திங்கள், 14 ஜனவரி, 2019

பீஹார் டைரி – தீதார்கஞ்ச் யக்‌ஷி - பீஹார் அருங்காட்சியகம்



தீதார்கஞ்ச் யக்‌ஷி....



1917-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பட்னா அருங்காட்சியகம் பற்றி சில பதிவுகளுக்கு முன்னர் பார்த்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்தப் பதிவினை வாசிக்காதவர்கள் இந்தச் சுட்டியில் சுட்டினால் ஒரு பார்வை பார்த்து வரலாம். இன்றைக்கு சமீபத்தில் அமைக்கப்பட்ட பீஹார் அருங்காட்சியகம் பற்றியும், அதிலே இருக்கும் அற்புதமான கலைப் பொக்கிஷங்கள் பற்றியும் பார்க்கலாம். இப்பதிவில் முடிந்த வரை பீஹார் அருங்காட்சியகத்தில் இருக்கும் கலைப்பொருட்களின் நிழற்படங்களை – நான் எடுத்த நிழற்படங்களை அளிக்கிறேன். விடுபட்ட படங்களை பிறிதொரு சமயம் ஏதாவது ஒரு ஞாயிறில் நிழற்படத் தொகுப்பாக வெளியிடுகிறேன்.


நாணயங்கள்....


வெளிப்புறத்தில் பூக்கள்...


சிதிலம் அடைந்த சிற்பம் ஒன்று...

பீஹார் மாநிலத்தின் தலைநகரான பட்னாவின் ஜவஹர் லால் நேரு சாலையில் 13.5 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், 24000 சதுர அடி வளாகத்தில் 9500 சதுர அடி அளவு கொண்ட அறைகளில் கலைப்பொருட்கள் பார்வைக்கு வைக்க, அமைக்கப் பட்டிருக்கும் பீஹார் அருங்காட்சியகம் 2016-ஆம் வருடம் அமைக்கப்பட்டது.  இந்த அருங்காட்சியகத்தில் நிறைய கேலரிகள் உள்ளன. மிகவும் அழகாக இந்த அருங்காட்சியகத்தினை வடிவமைத்து இருக்கிறார்கள். ஜப்பான் நிறுவனமும், மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் சேர்ந்து இந்த அருங்காட்சியகத்தினை நிறுவி இருக்கிறார்கள். குழந்தைகளுக்கான கூடம், பழமையான சிற்பங்களுக்கான கூடங்கள், என நிறைய கூடங்கள்.  பீஹார் மாநிலத்தின் வரலாறு பற்றிய ஒரு குறும்படம் கூட தினம் தினம் சில காட்சிகளை காண்பிக்கிறார்கள்.






நாங்களும் அந்தக் குறும்படத்தினைக் கண்டு களித்தோம். எத்தனை எத்தனை சிற்பங்கள், ஓவியங்கள், அழகியல் வடிவங்கள் என பார்க்கப் பார்க்க அனைத்துமே பிடித்திருந்தது. குழந்தைகளுக்கான அரங்கம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. குழந்தைகளுடன் சென்றால், இந்த அரங்கில் நிறைய விஷயங்களை அவர்கள் தெரிந்து கொள்ள முடியும். பழமையின் பெருமையைச் சொல்லும் அந்தப் பொருட்களை பார்த்துத் தெரிந்து கொள்ள குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பு. திங்கள் தவிர வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 10.30 முதல் மாலை 05.30. வரை திறந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்திற்குச் செல்ல நுழைவுக் கட்டணம் உண்டு – பெரியவர்களுக்கு 100 ரூபாய், சிறியவர்களுக்கு 50 ரூபாய். வெளிநாட்டவர்களுக்கு 500 ரூபாய். கேமராவிற்கு அனுமதி உண்டு என்பது நல்ல விஷயம். அதற்கான கட்டணமும் உண்டு!





தீதார்கஞ்ச் யக்‌ஷி – முதலில் பட்னா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த யக்‌ஷியின் சிலை கண்டெடுக்கப்பட்ட வருடம் 1917. இது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். சுவாரஸ்யமான கதை தான். சொல்கிறேன் கேளுங்கள். சாமரம் வீசும் ஒரு அழகிய யக்‌ஷியின் சிலை வடிவத்தினை வடித்த சிற்பி யார் என்பது தெரியாது. ஆனால் அத்தனை சிறப்பாக வடித்திருக்கிறார் அந்தச் சிற்பி. பெண்ணானவள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகத் துல்லியமாக சிலை வடித்திருப்பதாகச் சொல்கிறார்கள். 5’ 2” உயரம் கொண்ட இந்த யக்‌ஷியின் சிலை 1’ 7½” அளவுள்ள மேடையில் அமைத்திருக்கிறார் இந்தச் சிற்பி.  சரி கதைக்கு வருவோம். 1917-ஆம் ஆண்டு தீதார்கஞ்ச் பகுதியில் உள்ள ஆற்றங்கரை. அப்பகுதியில் உள்ள பெரிய கல்லில் தான் துணிகளைத் தோய்ப்பது பகுதி மக்களின் வழக்கம். 






ஒரு நாள் கிராமத்து மக்கள் ஒரு பாம்பைக் கண்டு விட, அதனைத் துரத்திக் கொண்டே வருகிறார்கள்.  இவர்கள் துரத்துவதைக் கண்ட பாம்பு வேகமாக ஓடி வந்து ஆற்றங்கரையில் அமைத்திருக்கும் கல்லின் அருகே இருக்கும் சிறு துளையில் உள்ளே நுழைகிறது. விடாக்கண்டன் கொடாக்கண்டன் கதையாக கிராமத்து மக்கள் அந்தக் கல்லைப் பெயர்த்து பாம்பை அடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அப்படி அந்தக் கல்லைப் பெயர்க்க முற்படுகையில் தான் அவர்களுக்குத் தெரிகிறது, அந்தக் கல் – துணி தோய்க்கப் பயன்பட்ட கல் – வெறும் கல் அல்ல, அழகிய யக்‌ஷியின் சிற்பம் என்பது.  முழுவதும் தோண்டி எடுக்கப்பட்டபோது அந்தச் சிற்பத்தின் முழு அழகும் வெளிப்படுகிறது. புதையுண்டு கிடந்த யக்‌ஷி சிற்பத்தின் இடது கை இல்லை, மூக்கில் சிறிய வெட்டுத் தழும்பு. இருந்தாலும் அந்தச் சிற்பம் வெகு அழகு.





பலப் பல சிற்பங்கள், கலைப் பொருட்களை பல்வேறு அறைகளில் வைத்து நாம் காண வசதியாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு அரங்காகச் சென்று அனைத்தையும் பொறுமையாகப் பார்த்து ரசிக்க எப்படியும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலான சமயம் உங்களுக்குத் தேவை.  ஒவ்வொரு இடமும் பீஹார் பகுதியின் கதை சொல்லும் இடம் என்பதால் நின்று நிதானித்துப் பார்க்க வேண்டிய இடம். பீஹார் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் பார்க்கத் தவற விடக்கூடாத இடங்களில் ஒன்று இந்த பீஹார் அருங்காட்சியகம்.  முடிந்தால் நீங்களும் சென்று இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் கலைப்பொருட்களையும், சிற்பங்களையும் கண்டு களிக்கலாம். அழகிய தோட்டமும் இங்கே இருக்கிறது. நாங்கள் பூக்களை ரசித்தபடியே அருங்காட்சியகத்தினுள் சென்றோம்.




என்ன நண்பர்களே பீஹார் அருங்காட்சியகம் பற்றிய தகவல்களும் இந்தப் பதிவும் உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லலாமே!

வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

42 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம் வெங்கட்ஜி!

    போஹி வாழ்த்துகள்!

    நேற்று வர முடியலை...பதிவு பார்க்கிறேன்..

    படங்கள் அழகா இருக்கு...ஆஜர்..ஆனா போஜி பிஸி....ஸோ கொஞ்சம் மெதுவா வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்வான மாலை வணக்கம் கீதா ஜி!

      இன்றைக்கு போகி என்பதால் அனைவருமே பிஸி. பண்டிகைக் காலங்களில் இப்படித்தான் ஆகிறது. எனக்கு எல்லா நாளும் பண்டிகை தான்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட். // இந்தச் சுட்டியில் சுட்டினால் // சுட்டி கொடுக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி... இப்போது சேர்த்துவிட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பெரிய உருளி போன்று ஒன்றும் நடுவில் சுற்றி மனிதர்கள் இருப்பது போன்ற படம் ரொம்ப அழகா இருக்கு....லில்லிபுட் நினைவும் வந்தது..

    மீண்டும் பிறகு வரேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனித உருவங்கள் ரோபோ போலவும் இருக்கு!!!!

      கீதா

      நீக்கு
    2. மனித உருவங்கள் தான் ஜி...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
    3. பல மனிதர்கள் இப்போது ரோபோ மாதிரி தானே இருக்கிறார்கள்.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. அந்த பெரிய அண்டாவைச் சுற்றி ஏராள மக்கள்... ஓவியமா, சிற்பமா? அது எதைப்பற்றி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த காட்சி பற்றிய விரிவான தகவல்களை கீழே உள்ள சிட்டியில் பார்க்கலாம்...

      https://www.auraart.in/SanjayKumar/visualaffair.htm

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. யக்ஷியின் தோன்றிய வரலாறு சுவாரஸ்யம். சிற்பியின் திறமையையும் படித்து ஆச்சர்யப்பட்டேன். எல்லாப் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே சுட்டி என்பது சிட்டியாகி விட்டது. :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. சோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டிற்காக பாட்னா அருங்காட்சியகத்திலிருந்து 11 நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களைப் பெற்று இணைத்தேன். அவை அமர்ந்த நிலையில் 1 புத்தரும் நின்ற நிலையில் 10 புத்தரும் உள்ள புகைப்படங்கள் ஆகும். இப்பதிவினைப் படித்ததும் அது நினைவிற்கு வந்தது. 1990களின் இறுதியில் அவர்கள் கடிதம் அனுப்பும்போது Patna Museum, Patna என்றிருந்தது. உங்களது பதிவில் Bihar Museum என்றுள்ளதே? இரண்டும் ஒன்றுதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி முனைவர் ஐயா.

      முதலில் பட்னா அருங்காட்சியகம் தான் அமைத்தார்கள். சமீபத்தில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் இந்த பீஹார் அருங்காட்சியகம். இரண்டிற்கும் நாங்கள் சென்று வந்தோம். பட்னா அருங்காட்சியகம் பற்றிய பதிவுக்கான சுட்டி இப்பதிவிலும் இருக்கிறது ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
    2. பாட்னா அருங்காட்சியகம் தொடர்பான சுட்டியை, நீங்கள் கூறியபின்னர்தான் காண முடிந்தது. அவ்விணைப்புக்குச் சென்றேன். அரிய பல செய்திகளை அறிந்தேன். நன்றி.

      நீக்கு
    3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. ஜி எனக்கான புரிதல்களை தந்தது இந்த பதிவு...
    தொடருங்கள் ஜி
    வழக்கம் போல காமிரா அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் வருகை.... மிக்க மகிழ்ச்சி மது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. படங்களும், சிற்பங்களும் அழகு ஜி.
    வெளிநாட்டவர்க்கு 500 ரூபாய் கட்டணம் என்பது நியாயமாக இல்லை. அவர்களும் இரு விழிகள் கொண்டுதானே பார்க்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வகைல உங்க பாயிண்ட் சரிதான். ஆனால் அவங்களுக்கு 10 டாலர் என்பது ஒன்றுமே இல்லை (அங்கெல்லாம் கட்டணம் அதிகம்). நமக்கு 100 ரூபாய் என்பது அதிகம்.

      இலங்கையிலும், எல்லா இடங்களுக்கும் உள் நாட்டினருக்கு 50 ரூபாய் என்றால், வெளி நாட்டினருக்கு 750 ரூபாய் என்ற அளவில் கட்டணங்கள் உண்டு.

      பாரிசிலும் உள் நாட்டினருக்கு சில தினங்களில் இலவச அனுமதி உண்டு.

      நீக்கு
    2. பல நாடுகளில் இப்படி தனித்தனி கட்டணம் இருப்பதாக படித்து இருக்கிறேன். நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களும் மேலே அதனைச் சொல்லி இருக்கிறார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    3. மேலதிக தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.பீகார் அருங்காட்சியகம் உண்மையில் தகவல் தருகிறது மற்றும் வரலாற்று காலத்திற்கு நம்மை அழைத்து செல்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  11. கோவிலுக்கு போறதைவிட இந்தமாதிரியான அருங்காட்சியகத்துக்கு போக விரும்புவேன். அதென்ன ஒரு கிண்ணம் மாதிரியும், அதை சுத்தி சின்ன சின்னதா மனிதர்கள் இருக்குறமாதிரியுமான சிற்பம் இருக்கே! அது என்ன சிற்பம்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைதியை நாடுவோம் எனச் சொல்லும் ஒரு சிற்பம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  12. அற்புதமான யக்ஷி சிற்பம். சப்த கன்னியர் சிற்பங்களும் நன்றாக உள்ளன. அரளிப்பூவின் நிறம் கண்களையும் கருத்தையும் கவர்கிறது. அருங்காட்சியகம் பல அரிய தகவல்களைத் தன்னிடத்தே கொண்டுள்ளது. உண்மையில் பார்க்க வேண்டிய ஒன்று தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்க வேண்டிய இடம் தான் கீதாம்மா... நிறைய விஷயங்கள் இங்கே பார்க்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  13. அந்தக் குட்டிக்குட்டி மனிதர்கள்! எதைக்குறிக்கும் சிற்பம் அல்லது படம் அது? அதைச் சுற்றிலும் வேலி அமைத்துப் பாதுகாப்புப் போட்டிருக்காங்க போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிற்பம் தான். அமைதியை நாடுவோம் என்பதைச் சொல்லும் சிற்பம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  14. The whole picture of the museum and the important facts you have described is helpful for those who have not visited. You captured the picture.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  15. இந்த கலைப் பொக்கிஷங்கள் ஒருவிதமான அழகென்றால் இந்த செவ்வரளி மலர்கள் தனி அழகு. அருமையான புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  16. வெங்கட்ஜி...அந்த சிவப்பு அரளி செமையா இருக்கு....இங்க மூணாவது கண் ரொம்ப அழகா பார்த்து எடுத்துருக்கு ஜி. எனக்கு இது சரியாவே வந்ததில்லைன்னு நினைவு.. இப்ப காமேராவும் ரிப்பேர்..

    யஷி கதை சூப்பர்..எல்லாமே ரொம்ப அழகா இருக்கு. தகவல்களும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவப்பு அரளி.... எனக்கும் இப்படம் பிடித்தது.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  17. வெங்கட்ஜி முதலில் வாழ்த்துகள்! உங்களுக்கு, உங்கள் குடும்பத்தார், சுற்றத்தார் அனைவருக்கும் இனிய உழவர்திருநாள்/பொங்கல் வாழ்த்துகள்.

    படங்கள் எல்லாமே வெகு அழகு. கதையும் சிறப்பு. இப்படி ஒவ்வொன்றிற்கும் பின்னால் ஏதேனும் ஒரு நிகழ்வு இருக்கத்தானே செய்யும்.

    அருங்காட்சியகம் பற்றி தெரிந்தும் கொண்டோம்.

    எங்கள் பகுதி கோயில் திருவிழா இன்றிலிருந்து வெள்ளி வரை. என்னை கமிட்டிக்குப் பொறுப்பாளர் என்று சொல்லப்பட்டதால் பணக் கலெக்ஷன் என்று சுற்றல். கோயிலில் நிகழ்ச்சிகள் உண்டு. கல்லூரிக்கும் செல்லனும். வீட்டுப் பணிகள் என்று நேரம் கிடைக்கும் போது பதிவுகள் வாசிக்கிறேன். கொஞ்சம் தாமதமாகத்தான் பல சமயங்களில் கருத்து அனுப்ப இயலுகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணிச்சுமை.... எல்லோருக்கும் இந்தப் பிரச்சனை தான். என்னாலும் பலரது பதிவுகளை படிக்க முடிவதில்லை. முடிந்த போது படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  18. அத்தனை சிலைகளும் அழகோ அழகு! எத்தனை நுணுக்கமான கலைத்திறன்! அனைவரும் ரசிப்பதற்காக அவற்றை இங்கு வெளியிட்ட உங்களுக்கு அன்பு நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....