும் சுலபம். அரை மணியில் செய்து விடலாம். வறுத்த ரவையாகவே கிடைத்தாலும் மீண்டும் ஒருமுறை வறுத்துக் கொள்ளவும். ஒரு பங்கு ரவைக்கு முக்கால் பங்கு தயிர் சேர்த்து ஊறவைக்கவும். இருபது நிமிடத்திற்குப் பின் எண்ணெயில் தாளிப்புகளைச் சேர்த்து உப்பும் சிறிதளவு சமையல் சோடாவும் சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும். இட்லி தட்டுகளில் விட்டு ஆவியில் வைத்து எடுக்கவும்.

விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்.

மகளின் பள்ளியில் விளையாட்டு விழா!!!



சமீபத்தில் மகளின் பள்ளியில் இந்த ஆண்டுக்கான விளையாட்டு விழா நடந்தது. காலையிலேயே நானும் மகளும் பள்ளிக்குச் சென்று அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்தோம். யோகா, நடனங்கள், தற்காப்புக்கலைகள் என பல நிகழ்வுகள். ஆசிரியர்களின் சிறந்த பயிற்சியிலும், குழந்தைகளின் உழைப்பாலும் விழா சிறப்பாக நடந்தது. மகள் சில நிகழ்வுகளில் பங்கெடுத்தார். இனிய நாளாகக் கழிந்தது. நிறைய படங்கள் எடுத்தேன் என்றாலும் ஒரு சில மட்டும் இங்கே….

அரிசி உப்புமாவும், கத்திரிக்காய் கொத்ஸும்…



இன்று தான் சிதம்பரம் நடராஜருக்கு சம்பா சாதமும், கத்திரிக்காய் கொத்ஸும் நிவேதனம் செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டேன். அரிசி உப்புமாவை கொத்ஸுடன் சுவைத்ததில்லை. இன்று என்னமோ செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. வாங்க சாப்பிடலாம்.

சென்னையும் நானும்… - சென்னை பர்த்டே ஸ்பெஷல்!



சென்னைக்கு பர்த்டேவாம். எல்லோரும் பதிவு போடாறாங்க. அந்த வரிசையில் எனக்கும் சென்னைக்கும் உண்டான தொடர்பை எழுதாட்டா எப்படி!!

உறவுகளும், நட்புகளும் கொட்டிக் கிடக்கிற சென்னைக்கு சிறுவயதிலிருந்தே விடுமுறையில் நீலகிரி எக்ஸ்பிரசிலும், எங்கப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச மாதிரி பேருந்து மாற்றி மாற்றி ஏறியோ பலமுறை சென்றிருக்கிறேன்...:) கோவையிலிருந்து சேலம், விழுப்புரம், என மாற்றி மாற்றி பிடித்து ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் என்னை பிடித்து இழுத்துக் கொண்டு செல்வார்கள்....:) சிலுசிலுன்னு கோவையிலிருந்த எங்களுக்கு வேர்வை காதோரங்களில் வடிந்தது சென்னையிலும், சிவகங்கையிலும் தான்..:)

அவ்வப்போது சென்னைக்கு விடுமுறைக்காகவும், விசேஷங்களுக்காகவும் வந்து கொண்டிருந்த நான், தொடர்ந்து ஆறுமாதங்கள் வசித்தது படிப்பு முடித்த கையோடு. டிப்ளமோவும் Autocadம் முடித்த கையோடு CNC turning& milling கோர்ஸ் படிக்க தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு அவர்களின் இன்ஸ்ட்டியூட்டில் கற்றேன். வார இறுதியில் மாமா வந்து கூட்டிச் செல்வார். அப்போ தான் மெரீனாவுக்குச் சென்றேன்.

பின்பு கோர்ஸ் முடித்த கையோடு மாமா வீட்டில் ஆறுமாதங்கள் போல தங்கியிருந்து வேலைக்கு விண்ணப்பிக்கத் தொடங்கினேன். சில நேர்முகத் தேர்வுகளுக்கும் சென்றேன். வேலை கிடைத்தால் ஹாஸ்டலில் தங்கலாம் என்பது எண்ணம். சில வேலைகளும் கிடைத்தன. ஆனால் கணக்கிட்டு பார்த்தால் செலவுக்கே அப்பாவிடம் கேட்கும் படியாக இருக்கும் என்று தோன்றவே, கோவைக்கே வந்துவிட்டேன்.

சென்னையில் பங்கேற்ற பதிவர் சந்திப்புகளும், பதிவர் மாநாடும் மறக்க இயலாது. நட்புவட்டத்தையும், உறவினர்களையும் அள்ளித் தந்த சென்னைக்கு ஹாப்பி பர்த்டே!!

வரலக்ஷ்மி நோன்பு…






வரலக்ஷ்மி நோன்பு உங்கள் எல்லோரின் ஆசிகளோடு நல்லபடியாக செய்தாயிற்று. எல்லோரும் நல்லபடியாக இருக்க அவள் வழி செய்யட்டும். தாம்பூலங்களும், பிரசாதங்களும் குடியிருப்பில் உள்ளவர்களுக்குத் தந்ததில் மகிழ்ச்சி.

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

24 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். ரவா இட்லி படம் கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் ஸ்ரீராம்.

      ரவா இட்லி படம் - ஆமாம் நானும் படத்தில் ரசித்தேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நான் ஃபேஸ்புக்கிலேயே சொல்லியிருந்தபடி உப்புமாவைவிட அதிகம் கவர்ந்தது கத்தரிக்காய் கொத்ஸுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. சென்னை பற்றிய பதிவு இங்குதான் படிக்கிறேன். நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. சுவையான கதம்பம். அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. தஙகளின் அன்பு மகளுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. கதம்பம் ரசிக்க வைத்தது சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  7. கதம்பம் சுவை....ஜடை பின்னல் அலங்காரம், பூச்சரம் சூப்பரா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

      நீக்கு
  8. எனக்கு ரவை இட்லி ரொம்ப பிடிக்கும்

    வரலட்சுமி நோன்பு அலங்காரம் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  9. கதம்பம் நன்றாக இருக்கிறது.
    மீண்டும் ரசித்து படித்தேன்.

    //தாம்பூலங்களும், பிரசாதங்களும் குடியிருப்பில் உள்ளவர்களுக்குத் தந்ததில் மகிழ்ச்சி.//

    நானும் எடுத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    கதம்பம் நன்றாக இருந்தது. இனிப்பு, ரவா இட்லி, அரிசி உப்புமா, க. கொத்ஸு படங்கள் பார்வைக்கே நன்றாக இருந்தன. தங்கள் மகளின் பள்ளியின் ஆண்டு விழாக்களில் கலந்து கொண்ட தங்கள் மகளுக்கு அன்பான வாழ்த்துக்கள்.
    சென்னை பற்றிய விபரங்கள் அருமை.
    வரலெட்சுமி விரத கொண்டாட்டத்திற்கு வாழ்த்துகள். அம்மன் அலங்காரம் சூப்பராக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி


    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்....

      நீக்கு
  12. கதம்பம் மணம் வீசுகிறது.
    சைனா கிராஸ் வாங்கி துண்டுகளாகி வென்னீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள். அப்புறம் அந்த தண்ணீரிலேயே காய்ச்சி அது கரைந்ததும் சிறிது ஆறியதும் காய்ச்சிய பால் அல்லது தேங்காய் பால், பொடித்த சீனி அல்லது ஆரஞ்சு ரசம் அல்லது பழ ரசங்கள் கலந்து freezerல் வைத்தால் அழகாய் செட் ஆகி விடும். இதில் பால் அல்லது தேங்காய்ப்பால் கலந்தால் ஏற்கனவே ஊற வைத்த பாதாம்பருப்புகளை தோலுரித்து மெல்லியதாய் சீவி சேர்த்து freezerல் வைக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....