புதன், 31 அக்டோபர், 2018

கதம்பம் - பண்டிகைகளும் சோதனை எலிகளும் – அப்பள பஜ்ஜி – ஐரீஸ் முறுக்கு – தூதுவளை துகையல்



சோதனை எலிகள்:


உக்காரை - சென்ற வருடம் முதல் முயற்சியாக....

சற்றே இடைவெளிக்குப் பிறகு ஒரு கதம்பம் பகிர்வு – இந்த வாரம் எல்லாமே சமையல் சம்பந்தமான விஷயங்கள் தான்! முதலில் சோதனை எலிகள் பற்றி பார்க்கலாம்! :)

செவ்வாய், 30 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரியில் என்ன பார்க்கலாம்…



ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 14

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


வண்ண வண்ண மாலைகள்...
குஃப்ரியிலிருந்து....

நார்கண்டாவிலிருந்து புறப்பட்டு, மதிய உணவு சாப்பிட்ட பிறகு குஃப்ரியில் இருக்கும் சில இடங்களைச் சுற்றலாம் என முடிவு செய்தோம். குஃப்ரியில் அப்படி என்னதான் இருக்கிறது? இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

திங்கள், 29 அக்டோபர், 2018

கதை மாந்தர்கள் – தாடி சுயம்பு அண்ணன் மற்றும் ஈச்சு மாமா - பத்மநாபன்



இவர் அவரல்ல....  
படம்: இணையத்திலிருந்து....

எனது நண்பர் சிவாவின் மகளின் திருமண அழைப்பிதழை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி தொலைபேசியிலும் அழைத்திருந்தார். சென்னையில் திருமணம்.

எங்கள் ஊர் திருமணம் என்றதும் எனக்கு உடனே நினைவுக்கு வருவது இரண்டு பேர். முதலில் திருவாளர் தாடி சுயம்பு அண்ணன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுபவர். இரண்டாமவர் எங்கள் பாசமான ஈச்சு மாமா அவர்கள்.

வியாழன், 18 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு


ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 13

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


புதன், 17 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்



ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 12

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ஹாதூ பீக், நார்கண்டா, ஹிமாச்சலப் பிரதேசம்


செவ்வாய், 16 அக்டோபர், 2018

சுற்றுலா பருவம் – ஒற்றைக் குழலும் இரண்டு குச்சிகளும்

விதம் விதமாய் நடனம் - பகுதி 5

பர்யாடன் பர்வ் – 2018 – தலைநகர் தில்லியில் கடந்த மாதம் 16-27 தேதிகளில் நடந்த ஒரு நிகழ்ச்சி. இந்திய அரசின் சுற்றுலாத் துறையினர் நடத்திய நிகழ்ச்சி. தலைநகர் தில்லியின் ராஜபாட்டையில் [ராஜ்பத்] நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஒன்றாக ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் பல மாநிலங்களிலிருந்து நடனங்கள் நடந்தன.  அப்படி நடந்த நடனங்களை நான் எடுத்த நிழற்படங்களை சில பகுதிகளாக உங்களுடன் பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் இதோ ஐந்தாம் பகுதியாக வடகிழக்கு மாநிலத்திலிருந்து ஒரு நிகழ்ச்சி. 

திங்கள், 15 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – காலை உணவு – நார்கண்டா நோக்கி – ஆப்பிள் தோட்டங்கள்



ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 11

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


சூரியன் உதிக்கத் தயாரான போது...
ஷிம்லா நகரிலிருந்து...

சனி, 13 அக்டோபர், 2018

காஃபி வித் கிட்டு – ஸ்வச்ச் பாரத் – பதிவர் ஆச்சி ஆச்சி – மீண்டும் இணைந்த கேஜேஒய்-எஸ்பிபி – ஹே மா


காஃபி வித் கிட்டு – பகுதி – 10

சாப்பிட வாங்க – ஷிம்லா மிர்ச் சட்னி:



சமீபத்தில் தோசைக்கு தொட்டுக்கொள்ள மிளகாய்ப் பொடி, தக்காளி சட்னி போன்றவை போரடிக்க, ஷிம்லா மிர்ச் என இங்கே அழைக்கப்படும் குடை மிளகாயில் சட்னி செய்தேன்! உங்களுக்கும் செய்முறை தெரிந்திருக்கலாம். தெரியவில்லை என்றால் பின்னூட்டத்தில் கேளுங்கள் சொல்கிறேன்! :)

ஸ்வச்ச் பாரத் – ஸ்வச்தா ஹி சேவா:

தலைநகர் தில்லியில் என் வீட்டிற்குக் கீழே இருக்கும் பெண்மணி – ஒரு நாள் மாலை நேரத்தில் வீட்டுக் கதவைத் தட்டினார். அலுவலகத்திலிருந்து வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம் – பொதுவாக எங்கள் கட்டிடத்தில் இருக்கும் ஒருவரிடமும் நானும் பேசுவதில்லை. அவர்களும் என்னிடமும் பேசுவதில்லை! பிறகு எதற்கு இப்போது வருகிறார் – குழப்பத்துடன் கதவைத் திறந்தால் – ”படிக்கட்டு கீழே நீங்க குப்பையை போட்டீங்களா? யாரோ போட்டுட்டு போயிடறாங்க. நம்ம பில்டிங்க நாம தான் சுத்தமா வைச்சுக்கணும்!” அப்படின்னு சொல்ல, “அட ஏம்மா நீ வேற, நான் எதுக்கு குப்பையை அப்படி போடப்போறேன்! ஏதாவது சொல்லிட போறேன், புள்ளைகுட்டிய படிக்க வைக்கிற வழியைப்பாருன்னு மனதுக்குள் சொல்லிக்கொண்டு, வெளியில் நான் ஏன் போடறேன்னு சொல்லி உள்ளே வந்தேன். அடுத்த நாள் பேருந்தில் அதே பெண்மணி – தலையை வாரி முடியை வெளியே வீசினார், பிறகு சாத்துக்குடி தோல், வரிசையாக வீதியில் எதையோ போட்டபடியே வந்தார் – அடுத்தவங்களுக்கு தான் உபதேசம்!

பதிவர் சந்திப்பு – 02 அக்டோபர் 2018:

காந்தி ஜெயந்தி என்பதால் அலுவலகத்திற்கு விடுமுறை! வெளியே எங்கும் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்த போது முகநூல் மெஸ்ஸெஞ்சர் வழியே ஒரு தகவல் – உங்க வீட்டுக்குக் கிட்ட இருக்கற பாலாஜி கோவிலுக்கு வந்துருக்கோம். அங்கேயிருந்து காளி கோவில் போகிறோம் என – அனுப்பியவர் ஒரு காலத்தில் வலைப்பூவில் எழுதிக் கொண்டிருந்த ”ஆச்சி ஆச்சி” – அது ஆச்சி இரண்டரை வருடம் – அவங்க வலைப்பூவில் எழுதி! இப்பல்லாம் முகநூல்ல மட்டும் தான் எழுதறாங்க. தலைநகரிலேயே இருந்தாலும், ஐந்தாறு வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறோம். காளி கோவில் வளாகத்தில் நவராத்ரிக்காக கடைகள் போட்டிருக்கிறார்கள். அங்கே சற்று சுற்றிவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு அவர்கள் வழி அவர்கள் செல்ல, நான் வீடு திரும்பினேன். முகநூலில் சந்திப்பு பற்றி அவர்களும் எழுதி இருக்கிறார்கள்.

இந்த வாரத்தின் ரசித்த பாடல் - மலையாளம்:

சமீபத்தில் கேட்டு ரசித்த ஒரு பாடல் – கே.ஜே. யேசுதாஸ் அவர்களும், எஸ்.பி.பி. அவர்களும் மிகச் சமீபத்தில் இணைந்து பாடிய ஒரு பாடல் – நீண்ட இடைவெளிக்குப் பிறகு – 27 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள். இசை எம். ஜெயச்சந்திரன். மலையாளப் படமான கிணர் படத்தில்.  பாடல் நன்றாகவே இருக்கிறது – நீங்களும் கேட்டுப் பாருங்களேன்…



இந்த வாரத்தின் நிழற்படம்:



சமீபத்தில் ஒரு விழா – நான் குடியிருந்த பழைய தில்லி பகுதியில். ஒரு சமுதாயக் கூடத்தில் தான் அந்த விழா. தில்லி நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் கூடம். அங்கே பார்த்த காட்சி தான் மேலே படமாக! இப்படி ஒரு மின்விசிறியை நீங்கள் சத்தியமாக வேறெங்கும் பார்த்திருக்க முடியாது! இப்படி இருக்க ஒரு காரணம் உண்டு. அது என்ன என பிறகு சொல்கிறேன் – ஏன் இப்படி வளைத்திருக்கிறார்கள் என உங்களால் யூகிக்க முடிகிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

இந்த வாரத்தின் குறும்படம்:

யாரைப்பற்றியும் ஒரு முடிவுக்கு வந்து விடும் முன்னர் சற்றே யோசியுங்கள் என்று சொல்லும் ஒரு அழகான குறும்படம். பாருங்களேன்….



இதே நாளில் – திரும்பிப் பார்க்கிறேன்:

இதே நாளில் தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராக இருந்திருக்கிறேன்! அப்போது பகிர்ந்து கொண்ட ஒரு பகிர்வு “ஹே மா!” தலைநகரில் சந்தித்த ஒரு மனிதர் பற்றிய பகிர்வு. 13 அக்டோபர் 2011 பகிர்ந்து கொண்ட பதிவினை படிக்காதவர்கள் வசதிக்காக… இங்கே மீண்டும் அதன் சுட்டி!


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து...

வெள்ளி, 12 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – செக்கச் சிவந்த வானம் - மால் ரோடில் ஒரு உலா – சாக்லேட் பான்



ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 10

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


மால் ரோடு, ஷிம்லா....

வியாழன், 11 அக்டோபர், 2018

சுற்றுலா பருவம் – கத்திச் சண்டை போட்ட பெண் - விதம் விதமாய் நடனம் – பகுதி 3





பர்யாடன் பர்வ் - 2018, ராஜ்பத், தில்லி...

தலைநகர் தில்லியில் நடந்த பர்யாடன் பர்வ் நிகழ்ச்சியில் நான் எடுத்த படங்களின் வரிசையில் இதோ மூன்றாம் பகுதி. ஹரியான மாநில நடனத்திற்குப் பிறகு வடகிழக்கு மாநிலம் ஒன்றிலிருந்து வந்த கலைஞர்கள் – அவர்களின் நடனம் துவங்குவதற்கு முன்னர் நடந்த கத்திச் சண்டையின் போது எடுத்த படங்கள் தான் இன்றைய பதிவில் – அந்த வீர மங்கையின் கைகளில் இரண்டு கத்திகள் – எதிரே இரண்டு ஆண்கள் – இருவர் கைகளிலும் ஒரு கத்தியும் ஒரு கேடயமும். இரண்டு ஆண்களும் பெண்ணைத் தாக்க அப்பெண் வீரத்துடன் தீரத்துடன் தனது கத்தியால் தடுப்பது தான் அந்த நிகழ்ச்சி – அப்படியே சில நிமிடங்கள் பார்ப்பவர்களின் மூச்சே நின்றுவிடும் அளவிற்கு அப்பெண்ணின் சாகசம். பறந்து பறந்து தாக்குவதும், அந்த ஆண்களின் தாக்குதல்களை சமாளிப்பதும் என்று அதிரடி ஆட்டம்.

ஆண்களும் பறந்து பல்டி அடித்து தாக்க, பெண்ணும் நான் உங்களுக்கு சளைத்தவள் அல்ல என்று பல்டி அடித்துத் தடுப்பதும் என சில நிமிடங்கள் அப்படியே பார்ப்பவர்கள் அனைவரையும் கவர்ந்தார்கள். ரொம்பவே நன்றாக இருந்தது அவர்களது கத்திச்சண்டை நடனம். வேகம் வேகம் அப்படி ஒரு வேகம் அந்த பெண்ணின் ஒவ்வொரு அசைவும். கத்திச் சண்டை நடக்கும் அதே சமயத்தில் பின்புறத்திலிருந்து இசைக் கலைஞர்கள் விதம் விதமான மேளங்களில் ஒலி எழுப்பியபடியே இருந்தது கொஞ்சம் அதிகமான விறுவிறுப்பை உண்டுபண்ணியது என்றும் சொல்ல வேண்டும்.  இந்தப் புகைப்படங்களில் சில நன்றாக வந்திருந்தாலும் எனக்கு திருப்தி இல்லை – ஒன்று நான் மேடையிலிருந்து சற்று தள்ளியே இருந்தேன் – முன்னணியில் வி.ஐ.பிக்கள் – மேலும் அதிக பார்வையாளர்கள். கொஞ்சம் தள்ளியே இருந்ததால் 55-250 zoom lens போட்டு தான் எடுக்க முடிந்தது. படங்களில் அத்தனை Sharpness இல்லை. இந்தப் படங்கள் எடுக்கப்பட்டது Sports Mode-ல் தான். படம் எடுக்க இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்….

On a different note, இந்தப் பெண் மாதிரி அனைத்து பெண்களும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டால் அவர்களுக்கு எதிராக நடக்கும் பல அநீதிகளைத் தடுக்கலாம். எத்தனை எத்தனை வன்புணர்வுகள் இங்கே….










































என்ன நண்பர்களே நிழற்படங்களை ரசித்தீர்களா? நடனம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து…

புதன், 10 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – மலையுச்சியில் ஜாக்கூ மந்திர் – முன்னோர்கள் கூட்டம்



ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 9

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ஜாக்கூ மந்திர் 108 அடி ஹனுமன்...
ஜாக்கூ மந்திர், ஷிம்லா

செவ்வாய், 9 அக்டோபர், 2018

திங்கள், 8 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்



ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 8

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


பாதாமீ பனீர்....

சனி, 6 அக்டோபர், 2018

வெள்ளி, 5 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லாவில் தமிழர்களின் கோவில்



ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 7

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!



ஷோடஸ கணபதி கோவில், தாராதேவி, ஷிம்லா

வியாழன், 4 அக்டோபர், 2018

சுற்றுலா பருவம் – விதம் விதமாய் நடனம் – பகுதி 1



தலைநகர் தில்லியில் நடந்த சுற்றுலா பருவம் [பர்யாடன் பர்வ்] நிகழ்ச்சி பற்றி ஏற்கனவே சில பதிவுகள் எழுதி இருக்கிறேன். இன்னும் சில பதிவுகள் இது பற்றி வரப் போகின்றன – குறிப்பாக பல மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த கலைஞர்கள் ஆடிய நடனங்களின் போது நான் எடுத்த படங்களும், நண்பர் எடுத்த சில காணொளிகளும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணம். நாங்கள் ரசித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள். உங்களுக்கும் இந்தப் படங்களை, காணொளிகளைப் பார்க்க விருப்பம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன், இதோ இந்த வரிசையில் முதலாம் தொகுப்பு – மத்தியப் பிரதேசத்தின் Bபதாய் நடனத்தின் சில காட்சிகள்.


புதன், 3 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – ராணுவ பாரம்பரிய அருங்காட்சியகம்


ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 6

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


அழகிய பூங்கா....
ராணுவ பாரம்பரிய அருங்காட்சியகம், ஷிம்லா...

செவ்வாய், 2 அக்டோபர், 2018

திங்கள், 1 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – ஹிமாலயன் பறவைகள் பூங்கா




ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 5

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


என்னைப் பார்க்கவா வந்தீங்க....
ஹிமாலயன் பறவைகள் பூங்கா, ஷிம்லா