ஞாயிறு, 9 டிசம்பர், 2018

காளஹஸ்தி - கல்யாண சீர் வரிசை – நிழற்படத் தொகுப்பு



பொம்மை அலங்காரம்....
கல்யாண சீர்வரிசையில்...


நேற்று தலைநகரில் புகைப்படம் எடுப்பதற்காகவே சென்ற இரண்டு இடங்களுக்குச் சென்றேன். ஒன்று திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் தலைநகர் கோவில் – எங்கள் பகுதியில் இருக்கிற கோவில் – அங்கே காளஹஸ்தியிலிருந்து வந்து உற்சவ மூர்த்திகளுக்கு, காலையில் ருத்ராபிஷேகமும், மாலையில் திருக்கல்யாண உற்சவமும் நடந்தன.  காலை நடந்த ருத்ராபிஷேக நிகழ்ச்சிக்குச் செல்ல முடியவில்லை. மாலை சென்ற போது எடுத்த படங்களில் சில இங்கே தந்திருக்கிறேன். மாலை ஆறு மணிக்குச் சென்று சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு வீடு திரும்ப எண்ணியிருந்தேன். ஆனால் காளஹஸ்தீஸ்வரர் பிரசாதம் எனக்குக் கிடைக்கவேண்டும் என இருக்கும்போது எப்படித் திரும்புவது. கல்யாண உற்சவத்தினை முழுதாகக் கண்டு, இரவு பொங்கல் மற்றும் கேசரியைப் பிரசாதமாக உண்ட பிறகே வீடு திரும்பினேன்!



ஞானபிரசுனாம்பிகா சமேத காளஹஸ்தீஸ்வர ஸ்வாமி...








இசைக் கச்சேரி.... மிருதங்கம் வாசிக்கும் சிறுமி....




நிகழ்ச்சிக்கு வந்திருந்த நாளைய பாரதம்....




நிகழ்ச்சிக்கு வந்திருந்த நாளைய பாரதம்....


இரண்டாவது காலை நேரத்தில் எங்கள் பகுதி நண்பர் வீட்டுக்குச் சென்று எடுத்த படங்கள். சென்ற மாதம் திருக்கடையூர் வந்திருக்க வேண்டியது. அலுவலகத்தின் பணிச்சுமை காரணமாக வர இயலாமல் போனது. நண்பருக்கு திருக்கடையூரில் சஷ்டியப்தபூர்த்தி நடந்தது. அப்போது கொடுத்த சீர்வரிசையில் வந்திருந்த சில ரொம்பவே அழகாக இருந்ததால், அவற்றை படம் எடுத்துத் தர நண்பர் வீட்டில் அழைத்திருந்தார்கள். அங்கே சென்று சில படங்கள் எடுத்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்தேன். அவற்றில் சில இங்கேயும் பகிர்ந்திருக்கிறேன். கொப்பரைத் தேங்காயில் பெருமாள் – தாயார் உருவத்தினை அழகாய்ச் செதுக்கி இருக்கிறார்கள். ரொம்பவே அழகாய் இருந்தது. கூடவே பொம்மைக்கு அலங்காரம்! பாருங்களேன். இந்த மாதிரி பொம்மைகளுக்கு அழகாய் அலங்காரம் செய்து விற்பனை செய்கிறார்கள்.






சீர் வரிசை....


கொப்பரைத் தேங்காயில் செதுக்கிய பெருமாள்-தாயார் உருவங்கள்...

லட்டு – விதம் விதமாய் என ஒரு பதிவு எழுதி இருந்தது நினைவுக்கு வரலாம். தலைநகர் லட்டு பற்றி எழுதி சில நாட்களுக்குள் இன்னும் சில வித லட்டுகள் இங்கே பகிர்ந்து கொள்ள முடிந்திருக்கிறது – சீரக மிட்டாய் லட்டு! கூடவே பிரிட்டானியாவின் பிரிட்டா பிஸ்கெட் லட்டு! ஐந்து பைசாவிற்கு ஐந்து என டின்களிலிருந்து எதிர் கடையில் வாங்கித் தின்ற பிஸ்கெட்! இன்னமும் இந்த பிஸ்கெட் இருக்கிறது என்பதை இந்த லட்டு பார்த்த பிறகு தான் தெரிந்து கொள்ள முடிந்தது. சிறு வயதில் இந்த பிஸ்கெட் வாங்கித் திங்க அழுது ஆர்பாட்டம் செய்ததை நினைத்தால் இப்போது சிரிப்பாக இருக்கிறது! செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஆர்வம் இருந்தால் இப்படி விதம் விதமாக செய்ய முடியும் என்பதை இப்படங்கள் நமக்கு உணர்த்துகின்றன அல்லவா.

என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்கள் பிடித்திருக்கிறதா? படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட்.

    நெட் பயங்கரப் படுத்தல். எனவே நானும் லேட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.

      சில சமயங்களில் நெட் இப்படித்தான் படுத்தி எடுக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. காளஹஸ்தீஸ்வரர் தரிசனம் காலையில் , நன்றி.
    சீர்வரிசை லட்டுகள், பருப்பு தேங்காய் , அலங்க்கரிக்கப்பட்ட பொம்மைகள் எல்லாம் அழகு.

    பிரிட்டானியாவின் பிரிட்டா பிஸ்கெட் லட்டு! உங்களுக்கு அந்த பிஸ்கட் கொடுத்த மலரும் நினைவு போல்

    நினைவுகள் எனக்கும் வந்தது.

    என் மகன் சிறுவயதில் தினம் மாலை கடைக்கு போய் விரும்பி வாங்கி வந்து சாப்பிடுவான்.
    சீரகமிட்டாயும் பிடித்த ஒன்று அவனுக்கு.

    //ஒவ்வொரு செயலிலும் ஆர்வம் இருந்தால் இப்படி விதம் விதமாக செய்ய முடியும் என்பதை இப்படங்கள் நமக்கு உணர்த்துகின்றன அல்லவா.//

    ஆமாம், உண்மை. நிறைய பேருக்கு இது பிடித்தமான தொழிலாகவும் ஆகி விட்டது.
    சீர்வரிசைக்கு எப்படி வேண்டும் என்று கேட்டாலும் செய்து தருகிறார்கள்.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்கள் நினைவுகளை மீட்க உதவியதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. கொப்பரைத்தேங்காயில் அந்த பொம்மை என்பதை நம்பவே முடியவில்லை. அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். எவ்வளவு நுணுக்கமாகச் செய்து இருக்கிறார்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அனைத்துப் படங்களையும் ரசித்தேன். எல்லாமே நன்றாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. படங்கள் அருமை. கொப்பரைத் தேங்காய் படம் - இது பல வருடங்களாகச் செய்கிறார்கள். குழந்தை பொம்மை படங்கள் கண்டிருக்கிறேன்.

    லட்டு படங்கள் மட்டும் மனதில் நின்றன். பிஸ்கட் லட்டு நல்லா இருக்காது (சவக் என்றாகிவிடும்). ஜீரக மிட்டாய் லட்டு பார்க்கத்தான் நன்றாக இருக்கும். மற்ற லட்டுகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிஸ்கெட் லட்டு - உள்ளே பொரி உருண்டை - மேலே பிஸ்கெட்! நேற்று மாலை சாப்பிட்டோம். நன்றாகவே இருந்தது. ஜீரக மிட்டாய் லட்டும் அதே போல உள்ளே பொரி வெளியே ஜீரக மிட்டாய்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. அழகழகாகப் படங்கள்...

    காலைப் பொழுதில் காளஹஸ்தீஸ்வர தரிசனம் மகிழ்ச்சி..

    வாழ்க வளமுடன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. எல்லாப் படங்களும் அருமையாக வந்திருக்கின்றன. லட்டு படங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  10. நைட் முழிச்சிருந்தேன் அப்போ நீங்களும் அதே நேரம் போஸ்ட் போட்டால் இங்கு மீ த 1ஸ்ட்டாக ஒரு தடவையாவது வரலாமே என் பார்த்தால்.... விது யாரை விட்டது.:) நேற்றுப் பார்த்து நீங்க லேட் ஹா ஹா...

    பொம்மைகள்தான் அனைத்திலும் கவருது.... அதிலும் அந்தக் கொண்டை அவ்வ்வ்வ்வ் சூப்பரோ சூப்பர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீ த ஃபர்ஸ்ட்... ஹாஹா... பெரும்பாலான எந்து பதிவுகள் காலை 05.30 மணிக்கு வெளியாகும்.

      கொண்டை அழகு அனைவரும் ரசித்த விஷயம். உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  11. பிரிட்டானியா பிஸ்கட், கொஞ்சம் சர்க்கரை, சூடான பால் அல்லது தண்ணி சேர்த்து கலக்கி கொஞ்சம் இளகின நிலையில் ஏண் பிள்ளைகளுக்கு ஊட்டுவோம். அதான் முதல் திட உணவு என் பிள்ளைகளுக்கு..

    வளர்ந்தபின் பாக்கெட்ல வாங்கி வச்சிருந்து தலைக்கு இத்தனைன்னு எண்ணி பிள்ளைகளுக்கு கொடுப்பது வழக்கம். அடிக்கடி இந்த பிஸ்கட்ட அப்பா வாங்கி வருவார்

    சீரக லட்டு, பிரிட்டானியா பிஸ்கட் லட்டு செம. பொம்மைகளும் செம அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைக்கு இத்தனைன்னு.... நல்ல வசதி இந்த பிஸ்கெட்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  12. நேற்று முழுவதும் பங்களூரை வலம் வந்தாச்சு என் தில்லி/குர்காவ்ன் தங்கை, கோயம்புத்தூர் தம்பி வந்திருந்ததால். இன்று தம்பி இங்கு தான் வருவான் தங்க. ஸோ கொஞ்சம் பிஸி...அதான் நேற்று தளம் அப்புறம் வர முடியலை

    படங்கள் எல்லாம் சூப்பர். ரொம்ப அழ்கா இருக்கு. அந்த கல்யாண சோடி பொம்மைகள் க்யூட். இங்கும் கொப்பரையில் பல டிசைன்கள் செய்யுறாங்க. அதுக்குன்னே கொப்பரை விலை அதிகமாவும் இருக்கு இங்கு பங்களூரில்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பங்களூரு வலம் - மகிழ்ச்சி.

      ஆமாம். கர்நாடகாவில் இப்பொம்மைகள் கிடைக்கிறது என்று வேறு சில நண்பர்களும் சொன்னார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....