புதன், 14 நவம்பர், 2018

கதம்பம் – நார்த்தங்காய் – பதிவர் சந்திப்பு – தொடரும் நட்பு – க்வில்லிங் – கேரட் பராட்டா


சாப்பிட வாங்க – நார்த்தங்காய் - 8 நவம்பர் 2018:



தோழி நார்த்தங்காய் வேண்டுமா எனக் கேட்டு மூன்றைக் கொடுத்தார். ஏற்கனவே மாவடு, கிடாரங்காய் உப்பில் போட்டது, எலுமிச்சங்காய் உப்பில் போட்டது, வட இந்திய ஊறுகாயான chundaa எல்லாம் இருக்கு. சரியென்று இதையும் அந்த ஜோதியில் ஐக்கியம் செய்து விட்டேன்.

தினப்படி ஊறுகாய் போட்டுக் கொள்ள மாட்டேன். குழம்போ, கூட்டோ இருந்தால் அதையே போட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுவேன்.

சுருள் போல வெட்டி உப்பும், மஞ்சள்பொடியும் அடைத்து வைத்தேன். இன்று தண்ணீர் விட்டுக் கொண்டுள்ளது. நன்கு ஊறியதும் வெயிலில் வைத்து காய விட வேண்டும்.

யாருக்கெல்லாம் நார்த்தங்காய் பிடிக்கும்?

சென்ற வருடம் இதே நாளில் முகநூலில் பகிர்ந்ததாக மார்க் நினைவூட்டினார்! இன்னமும் என்னிடம் இருக்கு. கறுப்பா மாறி பதமா இருக்கு. அவ்வப்போது மோர்சாதத்துக்கு இது தான் ஜோடி.

பேப்பர் க்வில்லிங் கூடை - 12 நவம்பர்:



மகளும் நானும் சேர்ந்து செய்யலாம் என்று நினைத்து துவங்கினோம்..ஆனால் இப்போதெல்லாம் அவளுக்கு நேரமே கிடைப்பதில்லை..:) அதனால் பெரும்பாலும் டீவி பார்த்துக் கொண்டே நானே செய்து விட்டேன்.. இதில் மகளின் பங்கும் இருக்கிறது..:) நல்லா இருக்கா ஃப்ரெண்ட்ஸ்!!!

ராஜியும் ஆதியும் சந்தித்தபோது - 27 அக்டோபர் 18:

Revathy Venkat திருவரங்கம் வந்திருப்பதாக இன்று தான் தெரிந்து கொண்டேன். நேற்றே அழைத்திருக்கிறார். வந்து எடுப்பதற்குள் கட் ஆகி விட, புது நம்பராக இருக்கவே நானும் திரும்ப கூப்பிடவில்லை. இன்றும் அப்படியே!

அவருடைய முகப்புத்தக இற்றையை பார்த்து பின்னூட்டத்தில் பேசிக் கொண்டு தெரிந்து கொண்டேன்.

அவர் தங்கும் இடத்திற்கு மகளும் நானும் சென்று அவருடைய குடும்ப உறுப்பினர்களோடு சந்தித்து விட்டு வந்தோம்.

சிறிது நேரமே என்றாலும் நிறைவாக இருந்தது. எல்லோரிடமும் என்னைப் பற்றியும் என் கணவர் பற்றியும் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களும் ராஜியின் பகிர்வுகளில் என்னைப் பார்த்திருப்பதாக சொன்னார்கள். பதிவுலகிலிருந்து தொடரும் நட்பல்லவா!!! எட்டு வருடம் ஆச்சு.

விடைபெறும் போது எதுவும் கொடுக்க இல்லையே என்று வருத்தப்பட்டார்கள். அப்பக்குடத்தான் பெருமாள் பிரசாதமாக அப்பமும், பழமும் கொடுத்தார்கள்.

அம்மாவும் மகளும் போட்டிக்கு போட்டி - – 29 அக்டோபர் 2018



மகள் பேப்பர் கப்பில் பென் ஹோல்டர் செய்ய, நான் பேப்பர் கப்பில் கூடையாக பின்னத் துவங்கினேன். டெல்லியில் பார்க்குகளில் அப்பளம் இது போல் உள்ள பெரிய கூடைகளில் தான் விற்பனை செய்வார்கள். அது நினைவுக்கு வந்தது..

என்ன நட்புகளே!! எப்படியிருக்கு?

பள்ளிப்பருவம் – மீட்டெடுத்த நட்பு – 27 அக்டோபர் 2018:

நேற்று பள்ளித்தோழி ஜோதிமணி U.S இலிருந்து அலைபேசியில் அழைத்துப் பேசினாள். நெடுநேரம் மனம் விட்டு பேசி மகிழ்ந்தோம். என் மற்ற தோழிகள் நான் அவளைத் தேடியது குறித்து சொல்லியிருக்கிறார்கள்.

மூன்று நான்கு முறை அழைத்திருக்கிறாள். நான் தெரியாத எண்களிலிருந்து அழைப்பு வந்தால் பெரும்பாலும் எடுப்பதில்லை. இது வெளிநாட்டு அழைப்பு வேறு! கேட்கவும் வேண்டுமா? தவிர்த்து விட்டேன். பின்பு வாட்ஸப்பில் நான் தான் அழைக்கிறேன். எடுத்து பேசு ஆதி என்று சொல்லவும் தான் எடுத்தேன்.

இரண்டு வருடங்களுக்கு முன் திருச்சியிலேயே இருந்திருக்கிறாள். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கூட வருவாளாம். பார்க்க முடியவில்லை.

அவரவர் குடும்ப விவரங்களை தெரிந்து கொண்டோம். அவளுக்கும் எனக்கும் படிப்பில் பெரும் போட்டி இருந்தது என்பதே மார்க் ஷீட் வாங்கும் போது தோழிகள் மூலம் தெரிந்ததாம். என்னை விட மொத்தத்தில் ஒரு மார்க் கூட எடுத்தாள் என்று.

அது ஆரோக்கியமான போட்டி தான். அப்படியிருந்தா தான் படிக்க முடியும் என்றேன். பள்ளிப்படிப்புக்கு பின் தோழி என்னைப் போலவே டிப்ளமோ முடித்திருக்கிறாள். பின்பு பார்ட் டைம் B.E யும் பின்பு பணிபுரிந்து கொண்டே M.E யும் முடித்திருக்கிறாள்.

பள்ளிப்படிப்புக்குப் பின் டிப்ளமோ சேரும் எல்லோருடைய கனவும் B.E முடித்து M.E அல்லது M.S பண்ண வேண்டும் என்பதே. எல்லோருடைய விருப்பமும் நிறைவேறுவதில்லை. தோழிக்கு நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி. இப்போது கணவர் மற்றும் குழந்தையோடு U.S ல் இருக்கிறாள்.

இன்னொரு தோழி Phd முடித்து கோவையிலேயே ஒரு பொறியியல் கல்லூரியில் Assistant Professor ஆக பணிபுரிகிறாள்.

இவர்களைப் போல் என் மற்ற தோழிகளும் அவரவர் துறையில் திறமைசாலிகளே.

இவர்களுடைய நட்பு இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. இது என்றும் தொடரட்டும்.

கேரட் பராட்டா – 11 நவம்பர் 2018




பொறுமையாக எழுந்து காலை உணவை தவிர்த்து விட்டு, வேலைகளை முடித்து விட்டு நேரே 11 மணிக்கு சாப்பிடலாம் என்று முடிவு செய்தேன். சாம்பாரும், ரசமும் அலுத்துப் போனால் ஞாயிறன்று அம்மா என்ன செய்வாள்!! என்று மகளிடம் கேட்டால். உடனே தக்காளி சாதம் என்று வெடுக்கென்று சொல்லி விடுவாள். அவளுக்கு பிடிக்காது! எனக்கு பிடிக்கும்!

அதனால் இன்று வட இந்திய சாப்பாடு!! கேரட் பராட்டா, கட்டா மீட்டா எலுமிச்சை ஊறுகாய், தயிர்... கொஞ்சம் இனிப்புகாக மில்க் ஸ்வீட்ஸ்!!!

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் Binச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

22 கருத்துகள்:

  1. குட் மார்னிங். நார்த்தங்காய் சற்றே பழுத்திருக்கிறதோ?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நாரத்தங்காய் பிடிக்கும். இதை இப்படி சாப்பிடுவதைவிட காய வைத்து தொட்டுக்கொள்ளவும், மருந்து போலவும் சாப்பிடுவது அதிகம். கிடாரங்காய் ரொம்பப் பிடிக்கும்... ஊறுகாயாகச் சாப்பிட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பேப்பர் க்வில்லிங் அழகு. பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள். நட்பின் சந்திப்புகளும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. கேரட் பராத்தா பார்க்கவே அழகாய் இருக்கிறது. சுவைக்க ஆவல் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் செய்து பாருங்கள் ஸ்ரீராம். சுலபமாகச் செய்ய முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. ஆ இன்று ஸ்ரீராம் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ....ஹா ஹா ஹ

    இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. நார்த்தங்காய் ரொம்பப் பிடிக்கும்...இப்ப்டிச் சுருள் போல வெட்டியும் இல்லை துண்டு துண்டுஆகப் போட்டும் செய்வதுண்டு....எங்கள் வீட்டில் மஞ்சள் பொடி, மிளகாய் கொஞ்சம், கொஞ்சம் வெந்தயம் பௌடர் செய்து கொஞ்சம் வெய்யிலில் காய வைத்து பொடி செய்து போட்டுச் செய்வதுண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. நட்பு சந்திப்பு அருமை...மகிழ்சி தரும் ஒன்று..

    காரட் பராத்தா, ஊறுகாய், தயிர், ஸ்வீட் ஆஹா பஞ்சாபி!!! ஹா ஹா ஹா எங்கள் வீட்டிலும் இப்படித்தான் சில சமயம் ...சில சமயம் சப்ஜி ஏதேனும் இருக்கும்...

    பேப்பர் க்வில்லிங்க் வாவ்! செமையா இருக்கு மற்றும் பேப்பர் கப்ஸ் கைவண்ணங்கள்...ரொம்பவே சூப்பர்...என் பழைய நினைவுகளை மீட்டது...5 வருடங்களுக்கு முன் வரை இருந்த நினைவுகள்...நிறைய கைவேலைப்பாடுகள் வெல்த் ஃப்ரம் வேஸ்ட் என்பதாகவும்....

    ரோஷினி மற்றும் உங்க கைவண்ணத்துக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் ஆதி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. போட்டிக்கு போட்டி ஆகா...!

    இனிய நட்புகள் தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. சந்திப்புகள் மகிழ்ச்சியானதே...
    ஊறுகாய் எனக்கு பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  11. எலுமிச்சையை விட நாரத்தங்காய் நல்லது...

    நாரத்தம்பழச்சாற்றில் வெல்லம் கலந்து குடித்தால் - ஆகா!...

    எல்லாம் கலந்த கதம்பமாகப் பதிவு.. அழகு.. அருமை..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....